https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

அடையாளமாதல் * இரண்டாம் இடம் *

ஶ்ரீ:



பதிவு : 542  / 735 / தேதி 25 அக்டோபர் 2020


* இரண்டாம் இடம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 20






அரசியலில் உயர் நடுத்தர வர்கம் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை , விரும்பிய சிலர் நேரடியாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து மேலே மேலே சென்று கொண்டே இருந்தார்கள் , அவர்களுக்கான ராஜபாட்டை எதாவதொரு தலைமை மூலம் நிகழ்ந்து விடுவதுடன் , அவர்களின் பொருளியல் பலம் அந்த வாய்ப்பை உருவாக்கித் தருகிறது . ஆனால் அரசியல் ஈடுபட நினைக்கும் பிற அனைவருக்கும் அது பொது வாசலைத் தான்  திறந்து வைக்கிறது , அதில் அவர்கள் முட்டி மோதி ஊழின் விளையாட்டில் தங்களை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது . அதில் காணாமலானவர்கள் எண்ணிக்கைதான் மிகுதி அவர்கள் எப்போதும் கணக்கில் வரதாதவர்கள் . தேர்தல் அரசியலில் தங்களை முன்வைக்கும் எவருக்கும் கட்சி அரசியல் நலம்” , கருத்தியல் பலம்” அமைப்பு” போன்ற சொற்களைப் போல நையாண்டி செய்வது பிறிதில்லை . இன்னதென அறியாமலே தேர்தல் பரபரப்பு அரசியல் எனக்கு ஒவ்வாமையை உருவாக்கி இருந்தது , என் மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டு அரசியலின் பொருட்டு செலவு செய்தேன் என்பது , அது உண்மையல்ல .அது என் படைப்பூக்கம் வழியாக நான் அடைந்த வெற்றியை நோக்கிய இளிவரளாகவே எப்போதும் நினைக்கிறேன் .மிக மிக எளிய மனிதர்களுடன் புழங்கி  மெல்ல எனது இடத்தை எனது படைப்பூக்கத்தினாலும் உழைப்பாலும் ……ஊழினாலும் அடைந்தேன் .அதற்கு என்மீது எனக்கிருந்த நம்பிக்கை மற்றும் ஆழ்மன உந்துதலால் காரணமாக இருக்கலாம் . அடைந்த வெற்றி அதிருஷ்டத்தால் என பிறர் நினைப்பது என்னை இழிவு செய்வதே .


எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பது என் மனதிற்கு அனுக்கமானது . அதை ஒட்டிய அரசியல் பணி , அதில் உயரத்தைத் தொடுவது என்கிற கனவினால் இளைஞர் காங்கிரஸில் நுழைந்தேன் . 100 வருட பழமையான வியாபார நிறுவனம் , பெரிய  குடும்பப் பிண்ணனி என பொருளியல் ரீதியில் பலமாக இருந்தாலும் , அரசியலின் பொருட்டு அதை செலவழிக்கும் வாய்ப்பு எனக்கில்லை . பின்னாளில் சொந்த தொழில் தொடங்கிய போதும் அதை அரசியலில் செலவழிக்க எண்ணியதில்லை . தனிப்பட்ட நட்புலகில் மட்டுமின்றி அரசியலில் நண்பர்கள் கூடுகைக்கு செலவழித்திருக்கிறேன் . ஆனால் அதுவும் பிறர் சொல்லும் அளவிற்கானதில்லை


இளைஞர் காங்கிரஸில் நுழைந்து ஆரம்ப காலத்தில் அரசியல் என்பது நண்பர்கள் ஒன்று கூடும் எளிய செயல்பாடாக மட்டுமே . அதில் கேலி கிண்டல் எல்லாருக்குமான பழைய நினைவுகள் குறித்த வேடிக்கையும் வெடிச் சிரிப்புமுமாக என இருந்தது . பாலனுக்கு என்மீதிருந்த கனிவின் காரணமாக நான் அவரை நோக்கி கொண்டு செல்லப்பட்டேன் , பகல் முழுவதும் அலுவலகத்தில் எளிய நண்பர்களுடன் வேடிக்கையும் விளையாட்டுமாக சென்றது . அரசியலை தனிப்பட்டு புரிந்து கொள்ள இரவு நேரங்களில் பாலனை அவர் வீட்டில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன் . பாலனுடான எனது நட்பு பிற நண்பர்களின் கண்களை உறுத்தாமல் இருக்கு மிக எச்சரிக்கையுடன் இருந்தேன் .எதன் பொருட்டும் அடைந்த நட்பை இழக்க விரும்பியதில்லை் . பாலன் முதலியார் பேட்டையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் அப்போது தான் குடிபெயர்ந்திருந்தார் இருந்தார் . அது ஆலைவீதியை ஒட்டி பிறியும்  மிக மிக குறுகலான சந்து , இரவு 9:00 மணிக்கு மேல் அங்கு செல்லும் போது போக்கு வரத்து முற்றும் அற்று ஊர் அடங்கியிருக்கும் . சிறிய வீடு என்பதால் எப்போதும் வீதியில் அமர்ந்தே இரவு முழுவதும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம்


