https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 8 அக்டோபர், 2020

அடையாளமாதல் * ஊழ்,செயல்,கற்றல் *

 .


ஶ்ரீ:



பதிவு : 538  / 731 / தேதி 08 அக்டோபர் 2020


* ஊழ்,செயல்,கற்றல் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 15.






ஆழுள்ளம் படைபூக்கம் வழியாக நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் எனக்கான வழியை கண்டடைந்திருக்கிறது அதன் மூலமே நான் செயல்படும் விழைவை அடைந்திருக்க வேண்டும் . வாழ்நாள் முழுவதும்  எனது கற்றல் அதிலிருந்தே நிகழ்ந்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.நான் பெருந்திட்ட வாதத்தை முன்வைப்பவன் , தற்செயல்களை நிராகரிக்கிறேன் .பெருந்திட்டம் என்னவென்று எவராலும் சொல்லிவிட முடியாது .ஆனால் தனிப்பட்ட ஒருவரின் வாழ்வில் நிகழும் அனைத்தும் ஒருங்கினைக்கப்பட்டு கூட்டு நனவிலியில் அல்லது ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது என எண்ணுகிறேன். ஒன்று அடுத்த ஒன்றை தொடர்புறுத்துவது அங்கிருந்து நிகழலாம்.


எனக்கான தேடல் என்னாழுள்ளத்தில் இருந்து எழுந்திருக்கலாம் .எனது தேடலை நான் முதலில் அப்படித்தான் புரிந்து கொண்டேன் .ஆனால் ஒரு புள்ளியில் அது எனது தந்தை கொண்ட தேடலின் மிச்சல் என புரிந்து கொண்ட போது திகைப்படைந்தேன்


இயற்கை பெரு நதியின் விசையால் அனைத்தும் ஒருக்கமாகின்றது .அது தனிமனிதனுக்கு சொல்ல ஒன்றுமில்லை.சில புள்ளிகளை இணைத்து அங்கிருந்து வாழ்வியலின் அர்த்தம் கொள்ள முயலவதைப் போல அபத்தம் பிறிதொன்றில்லை.எனக்கு அது என்ன சொல்ல வந்தது என புரிந்து கொள்ள விழைவதில்லை


முயற்சித்த அனைத்திலும் பெரும் வெற்றியை மட்டுமே அடைந்திருக்கிறேன் .அது நான் ஈடுபட்ட துறையின் முதன்மை ஆளுமைகளுக்கு பக்கத்தில் கொண்டு என்னை நிறுத்தியிருக்கிறது .அது வியாபாரமாக, அரசியலாக , ஆன்மீக இயக்கமாக, முற்றும் தொடர்பில்லாது சட்டென எழுந்த இலக்கியமாக, எனக்கான அடையாளத்தை அது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஏற்ற இறக்கங்கள் வழியாக நிகழ்ந்த கற்றலை இங்கு தொகுத்து அடுக்கி எழுதி எழுதி என்னை புரிந்து கொள்ள முயலும் இந்த வளைப்பூ மூலம் ஆழ்மனத்துடன் உரையாட முயல்கிறேன்.


ஒரு செயலில் இறங்கத் தீர்மாணிப்பது என்னுள் எப்படி நிகழ்கிறது என நான் இன்றுவரை அறிந்ததில்லை . அந்த நோக்கி    உடனே சென்றுவிடுவமில்லை . அதை நிகழ்த்துவதை குறித்த ஆழ்ந்த விழைவை எனக்குள் உருவாக்கி கொள்வது மட்டுமே நான் செய்வது .ஒரு கனவுபோல அதை மெல்ல மெல்ல விரித்தெடுத்து அதைப்பற்றிய கருத்தியலை உருவாக்கிக் கொள்வதுடன் அதை செயல்படுத்துவதற்கான நெறியையும் உருவாக்கி கொள்வதை பற்றிய கனவை வளர்த்துக்  கொண்டு  காலத்திற்கு காத்திருப்பது மட்டுமே நான் இயற்றக்கூடியது .


