https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

மணிவிழா 93 * யானையின் வருகை*

 






ஶ்ரீ:



மணிவிழா - 93


18-09-2026


* யானையின் வருகை *



திருக்கண்ணபுரம் எனக்கு மிக அனுக்கமான ஒரு திருத்தளம். எனது தந்தையார் தனது மணிவிழா முடிந்து பிறகு சென்ற முதல் கோவில் திருக்கண்ணபுரம் காரைக்காலுக்கு மிக அருகில் உள்ளது. எனக்கு அதுவே முதல் முறை பின்னர் பல முறை சென்று வந்தேன். அதற்கு காரணம் எனக்கு அங்கு பழக்கமான திருக்கண்ணபுரம் சமையற்காரார் ரவி பின்னர் அது ஆழ்ந்த நட்பாகி பலமுறை அந்த கோவிலுக்கு செல்லும்படியானது. ஒவ்வொரு திருத்தளத்திற்கு தனியான சில சம்பிரதாயங்கள் உண்டு. திருக்கண்ணபுரம் இரவு அரவணை பிரசாதம் பிரசித்தம். அது முழு பாசிப்பருப்பும் அரிசியும் நெய் கலந்த செய்யபடும் ஒருவகை பொங்கல் சுவையால் தனித்துவமானது. சுவையின் பொருட்டு அது பற்றி சொல்ல வரவில்லை ஆனால் அது தயாரிக்கும் முறைக்கு முன்புள்ள கோவில் வழக்கம். அதை தயாரிக்கும் சமையல்கலஞர் கோவில் மூலவர் முன்பு அன்று தேவையாகும் நெய்க்கான பாத்திரம் பிடித்திருக்க மூலவர் முன்பு நெய் அளந்து ஊற்றப்படும் அதற்கு யாரையும் நம்பாமல் தானே சரிபார்பது வியப்பளிப்பது. 


திருக்கண்ணபுரத்தில் நிகழும் “கைத்தள சேவை” மிக பிரசித்தம். ஒவ்வொரு வருடமும் வேளுக்குடி அதில் பங்கு பெற வருவதால் நான் அவரை அங்கு வந்து சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. நான் அவரை தனிப்பட்டு சந்தித்தது அதுவே முதல் முறை . மிக அணுக்கமாக அமைதியாக திருக்கண்ணபுரம் கோவில் குளக்கரை படிகளில் யாருடைய தொந்தரவும் இன்றி நிகழ்ந்த சந்திப்பு. அதில் என் திட்டங்கள் பற்றி அப்போது ஒன்றும் விரிவாக பேசிக் கொள்ளவில்லை என்னாலும் ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவக்கமாகவே அவரது உபன்யாசம் நிகழ வேண்டும் என சொன்னேன். அதன் பிறகு விழா குழு திட்டம் பற்றி நான் சற்று விரிவாக அவரிடம் பேச பேச மிக ஆர்வமாக அவற்றை கேட்டுக் கொண்டார். திருக்காவிலூர் ஜீயர் தலைமையில் குழு அமைய இருப்பது அவருக்கு ஆச்சர்யமளித்தது. ஜீயர்கள் தங்களது மடம் தவிர பிற எதிலும் ஆர்வம் காட்டாதவர்கள் விழாக் குழு தலைமை ஏற்க இருப்பது அவருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் புதிய துவக்கம் அல்லது மாறுதல் பற்றிய செய்தியை சொல்லியிருக்க வேண்டும் . அதன் பின்னர் அவர் புதுவை வரும் தேதி முடிவாகி பின்னர் நிகழ்ந்து கொண்டிருப்பவை பற்றிய தொடர்புறுத்தல் அனைத்தையும் அவருக்கு தெரிவிக்க அவரது அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பெற்றுக் கொண்டேன். புதுவை திரும்பும் வரை அவரிடம் அந்த விழா கமிட்டியில் அவர் இடம் பெற வேண்டும் என ஏன் கேட்கவில்லை என நினைத்துக் கொண்டே இருந்தேன் . 


கேட்டிருக்கலாம் தான் அது மிக ஆழமான அழகான உரையாடல் ஏறக்குறைய விழா குழு செயல்பாட்டை பற்றி அவரிடம் முழுமையாக எடுத்து வைத்த சூழலில் அதையும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் ஒரு குழந்தையின் கண்களில் தெரியும் ஆர்வமுடன் முழுமையாக கேட்டுக் கொண்டிருக்க அவரை நிர்வாக குழுவில் இடம் பெறுகிறீர்களா என எப்படி கேட்பது என தெரியவில்லை. முதல் சந்திப்பில் கேட்பது பிழையாக முடியலாம. கேள்வி பதில்கள் வழியாக அவர் என்னை அவதானித்துக் கொண்டிருந்தார். நானும் அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஒரு பெரும் ஆளுமை தன்னை பலவித கட்டுக்குள் வைத்துக் கொண்டு புற உலகை மிகுந்த கவனத்துடன் தன்னுடன் தொடர்புறுத்தும். அவரை சந்திப்பவர்கள் மரபான வைணவர்கள் மேல் சட்டை அணியாமல் வேட்டித் துண்டுடன் அடிக்கொரு முறை “அடியேன்” என்கிற சொல்லுடன் தன்னுடன் உரையாடுபவர்கள் மத்தியில் இந்த எந்த வரைமுறையும் இல்லாமல் மிக சரளமாக தனது கனவை பற்றி விஙரிக்கும் ஒருவர் அவருக்கு வித்தியாசமாக பட்டிருக்கலாம். மிகுந்த படைப்பூக்கம் கொண்ட வேளுக்குடி போன்ற ஒருவர் தொடர்ந்து தனது கனவை முன்னெடுக்க தகுந்த நபர்களை கண்டடையும் முயற்சியில் மிகுந்த மன சோர்வு அடைந்திருக்க வேண்டும் அந்த சூழலில் எந்த தடையும் இல்லாமல் சம்பிரதாயத்தில் உற்றமுடன் பேசும் ஒருவர் அவருக்கு மிகுந்த வியப்பை அளித்திருக்க வேண்டும். மிக பிரமாதமாக நிகழ்ந்த அந்த முதல் சந்திப்பில் அவரை விழாகுழு நிர்வாகத்திற்குள் வர வேண்டும் என கேட்பது பிழையாக முடியலாம். ஒருமுறை மறுத்த பிறகு மீளவும் அதை ஒரு போதும் முன்னெடுக்க இயலாது என்பாதல் அந்த ஆர்வத்தை தள்ளி வைத்தேன்.


