https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 28 மே, 2017

அடையாளமாதல் - 83 *காலத்தை பொருத்திப் புரிதலின் விபரீதம்*

ஶ்ரீ:





அடையாளமாதல் - 83
காலத்தை பொருத்திப் புரிதலின் விபரீதம் *
இயக்க பின்புலம் - 10
அரசியல் களம் - 25










பாலன் கிளம்பி சென்ற பிறகு , நடந்தவைகளையும் பாலன் பேசியதையும் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன் . பாலன் அவ்வளவு நிஜமாக அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தாரா . நான்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லையா . மனு தாக்கல் அன்றே தோல்வியையே பற்றி பேசியது மிக வருத்தமாக இருந்தது . நான் வருத்தப்பட வேண்டும் என்றே அப்படி  சொன்னாரா . பின்னல் என்னை தொடர்ந்து வந்த சுப்பாராயன் என்னிடம் கிளம்பலாம் என்றார் . நான் சுயநினைவு திரும்ப அவருடன் என்னுடைய கார் நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தேன்.எங்கள் முன்னாலும் பின்னாலும் பல்வேறு கட்சியின் தொண்டர்கள் கத்திக்கதறியபடி இருந்தனர் அவர்களை மிகப் பொறுமையாக கடந்து வெளியேறினோம்.

அதுவரை சுப்பையனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை . காரில் ஏறிய பிறகு . நான் தான் பேசினேன் , என் வருத்ததையும் , பாலன் என்னிடம் சொன்னதையும் அவரிடம் கூறினேன் . அதற்கு அவர் சற்று நேரம் ஒன்றும் பேசாது இருந்தார்  , ஒரு அடைப்பு குறிக்குள் மௌனம் பருப்பொருள் போல, கிழிக்க முடியாததை போல் இருந்தது . சுப்பாராயன் என்னிடம் நீ பாலன் காரில் போயிருக்க வேண்டும் என்றார் . இருக்கும் சூழலில் பொருந்தாது எதையோ உளறுவது போல தோன்றியது . என்னால் யோசிக்கவே முடியவில்லை .இவர் என்ன சொல்ல வருகிறார் என புரியாது அவரை ஏறிட்டதற்கு . சிரித்தபடி" ரொம்ப அப்செட்டாகிவிட்டான் போல " என்றார் .  நிலைமை மெதுவாக மாறிக்கொண்டேவந்தது . 

நான் சகஜநிலைக்கு திரும்பி "ஏன் நான் அவருடன் காரில் சென்றிருக்க வேண்டும் என சொன்னீர்கள்" என்றதற்கு , "அநேகமாக பாலன் மரைக்காரை பார்க்க செல்லுவார் நீ கூட இருந்தால் நன்றாக இருந்திருக்கும்  " என்றார் . எனக்கு அவர்." வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மரைக்காரை மட்டுமல்ல சண்முகத்தையும் பார்க்கவேண்டும்" என்றேன் . அவர் புரியாது "ஏன்" என்றார் . நான் நேற்று இரவு பாலனிடம் சொல்லியதை சொன்னேன் . அதற்கு சுப்பாராயன் என்னை வினோதமாக பார்த்து "உனக்கு ஏன் அப்படி தோன்றியது" என்றார் . நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை . பிறகு அவர்" பாலன் என்ன சொன்னார் "எனக்கேட்டார் . பாலன் சொன்ன அரசியல் கணக்குகளை அவரிடம் சொன்னேன் . சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு . என்னிடம் டீ சாப்பிடலாமா என்கிறார் எனக்கும் அது தேவையாய் இருந்தது மேலும் அவர் என்னவோ சொல்ல விரும்புகிறார் . அதை காரில் டிரைவர் வைத்துக்கொண்டு சொல்ல விருப்பவில்லை என புரிந்துகொண்டேன் 

அவர்கள் மரைக்காரை சந்திக்கும் போது நான் ஏன் அங்கு இருக்கவேண்டும் என யோசித்த படி , வழியில் ஒரு டீ கடையை பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொன்னேன் . டீ சொல்லிவிட்டி சுப்பாராயன் பேசுவதற்கு காத்திருந்தேன் . சுப்பாராயன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் , எனக்கு ஏன் அப்படி தோன்றியது என்று கேட்டுவிட்டு . தனக்கும் அப்படி ஒரு எண்ணமிருப்பதாக சொன்னார். அனேகமாக நான் பாலனிடம் பேசிவிட்டு கிளம்பிய பிறகு பாலன் சுபராயனிடம் பேசியிருக்கவேண்டும், என்று நினைத்துக்கொண்டேன் . நான் நினைத்தது போல நடக்கும் வாய்ப்புகள்தான் அதிகம் என்றார்

வைத்திலிங்கம் முதல்வரானால் அடுத்து என்ன என்பதுதான் கேள்வி . சண்முகம் எதிர்காலம் கேவிக்குறியாகும் . இது பலவித அரசியல் அனர்த்தத்திற்கு வழி வகுக்கும் என்றெல்லாம் ,அவரது அரசியல் கோணத்தை பேசியபடி இருந்தார் . நான் எரிச்சலுடன் அவரிடம் "என்ன நடக்கலாம் என்பதுதான் என் யூகம் . விதி  அது தன் சமன்பாடுகளை எப்படி கொண்டுபோகும் என்று யார் பதற இயலும் நீங்கள் பேசுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா " என்றேன் .

