https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 15 அக்டோபர், 2020

அடையாளமாதல் * கனவுகளின் மீறல் *

 


ஶ்ரீ:



பதிவு : 540  / 733 / தேதி 15 அக்டோபர் 2020


* கனவுகளின் மீறல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 17.







1990 களின் மத்தியில் சீக்கிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர்தப்பிய மணீந்தர்ஜித்சிங் பிட்டா , பஞ்சாப் மாநில சுற்றுப்பயணம் வந்த  பிரதமர் நரசிம்ம ராவின் கண்களில் பட , 45 வயதான அவர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிகப்பட்டார் . தலைமை பதவிக்கு 40 வயதிற்குள்” என்கிற விதியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது .பின்னாளில் தீவிர நரசிம்மராவின் ஆதரவாளராக உருவெடுத்து கட்சி அரசியலில் நரசிம்மராவை மையம்படுத்தும் செயல்பாடுகளில் இறங்கினார்  . தில்லியில் நடைபெற்ற அவரது தலைவர் பதவியேற்பு விழாவில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்து கடும் காயங்களுடன் உயிர் தப்பியது இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து காங்கிரஸாரின் கவனத்தையும் அவரை நோக்கி ஈர்த்தது .மூப்பனார் , மோதிலால் ஓரா , ஜனார்த்தன் பூஜாரி , ஆஸ்கார் பெர்னான்டஸ் , நட்வர்சிங் போன்ற மூத்த தலைவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் மீது உள்ள வழக்கமான நிராகரிப்பு மனப்பான்மை மெல்ல விலக்கிக் கொண்டனர் , அது பிட்டாவின் நரசிம்மராவை முன்னிறுத்தும் அரசியல் செய்திட்டத்தை எளிது படுத்தியது .


தலைமை தேர்தல் அதிகாரியாக TN சேஷன் அன்றைய பிரதமர் சந்திரசேகரால் நியமிக்கப்பட்டவர் .தனது பதவிக்காலம் முழுவதும் மட்டுமின்றி ஓய்வு பெற்ற பின்பும் 

சர்ச்சைகுறிய மனிதராக அறியப்பட்டவர் .தேர்தல் துறையின் சட்டங்களை நடைமுறைப் படுத்தியது, மற்றும் தேர்தல் சீர்திருத்த  நடைமுறைகளை அமல்படுத்தியது என இன்றுவரை மாற்றப்பட முடியாத தேர்தல் நெறிகளை கொண்டு வந்தது அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது . இந்தியாவின் அரசியல் அமைப்புகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என நெருக்கடி கொடுந்திருந்தார் , அதற்கான காலக்கெடுவும் அறிவிக்கப்பட்டது .ஆளும் அமைப்புகள் பலவீனப் பட்டிருந்தது அவரது நிலைப்பாடுகளுக்கு உதவியது. காங்கிரஸிற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் உட்கட்சி தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் உருவானது .தன்னுடைய நிலைபாடிற்காக எந்த எல்லைக்கும் செல்பவராக அறியப்பட்டவர் . நரசிம்மராவ் மந்திரிசபையில் சீத்தாராம் கேசிரி மீது தேர்தல் சட்டவதிகளுக்கு முரண் என்கிற குற்றச்சாட்டு எழுந்த போது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதக்கூடியவராக இருந்தார்திகைத்த அரசியல் கட்சிகள் சேஷனின் அனுகுமுறை தெரிந்து  உட்கட்சி தேர்தலை  செயல்படுத்தவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின .


இளைஞர் அமைப்பை இந்தியாவெங்கும் தனித்து வளர்த்தெடுப்பது ,மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கடசி நிர்வாகத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகளை உருவாக்குவது குறித்த பார்வை கொண்டவராக அறியப்பட்டிருந்த பிட்டாவின் பிண்ணனியில் நரசிம்மராவ் இருந்திருக்க வேண்டும் .உட்கட்சித் தேர்தல் வர இருப்பது பற்றிய சுற்றறிக்கை விடப்பட்டதும் , சேஷனின் நிலைப்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதாக இருந்தாலும் . அவை ஏறக்குறைய ஒரே ஆண்டில் நிகழ்ந்தது . அந்த இணைவு ஒரு தற்செயலாக இருக்கும் வாய்ப்பு மிக குறைவு . அரசியல் செயல்திட்டங்களை வலிந்து செயல்படுத்துவது , நிலைப்பாட்டையும் வெளிப்படையாக முன்வைப்பது , அல்லது அதற்கு சாதகமான  சூழலை உருவாக்குவது போன்றவர்றை செய்வதில்லை .கலத்தில் முயங்கி வெளிவரும் முரணியக்க விளைவுகளில் இருந்து தங்கள் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கிறார்கள் .நரசிம்மராவ் தலைமுறையை சேர்ந்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களிடமும் பொதுவாக காணப்படும் அம்சம்  . தலைவர் சண்முகத்தின் நடைமுறை வழியாக அதை புரிந்து கொள்கிறேன் .தாங்கள் திட்டமிட்டது நிகழாது போனால் , அடுத்த வாய்புகளுக்கு காத்திருக்க அவர்கள்  தயங்குவதில்லை .


இந்திராகாந்தி முன்னெடுத்த அதே திட்டத்தை நரசிம்மராவ் கையில் எடுத்தார் , அதை ஒட்டி இளைஞர் காங்கிரஸரின் அரசியல்  மாற்றம் வருவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தது . ஆனால் நரசிம்மராவ் வீழ்ந்த போது அவை கலைந்து போனது.சீத்தாராம் கேசரி தலைவராக இருந்த போது இந்தியா முழுவதும் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் நடந்து சீத்தாராம் கேசரி தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் . ஆனால் தேரந்தெடுக்கபட்ட தலைவர் என்கிற அடையாளமோ அதற்குறிய அரசியல் இடத்தையோ அடையமுடியாமல் வெளியறேற்றப்பட்டார் .

சோனியகாந்தி அதே அனுகுமுறைக்கு சில மூத்த தலைவர்களால் அறவுத்தப்பட்டாலும் , அடுத்து என்ன கவலை கொண்டவராக , வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் பின்னிழுத்து தன்னை முன்னிலை படுத்திக் கொள்வதில் அவசரம் கொண்டிருந்தார் .தனது குடியுரிமை குறித்த சிக்கலினால் வெளிப்படையாக தனது திட்டங்களை முன்வைப்தில் தயக்கமிக்கவாரகவே இருந்தார் .முடிவெடுக்க தயங்கும் மனநிலையால் மன்மோகன்சிங் 10 வருட ஆட்சி கட்சியின் பெரும் சரிவுக்கு காரணமானது .நரசிம்மராவ் போன்ற அனுபவமிக்க தலையில்லாததால் , மன்மோகன்சிங் ஆட்சியின் அவமானகரமான தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டியதாயிற்று .


1996 முதல் 1998 வரை புதுவையில் இரண்டு ஆண்டுகளாக மாநில முழுவதிலும் புதிய இளைஞர்கள் அடையாளம் கண்டறியப்பட்டிருந்தனர் . இளைஞர் காங்கிரஸின் எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்து அதை செயல்படுத்தத்  துவங்கி இருந்தேன் . திடீரென அறிவிக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் தேர்தல் பற்றிய புதிய புரிதலுக்கும் அனுபவத்திற்கும் காரணமாயிற்று .உட்கடசிச் தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு குறிப்படத்தக்க பங்கு வகித்தது முற்றும் எதிர் நோக்காத வாய்ப்பு .பல தொகுதிகளில் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தது . தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதும் உறுப்பினர் சேர்ககை வழக்கம்போல ஒரு சடங்காக , கண்துடைப்பாக நடைபெறும் என்கிற அலட்சியம் காரணமாக புது உறுப்பினர் சேர்க்கையில் யாரும் முனைப்பு காட்டவில்லை . தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு ஓரு செய்தியை தெளிவாக  சொல்லியிருந்தது என்பதால் உறுப்பினர் சேர்ககையில் முழு முணைப்பு காட்டப்பட்டது   . அபைப்பு ரீதியாக இளையத் தலைவர்கள் தெரிவு செய்பட்டிருந்ததால் உறுப்பினர் சேர்கையை மிக எளிதாக செய்து முடிந்திருந்தேன் . அதனடிப்படையில் பல தொகுதிகளில் தலைவர்களை முடிவு செய்யும் இடத்தில் அல்லது தவிற்க இயலாதவர்களாக இளைஞர் காங்கிரஸார் உருவெடுத்திருந்தனர் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்