https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 அக்டோபர், 2020

அடையாளமாதல் * கண்களும் கனவுகளும் *

 .

ஶ்ரீ:



பதிவு : 543  / 736 / தேதி 30 அக்டோபர் 2020


* கண்களும் கனவுகளும் * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 21.






1980 களில் அரசியல் பற்றிய புரிதல் மற்றும் அதன் கற்றலின் ஆவல்  உச்சத்தில் இருந்த நேரம் , அது கொடுத்த ஈர்ப்பு  வார்தைகளுக்குள் அடங்காது , பாலன் வீட்டில் நிகழும் இரவு நேர கூடுகைக்கு , ஒரு புது உலகில் நுழையும் பரவசத்துடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன் .முதல் முறையாக கலந்து கொண்ட போது மனிதர்களை பிணைக்கும் ஒரு துறையின் கண்களுக்கு தெரியாத நுண்ணிய வலை அங்கு உள்ளவர்களை , ஒருவருடன் பிறிதொருவர் தங்களை பிணைத்துக் கொள்வதும்  பிறரால் அவர்கள் பிணைக்கப்படுவதும் எப்படி நிகழ்கின்றது என்பது முதல் புரிதலாக இருந்தது . அவர்கள் மிக எளிய மனிதர்கள் தங்களுக்கான அரசியல் எவ்வாறு உருவாகி வந்து கொண்டிருக்கிறது  என்பதை பற்றிய கனவில் இருப்பவர்கள். அதன் பொருட்டு எதையும் செய்யும் மனநிலை உள்ளவர்கள் . ஆனால் அவர்கள் எண்ணியது போல ஒன்று நிகழ வாய்ப்பே இல்லை என்பது நீண்ட காலத்திற்கு பிறகு அறிந்து கொள்ள முடிந்தது  . பாலனை விட்டு விலகி தலைவர் சண்முகத்திடம் சென்று சேர்ந்த பிறகு அங்கு அது காட்டியது முற்றும் வேறுரொரு உலகு .அங்கு பல தரப்பு மடிப்புகளை உதறி பல கோணங்களில் அதைப் பார்க்க முடிந்தாலும் அவையும் மொத்த அரசியலின் சில துளிகள் மட்டுமேநிஜ  அரசியல் அதற்கு அப்பால் எங்கோ இருக்கிறது . இவர்களின் கனவுகளுக்கு அதில் இடமோ வாய்ப்போ இல்லை என்பது மூச்சடைக்க வைக்கும் திகைப்பை கொடுத்தது .


அரசியல் நிகழ்வு என்பது பலரின் எண்ணங்களிலான முரணியக்க வெளிப்பாடு , அது ஒன்றை எப்போதும் மறுப்பது .வேறு ஒன்றை முன்வைப்பது . கண்மூடி கனவுகளில் மட்டும் காண்பது .அது ஒரு அரூப உலகு .

கண்களை திறந்து வைத்துக் கொண்டால் அதன் நிதர்சணம் மலை போல கண்முன் இருக்கும் .சுதந்திர போராட்டக்காரர்களான பழைய காங்கிரஸ் தியாகிகளுடன் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த அறுபடாத உரையாடல் , என் கண்களை திறந்து வைத்துக் கொள்ள உதவியது என நினைக்கிறேன் . தலைவர் சண்முகத்திடம் வந்து சேர்ந்த பிறகு நான் கனவுகளை வளர்த்துக் கொள்வதில்லை . அதே சமயம் யதார்த்த நிலையை உணர்ந்து கொள்வதைப் போல சோர்வளிப்பது வேறில்லை . தலைவர் சண்முகத்தின் அரசியலிலும் பின்னுக்கு இழுக்கும் அதே பழைய யுக்தியை தன் நீண்ட அனுபவத்தால் இன்னும் திறம்பட செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது . புரிதலின் காரணமாக பாலனிடம் அடைந்த ஒவ்வாமை என்னுள் அப்போது எழவில்லை . நான் அவரை கூர்ந்து கவனித்து புரிந்து கொள்ள அதைக் கடந்து செல்ல பழக்கப்படுத்திக் கொண்டேன்


1990 களில் புரிந்து கொண்டது குறுங்குழுக்களுக்குள் நடக்கும் ஒற்றைப்படை தகவமைப்பு .அங்கு  அடையும் மிகை உணர்வு ,நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை பற்றிய கனவு , அது ஒரு நாள் நிகழும் என்கிற நம்பிக்கையை ,ஏறக்குறைய இருட்டறையில் பார்க்கும் முயற்சி .புற உலகில் எப்போதும் வெளிச்சம் இருப்பதாக எண்ணிக் கொண்டு இடையேயுள்ள மாயக் கதவை முட்டி மோதித் திறக்க முயன்று கொண்டிருப்பது அரசியல் என நினைக்கத் தோன்றுவது .