சரி நீயே சொல்லு என்னவெல்லாம் நிகழக்கூடுமென என்றார். வைத்திலிங்கதிற்கு கை கொடுத்துவிட்டு திரும்பும் போது எனக்கு தோன்றியதை சொன்னேன் . இப்படி ஒரு கோணத்தை நான் யோசனைக்கே எடுக்காத போதும் , இது என் தலைக்கு வெளியே துருத்திநின்றது . அதை உங்களிடம் சொன்னேன் , அவ்வளவுதான்  நாளை அது போல ஒன்று நிகழ்ந்தால் , இதுபற்றி நான் முன்பே யோசித்திருந்தேன் என்றால் , எப்படி சரியாக வரும் , இனி அவ்வாறு நடந்தால் இதோ உங்களுக்களிடமும், பாலனிடமும் , நான் இது பற்றி பேசியிருக்கிறேன் . என்னை பொருத்தவரை இது அதைத்தாண்டி எனக்கு ஒன்மில்லை . சரி கிளம்பலாம் என்று முதலியார்பேட்டைக்கு வந்து சேர்ந்தபோது , பாலன் எங்களிருவரையும் வீட்டிற்கு வரச்சொல்லி இப்போதுதான் புறப்பட்டார் என்கிற தகவல் கிடைத்தது . அதற்குள்ளாகவா மரைக்காரை சந்தித்து விட்டார் , ஆச்சர்யமாக இருந்தது. இருவரும் பாலனை சந்திக்க சென்றோம் .

தொகுதி முக்கியஸ்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் , என்னை பார்த்து தலையணைத்தார் . அது ஒரு சமிக்ஞை நான் அவரிடம் ஒன்றும் பேசாமல் அவர்வீட்டிற்குள் சென்றுவிட்டோம் . சிறிது நேரத்தில் பாலன் உள்ளே வந்ததும் வராததுமாக என்னிடம் , இந்த தகவல் யார் கொடுத்தது என்றார் . நான் சற்று காட்டமாக "நேற்றிலிருந்து இது எனக்கு தோன்றியது என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு , சற்று எரிச்சலுடன் அவர் வீட்டிலிருந்து வெளியேறினேன் . பாலன் என்னை ஏதோ சமாதானப்படுத்தும் வார்த்தைகளை சொல்லிக்கொண்டே இருப்பது என் முதுகில் கேட்டது . நான் காரிலேரி வீடு திருப்பினேன் .

இரவு பத்துமணிக்கு மேல் சுப்பராயன் என்னை போனில் கூப்பட்டார் . அவர் என்னுடன் போனில் பேசுவது அபூர்வம் . ஆர்வத்துடன் நான் "என்ன " என்றதும் " பாலனிடம் மரைக்கார் நீ சொன்னது போலே ஏதோ ஒரு கணக்கை சொல்லியிருக்கிறார் , அதன் தொடர்ச்சியாகத்தான் உன்னிடமிருந்து வேறு ஏதாவது தகவல் கிடைக்கலாம் என பாலன் நினைக்கிறார் . உனக்கு திடீரென தோன்றியது என்பதை நம்ப மறுக்கிறார்கள் . உனக்கு தகவல் சொன்னவரை காப்பாற்றும் முயற்ச்சியாக பார்கிறார்" என தான் நினைப்பதாக கூறினார் . அதுபற்றி மீண்டும் பேச விரும்பாததால் . நான் "பாலன் அப்படி நினைப்பது ஆச்சர்யமில்லை அது எனக்கே புரிகிறது " என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

இது போன்ற ஒரு அனுபவத்தை பிற்காலத்தில் நான் பல முறை சந்தித்துள்ளேன் . ஒருவகையில் சொல்லப்போனால் , என் வாழ்கையின் பல முக்கிய தருணங்களில் என்னுடைய பெரிய முடிவுகள் பெரும்பாலும் இந்தகைய ஒரு உணர்வின் உந்துதலின் அடிப்படையிலேயே அமைந்தன . இன்று பல வருடங்கள் கழித்து அந்த முடிவுகளை திரும்பப் பார்க்கையில் , அவை மிகச்சிறந்த முடிவுகளாக இருந்திருக்கின்றன. நான் அப்போது அவற்றை மிகச் சரியாக எடுத்ததாகவே எப்பொதும் உணர்ந்திருக்கிறேன்.

இப்போது நினைத்தாலும் உடலே நாவாகி கசந்தது போல , கசப்பை மனமாக கொண்ட ஒரு பூவை முகர்வது போல .ஒரு வித இறப்பின் நொடிகளைப் போல வலிமிகுந்தவைகளாக அப்போது இருந்திருக்கின்றன . உடலில் ஆழப்பாய்ந்த இரு எதிர்முனை கூர்கொண்ட முள்ளை பிடித்திழுப்பது போல, குத்திநின்றிருப்பதை விடவும்  நீக்க முயற்ச்சிப்பது, வேதனையை பெறுக்குவது .

அன்று நான் உறங்க நெடுநேரமானது . நான் நிகழ்த்தாத அந்த சிந்தனைப் புரிதல் தொடங்கிய இடமடைய அதை நோக்கி என்னை தள்ளக்கொண்டேயிருந்தேன். என்னால் அந்த கணத்தை அடையவே இயலவில்லை , மேலும் சோர்ந்து போனதைத்தவிர . அப்போதெல்லாம் நான் எனக்கான அறையில் படுப்பதில்லை . வீட்டின் தளம் , அப்பா நவீன சிந்தனையில் அவற்றை என்ன காரணத்தினாலோ பத்தடி உயரமாக அமைத்திருந்தார் . அதனால் கோடையில் எனது அறை மிக காட்டமாக இருக்கும் . வீதியை ஒட்டி இருந்தமையால் எல்லா சமயமும் ஏதாவதொரு சப்தம் கேட்டபடி  இருக்கும்

நான் ஹாலில் தரையில் படுப்பது வழமை , கோரைப்பாய் தலையனை சகிதமாக ஒருவித ஏகாந்த நிலை . அனேகமாக படுத்தவுடன் தூங்கிவிடுவேன். அன்று ஹாலை விட்டு வெளியே, பால்கனியில் இரவு முழுவதும் உட்கார்ந்திருந்தேன் . அன்று முழு இரவும்  தூங்கவில்லை . என்ன முயற்சித்தும் என்னால் அந்த எண்ணம் எழுந்த இடத்தை கண்ணடையமுடிவில்லை . 


