https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 மே, 2021

அடையாளமாதல் * ஒருங்கமைவும் அடிப்படையும் *

 


ஶ்ரீ:



பதிவு : 576  / 766 / தேதி 27 மே  2021


* ஒருங்கமைவும் அடிப்படையும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 54.





சண்முகம் தனது அரசியலை ஆரம்ப நாள் முதல் துவங்கி அனைத்தையும் மிக நுட்பமாக திட்டமிட்டவர். பிறருக்கு புரிபடாத வாய்புகள் அவரை நோக்கி திறந்து கொண்டதை சரியான காலத்தில் அவரால் பார்க்க முடிந்தது. அவரை பொருத்தவரை அவை அனைத்தும் அவரது எளிய மனக்கணக்கும், புரிதலும் என்றே எப்போதும் முன்வைத்தார் . அந்த  எண்ணங்களை தர்க்க ரீதியில் அல்லது கலைச் சொற்கள் வழியாக முன்வைத்ததில்லை . அவரை செலுத்திய விசை அவரது ஆழ்மனக் கணக்கு அவை வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை, தர்க்க ரீதியில் அவற்றை விளக்க பிறருக்கு விளக்க முடியாது என்று நினைத்தார் . அது பற்றி முன்னாள் அமைச்சர் காந்திராஜுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்சண்முகத்தின் கணக்குகளை அவரால் தர்க்க ரீதியில் ஒருபோதும் முன்வைக்க இயலாது காரணம் அவரது நிறைவடையாத பள்ளி கல்விஎன்று. ஆம் அவர் சொல்லால் தன்னை ஒருபோதும் முன்வைத்ததில்லை . அடுக்கடுக்கான கேள்விகளுக்குஅது சரியாக வராதுஎன்கிற ஒற்றை பதிலைத் தான் எப்போதும் பெற்றிருக்கிறேன். அரசியலின் உச்தருணங்கள் அனைத்தும் அன்றாட பல்லாயிரக் கணக்கான கருதியல் வழியாக உருவானது . தன்னை சுற்றிச் சூழ்ந்து இயங்கும் மனிதர்களின் அரசியல் முரணியக்கம் வழியாக உருவாகி வரும் அரசியல் வாய்ப்புகளை ஆழ்மனப் படிமத்தின் உள்ளுணர்வின் வழியாக அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எந்த செயல்பாடுகளிலும் அதன் வெற்றி வெளிப்பட்ட பிறகு அதன் அரசியல் லாபக் கணக்குகளை அறிந்து கொள்பவர்கள், அதிலிருந்து தங்களுக்கும் ஏதாவது வேண்டும் என விழைபவர்கள் அனைவரும் ஒரு அரசியலின் துவக்கப் புள்ளியில் அதில் இருக்கும் எதிர் வினைகளுக்கு அஞ்சுகிறார்கள் . எந்த புது முயற்சிகளையும் அவர்கள் முன்னெடுப்பதில்லை அனைத்தும் உருவாகி வருவதற்கு முன் அங்கு சென்று நிற்கும் அல்லது அதை உருவாக்கும் மனபலம் அற்றவர்கள், அவர்கள் அனைத்தையும் எளிய சந்தேகங்களால் விலக்குவார்கள் . தெளிந்து உருவாகிவரும் நிகழ்வை அனுசரித்து அதில் சென்று சேரும் முன்முடிவை அவர்கள் எப்போதும் எடுப்பதில்லை. யாரோ சிலர் அவற்றை ஊகிக்கிறார்கள் அந்நிகழ்வு நிகழும் முன்னர் அதன் சாதகங்களை தங்களை நோக்கி கொண்டுவரும் செயல்பாட்டிற்கு வழி வகுக்கிறார்கள் ,அதன் மாறாத வெற்றிக்கு தேவை அதை நிர்வகிக்கும் குழு. அக்குழுவை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எப்படி விளக்கினாலும் உடன் பயணிக்கும் படி வேண்டினாலும், பல வகைகளில் அவை நிகழ்வதேயில்லைஒன்று அவர்கள் அன்றாடத்தில் இருந்து விலகி புதிய ஒன்றை முயற்சிக்க அஞ்சுபவர்கள் ,நாளை நிகழ்பவற்றை பார்க்கும் பார்வையற்ற அனைவருக்கும் வேண்டியவர்களாக தங்களை வைத்துக் கொள்வது தங்களுக்கு உகந்தது நினைக்கிறார்கள்