ஆழ்ந்த விழைவினாலோ , ஊழின் ஆடலோ இன்னதென அறிந்து கொள்ள முடியாத அதன் கதவுகள் மெல்லத் திறப்பதை ஆச்சர்யத்துடன் பார்திருக்கிறேன்.அது நிகழும் காலம்வரை பொறுத்திருப்பது எனது வழமையாக இருந்திருக்கிறது .சில கனவுகளாக மட்டுமே எஞ்சி விடுவதும் உண்டு .எந்த ஒரு இலக்கும் தனிமனித முயற்சியில் கைவருவது சாத்தியமில்லை என உணர்ந்திருக்கிறேன் . அது முற்றும் ஒத்திசைவு கொண்ட குழுக்களால் நிகழ்வது .அதன் பாதையும் சக பயணிகளும் ஒத்த கருத்துடைய சிலரும் வழித்துணையாக வந்து வந்து சேர்ந்து கொள்வதை திகைப்புடன் பார்த்திருக்கிறேன்.அதன்பின் அதன் விசையால் உள்ளிழுக்கப்பட்டு செயல் நோக்கி உந்தப்படுவது நிகழ்கிறது.


புதிய முயற்சிகள் அதற்கான அறைகூவலுடன் எழுந்து வருகின்றன . ஆழ்மனம் எங்கோ சீண்டப்பட்டு அந்த அறைகூவலை எதிர்கொள்வதை எப்போதும் காலம் நிகழ்த்துகிறது  என அதற்கு என்னை ஒப்புக் கொடுப்பது மட்டுமே என் செயல் துவக்கமாக இருந்திருக்கிறது . ஒருமுறை  ஆழ்ந்து யோசித்து அதில் ஈடுபடுவது என முடிவெடுத்தவுடன் அங்கிருந்து திரும்புவதற்கான வாய்ப்பு எனக்கு நிகழ்வதில்லை. அல்லது எனது தன்னகங்காரம் அதை பார்க்க விடுவதில்லை.பின் ஒருபோதும் அச்செயல் இருந்து  பின்வாங்கியதில்லை . அந்த பாதை என்னை விலக்கும்வரை.


எல்லா வாய்ப்புகளிலும் எனது கோட்பாடு ஒன்றே . எனக்கானவர்கள் என  நான் எவரையும் உருவாக்கிக் கொண்டு சென்றதில்லை  . அத்துறையைச் சேர்ந்தவர்கள் தானாக என்னுடன் ஒருங்கித் திரள்வது .அவர்களை என் துணையாக எடுத்தபடி எனது பயணத்தை தொடர்ந்திருக்கிறேன். வெற்றிக்கு பிறகு  கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளவது சமரசங்களின் வழியாக மட்டுமே நிகழ்வது . 

சமரசங்களுக்கு நான்  உடன்படுவதில்ல உடன் வந்தவர்கள் கிடைத்ததை தக்கவைக்கும் முயற்சியில் சமரசத்திற்கு உடன்படுவது குறித்த அழுத்தம் கொடுப்பது நிகழ்ந்து விடுகிறது .எனது மறுப்பு அந்த சூழலில் நான் அவர்களுக்கு தேவையற்ற எடையாக தோன்றிவிடுவதுண்டு. 


அல்லது ஒரு செயல் துவக்கத்தில் என்னை அதற்கானவனாக பார்வையை உருவாக்கிக் கொள்பவர்கள் பிறகு எங்கோ அதை திறன் என்பதிலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறார்கள்.இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என அவதானிப்பதுண்டு .

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

அடையாளமாதல் * ஊழின் வாய்ப்புகள் *

 


ஶ்ரீ:



பதிவு : 537  / 730 / தேதி 04அக்டோபர் 2020


* ஊழின் வாய்ப்புகள் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 14.