அதிகாலை 4:30 மணிக்கு மேல் என்னையறியாமல் தூங்கியிருக்க வேண்டும் . ஏதோ வண்டி சபதம் கேட்டு எழுந்தேன் . விடியற்காலை நல்லக்குளிர் கண்கள் எரிந்தபடி இருந்தது நான் ஒரு முடிவிற்கு வந்தேன் .அதுவரை விளையாட்டு போல இருந்த அரசியலை பின் தொடர நினைதேன்  . இப்போதைக்கு எனக்கு தோன்றிய அந்த புரிதல்நிஜம் . ஆனால் அது எப்படையெல்லாம் உருமாறி  அந்த இடத்தை அடைகிறது என்பதை , ஒவ்வொரு கணமும் அறிந்துகொள்ள முடிவ செய்த்தேன் . அது எனக்கு விரிக்கப்பட்ட வலை என்பதை அப்போது அறியவில்லை


சனி, 27 மே, 2017

அடையாளமாதல் - 82 * தடையால் மாறும் இணைவுகள் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 82
*  தடையால் மாறும்  இணைவுகள் *
இயக்க பின்புலம் - 9
அரசியல் களம் - 25





மறுதினமே வேட்பு மனு தாக்களுக்கு கடைசீ நாள் என்பதால் , அதற்கான முன்னேற்பாடுகளை செய்யத் துவங்கினோம் , எங்களுக்கு தாடஞ்சாவடி VVP  நகரில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் தாக்கல் செய்ய ஏற்பாடாகியிருந்தது . வட்டார தேர்தல் அதிகாரியை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பார்த்து நங்கள் குறித்த வைத்திருந்த நல்ல நேரத்தை சொல்லி அந்த நேரத்தில் தாக்கல் செய்வதை பேசி வைத்திருந்தோம் . அன்று மாலையே அரைமணி வித்தியாசத்தில் தட்டாஞ்சாவடியில் கண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதை அவரின் காரியதரிசி எங்களிடம்  சொல்லிச்சென்றார்  . வெகு பரப்பாக இருக்கப்போகிறது அன்றைய நாள் என நினைத்துக்கொண்டேன் .

குறிப்பிட்ட நாளில் நாங்கள் பின் மதியம்  3:30 மணிக்கு ஊர்வலமாக கிளம்பி வந்து மனு தாக்கல் செய்தோம் . கிளம்புவதற்கு சற்று முன்பாக பாலன் கூப்பிடுவதாக சுப்பாராயன் என்னிடம் சொன்னார் . நான் அவரை பார்த்தபோது ஒரு ஸம்ரதாயத்திற்காகவும் , என்னுடைய அன்பை வெளிப்படுத்தவும் ஒரு சால்வை அணிவித்தேன் . மிக மகிழ்வாக ஏற்றுக்கொண்டு , தன்னுடைய இந்த இடத்திற்கு வருவதற்கு நான் முக்கிய காரணம் என்றும் நான் அவரை சந்தித்த பின்பே தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தததாக சொன்னார் . 

பல நூறு முறை இதை சொல்லியாகிவிட்டது நேரம் அதிகமில்லை . நான் மையமாக சிரித்தபடி  கிளம்பலாம் என்றேன் . அதற்கு அவர் ஏன் அவசரப்படுகிறாய் உன்னை கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது . அவர் சார்பாக நான்தான் வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டும் என்றார் , எனக்கு புரியவில்லை . பிராமண பத்திரம் தாக்களை தொடர்ந்து உறுதி மொழி , பின் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சென்று மனு தாக்கல் செய்ய வேண்டும் . இதில் பார்வையாளராக நின்றிருக்கும் நான் எப்படி வேட்புமனு தாக்கல் செய்யமுடியும் எனப் புரியவில்லை.

பேசுகிற நேரமில்லை இது , எதோ உணர்ச்சி பெருக்கில் இருக்கிறார் . இது தனியுமானால் மறுபடி தேவையற்ற மற்றொரு சந்தேகப்பூ பூக்க ஆரம்பித்துவிடும் . அதற்கு முடிவேயில்லை . எதையும் காது கொடுக்காது . "சரி" என்றேன் . இருவரும் வெளியே வந்ததும் எங்கும் வாழ்த்தும் ஆர்ப்பரிப்பு இணைந்து கார்வையாயிற்று . சுப்பராயனை கடந்து சென்றதும் அவர் முகத்தில் ஒரு மந்தகாசம் அரும்பியது . நான்தான் அதன் பின்னணியை ஆராயும் மனநிலையில்  இல்லை . பெரும் ஊர்வலமாக  தொகுதியை சுற்றியபடி தேர்தல் அலுவலகம் வந்து சேர்ந்தோம் . அங்கு கூட்டமான கூட்டம் . நிரம்பி வழிந்தது 

அந்த அலுவலகம் நான்கு தொகுதிகளுக்கும் பொது  என்பதாலும் , அன்று தான் கடைசி நாள் மற்றும் நல்லநாளாக வேறு இருப்பதால் , நான்கு தொகுதியிலிருந்து பல்வேறு கட்சி மற்றும் சுயேட்சைகளுள் வந்து குவிந்தபடி இருந்தனர்  . குறிப்பிட்ட ஒன்னரை மணி நல்ல நேரத்திற்குள் அனைவரும் தாக்கல் செய்தாக வேண்டும் என்பதால் கூட்டம் அலைபாய்ந்தது  . அனைவரின் கஞ்சி போட்ட சட்டை வேர்வையில் நனைந்தது கொண்டிருந்தது . 