முதன்மை அரசியலில் இருக்கும் ஒருவருக்குஅனைவருக்கும் பொதுவானவர்கள்என்கிற கருகோளே கிடையாது அவர்கள் எப்போதும் ஆதரவு, எதிர்பு என்றே அனைத்தையும் வகுத்துக் கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்கள் உடன் வர மறுப்பதே அதன் முதன்மை சவால் என்றாலும் அவர்களை வெறுக்கவோ விலக்கவோ இயலாது. காரணம் கலத்தில் அந்த அரசியல் கணக்கு நிகழும் போது அதன் பொது வெளியில் அதிலிருந்து உருவாகும் பலனை மடைமாற்ற அல்லது அதிலிருந்து வெளிப்படுதை ஒற்றையில் வகுத்துக்கொள்ள இயலாது . அரசியல் எப்போதும் அனைவருக்குமானது அந்த அரசியலின் நிகழ்வில் தலைவரென ஒருவரை உயர்த்திப் பிடிக்க சில நூறு பேராவது அப்போது தேவைப் படுகிறார்கள் . இரண்டு எதிர்வரும் நிகழ்வையும் அதிலிருந்து பெறவிருக்கும் வெற்றி பின் இடத்தையும் சொல்பவரின் கணக்கில் இருந்து புரிந்து கொள்பவர்கள். அந்த கணிப்பை சொன்ன உடன் காரணமல்லாமல் அவர்கள் மீது கடும் காழ்ப்பை அடைகிறார்கள்அவர்கள் எப்போதும் திரளில் இருந்து ஒருவர் தனித்து  உயர்வது தங்கள் பங்களிப்பின் மூலம்மட்டுமே நிகழ இயலும் என குறுக்கு கணக்கில் சென்றமர்கிறார்கள் . அதன் பின்னர் அவர்கள் செய்யும் முதல் வேலை அதை எதிர்ப்பது . அத்திட்டம் தோல்வியுற வேண்டும் என ஆழமாக நினைக்கிறார்கள். ஒருபோதும் எவருக்கும் உதவ அவர்கள் சம்மதிப்பதில்லை. மிக எளிய மனிதர்கள் தங்களின் அன்றாடங்களில் இருந்து எழும் சோர்வை விலக்கிக் கொள்ள தங்களை தேடி வந்து பெரும் வாய்பபுகள் காத்து நின்றிருந்தன என சொல்லிக் கொள்வதால் மட்டும் மனநிறைவைப் பெருபவர்கள் . அதுவே அவர்களது ஆணவம். எப்போதும் தங்களை பற்றிய மிகை நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் அவர்களின் ஆனவம் தேவையற்றை வெளியே வந்து வெளியுலகுடன் உரசு புண்பட்டுக் கொண்டே இருப்பது. பிறருக்கு கிடைக்கும் எந்த அங்கீகாரத்தையும் காரணமில்லாமல் தங்களின் இழப்பாக கருதுகிறார்கள். பொதுவெளியில் பலர் தங்களை வந்து சார்ந்து நின்று சந்தித்து உதவி கோரியதாக சொல்லி அவற்றை இளிவரலாக்கி திருப்தி அடைகிறார்கள்.