அவர்களின் அத்தகைய மனக் கிளர்ச்சி ஒருவகை நேர்த்திக் கடன் போல , மிக மிக எளிய வாழ்கையில் உள்ளவர்கள் பிறர் நினைத்துப் பார்க்க முடியாத கடும் நேர்த்திக் கடன்களை செய்வதை பார்த்திருக்கிறேன் . வட மதுரையில் கோவர்தன மலையை சுற்றி ஒவ்வொரு அடியாக விழுந்து கும்பிட்டு எழுந்து பின் மறுபடியும் விழுந்து கும்பிடும் எளிய மலை வாழ் பழங்குடிகளை முதல் முதையாக பார்த்த போது அந்த துணுக்குறலை உணர்ந்தேன்அவர்களது வேண்டுகோள் என்னவாக இருக்க போகிறது?  , இன்று நம்மால் மிக சாதரணமாக வாழப்படும் ஒரு வாழ்கையில் இருந்து ஒரு சிறு துளி , அவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கலாம். அதுவே கூட இறுதிவரை நிகழாது போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மிகுந்த நம்பிக்கையுடன் அதை மீள மீள அவர்கள் செய்வது கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது போல அரசியல் குறித்து அந்த எளிய மனிதர்கள் உணர்வெழுச்சியுடன்  பேசி பேசி மாய்வதை பின்னாள்களில் ஒப்பிட்டு பார்த்த போது அதில் ஒருபோதும் நிகழாத அரசியலின் குரூரத்தை எண்ணி நடுங்கியதுண்டு . அவர்களின் கனவு விதி வசத்தால் ஒருகால் நிகழ்ந்தாலும் அதில் அவர்களுக்கு தொட்டு எடுக்கக் ஒன்றும் இல்லை .


பக்தியை அடிப்படையாக கொண்ட நேர்திக்கடன் கூட ஒருவகையில் இப்படிப்பட்டதோ  என நினைத்துப் குழம்பியதுண்டு . மிக ஆபத்தான இடமாக அதை அறிந்திருக்கிறேன்  . பலருக்கு அங்கு அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் உடைத்து வீசப்பட்டிருக்கிறது , கடவுளர்கள் மனிதர்களுக்கு இணையாக வசைப்பாடப் பட்டிருக்கிறார்கள் .அவை அனைத்திலிருந்தும் மரபான நம்பிக்கையால் நான் மிக மெல்ல மெல்ல மீட்டெடுக்கப்படுவதை வெகு காலம் கழித்து உணர்ந்து கொண்டதை இங்கு நினைவுறுகிறேன் . ஆழ்மனதில் அவை நோக்கிய கேள்விகளை எப்போதும் உருவாக்கிக் கொள்ள விரும்பியதில்லை.


பாலன் வீட்டில் நள்ளிரவு தாண்டியும் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் , ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்து கொள்ளும் போது , வந்து இணைந்தவரை  மையப்படுத்தி அந்த உரையாடல் பிறிதொரு முணையை கண்டடையும் .அவை அனைத்தும் அவர்களின் அனுபவமாக , இருபத்து ஐந்து வருடங்களாக நிகழ்ந்து முடிந்தவற்றை அசைபோடுகிற ஒன்றாக இந்தது  . முதலில் வெட்டி அரட்டை போலவே தொடங்கினாலும் , ஒரு புள்ளியில் அதன் அத்தனை அலகுகளும் பிறிந்து பிறிந்து அந்த சம்பவம் தொடங்கிய இடத்தை கொண்டு சென்று சுட்டும் போது அதன் நுண்ணமை வெளிப்படுவதுடன் அதன் முடிவுறாத தொடர்ச்சி வெளிப்படும்அரசியலில் தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் . அவை பின்னாளில் புதுவை அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி என்றாயிற்று. அவற்றில் மிக மிக சிலதே செய்திகாளாக பத்திரிக்கைகளில் அடிபட்டது . நிஜமான அரசியல் செய்திகளாவதில்லை , செய்திகளாகும் எவையும் அதை பிரதிபளிப்பதில்லை . அரசியலில் பங்கு பெற்றவர்கள்  அல்லது பார்வையாளர்களான அவர்களால் நிகழ்ந்தவைகள மீள மீள நினைவுறப்படுகிறது .அந்த உரையாடலை அவர்கள் முன்வைக்க அந்த நிகழ்வின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பு , கசப்பு , விருப்பு போன்றவை காரணமாக இருந்திருக்க வேண்டும்  , அல்லது அவர்கள் தங்களின் தனிப்பட்ட அரசியல் பொருட்டு புது கணக்குகளை உருவாக்கி முன்வைக்க அவற்றை பேசிப் பேசி பார்க்கிறார்கள் என எண்ணத்த தோன்றும் . அவை எல்லாமே உண்மைகளாக இருக்க வேண்டும் என்கிற அவசிமில்லை . பாவனையாக அது இருக்கலாம் .நவீன அரசியல் ஒருவகையில் அப்பட்டமான பாவனையும் கூட .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்