“அரசியலில் பெரும்பாலானவர்கள் எதிர்மறையான உணர்ச்சிகளை தூண்டிவிடும் போலி இலட்சியவாதிகள். பிரிவினைஉணர்ச்சிகளையும் கசப்புகளையுமே அவர்கள் உருவாக்குகிறார்கள். அவர்கள் நமக்கு தலைவர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் அதிகாரத்தை நெருங்கிவிட்டால் சுயநலம்மிக்கவர்களாகவோ திறமையற்றவர்களாகவோ குழப்பவாதிகளாகவோ அமைந்து பேரழிவை உருவாக்குகிறார்கள்”.- ஜெ.


இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணன் முன்வைத்த “கோட்பாட்டு அரசியல்” அவராலேயே மீறப்பட்டது முரண்நகை. அது உலக யதார்த்தங்களில் ஒன்று என்றாலும் அன்று உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த இளைஞர்களுக்கு “லட்சியவாதம்” பெரிதாகத் தெரிந்தது . அந்த உற்சாகம் பாலன் தலைமை பொறுப்பிற்கு வந்ததும் பெரும் எதிர்பார்ப்புடன் எழுந்து பொங்கி பின் ஏமாற்றமடைந்து விரைவில் வடிந்து போனது . தொண்டர்களின் புரட்சியின் வழியாக அதிகாரத்திற்கு வருபவர்கள் அனைவரும் சந்திக்கும் மிக சிக்கலான இடம் .அங்கிருந்து மீள்பவர் இல்லை .


தேர்தலில் வெற்றி பெறுவதன் வழியா கண்ணன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தான் செய்வதாக பாலன் சொல்லியிருந்தார்.  நடைமுறைக்கு சாத்தியமில்லாது என்று முன்பே நிரூபிக்கப்பட்டிருந்தும், ”லட்சியவாதம்” அதி நம்பிக்கையில் விளைவது .அதிலிருந்து மீள்வது எளிதல்ல . ஏமாற்றம் அமைப்பை தளர்ந்து போக செய்தது .பாலன் அரசியல் சூழ்சியால் அதை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.மிகப் பழைய தந்திரம் .பிரித்தாளுவது .ஒருவருக்கு ஒருவரை எதிர் எடையாக நிறுத்தும் போக்கு .தேர்தலில் தோற்ற பின்னரும் அவரை விட்டு விலகாத அமைப்பு அவரது திரிபு அரசியலால் அவருக்கு எதிர் எடையாகி ஒரு கட்டத்தில் அமைப்பு உடைந்து சிதறியது.


இங்கு சண்முகம் , கண்ணன் , பாலன் மூவரையும் ஒப்பிட்டு அரசியலில் தனது எதிரிகளை கையாள்வதில் தலைவராக உள்ள அனைவருக்கும் அந்த உரிமை சமமானதுதான் என்றாலும்  எதன் அடிப்படையில் இவர்கள் வேறுபடுகிறார்கள் என்பதை யூகிக்க விழைகிறேன். சண்முகத்தை நடைமுறைவாதி என கொண்டாடும் போது , மற்றவர்களுக்கு அந்த இடம் ஏன் கொடுக்க முடியாதாகிறது?.சண்முகத்திடம் காணப்படும் சொல் செயல் ஒருமைப்பாடு பிறர் அதில் குற்றம்கானவதற்கான வாய்ப்பை அஞ்சுவது .எளிய வாழ்கையை முன்வைத்து பின்னர் ஒருபோதும் அதிலிருந்து விலகாதிருப்பது என்கிற கொள்கையோடு கடைசி வரை பிரம்ச்சாரியாக வாழ்ந்து மன்மறைந்தார். புதுவையில் அவருக்கு சொந்தமாக ஒரு சதுரடி நிலம் இல்லை. பிற இருவரிடம் இதை எதிர்பார்க்க முடியாது .அரசியல் சரிநிலைகளை காரணம் காட்டி தங்களின் செயல்பாடுகளை, பொருளியலை அமைத்துக் கொண்டது முதன்மைக் குறைபாடு என நினைக்கிறேன்.


