https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 15 மே, 2021

அடையாளமாதல் * கனவும் பயணமும் இடைவெளிகளும் *

 


ஶ்ரீ:



பதிவு : 575  / 765 / தேதி 15 மே  2021


* கனவும் பயணமும் இடைவெளிகளும் 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 53.






1990 களில் தொடங்கி ஊழ் எங்கோ கருக் கொண்டிருந்தது. திரளில் மேலெழுந்து நின்று கொண்டிருந்த அவர்களுக்கு அது  வழங்கிய சலுகைக்கு மாற்றெடை நிகர் வைக்கவேண்டும் என்பது பொது விதி , அதை செய்த அல்லது தவறிய ஒன்றிற்காக இருவரையும் இணைத்து அதற்கொரு திட்டம் இருந்திருக்க வேண்டும் . இருவரையும் ஒரே நேர் கோட்டிற்குள் எதிர் புதிராக கொண்டு வந்து நிறுத்தியதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது . சண்முகம் மற்றும் கண்ணன் இருவரும் காலத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் போல அவர்களால் மிக எளிதில் எட்டிப்பிடித்திருக்கக் கூடிய உச்சத்தை அது வெவ்வேறு வகையில் மறுதளித்துக் கொண்டிருந்த அதே சமயம் இருவருக்கும் இன்னதென அறிய இயலாத இணையான பிறிதொரு வாய்ப்புகளையும் அவர்களின் அருகருகே வைத்திருந்தது . எதிர்பார்ப்பு நிகழாததால் எதுவும் முடிந்து விடுவதில்லை. அது பிறிதொரு வாய்ப்பை அங்கு வைத்தே முன்னகர்ந்திருக்கிறது அது நமது விருப்த்திற்குறியதாக இருக்க வேண்டிய நிர்பந்தமில்லைமுற்றான பிறிதொரு கோணம், பிறிதொரு வாய்ப்பு என்று அதன் பாதைகள் சில காலத்திற்கு கழித்தே பார்வைக்கு வருகின்றது பின் அங்கிருந்து புதிய உச்சத்தைப் புதிய கனவுகளை அவர்கள் சென்றடைய அவை உதவுகின்றன .  1991 களில் சண்முகம் மற்றும் கண்ணன் இழந்தது அவர்களின் கனவான முதல்வர் பதவியை. ஒருவர் இழந்தவர் பிறதொருவர் இழக்க காரணமானவர் என குற்றம் சுமத்தப்பட்டவர் .கனவு கலைந்த பிறகு இருவரும் அந்த பாதிப்புகளை அவர்கள் என்னவாக எடுத்துக் கொண்டார்கள், வெளிப்படுத்தினார்கள் என்பதில் இருந்து அவர்களது அரசியல் எதிர்கால வாழ்வை தீர்மானித்தது , சண்முகம் திரளின் தலைவராக தன்னை ஒருபோதும் முன்வைத்ததில்லை. அரசியலில் நிகழ்பவைகளை ஜீரணிக்க கற்றதன் வழியாக தன்னை நிறுவிக் கொண்டவர் . ஆகவே பரபரப்பில்லாத மௌனம் அவரது பாதையாக இருந்தது அங்கு சொல்லப்படாத சொற்கள் விதை என எழுத்தபடி இருப்பதும் அவை உள்நோக்கிய கேள்விகளின் வழியாக பிறர் அறிந்திராத விடைகளையும் கொண்டவையாகவும் இருந்துவிடுகின்றன. அரசியலின் ஆகச்சிறந்த இடமாக அதை நினைக்கிறேன் . அதே சமயம் தொடர் ஆழ்மனத்தூண்டுதலால் கசப்பையும் காழ்ப்பையும் நோக்கி மிக விரைவராக செலுத்தக் கூடியது அதன் எதிர்நிலைப் பண்பு அதன் பிறிதொரு விசை , அதன் அடிப்படைகளை இந்த பதிவு முழுவதும் புரிந்து கொள்ள முயல்கிறேன். சண்முகம் தனது வழமையான மௌனத்தின் வழியாக அந்த காலகட்டத்தை கடந்தார் அது அரசியலின் பிடி அவர் கைகளில் தொடர்ந்து இருக்கும் படி பார்த்துக் கொண்டது