எனக்கு சட்டென தோன்றியது வேர்வையால் உருவாகி வந்தபிறகே கிடைக்கும் கஞ்சி , இங்குமட்டுமே உருவாகி வந்த கஞ்சி தேவையற்று வேர்வையில் கரைந்து கொண்டிருந்தது . 

முன்பே அனுமதிக்கப்பட்ட நேரத்தில் , அதிகாரி எங்களை முதலில் கூப்பிட்டார் . உள்ளே நுழையும் முன்பே தள்ளுமுள்ளு துவங்கிவிட்டது . கூடிய கூட்டம் அங்கிருந்த காற்றை முழுவதுமாக  உறுஞ்சிவிட்டதால் , எங்கும் வெக்கையாக இருந்தது துளி காற்றுக்கு நான் ஏங்க ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் பலவேறு தொகுகளில் இருந்த வந்திருந்த புதியவர்களுக்கு நான் பரிச்சயமாகாத்தால் , அவர்களுடன் மல்லுக்கட்ட இயலாமல் பின்னடைந்தபடி இருந்தேன் . என்னை இறுதியாக ஒரு மூலையில் ஒதுக்கினார்கள் .

இருபதடி தூரத்தில் வட்டார தேர்தலதிகாரி மேஜைக்கு முன்பாக போடப்பட்டிருந்த நான்கு நாற்காலிக்கு சிலர் முண்டியபடி இருந்தனர் . ஒருவாறாக பாலனுடன் சிலர் அமர்ந்துகொள்ள அதிகாரி காட்டிய படிவத்தில் பாலன் கையேழுத்து போட்டபடி இருந்தார் . அதிகாரி அனைத்தையும் சரிபார்த்த பிறகு . பிராமண பாத்திரத்தை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியதும்  . பாலன் எழுந்து பிராமண பாத்திரத்தை படித்து முடித்ததும் .அடுத்தது வேட்பு மனு தாக்கல் . 

திடீரென பாலன்  சுற்றும் முற்றும் யாரையோ தேடியபடி இருந்தார் , அருகில் அமர்ந்திருந்த காமலக்கண்ணன் எதோ கேட்க அவர் மீது எரிந்து விழுந்தபோதுதான் அவர் என்னை தேடுவதாக பட்டது , நான் கூட்டத்தை விலக்க முற்படுவதற்குள் சிலர் என்னை அடையாளம் கண்டுகொண்டு நான் முன்னே வருவதற்கு அந்த திரளை பிளந்து வழி ஏற்படுத்தினர் . பாலனை அருகனைத்ததும் அவர் முகம் சிறுத்திருந்தது . நான் அமைதியாக அவருடன் சென்று சேர்ந்துகொண்டேன்  

மனுதாக்கல் நேரம் நெருங்கியதும் அவரும் நானும்  சேர்ந்தபடி தாக்கல் செய்தோம் . மறுபடி சில பாத்திரங்களில் அவர் கையெழுத்திட்டதும் நிகழ்வு முடிவுக்கு வரும் தருணத்தில்  பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் வெளியேயிருந்து வந்து உள்ளே குழுமியதும் , பத்திரிகையில் வெளியிட புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதால் , தாக்கல் செய்த மனுவை திரும்பவும் தாக்கல் செய்வதுபோல போஸ் கொடுக்க சொல்ல , பாலன் மறுபடி என்னை தேடி தவிக்க துவங்கினார் . அவரை புரிந்துகொண்டு அருகணையும் முன்பாக புகைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு , அதிகாரியின் கைகளுக்கு படிவம் சென்று சேர்ந்துவிட்டது . பாலனை பார்க்க மிகவும் சோகமாக இருப்பதாக பட்டது . 


அனைத்தும் முடிந்து அறையை விட்டு வெளியேற அனைத்து தொண்டர்களும் படிகளில் வழிந்தபடி இருந்தனர் மெல்ல அனைவரையும் தாண்டி என் அருகணைந்ததும் எனக்குமட்டுமே கேட்கும் குரலில்  நான் ஜெயிக்கமாட்டேன் அரி என்றார் ? நான் ஏதாவது உளர வேண்டாம் எல்லோரும் நம்மையே பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள் . ஸீன் கிரேட்பன்னாமா வாங்க என்றபடி அவரிடமிருந்து விலகினேன் . பாலன் அவர் பயன்படுத்தும் கார் அருகில் வர அவர் திரும்பி என்னை பார்த்து கை காட்டி கூப்பிட்டபடி இருந்தார் அதற்குள் தொகுதி முக்கியஸ்தர்கள் அவர் காரில் ஏற . பாலனும் அரைமனத்துடன் அதில் ஏறிக்கொள்ள கார் புறப்பட்டு சென்றது . நான் நிம்மதியாக உணர்தேன்.