1997 களில் இளைஞர் காங்கிரஸ தலைவராக வல்சராஜ் வந்தது ஒரு விபத்து .வேறொருவருக்கு செல்ல வேண்டிய பதவி சண்முகத்தின் அரசியலால் வல்சராஜிடம் வந்து சேர்ந்தது .வல்சராஜிக்கான அரசியல் களம் மாஹயில் இருக்கிறது . புதுவை அவருக்கு களைப்பாறும் இடம் மட்டும். அமைப்பின் தலைவராக அவர் வெளிப்பட ஒருபோதும் விரும்பவில்லை . ஆனால் அந்த அடையாளத்திற்கான உரிமைகளை சலுகைகளை வேறு விதத்தில் வேறெங்கோ பெற்றுக் கொண்டிருந்தார்.அவருக்கு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பராமரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை.அது செயல்படுவதால் எழும் சிக்கலை நிர்வகிக்க , ஒன்றுடன் ஒன்று முரண்படும் குழுவை உருவாக்கி மொத்த அமைப்பை உறைநிலைக்கு கொண்டு சென்றார்.


பாலனிடம் இருந்து மனம்கசந்து அரசியலில் விலகி பின்னர் சண்முகத்தால் அழைப்பட்ட போது எனக்கு அரசியல் எதிர்காலம் என ஒன்றைப் பற்றி எந்த கனவும் இருக்கவில்லை. தனிப்பட்ட வாழ்கையில் அன்றிருந்த கொந்தளிப்பான மனநிலையில் இருந்து வெளிவரும் வழியாகவே அதை நினைத்தேன்.


படைப்பூக்கம் ஒன்று மட்டுமே என்னை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்திருக்கிறது என்பதை இப்போது தெளிவாக உணர்கிறேன் .எந்த துறைக்கு சென்றாலும் சில காலத்திற்குள் அங்கு நிலவும் சூழ்நிலையில் வளர்ச்சியை, மாறுதலை, புதுப்பங்களிப்பை நோக்கிய பிறிதொரு பாதை சிறுத்து பிறர் பயணிக்க அஞ்சும் அல்லது விலக்கும் ஒன்று எனக்கு மெல்ல தெளிந்து வந்து விடுகிறது  .எங்கிருந்தோ உந்தப்பட்டு அந்தப் பதையை முயற்சித்து பார்க்கும் எண்ணம் உருவாகிவிடுகிறது.ஊழின் விளையாட்டு என இப்போது நினைக்கிறேன்.


செயல்படுதன் வழியாகவே எனது கற்றல் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு எனக்கிருந்த  படைப்பூக்கம் பெரும் உந்து விசை .செயல்படாமல் என்னால் இருந்திருக்க   முடியாது என இப்போதும் உணர்கிறேன் .அது எனக்கு நிலையழிவை கொண்டு வந்தாலும் , முரண்பட்ட அடையாளத்தைக் கொடுத்தாலும் அதுவே எனது வழியாக இருந்தது.அதில் அடைந்த  வெற்றியை பற்றி இப்போது இனிதென் நினைவுறுகிறேன் .அதில் நிலையாமல் போனது  பற்றிய கசப்பு இன்றளவும் எழுந்ததில்லை..


புதன், 30 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நடைமுறைவாதம் *

 .



ஶ்ரீ:



பதிவு : 536  / 729 / தேதி 30 செப்டம்பர் 2020


* நடைமுறைவாதம் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 13.