இணையான தலைவராக உணரப்பட்ட கண்ணன் சபாநாயகராக அமரவைக்கப்பட்டது அவரது அரசியல் செயல்பாடுகளை முடக்குபவையாக எல்லோராலும் பதற்றப்பட்டதுதன்னை செலுத்தும் விசை என உள்ளும் புறமுமாக அவர் உணர்ந்திருந்த ஒன்று தனது செயல்பாடுகளை தன்னை சுற்றி செயல்படும் திரளை தக்ககவைத்துக் கொள்ளும் போராட்டமாக அவர் எப்போதும் நினைத்தார் அவர்களுக்காக தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற மிகை பாவனை அந்த திரளையும் அவரையும் அனைத்து புள்ளிகளிலும் இணைகிறது , வெற்றியை அடைவதற்கும் அடைந்ததை தக்க வைத்துக் கொள்வதற்கும் அந்தத் திரளின் உற்சாகம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை அத்தகைய அரசியல் உருவாக்கிவிடுகிறது இரு தரப்பையும் ஆற்றல் மிக்கதாக்கும் தருணங்கள் அதிலிருந்து திரண்டு எழுகின்றன. திரள் அரசியலின் மாபெரும் திறப்பு அதன் கொந்தளிப்புகள் எப்போதும் உச்சத்தில் நிலை கொண்டிருப்பதில்லை அவை கடல் அலையைப் போல பொங்குவதும் அடங்குவது. அந்த உணர்வுகளை எப்போதும் நிலைநிறுத்த ஓயாமல் செயலாற்றுவதை அரசியலாக கொண்டவரின் பாதை சுழல் கொண்டவை தொடர் உழைப்பை கோருபவை என்பதால் எப்போதும் ஓரிடத்தில் நிற்காதது . தன்னை மட்டும் முன்வைக்கும் அரசியலுக்குள் நுழைபவர்கள் பின் அதிலிருந்து ஒருபோதும் வெளியேற முடிவதில்லை அவை அறுபடாத நீள் சரடுபோலதன்னை சுற்றி எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்த குரல்களின் நெருக்கடியால் தன்னை தொடர்ந்து முன்வைத்த அரசியலை ஒரு போதும் கைவிட இயலாமலாகி இருக்க வேண்டும் . கண்ணனும் அப்படித்தான் நினைத்தார் . தனக்கு கொடுப்பட்ட சபாநாயகர் பதவியை ஆட்சியாளர் மற்றும் அரசு அலுவர்களுக்கு மேல் சென்று அமரும் இடம் என உருவகித்து , அதன் வழியாக அரசாங்கத்தின் அனைத்தையும் மட்டுறுத்தும் அதிகாரத்தை அது வழங்கும் என நினைத்தார். அதை செயல்படுத்த சட்டமன்றத்தில் ஓயாத கேள்விகளை கேட்டார் பிறர் அரசை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு முழுமையாக இடமளித்து அது நீண்டு பெருக வாய்ப்பளித்தார். இந்த செயல்பாடு வழியாக  மெல்ல காழ்ப்பும் வெறுப்பும் மிக்கவராக மாற்றமடைந்து முதல்வர் வைத்தியலிங்கத்துடன் சட்டமன்றத் தரைகளில் அன்றாடம் மோதி அவரை அலைக்கழிப்பது மட்டுமே அவரது அரசியலானது ,அதன் வழியாக தனது ஆதரவாளர்களை நோக்கி உரையாடிக் கொண்டிருக்கும் நிறைவை அவர் அடைந்திருக்க வேண்டும் . எனவே முடிவில்லாமல் அந்த திரளுடன் அவர் உரையாடிக்கொண்டே இருந்தார் . அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது அந்த உரையாடல். ஆனால் அந்த ஆட்சி முடியும் போது அவர் கட்சியில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் உருவாகி அங்கிருந்து வெளியேறி பல அதிகாரமிக்க இடத்தை அடைந்த பின்னரும் கூட எங்கும் நிறைவுறாது சுற்றி இருந்தவர்களை நிலையழியச் செய்து தனக்கான இடம் நோக்கி தொடர்ந்து பயணித்ததுஅரசியலின் இருள்நோக்கி என்பது அதன் வினோதம் .


சண்முகத்திற்கு 1991 களில் வருத்தம் மிக்கவராக பின்னர்  கசப்படைந்தவராக மாறிக்கொண்டிருந்த போது துவங்கிய சறுக்கல் மிக மெல்ல நிகழ்ந்து அதன் அத்தனை உச்ச , நீச்சங்களைத் தொட்டு பயணப்பட்ட அவருக்கு 1999 களின் இறுதியில் அவரது இலக்கான முதல்வர் பதவி தேடி வந்தது . அது கண்ணனுக்கு வாய்க்காதது மட்டுமின்றி அவரது அமைச்சரவையிலும் கண்ணன் பங்கு கொண்டார்.அனுபவ ஆற்றல் நரம்பின் வழி வெளிப்படுபவை என்பதால் அவை தன்னகங்காரம் ஓங்கி எழும்போது துணைக்காது என்பது அச்சமளிப்பது . தன்னகங்காரம் ஆளுமையை வடிவமைப்பவை அவை ஒரு இடத்தில் பெருகும் போது எதிர்மறையாகி தடுமாற வைக்கிறது சண்முகம் முதல்வராக அமர்ந்ததும் அவருக்கு நிகழ்ந்தது . அந்த பதவியால் அவரை சுற்றி சூழ்ந்திருந்த அனைவரையும் அவரிடமிருந்து முற்றாக விலக்கி சிதறரடித்து இறுதியில் அவரை வீழ்த்தியது . 1989 களில் துவங்கி அனைத்தையும் மிக நுட்பமாக திட்டமிட்டவர் 1991 பிற அரசியல் தலைவர்களின் அரசு சூழ்தலில் சிக்கி முதல்வர் பதவியையும் தனக்கான ஒட்டுமொத்த இடத்தையும் இழந்தது 2001 களில். தனது சமநிலை குலைந்த அர்த்தமற்ற கோபத்தினால் முதல்வர் பதவியை இழந்தாலும் அரசியல் தலைவர்கள் அனைவரும் சந்திக்க விழையும் இடத்தை இறுதியில் மன்மறையும் வரை அவர் இழக்கவில்லை என்பதால் அவரது பதவி விலகல் ஊழின் முடிவல்ல என நினைக்கத் தோன்றுகிறது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...