https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 மே, 2021

அடையாளமாதல் * மாறாப் பெரு நிகழ்வு *

 


ஶ்ரீ:



பதிவு : 574  / 764 / தேதி 07 மே  2021


* மாறாப் பெரு நிகழ்வு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 52.





இளைஞர் காங்கிரஸ் தனது எதிர்காலத்திற்கான அடிப்படை  “சண்முகம் எதிர்ப்புஎன்கிற ஒற்றை கொள்கையில் கட்டமைக்கப்பட்டது .இது பலமுறை இங்கு சொல்லப்பட்டது தான் என்றாலும் மீளவும் அதை இங்கு சொல்வது ஒரு ஆழ்ப்புரிதலை நோக்கிய காரணத்தை அடிபடையாக வைத்தது . இளைஞர் அமைப்பின் வெற்றிக்கு தடையாக இருப்பவராக முன்  வைக்கப்பட்டவர் சண்முகம் அது அனைவருக்கும் கசப்பை் போல ஒவ்வாமையைத் தருவது. எளிய பரப்பியல் அரசியல் எதிர் நிற்க இயலாத ஒற்றைப்படையானது அதை போல அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி பிறிதில்லை. ஆனால் அந்த அடிப்படை  காலாவதியாகி இருந்ததை நாங்கள்  அறிந்திருக்கவில்லை, சண்முகமே அன்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தடுமாறிக் கொண்டிருந்தார் என்பதை காலம் கடந்தே தெரிந்து கொண்டேன் . இளைஞர் காங்கிரஸ் அரசியல் என்பது அனைத்து வகையில் கண்ணன் சண்முகத்திற்கிடையேயான தனிப்பட்ட மோதல்களாக உருமாறி இருந்தன . அதன் பின்னணியை இப்படி புரிந்து கொள்ள முயல்கிறேன். 1977 களில் காங்கிரஸ் கட்சி தன் வேர்களை இழக்கத் துவங்கிவிட்டது அது 1980 களில் மேலும் தீவிரமடைந்திருந்தது . கண்ணன் தனது முழு பலத்தில் வளர்ந்து கொண்டு இருந்தார். வயதும் எதையும் பொருட்படுத்தாத அவரது வேகமும், சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கும் ஆற்றலால் இளைஞர்களை ஈர்த்ததுக் கொண்டிருந்தார் . காங்கிரஸ் பெரும் கட்டமைப்பை கொண்டதால் அதில் முக்கிய தலைவர்கள் தவிர பிற அனைவரும் முகமிலிகள் என்கிற சூழலில் சாதாரன தொண்டனையும் நினைகூறும் தலைவரால் இளைஞர் காங்கிரஸ் இறுக்கமான அமைப்பாக உருவெடுத்தது. தங்களுக்கான அரசியல் நுழைவிற்கு  மாற்றுத் தலைமையை எதிர்நோக்கி முதிரா இளைஞர் கூட்டம் ஒன்று எப்போதும் காத்திருந்தது. அதை மிக சரியாக கண்ணனின் தனது அரசியலில் பொருத்திக் கொண்டார் .


1980 களில் அது ஒரு எழுச்சி . அந்த வருடம் மட்டும் அப்படிப்பட்ட அரசியல் எழுச்சி தனித்து காணப்படவில்லை அது மீள மீள நிகழும் ஒன்றுஆர்பரிக்கும்இயற்கை நிகழ்வு  1970,1980,1990, 2000, 2011 மற்றும் 2020 என காலம்  ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை பிழைக்காமல் தன்னில் அதை மீள மீள நிகழ்ந்து கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன் . சில தலைவர்களை முன்னிறுத்தி ஐந்து வருட ஆட்சியில் அவர்களை அமரவைக்க வெளிவரும் அந்தக் கூட்டம் அடுத்த ஐந்து வருட காத்திருப்பற்கு பிறகு அபைத்தின் மீதும் வெறுப்புற்று விலக மீளவும் அங்கு இன்னுமொரு முதிரா இளைஞர் கூட்டம் வந்தமர்கிறது எனவே இதில் பெரியதாக ஒன்றுமில்லை என்பது எளிய கணக்கு . ஆனால் 1970 களில் துவங்கி 2020 வரை அதில் இருந்து திரண்டெழுந்தவர்கள் இரண்டு பேர் ஒருவர் சண்முகம் பிறதொருவர் ரங்கசாமி இரண்டு பேரும் பிரம்மச்சாரிகள் என்பது பொது அம்சம். மக்களின் ஆதரவு என்கிற ஒன்றை இங்கு வரையறை செய்தால் அது ரங்கசாமியும், தனது நுண்ணிய கட்சி நிர்வாக திறமை மற்றும் அரசுசூழ்தல்களால் பல ஆட்சியை அமர்த்தியும் கலைத்தும் புதுவை அரசியல் தன்னை சார்ந்து இங்கும்படி செய்த கொண்ட சண்முகம் என இருவர் மட்டும் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் எனில் அந்த எளிய 10 வருடக் கணக்கு அதற்குள் பொருந்தி வரவில்லை. 2030 களில் அது போல ஒன்று மீண்டும் நிகழும் வாய்ப்பைப் பார்க்கும் சூழலில் தமிழக அரசியலை ஒட்டி இங்கும் பெரிய மாற்றம் நிகழலாம்.