புதுவை மாதில காங்கிரஸ் தலைவர் சண்முகம் உரையாடல்களின் வழியாக தனது அரசியலை பிறரிடம் செலுத்துவதை வழியாகக்  கொண்ட பழைய அரசியல் பாணியை சேர்ந்தவர். காந்தியின் வழிகளை தங்களின் பாதைகளாக ஏற்று நவீன இந்தியவில் அவற்றை நடைமுறைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொண்டவர்களை  நடைமுறைவாதிகள் என வரையறை செய்யது கொள்ள முயல்கிறேன் .காந்தீய முயற்சியின் அரசியல் மதிப்பீடுகளை குறித்து 1970 களின் இறுதிகளில் அவர்கள்  அச்சமடைந்தார்கள். காந்தியின் அரசியல் நிர்வாக அனுகுமுறை ,நேருவின் சோஷலிச கொள்கைகள் அவற்றுடன் சர்தார் வல்லபாய் பட்டேலின் செயல்பாட்டுடன் இணைத்து புரிந்து கொள்ள முயன்றவர்கள். 


இந்தியாவில் அவர்களைப் போன்றவர்கள் எண்ணற்றவர்கள் . ஆட்சி பொறுப்பை வகிக்கும் வாய்பை பெற்று அதில் நிலைகண்டவர் என்கிற அளவில் நரசிம்ம ராவ் அதில் முதன்மையானவார் . அரசியலில் நடைமுறைவாதம் என்கிற கருதுகோளை அவர்களின் வழிமுறைகள் மூலம் விளங்கிக் கொள்ளும் பிரதிபலிப்பாக சண்முகம் அவர்களை  பார்கிறேன். அவர் எங்களைப் போன்றவர்கள் அரசியலில் நம்பிக்கை கொள்ள வைத்தவர் .


1989-90 களில் சண்முகம் , மரைக்காயருக்கு இடையேயான பொது சமன்பாட்டை மரைக்காயர் குளைத்து அதற்கு எதிரான செயல்பாட்டிற்கு வந்த போது அவரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது சண்முகத்தின் நிதானமாக அரசியலாடும் பாணி. அவருக்கு நெருக்கமான பல கட்சி அமைப்புகளைச் சேர்ந்த பலருக்கு தெரிந்ததே . அரசியலில் வெட்டி ஆடுவதை கடைசி ஆயுதமாகக் கொண்டவர். அதை ஒருவருக்கு எதிராக நிகழ்த்தும் போது அவரால் வெட்டுப்பட்டவர் பின் ஒருபோதும் தன் இடத்தில் திரும்ப எழுந்ததில்லை என்பது புதுவை அரசியல் வரலாறு . குபேர் முதல் கண்ணன் வரை .காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமல்ல பல முறை எதிர்கட்சிளிலும் அதை நிகழ்த்தியவர் என்பதால் அவர் மீது கொண்ட அரசியலாளர் மற்றும் அரசு நிர்வகிகள் வரை கொண்ட அச்சம் அவரது கடைசி காலம்வரை நீடித்தது.


சண்முகம் தொண்டர்பலமோ வாக்குவங்கியோ இல்லாதவர் .அரசியல் சமன்பாடுகள் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் . இவை அனைத்தையும் கடந்து அவர் அரசியல் சூழ்ச்சியாளர் என குற்றம் சுமத்தப்படுபவர் . அது உண்மை .அரசியல் சமன்பாடுகள் சூழ்ச்சிகளின் வழியாகவே வகுக்கப்படுபவை. அதில் நேரடித்தன்மை இருக்க வாய்ப்பில்லை. சண்முகம் ஒரு நடைமுறைவாதி .ஆனால் அரசியலில் அவரை போன்றவர்களின் பங்களிப்பை குறைத்து புரிந்து கொள்கிறோம்.அவர்கள் சுவாரசியமற்றவர்கள் , சூழ்ச்சிகாரர்களாக   தெரிகிறார்கள். முப்பனாரும் அவர்களைப் போன்றவர்களே. ஆனால் மூப்பானார் போன்ற பெரும் ஆளுமைகள் தோற்றது துரதிஷ்டவசமானது.அந்த இடத்தில் சண்முகம் வென்றிருக்கிறார் என்பது ஆச்சர்யமானது .