புதுவை திரும்பும் வழியெல்லாம் அந்த உரையாடலை பகுதி பகுதியாக பிரித்து கொள்ள ஆரம்பித்திருந்தேன். அது எனது வழமை உரையாடலின் மையப் பொருளை ஒதுக்கி அதன் உள்ளே கேள்விகள் வழியாக ஒருவரின் அகத்தை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். எண்ணத்தை மறைத்து பேசும் ஒருவரிடம் கூட சற்று முயற்சி செயதால் அவர் உள்ளத்தை வெளிக்கொண்டுவர இயலும். வேளுக்குடி போன்ற ஒருவரின் வெளிப்படையான உரையாடல் அவரின் முன்னும் பின்னுமாக காலத்தை தள்ளிப் பார்க்க முடிந்தது. அதுவரை கற்பனையில் அவரை பற்றி உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை மெல்ல களைத்து உண்மை நிலையில் வைத்து பார்க்கத் துவங்கினேன். தன்னை சுற்றியுள்ள கூட்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உருவாக்கும் வேலியின் சட்டங்களை மதிக்க வேண்டி வரும் போது அவர்களின் உலகம் சிறுத்துவிடுகறது. நம்பிக்கையானவர்களை அடைவது எவ்வளவு சிக்கலோ அதை விட சிக்கல் இயல்பாக இருப்பது. அந்த தனிமை உயரத்தில் கூட சலிப்பை தருவதுண்டு. அவருடனான எனது உரையாடல் மிக சிறப்பான ஒன்று. நிச்சயம் என்னைப் பற்றிய மதிப்பீடுகளை இதற்குள் அவர் உருவாக்கி இருப்பார். அப்படி நடந்தால் அப்போது அவரிடம் நிர்வாக குழுவில் இணைய கேட்கலாம் என நினைத்துக் கொண்டேன்.


அந்த நம்பிக்கை கொடுத்த ஊக்கம் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் முதல் நிர்வாக குழு கூட்டத்தில் வேளுக்குடியின் ஒப்புதலை பெறாமல் அவர் நிர்வாக குழுவில் இடம் பெறுவார் என நான் வைத்த சிறு தூண்டில் முள்ளாக்கு அனைத்தும் மிக நிதானமாக நிகழ்ந்ததற்கான காரணம் பிறிதொன்று. அது சொல்லாப்படா மௌனம் அது அங்கு இருந்து கொண்டிருந்தது. அதுவே அனைத்திற்குமான அரசியல். அதை தொடாமலே நிகழ்ந்த உரையாடல் ஆயிரமாவது ஆண்டு விழா முதன்மை நிர்வாக குழு கூட்டத்தில் துவங்கியது . அது என்னையும் புதுவை வடகலை வைணவ ஆளுமைக்கும் இடையே வெளிப்படையாக நிகழ்ந்த சிலவற்றிற்கு பின்னால் மந்தனமான ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்ததை அவரும் நானும் மட்டுமே ஆழ்மனதால் உணர்ந்து கொண்டிருந்தோம். அவர் மட்டு எனது அரசியலை மிக தெளிவாக உணர்ந்திருந்தார் என நினைக்கிறேன். வேளுக்குடி நிர்வாக பொறுப்பில் இருக்கும் ஒரு கமிட்டியில் இடம் பெறுவது என்பது மிக உயர்ந்த கௌரவம் அதை எக்காரணம் கொண்டும் யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் அது எனது ஊகம் மட்டுமே அதுபோல ஒன்று இல்லை என சொல்லி  எனக்கான இடத்தை இல்லை என்றாக்க அவர் அந்த முதல் கூட்டத்திற்கு வந்திருந்தார். 


அது போன்ற ஒன்றை முன்பே ஊகித்திருந்ததால் எனக்கும் வேளுக்குடிக்கான தனிப்பட்ட மின்னஞ்சல்களை பிரதி எடுத்து வைத்திருந்தேன். அதில் நிர்வாகம் குறித்த வேளுக்குடி பல திருத்தங்களை சொல்லி இருந்தார். முக்கியமாக துவக்கவிழா அழைப்பிதழ் அதில் ஜீயரின் படத்தை விட தனது படத்தை சற்று சிறியதாக போட்டுக்கொள்ளலாம் என்கிற அவரது ஒப்புதல். உடன் வேறு சில நிர்வாக விஷயங்களில் அவரது ஆலோசனை கேட்கப்பட அதற்கு மிக விரிவாக அவர் அளித்த பதில்களும் ஆலோசனைகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பங்குபெறுபவர் என்கிற எல்லையை கடந்த ஒன்று. அதன் பின் அந்த சர்ச்சை எழவில்லை. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மணிவிழா 93 * யானையின் வருகை*

  ஶ்ரீ : மணிவிழா - 93 18-09-2026 * யானையின் வருகை * திருக்கண்ணபுரம் எனக்கு மிக அனுக்கமான ஒரு திருத்தளம் . எனது தந்தைய...