பெரும்பாலும் கீதை பற்றிய பேச்சு நடந்து கொண்டிருக்கும் கீதையை புரிந்து கொள்ள எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்தார் .நடப்பு அரசியல் பற்றிய பேச்சு மையப் பொருளாக இருக்கும் .சோஷலிச கொள்கையில் ஈர்புள்ளவராக அகில இந்திய தலைமைகளில் ஜாரஜ் பெர்னான்டஸை தனது ஆதர்சமாக கொண்டிருந்தார் .கண்ணனைப் போல அவருக்கும் கம்யூனிச சித்தாந்தம் நோக்கிய மனச் சாய்வு இருந்தது ஆனால் இருவருக்குமே அது ஒரு பாவனையைப் போல . மார்க்ஸிய கருத்தியல் அவர்களின் சந்திக்கும் அன்றாட அரசியல் சிக்கல்களில் இருந்து வெளிவர உதவியிருக்கலாம் , கண்ணன் அதில் சிலவற்றை பெயரளவில் கொண்டுவந்து வென்றிருந்தார் . பாலனுக்கு அந்த வாய்ப்பில்லை , அதை முன்வைத்து செயல்பட பெரும் தயக்கம் இருந்தது .எந்த கருத்தியலையும் முன்வைத்து அவர் தனது நிர்வாகத்தை முன்னெடுத்தவர் இல்லை .அரசியலை வென்றெடுக்க தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உள்நுழைவது ஒன்றே வழி என்கிற கனவில் இருந்தார் .அது சாத்தியமாகாது போனால் அடுத்த கட்ட திட்டம் என அவரிடம் ஒன்றில்லை , 1991 தேர்தலில் அது நிகழ்ந்த போது அவரை நிலைகுலைய செய்து விட்டது .தனது சமன்பாட்டை இழந்ததும் எதையாவது பற்றி மேலெழுந்து வர வேண்டிய பொருளியல் நிர்பந்தம் காரணமாக அவரது சமரச செயல்பாடுகள் அமைப்பை குலையச் செய்துவிட்டது .



1991 தேர்தல் தோல்விக்குப் பிறகு அன்றைய முதல்வர் வைத்தியலிங்கத்திற்கு நெருக்கமானர் . அதிகாரத்திற்கு அருகில் இருப்பது தன்னை பாதுகாக்கும் என நம்பினார் .அதே சமயம் பிற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் சட்டமன்றத்திற்கு வருவதை அவர் அனுமதிக்கவில்லை .சட்டமன்றம் ஒரு மாய உலகம் அங்கு அரசியலின் விதிமுறைகள்  வேறுவிதமானவை .பதவியில் இருப்பவர்களைத் தவிர பிற எவருக்கும் அங்கு நிமிர்வு கிடையாது .அதனால் பிற நிர்வாகிகள் அங்கு வருவது தன்னுடைய சுய கௌரவத்தை பாதிக்கும் என அவர் எண்ணியிருக்க வேண்டும்  .விதி விலக்காக தாமோதரன் மட்டும் சட்டமன்ற செல்லுவதை பழக்கமாக வைத்திருந்தார் . பிறிதொருவர் திருபுவனை தொகுதி தாழத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விஜயன் . அவன் பாலனை பகடி செய்வதற்காகவே அங்கு சென்றான் .பிற இளைஞர் காங்கிரஸார் அனைவரும் அண்ணாசாலையில் இருந்த தலைமை அலுவலகத்தில் கூடி அங்கு வரும் நிர்வாகிகளிடம் தங்கள் சிக்கலை முறையிடுவார்கள் .அதன் பலனை எதிர்நோக்கி காத்திருப்பதை தவிர வேறு வழிகள் இல்லை .தங்களுக்கான நாள் ஒன்று வரும் . அதில் சட்டமன்றம் நுழைவது பற்றிக் குறித்த கனவும் இருக்கும் .


1996 களில் காங்கிரஸில் இருந்து வெளியேறி சில கட்சிகளில் நீண்ட பயணத்திற்கு பின்னர் 2001 களில் ரங்காசாமிடம் முழுமையாக  வந்து சேர்ந்தார், பின்னர் அவரை சார்ந்தே தனது அரசியலை வகுத்துக் கொண்டார் அங்கு அவரது நீண்டநாள் அரசியல் விருப்பங்கள் நிறைவேறின .கட்சி அரசியலை வழி நடத்திய அனுபவம் ரங்கசமியின் புதுக் கட்சி துவங்கிய போது அவருக்கு பயன்பட்டது .அங்கு இரண்டாம் நிலை தலைவராக அறியப்பட்டது அவரது அகத்திற்கு உகந்ததாக இருந்திருக்க வாய்ப்பில்லை . வாழ்நாள் முழுவதும் அவர் விழைந்த தன்னை முன்னிறுத்தும் அரசியல் அங்கும் கிடைக்கவில்லை .தன்னை  ரங்கசாமியுடன் பிறருக்கான சமரச புள்ளியாக பிறருடைய கசப்பின் பிண்ணியில் நிறுவிக்கொண்டார் . அதனால் இறுதிக் காலம்வரை தனது நிலையிழிதலில் இருந்து மீளவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்