அகில இந்திய தலைமை பலர் பற்றிய ஆழமான , நுட்பமாண பத்திரிக்கைகளில் வெளிவராத அரசியல் செய்திகளை விளங்கிக் கொள்ள சண்முகம் ஒரு சிறந்த ஊடகமாக எனக்கு தெரிகிறார் .எனக்கான வாய்ப்பு அவரை மிக நெருங்கிப் பார்க்கும் வாய்பை பெற்றது தான் . இந்த பதிவு சண்முகத்தின் புகழ்பாடுவதல்ல . இந்தியப் பெருந்தலைவர்களின் செயல்முறையின் ஒரு துளி அவர் . அந்த ஆளுமைகளால் அடைந்த பாதிப்பை தனது வாழ்நாளில் முயற்சித்து பார்த்தவர் . 


அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதை அலசுவதல்ல இந்தப் பதிவின் நோக்கம். அசிங்கமாக எதுவும் அரசிலின் பொருட்டு செய்யாலாம் என்கிற சித்தாந்தம் பெருமளவு ஒப்புக்கொள்ளப்பட்ட சூழலில் .இல்லை மனிதனாக வாழயிலாதவன் நல்ல தலைவனாக எப்படி உருவாக முடியும் என்கிற கேளவிக்கும் , லட்சியவாதத்தில் நம்பிக்கையும் அதை செயல்படுத்தும் இடங்களில் நடைமுறைவாதமே வெற்றி பெறக்கூடியது என எனக்கு புரியவைத்தவர்.அதன் பொருட்டு அரசியலின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்தவர் என்கிற அடிப்படையில் ஆகச் சிறந்த தலைவராக இன்றளவும் அவரை பார்கிறேன்.ஆற்றிக் கொள்ள முடியாத கசப்புகள் கைநழுவி போன வாய்ப்புகள் , என எனக்கு அவரிடத்தில் பெரும் வருத்தம் இருப்பினும் நான் கண்ட மிகச்சிறந்த தலைவராகவே அவரை எண்ணுகிறேன்


கண்ணன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது அவரது அரசியல் பாணியை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன் .அதில் அவர் கையாண்ட யுக்தி புரட்சிகரமானதும் உலகை திருத்தும் ஆவேசமும் லட்சியவாதப் பேச்சும் .அவை நடைமுறை யதார்த்தத்தில் இல்லாதவை .அன்றைய அரசியல் சூழலில் இளைஞர் காங்கிரஸார் மத்தியில் இடதுசாரி சிந்தனை நோக்கிய மனச்சாய்வு இருந்தது .அவர்கள் எப்போதும் இடதுசாரிகளாக தங்களை முன்வைக்கத் தயங்காதவர்கள்.சுப்பையா போன்ற பெருந் தலைவர்களிடம் இருந்து அதை பெற்றுக் கொண்டவர்கள். கண்ணனைச் சுற்றி ஒரு பெரும் இளைஞர் கூட்டம் இருந்தது உண்மை . அவர்களுக்கு அவர் தங்களுக்கான இடத்தை உருவாக்கி தருபவராக தெரிந்தார். 


அடுத்தடுத்த தலைமைகள் உருவாகிவருவதை ஏற்பவர் . தன்னளவில் தனியாளுமை என்கிற கருத்து , பாலன் தலைமை பொறுப்பிற்கு உகந்தவராக நிர்வாகிகள் எடுத்த முடிவை நிராகரித்ததும் சிதைந்து போனது .அமைப்பின் ஆதரவு பாலனுக்கு இருந்ததும் அதை கடந்து தனது எண்ணத்தை திணிக்க முயற்சித்த போது அவரது ஆளுமை அடிவாங்கி.அமைப்பு இரண்டாக உடைந்தது

புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...