1990 களில் கண்ணனுக்கு மாற்று முதல்வராக பிறரால் அமர்த்தப்பட்டு ஐந்தாண்டுகள் நிலையாய் ஆண்டு முடித்து வெளியேறியவர் வைத்திலிங்கம். அந்தக் காலகட்டதில் எழுந்த  “ஆர்பரிக்கும்இயற்கையின் வாய்ப்பை தவறவிட்டவராகவே அவரைப் பார்க்கிறேன் . அவரது மாநில அரசியலின் துவக்க நகர்வு ஒரு முதல் பிழையில் நிகழ்ந்தது , அங்கிருந்து சிதறிய அவரது ஆதரவு தளத்தை பின்னர் ஒருபோதுப் அவரால் கைபற்ற இயலவில்லை . மேலே சொன்ன இரண்டு முடியாமைகளையும் சந்தித்து அரசியலில் பிறரின் உதவி தனக்கு கடைக்கவில்லை என்கிற ஆதங்கம் உள்ளவராக அவரை பார்த்திருக்கிறேன். முதல்வராக அமர்ந்த உடன் முதலில் தான் கண்ணனுக்கு எதிரியில்லை என அவரை நம்பவைக்கும் முயற்சியில் தோல்வி அடையும் வரை அவர் அரசியலின் மையத்தில் இருந்து நழுவி விழுந்து கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை . கண்ணனை மிக சரியாக மதிப்பிட்டிருந்தவர் சண்முகம் . கண்ணனுடனான சமரச உடன்படிக்கைக்கு வைத்திலிங்கம் முயற்சிக்கும் போதே அவரது அரசியலின் மைய விசை அறுபடத் துவங்கிவிட்டது . கண்ணனுக்கு மாற்று முதல்வராக அல்ல மாற்றுத் தலைவராக உருவகித்தே அவருக்கான ஆதரவு தளம் முளைகட்டத் துவங்கி இருந்தது . தன்னை பிறர் என்னவாக பார்க்கிறார்கள் என்கிற கருத்தியலுக்கு அவர் சென்று சேரவேயில்லை என்பது இரண்டாவது பிழை  . கண்ணனுக்கு அவர் நீட்டிய கரம் கண்ணனால் மறுதளிக்கப்பட்ட போது அவரை சார்ந்து நிற்க நினைத்த அரசியல் களம் அந்தக் கணத்தில் காணாமலாகியது . கண்ணனை அஞ்சியவர்களின் கணக்கின் வழியாக உருவாகி வந்தவர் வைத்தியலிங்கம் . அவர்கள் அனைவரும் வைத்தியலிங்கம் தங்களை கைவிட்டார் என ஆதங்கத்தில் குமுறிக் கொண்டிருந்தனர், காங்கிரஸ் தலைவர்களை கொண்ட அடித்தளம் நேரடித்தன்மை கொண்டதல்ல , யாரும் எதையும் வெளிப்படையாக பேசுவதில்லை என்பதால் கலகங்களுக்கு அங்கு இடமில்லை . கலகத்தை பாதையாக கொண்ட கண்ணன் அவர்களால் ஏற்கப்படாதது ஒன்றும் வியப்பல்ல.

முதல்வர் பதவி தனது தந்தை வழியில் தனக்கு வந்து சேர வேண்டிய சொத்துக்களில் ஒன்றாக எண்ணினார் என்பது அடுத்தப் பிழை. அங்கிருந்தே அனைத்தையும் தொடங்கினார் . முதல்வராக நீடித்து நிற்க வேறு பல காரணிகள் வேண்டும் என அவர் புரிந்து கொண்டபோது அவரது ஆட்சி நிறைவுற்றது. அது அவரை உச்சகட்ட மனக் கொந்தளிப்பில் வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர் அரசியல் குறித்து யார் அவருடன் உரையாட வந்தாலும் அவர்களுக்கு தர்க்க ரீதியில் வகுப்பெடுக்க முயன்றார் . இச்செய்கையால் முக்கிய தலைவர்கள் அவருக்கு ஆதரவு என்கிற எல்லைக்கு வெளியே சென்றுவிட்டிருந்தனர் . கண்ணனுடன் தனது சமரச உடன்பாடு திட்டம் செல்லுபடியாகாது என்பதை தாமதமாக புரிந்து கொண்டவரால் தன்னை நோக்கி வந்த ஆர்ப்பரித்த திரள் ஏன் வடிந்து சென்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியலில் இதனை தனக்கு இழைத்த துரோகம் என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்தார் அது அவரை கசப்படைய வைத்தது . அதன் பின் அவரது உரையாடல் அந்த மெல்லிய கசப்புடன் வெளிப்பட்டபடி இருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...