வெள்ளி, 26 மே, 2017

அடையாளமாதல் - 81 * புரிதலின் புதிய கோணங்கள் *

ஶ்ரீ:










அடையாளமாதல் - 81
*  புரிதலின் புதிய  கோணங்கள்   *
இயக்க பின்புலம் - 8
அரசியல் களம் - 25




சண்முகம் என்னிடம் சொன்னது, என் மூளையில் தேனீயின் ரீங்காரம் போல தலையை உதற உதற அது மறுபடி மறுபடி அருகில் பறந்தபடியே இருந்தது . "உங்களது மோதல் போக்கை களத்தை தவிர வேறெங்கும் பயன்படுத்தாதீர்கள்" என்றார். "உங்களுக்கான நல்லதிற்கும் நான்தான் "என்றார் . மிக கனிவான கூற்று அது, அல்லது அவரின் நுண்ணிய அரசியல் தொடுதலாகக்கூட இருக்கலாம் . எவரின் அரசியலிலும் வேண்டியதை கட்சித் தலைமையிடம்தான் கேட்டு பெறவேண்டியிருக்கும். தன்னை நிலைநிறுத்த விருப்புபவர் ஓயாத தெருச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவியலாது. கிடைத்ததை உண்டு பலம் பெருக்கினாலொழிய , அடுத்த சண்டைவரை உயிர் வாழ்வது இயலாமல் போகலாம்.  

அதனால்தான் அரசியலென்பது கட்சிக்கு வெளியில் இருப்பது போலும் . கண்ணனின் பாணி அதை எப்போதும் கட்சிக்கு உள்ளேயே நிகழ்த்திக் கொண்டிருப்பது . சண்முகமும் மரைகாரும் அதை தெளிவாக கையாண்டிருக்கிறார்கள் . காலில் அணியும் செறுப்பை போல பேச்சுவார்தையின் போது அவை அறைக்கு வெளியே  கழற்றி விடப்பட்டு கிடந்தன. அவர்களின் சமன்பாடு எங்கோ, எதானாலேயோ குலைந்ததனால் 1991 தேர்தல்களம்  இங்கு வந்து சேர்திருக்கிறது. அது பல யூகங்களுக்கு நடுவே கருணையற்று சென்றுகொண்டேருந்தது.

அன்று காலை பாலன் என்னை பார்க்க விழைகிறார், அவசரம் என்றதும் , நான் விரைந்தேன் . பாரத்ததும் வைத்திலிங்கத்தை சந்திக்கச்சொல்லி தகவல் என்றார் . அவர் தொகுதியில் அவருக்கான மாற்று வேட்பாளராக என் பெயர் பிரேரனை செய்யப்பட்டு இருப்தாக கூறினார் . 

யார் என் பெயரை பிரேரனை செய்தது , ஏன் என கேட்க நேரமில்லை . என்னை தேடி என் வீட்டிற்கு வைத்திலிங்கத்துடைய காரியதரிசி சென்றிருப்பதாகவும் உடனே சென்று சந்திக்க சொல்லிவிட்டு பாலன் களத்திற்கு சென்றுவிட்டார் .

நான் குழம்பியபடி வீடு வந்ததும் , எனக்காக அவருடைய காரியதரிசி துரைசாமி காத்திருந்தார் . நான் வேட்புமனு தாக்கல் செய்யத்தேவையான அனைத்துப் படிவங்களும் அவர் கையுடன் எடுத்து வந்திருந்தார். அதை தாக்கல் செய்ய சில அரசாங்க சான்றிதழ்கள்  தேவை அது ஏதும் அப்போது  என்னிடமில்லை . மனு தாக்கலுக்கு ஒரு நாளே உள்ள நிலையில் என்ன செய்வது என அவரையே கேட்டேன் . அவர் சில அரசு அதிகாரிகளின் பெயர்களைச் சொல்லி அவர்கள் வந்து பார்ப்பார்கள் , அவர்களுடன் தொடர்பில் இருக்கச்சொல்லிவிட்டு போய்விட்டார் .

சுமார் ஒருமணி நேரத்தில் அவர்சொன்ன அனைத்து அதிகாரிகளும் என்னிடம் வந்து படிவங்களில் கையெழுத்துப் பெற்றுச்சென்றார்கள் . அனைத்தும் அந்த ஒரு மணிநேரத்தில் முடிந்துவிட்டது . அனைத்து சான்றிதழ்களும் என்னிடம் கொடுத்துவிட்டார்கள் .அவற்றை நான் தனிப்பட்ட முறையில் எடுக்கச்சென்றால் குறைந்தது நான்கு நாட்களாவது தேவைப்படும் . இவை அரசியல் அதிகார மாயையின் "ஒரு சிறு துளி " அவற்றுடனான முதல் அறிமுகம் பிரமிப்பைத் தருவதாக இருந்தது .

நான் கையெழுத்திட்டுக் கொடுத்த அனைத்த பேப்பர்களும் சரிபார்க்கப்பட்டு , தாக்கலுக்கு தகுதியானவை என அறிதியிடப்பட்டு . அன்று மாலையே என்னை வேட்பு மனுத்தாக்கல் செய்யச் சொன்னார்கள் . நான் பாலனிடம் தகவல் சொன்னேன் . அவர் மனுதாக்கல் செய்துவிட்டு வைத்திலிங்கத்தை சந்தித்து அனைத்து தாஸ்தாவேஜிகளை அவரிடத்தில் ஒப்படைக்கும்படி சொன்னார் . நான் நெட்டப்பாக்கம் தொகுதியில் களத்திலிருந்து வைத்தியலிங்கத்தை சந்தித்து எல்லா சான்றுகளையும் ஒப்படைத்தேன் . அது அவருடனான என் முதல் சந்திப்பு . வாக்களார்களை சந்தித்துக்கொண்டிருந்த அவருடன் கைகுலுக்கி அறிமுகமாகி , பேப்பர்களை ஒப்படைத்துவிட்டு நான் காரில் திரும்பும் போதுதான் , "அதை "முதல்முறையாக , "அதை "மிகச்சரியாக உணர்ந்தேன் . அதுதான் என்முதல் கணிப்பென நினைக்கிறேன் .