அந்தந்த காலகட்டதைச் சேர்ந்த தலைவர்கள் அந்தஅபூர்வநிகழ்வைத் தங்களின் அன்றாடங்களின் மத்தியிலும் கற்பனை வறட்சியாலும் தவறவிட்டார்கள் அல்லது அதன் வீரியத்தை தங்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டமாக்கி குறுக்கிக் கொண்டார்கள் . 1970 மற்றும் 1980 களில் அத்தகையஅபூர்வநிகழ்வில் தனது கனவுகளை கண்டு கொண்டவராக தலைவர் சண்முகம் என்றால் அதன் முதல் பயனாளியாக அவர் இருந்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசியலில் தாங்கி நின்றிருக்கும் சக்தியை அது அவருக்கு கொடுத்ததில் இருந்து இதை ஊகிக்க முடிகிறதுவெற்றி என்பது முயற்சியில் இருந்து கனிவது என்றால் எல்லோருக்கும் அது நடந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நிகழ்வதில்லை . யாரோ சிலர் மட்டும் வாழ்த்தப்பட்ட நல்லூழ் கொண்டவர்கள் என்பதால் அது இயற்கையின் மாறா விதிகளுக்கு உட்பட்டது .இயற்கையினால் பெறுப்படுவது எப்போதும் பிறிது ஏதோ ஒரு இடத்தில் நிகர் செய்யப்பட வேண்டியது. சண்முகம் முழு பலனையும் அடைந்தவராக கருத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்கு எங்கோ நிகர் வைக்க தவறவிட்டவராக உணர்கிறேன் . அவரை மிக அனுக்கமாக அறிந்தவன் என்கிற வகையில் பிற அரசியலாளர்களை விட தனித்துவமானவர் என்பது எனக்குள் அவரது இடமாக இருந்தாலும் அதை பல்லாயிரம் வார்தைகளினால்  நியாயப்படுத்த முடிந்தாலும் ஊழின் நியதிகளின்சரி தவறுவேறு வகையானவை , நுட்பமானவை ஒருபோதும் நம்மால் புரிந்து கொள்ளவே இயலாதவை. அந்த நிகர் செய்வதை ஒரு விதியாக அவருக்கு அது கொடுத்திருப்பதை அவர் தனது ஆழ்மனத்தால் உணர்ந்திருக்க வேண்டும் தனது வாழ்நாள் முழுவதும் சிலவற்றை விரதம் போல அநுஷ்டானம் போல கொண்டிருந்தார் . அதை நிகழ்தக்கூடிய தன்னியல்பு உள்ளவர்களை அது தேர்ந்தெடுக்கிறது . அதன் ஆழத்திற்குள் சென்று அதற்கென தன்னை வடிவமைத்துக் கொண்டவராக காந்தியைத் தான் நான் முன்வைக்க முடியும். வாழ்நாளின் இறுதிக்கணம்வரை இரண்டு பக்கமும் நிகர் வைத்துக் கொண்டே இருந்ததை பார்க்க முடிகிறது .


அரசிலாளர்கள் அனைவருக்கும் இந்த விதி பொருந்துகிறதா ? என்றால்ஆம்என்றிருக்க வேண்டும், ஆதனால் பிற எவருக்கும் அது தராத ஒன்றை தனித்த சிலருக்காக திறந்து வைக்கிறது . அதனாலாயே அவர்கள் பெரும் மக்கள் திரளில் கலக்காத உயரத்தில் இருக்கிறார்கள் . சண்முகம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் என்பது மட்டும் அவரை பலமுள்ளவராக ஆக்கியிருக்கவில்லை. அவர்  அனைவரையும் இணைக்கும் சமரசபுள்ளியில் தன்னை வைத்துக் கொண்டிருந்தார் என்பதும் தனது முடிவுகள் பிறருக்கு என்னவாக படுகிறது என்கிற தயக்கம் மட்டுமே அவரை தலைவராக்கியது . ஏறக்குறைய அதே இடத்தில் கண்ணனும் இருந்தார் . ஆனால் ஒரு இடத்தில் அவர் சண்முகத்திடமிருந்து மாறுபடுகிறார். அரசியல் எப்போதும் தன்னை மட்டுமே முன்வைத்த அரசியலை தொடர்ந்து முன்னெடுத்தார் . அதில் பிறருக்கும் இடம் இருப்பது ஒன்றே அனைவரையும் ஒன்றிணைக்கும் புள்ளி. அது ஒரு கூட்டுப் பொறுப்பாகிறது அனைவரையும் ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து செல்ல வைக்கிறது . அதில் தன்னை மட்டுமே முனவைக்கும் அரசியலுக்கும் இடமில்லை . அதில் அனைவரையும் தான் சென்று சேர நினைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதன்மைக் கடமையாகிறது. அதன் பொருட்டு  விதி மீறல் அவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது போலும் . ஒன்றில் தொடரந்து இழியும் ஒருவர் எங்கோ ஒரு இடத்தில் சமநிலை குளைகிறார் அங்கு காலம் ஒரு மிருகம் போல உறுமிக் கொண்டு காத்திருக்கிறது. அந்த வகையில் கண்ணனை விட சண்முகம் நல்லூழ் கொண்டவர் ஆனால் அதை அவர் அறிந்திருந்தாரா என்பது தான் கேள்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...