https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 8 அக்டோபர், 2020

அடையாளமாதல் * ஊழ்,செயல்,கற்றல் *

 .


ஶ்ரீ:



பதிவு : 538  / 731 / தேதி 08 அக்டோபர் 2020


* ஊழ்,செயல்,கற்றல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 15.






ஆழுள்ளம் படைபூக்கம் வழியாக நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் எனக்கான வழியை கண்டடைந்திருக்கிறது அதன் மூலமே நான் செயல்படும் விழைவை அடைந்திருக்க வேண்டும் . வாழ்நாள் முழுவதும்  எனது கற்றல் அதிலிருந்தே நிகழ்ந்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.நான் பெருந்திட்ட வாதத்தை முன்வைப்பவன் , தற்செயல்களை நிராகரிக்கிறேன் .பெருந்திட்டம் என்னவென்று எவராலும் சொல்லிவிட முடியாது .ஆனால் தனிப்பட்ட ஒருவரின் வாழ்வில் நிகழும் அனைத்தும் ஒருங்கினைக்கப்பட்டு கூட்டு நனவிலியில் அல்லது ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது என எண்ணுகிறேன். ஒன்று அடுத்த ஒன்றை தொடர்புறுத்துவது அங்கிருந்து நிகழலாம்.


எனக்கான தேடல் என்னாழுள்ளத்தில் இருந்து எழுந்திருக்கலாம் .எனது தேடலை நான் முதலில் அப்படித்தான் புரிந்து கொண்டேன் .ஆனால் ஒரு புள்ளியில் அது எனது தந்தை கொண்ட தேடலின் மிச்சல் என புரிந்து கொண்ட போது திகைப்படைந்தேன்


இயற்கை பெரு நதியின் விசையால் அனைத்தும் ஒருக்கமாகின்றது .அது தனிமனிதனுக்கு சொல்ல ஒன்றுமில்லை.சில புள்ளிகளை இணைத்து அங்கிருந்து வாழ்வியலின் அர்த்தம் கொள்ள முயலவதைப் போல அபத்தம் பிறிதொன்றில்லை.எனக்கு அது என்ன சொல்ல வந்தது என புரிந்து கொள்ள விழைவதில்லை


முயற்சித்த அனைத்திலும் பெரும் வெற்றியை மட்டுமே அடைந்திருக்கிறேன் .அது நான் ஈடுபட்ட துறையின் முதன்மை ஆளுமைகளுக்கு பக்கத்தில் கொண்டு என்னை நிறுத்தியிருக்கிறது .அது வியாபாரமாக, அரசியலாக , ஆன்மீக இயக்கமாக, முற்றும் தொடர்பில்லாது சட்டென எழுந்த இலக்கியமாக, எனக்கான அடையாளத்தை அது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஏற்ற இறக்கங்கள் வழியாக நிகழ்ந்த கற்றலை இங்கு தொகுத்து அடுக்கி எழுதி எழுதி என்னை புரிந்து கொள்ள முயலும் இந்த வளைப்பூ மூலம் ஆழ்மனத்துடன் உரையாட முயல்கிறேன்.


ஒரு செயலில் இறங்கத் தீர்மாணிப்பது என்னுள் எப்படி நிகழ்கிறது என நான் இன்றுவரை அறிந்ததில்லை . அந்த நோக்கி    உடனே சென்றுவிடுவமில்லை . அதை நிகழ்த்துவதை குறித்த ஆழ்ந்த விழைவை எனக்குள் உருவாக்கி கொள்வது மட்டுமே நான் செய்வது .ஒரு கனவுபோல அதை மெல்ல மெல்ல விரித்தெடுத்து அதைப்பற்றிய கருத்தியலை உருவாக்கிக் கொள்வதுடன் அதை செயல்படுத்துவதற்கான நெறியையும் உருவாக்கி கொள்வதை பற்றிய கனவை வளர்த்துக்  கொண்டு  காலத்திற்கு காத்திருப்பது மட்டுமே நான் இயற்றக்கூடியது .


ஆழ்ந்த விழைவினாலோ , ஊழின் ஆடலோ இன்னதென அறிந்து கொள்ள முடியாத அதன் கதவுகள் மெல்லத் திறப்பதை ஆச்சர்யத்துடன் பார்திருக்கிறேன்.அது நிகழும் காலம்வரை பொறுத்திருப்பது எனது வழமையாக இருந்திருக்கிறது .சில கனவுகளாக மட்டுமே எஞ்சி விடுவதும் உண்டு .எந்த ஒரு இலக்கும் தனிமனித முயற்சியில் கைவருவது சாத்தியமில்லை என உணர்ந்திருக்கிறேன் . அது முற்றும் ஒத்திசைவு கொண்ட குழுக்களால் நிகழ்வது .அதன் பாதையும் சக பயணிகளும் ஒத்த கருத்துடைய சிலரும் வழித்துணையாக வந்து வந்து சேர்ந்து கொள்வதை திகைப்புடன் பார்த்திருக்கிறேன்.அதன்பின் அதன் விசையால் உள்ளிழுக்கப்பட்டு செயல் நோக்கி உந்தப்படுவது நிகழ்கிறது.


புதிய முயற்சிகள் அதற்கான அறைகூவலுடன் எழுந்து வருகின்றன . ஆழ்மனம் எங்கோ சீண்டப்பட்டு அந்த அறைகூவலை எதிர்கொள்வதை எப்போதும் காலம் நிகழ்த்துகிறது  என அதற்கு என்னை ஒப்புக் கொடுப்பது மட்டுமே என் செயல் துவக்கமாக இருந்திருக்கிறது . ஒருமுறை  ஆழ்ந்து யோசித்து அதில் ஈடுபடுவது என முடிவெடுத்தவுடன் அங்கிருந்து திரும்புவதற்கான வாய்ப்பு எனக்கு நிகழ்வதில்லை. அல்லது எனது தன்னகங்காரம் அதை பார்க்க விடுவதில்லை.பின் ஒருபோதும் அச்செயல் இருந்து  பின்வாங்கியதில்லை . அந்த பாதை என்னை விலக்கும்வரை.


எல்லா வாய்ப்புகளிலும் எனது கோட்பாடு ஒன்றே . எனக்கானவர்கள் என  நான் எவரையும் உருவாக்கிக் கொண்டு சென்றதில்லை  . அத்துறையைச் சேர்ந்தவர்கள் தானாக என்னுடன் ஒருங்கித் திரள்வது .அவர்களை என் துணையாக எடுத்தபடி எனது பயணத்தை தொடர்ந்திருக்கிறேன். வெற்றிக்கு பிறகு  கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ளவது சமரசங்களின் வழியாக மட்டுமே நிகழ்வது

சமரசங்களுக்கு நான்  உடன்படுவதில்ல உடன் வந்தவர்கள் கிடைத்ததை தக்கவைக்கும் முயற்சியில் சமரசத்திற்கு உடன்படுவது குறித்த அழுத்தம் கொடுப்பது நிகழ்ந்து விடுகிறது .எனது மறுப்பு அந்த சூழலில் நான் அவர்களுக்கு தேவையற்ற எடையாக தோன்றிவிடுவதுண்டு


அல்லது ஒரு செயல் துவக்கத்தில் என்னை அதற்கானவனாக பார்வையை உருவாக்கிக் கொள்பவர்கள் பிறகு எங்கோ அதை திறன் என்பதிலிருந்து என்னை விலக்கிக்கொள்கிறார்கள்.இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என அவதானிப்பதுண்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசுகூடுகை 76 அழைப்பிதழ்