அன்று எனக்குள் நிகழ்ந்தது என்னவென இப்போது உணர்கிறேன் . என்னுடைய சிந்தனையைதாண்டி ஒன்று என்னுள் தொடந்து தர்கித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும் . இல்லையெனில் நான் சிந்தனைக்கு  எடுக்காது ஒரு விஷயம் திடீரென புரிதலுக்கு உள்ளாக வேண்டியதில்லையே . நான் அதுவரை கணிசியாத சண்முகத்தின் தோல்வியை, கண்ணனின் கைவிடப்படலை, வைத்தியலிங்கத்தின் முதலவர்வாய்ப்பை, பற்றிய ஒரு தெளிவான ஒரு பார்வையை மின்னலின் சொடுக்களைப் போல பெற்றேன் . அது தான் இறுதி . நான் உறுதியாக நம்பினேன்.

பாலனிடம் அதைப்பற்றி அன்று இரவு சொன்னபோது , நிறைய கேள்கவிளுக்கு மத்தியில் என்னை திரும்பத்திரும்ப வைத்தபடி இருந்தார். தர்க்கம் ஓயவேயில்லை . அதில் கடந்தகால ஓட்டு சதவிகித கணக்குகளுடன், தொகுதியின் உள்  சமன்பாடு போன்றவைகள் முக்கிய காரணிகளாக இருக்கும்   . பல பாதைகளை திறந்து காட்டக்கூடிய ஒரு விளையாட்டு , மிக ஆபத்தானது , அதன் கதவுகளை திறந்தால் அது அடுத்த கதவின் முன் கொண்டு நிறுத்தியபடியிருக்கும் ஒரு  தீரா ஆடல் . அதில் எவர் நுழைந்தாலும் கணாமலாவதை தவிற பிறிதொரு முடிவில்லை. ஒரு கட்டத்தில் மூளை முடிச்சிட்டுக்கொள்ளும். இதில் வேடிக்கை , சில அடிப்படைகளில் கூட அவர் கேள்விகளையே கேட்டபடி இருந்தார் . காலம் சில முக்கிய தருணங்களில் அடுத்தவர் சொல்லுக்கு செவிகூர்வது சிறுபிள்ளைத்தனமானதாக தோன்றிவிடுமோ என்னவோ .

அன்று மாலை என்னை தேர்தல் சின்ன ஒதுக்கீட்டிற்கு வரச்சொல்லியிருந்தால் அங்கு சென்றேன் . அப்போதுதான் சுப்பராயக் கவுண்டரை முதல் முறையாக நேரில் சந்தித்தது , என்னையாரென அவருக்கு தெரியாததால் , நேரடியாக வம்புக்கு வந்து ,நான் யார், ஏன் அங்குவந்து தேவையற்று போட்டியிட விரும்புகிறேன் என்றெல்லாம் கத்திக் கொண்டேயிருந்தார் . நான் சிரித்தபடி அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு  கடந்து சென்றேன் . அவருடன் வந்திருந்த ஓரிரண்டு பேர் என்னை அறிந்திருந்தார்கள் என நினைக்கிறேன் , சிறிது நேத்தில் அவர் என்னை பார்பதை முற்றிலுமாக தவிற்த்தார் . நான் மனதிற்குள் நினைத்ததுக் கொண்டேன் . செல்வாக்கென்பது ஒரு தோற்றமே அதைத்தாண்டி அது ஒன்றுமில்லை , அல்லது அதை மேலும் பெருக்க விரும்பும்  வீங்கின அகங்காரத்தின் திணவு  அவ்வளவே . அல்லது அது ஒரு ஆதிக்கம் போல , ஒரு நுண்ணிய குறியீடுகளாக மலர்பவை. நம் சிந்தனைக்கு யாதொரு வேலையையும் வைக்காதே , நமக்காக பிறிதொருவர் சிந்திக்க துவங்குவர் , அவர்களே இட்டு கட்டி ஊதிப் பெருக்கிய பேருருவத்தை கண்டு அவர்களே அஞ்சுவர் . அது ஒருவித கோமாளித்தனதின் உச்ச வெளிப்பாடு .



வியாழன், 25 மே, 2017

வெண்முரசு கூடுகை 4

" வெண்முரசுநூல் ஒன்றுமுதற்கனல்அணையாச்சிதை " - 
பதிவு 17 -21 , 

நாள் 25-05-2107.                                                   
வெண்முரசு கலந்துரையாடல் 
புதுவைக் கூடுகை - 4 :

அக்னி 







"ல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே? தீயிற்கும் உணவு. இதுவே பாரதத்தின் சாரம் என்கிறது வெண்முரசு"

அணையாச்சிதையாக நிகழ்வுகளும் , விளைவுகளும் இதில் வருகின்ற அனைத்து கதாப்பாத்திரங்களுக்கு மட்டுமின்றி விண்ணக தெய்வங்களுக்கும் அதுவே அனுபவமாகிறது . அக்னி இந்நூல் முழுக்க ஊடுபாவாக குறுக்கும் நெடுக்குமாக பயணப்படுகிறான் அதனாலேயே இது முதற்கனலாயிற்று . அக்னி முக்கிய வர்ணங்களாக இருமைகளை பேசுகிறான் , கருமையும் வெண்மையுமாக ஒவ்வொருவரையும் தகிக்கிறான்

ரம்பனும் கரம்பனும் தவமியற்ற அக்னி எழுந்து வந்து வரம் அருளுகிறான் அத்தால் அவனும் பீடிக்கப்பட்டு வெம்மையிழந்து தாமரைபொலாகிறான்

பிரதீபருடைய  அரசுசூழ்தலாக வெண்முரசு விரிவடைகிறது , மாமன்னர்களும் அஞ்சும் கங்கர்குலத்தவரின் மலைகளுக்கு கீழிருந்து எவருமே செல்வதில்லை

பாரதவர்ஷம் கங்கர்களை அஞ்சுகிறது . அவர்களின் அம்புகளில் காளகூட விஷத்தின் துளிகளுண்டு என்று வீரர்கள் சொல்லிக்கொண்டனர். என்றோ ஒருநாள் கங்கர்கள் கங்கைவழியாக மலையிறங்கி வந்து நாடுகளையும் ஜனபதங்களையும் வெல்லக்கூடுமென நிமித்திகர்களின் நூல்கள் சொல்லின. அரசர்கள் அவர்களை கனவுகண்டு குளிர்ந்த வியர்வையுடன் விழித்துக்கொண்டார்கள் .

நிழலை பருவடிவாக அறியத்துடிக்கும் மானுட உள்ளம், நிமித்தகரிடம் அதன் பொருளை பெறுகிறது . அவர் சொல்லுவது குறியீடாக . அவர்கள் அஞ்சியது நடந்தது . ஆனால் ஒரு போராக எழாதே தனியொருவராக பீஷ்மர் அனைத்து ஜகபதங்களுக்கு வியரவைக் கனவுகளை தந்தபடியே இருந்தார்.

பிரதீபன் பட்டத்து இளவரசர் சந்தனுவை மட்டும் அருகழைத்து சொன்னார். அஸ்தினபுரி பாரதவர்ஷத்தின் நடுவிலிருக்கிறது மகனே. ஆகவே இது பாரதவர்ஷத்தின் தலைமை நகரமாக இருக்கவில்லை என்றால் அத்தனை ஷத்ரியர்களின் ரதசக்கரங்களும் துவைத்துச் சிதைத்தோடும் பெருவழியாக மட்டுமே எஞ்சவேண்டியிருக்கும். பாரதவர்ஷத்தின் வடக்கிலும் மேற்கிலும் தெற்கிலும் எல்லையற்ற நிலவிரிவு கொண்ட புதிய தேசங்கள் உருவாகி வந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் ஆநிரைகள் பெருகுகின்றன. அவர்களின் வயல்வெளிகள் விரிகின்றன. ஆநிரையும் கதிர்மணியும் ஆயுதங்களே என்று அறிக. அஸ்தினபுரியோ வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கும் நாடு. நாமடைவது மனிதர்கள் அளிக்கும் பொன். அந்நாடுகள் பெறுவதோ மண் அளிக்கும் பொன். அது குறைவதேயில்லை. தந்தையின் சொல்லை மெய்யாக்கினார் சந்தனு.

அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை.அந்த ஒருமையைக் கண்டு வியந்து அக்கினி அவனுக்கு முன்னால் தோன்றினான். “நீ விழையும் மைந்தனின் குணமென்ன?” என்றான். “குணங்களில் மேலானது தமோகுணமே. அசுரர்களின் தமோகுணமனைத்தும் ஒன்றாகத்திரண்டு என் மகன் பிறக்கவேண்டும்என்று வேண்டினான் ரம்பன். அவ்வாறாக அவனுக்கு எருமைத்தலையும் இருள்நிறமும் கொண்ட மகிஷன் பிறந்தான். என்கிறார் 

நூறு பாம்புக்குழந்தைகளில் ஒருவன் பெயர் உசகன். சந்திரவம்சத்தைச் சேர்ந்த அரசநாகமாகிய உக்ரோதனின் மகன் அவன் . வம்ச பரமரபரை மானுடற்கு மட்டுமல்லாது அனைத்து ஜீவராசிக்கும் பொருந்துகிறது நாமகரனத்தோடு . அது பாரதத்திற்கே உள்ள தனிச்சிறப்பு. அது இதிகாச கதாபாத்திரத்தின் இன்றியமையாத பங்களிப்பை வெளிப்படுத்துகிறது . யாரும் எவரும் தேவையற்று பிறப்பெடுப்பதில்லை இப்பூவுலகில்

எத்தையும் உண்ணும் அக்னி உசகனைவிட்டுவைக்காத பொது . அவன் அக்னியே, உன்னை என் அன்னை என்று எண்ணி இங்கே வந்தேன். என்னை உணவாக்கியது அறமல்லஎன்றான். அக்னிதேவன்என்னை அடைந்த எதையும் உண்ணுவதே என் அறமாகும். ஆனால் நீ அன்னையைத் தேடிவந்த குழந்தை என்பதனால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். நீ சந்திர வம்சத்தில் மனிதர்களின் அரசனாக பிறப்பாய்என்றான். குரு வம்சத்து அனைத்து பாகங்களும் விண்ணகத்து ஆடல் நிரம்பியதாக இருக்கிறது.

மற்றொரு அக்னி .பால்ஹிக்னின் அந்த தீச்சொல் என்றும் சந்தனுவின் உள்ளத்தில் இருந்தது. உசகன் அந்நெருப்பை அறியாதிருந்த காலமே இல்லை.

தன் குருதியில் பிறக்கும் நோயுற்ற குழந்தைகளை கனவில் கண்டு அஞ்சி எழுந்தமர்ந்தான். மலைகளைத் தாண்டி கங்கர்குலத்தில் அவன் பெண்கொள்ளச் சென்றமைக்குக் காரணம் அதுவே. கோபுரம் போன்ற உயரமும் கற்பாறைத் தோள்களும் கொண்ட கங்கர்குலத்தின் வலிமை தன் குலத்தில் சேர்ந்தால் அந்த தீச்சொல்லில் இருந்து தப்பிவிடலாமென அவன் நினைத்தான்.

கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. பாரதத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் தர்க்க ரீதியான நிரவல்களாக முழுக்க பேசப்படுகிறது. அஷ்டவசுக்களை கங்கையில் இட்டதை அக்கரையுடன் வெண்முரசு  நியாயப்படுத்துகிறது. காலமென்றம் , மேல் கீழ் உலகமென்றும் பல படிப்புக்களை கொண்டதான சிருஷ்டியில் , இதிகாசமும் புராணங்களும் , நடந்தவைகளாக , கேட்டபவரின் சங்கடத்தை புரிந்து கொள்ளாது விவரித்தபடி சென்று கொண்டேயிருப்பவை . ஆனால் வெண்முரசு அதை நாம் நப்பும்விதமாக , புரிந்துகொள்ளக்கூடிய , தர்க்க ரீதியான, உளவியல் ரீதியாக வெளிப்படுகின்றது .

சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில்அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்என்றார்.

சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான். அக்னி அவனுக்கு அளித்த வரம் சபலமாகியது.

விசித்திரவீரயன் கேட்டான்  “நீங்கள் அறியாத அறமா? நீங்கள் கற்காத நெறிநூலா? ஏன் மூத்தவரே?”

பீஷ்மர் பார்வையைத் திருப்பிநூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை. நெறிகளை வளைக்கும் முறையை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன. இளையோனே, நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத்தெளிவு உன்னில் இருக்கிறதுஎன்றார். கற்றல் உலகியல் நெறிகளை காயப்படாது மீறல் என்பதை சொல்ல வருகிறதா ? எனில் காயப்பாடாமையின் நுண்பரிமானம் புரியவேண்டியுள்ளது

சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள். வரமாக தானே அங்கு மகனாக நுழைவதாக வெண்முரசு கூறுகிறது .

அதேசமயம் . பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தனஎன்று அவள கருபுகுதலை போல ஒன்றை இலக்கியமாக்கி வியக்க வைக்கிறது

வாழ்வின் பொருள்பற்றிய தன் கணவனுடைய கூற்றை மறுத்து,   புராவதி பெருமூச்சுடன்பொருளறிந்து வாழ்வது எவருக்கும் சாத்தியமல்ல அரசேஎன்றாள். அம்பையை அவளே கார்த்தியாயினி. ஈரேழு உலகுக்கும் பேரன்னை.


குனிந்து குழந்தையைத் தொட அவனால் முடியவில்லைஎரியிதழ் போலிருக்கிறாள். இவள் என்னுடலில் இருந்தோ உன்னுடலில் இருந்தோ வரவில்லை அரசி. விறகில் எரியும் அக்கினி போல நம்மில் இவள் நிகழ்கிறாள்என்றான்.

உள்ளூர அவள் அம்பையை அஞ்சினாள். ஆனால் அது ஆளும் இறைவிமேல் கொண்ட அச்சம் என்றும் அறிந்திருந்தாள். “எரியும் விறகாக என்னை உணர்கிறேன். இவள் என் தீஎன்று ஒருமுறை அவள் பீமதேவனிடம் சொன்னாள்.

உன் மகள் தட்சனின் மகளாய்ப்பிறந்து எரியேறிய தாட்சாயணியின் துளி என அறிவாயாக! என்கிறாரகள்

உன் கண்களைப்பார்த்தேன் தேவி. இன்னும் உன் அனல் அவியவில்லையா என்ன?” என்று பீமதேவன் கண்ணீருடன் கேட்டார். “என் சிதையெரிந்தாலும் எரியாத அனல் அதுஎன்று புராவதி சொன்னாள். தாடை உரசி பற்கள் ஒலிக்கஎன் குழந்தை மாளிகை வாயிலில் வந்து நின்றாள் என அறிந்த நாளில் என்னுள் அது குடியேறியதுஎன்றாள்.

அப்பால் நாகத்துறவிகளில் ஒருவர் திரும்பி புராவதியை நோக்கி கைசுட்டி உரக்கச்சிரித்துநெருப்பையே நினைத்தவளை நெருப்பும் அறிந்திருக்கிறான்என்றார். தன்னுள் தானே பேசியபடி மெல்ல ஆடிச்சென்ற பித்தி புராவதியை கடந்து சென்றாள்.

புராவதியின் அகம் மணலில் வற்றும் நீர் போல மறைந்துகொண்டிருந்தது. அவள் கண்களுக்குமேல் மதியவெயில் பொழிய அவள் சித்தத்துக்குள் ஒரு வெண்கடல் அலையடித்து விரிந்தது. அதன் நடுவே விரிந்த வெண்தாமரையில் அவளுடைய தெய்வம் வெண்கலை உடுத்தி நிலவெழுந்ததுபோல அமர்ந்திருந்தது

புராவதி நடுங்கும் உதடுகளால்அம்பை அம்பைஎன உச்சரித்துக்கொண்டிருந்தாள். கண்களை அழிக்கும் வெண்மை, நிறங்களெல்லாம் கரைந்தழியும் வெண்மை. இரு கரியகழல்கள். அவையும் வெண்மைகொண்டு மறைந்தன.




கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *

  ஶ்ரீ : பதிவு : 700  / 889/ தேதி 09 ஆகஸ்ட்   2026 * முடிவுறாத துவக்கம் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...