https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 26 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நம்பிக்கை *

 




ஶ்ரீ:



பதிவு : 535  / 728 / தேதி 26 செப்டம்பர் 2020


* நம்பிக்கை * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 12.






பிற மாநிலங்கள் போல செயல்படாத அல்லது அதிருப்தியை பெருக்கிய அமைச்சர்கள் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை . தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இது சாத்தியம் . 30 உறுப்பினர்களை கொண்ட சிறிய சட்டமன்றத்திற்கு ஒரு கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தால் அது பெரும்மான்மை அரசு .அதில் முதல்வர் தொடங்கி கடைசி அமைச்சர் என ஆறு பேர்களை கொண்ட மந்திரிசபை பிற அரசு பதவி என மீதம் ஆறுக்கும் மேற்பட்ட பதவிகள் , பிறகு சட்டமன்ற நிலைக்குழுக்கள் . இப்படி ஒருவர் ஒன்றுக்கு மேப்பட்ட பதவிகளில் அமரவே வாய்ப்பு .


ஒவ்வொரு கமிட்டிகளில் உருவாகும் மனக்கசப்பு அடுத்த கமிட்டியில் எதிரொலிக்கும் போது எதன் அடிப்படையிலும் அவை எழுகின்றன் அவற்றின் ஊற்றுமுகம் என்ன ? என புரிந்து கொள்ள முடியமல் அல்லது தீர்வை எளிதில் முன்வைக்க முடியாதபடி போய்விடுவதுண்டு . கூட்டணி ஆட்சியாக இருந்தால் இன்னும் சிக்கல் அது கொதிநிலையை அடையும் போது  ஆட்சிமாற்றம் மட்டுமே மாறாத வாய்ப்பு.அதை நோக்கி அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது.


சண்முகம் , அரசுக்கு எதிராக திரும்புபவர்களை கையாளக் கற்றவர் . புதுவையின் ஆளும் அமைப்பாக பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி இருந்து வந்திருக்கிறது . ஆகவே “மடை கட்டும்” கலையை கற்றுத் தேர்ந்தவர் . அத்தனை பேரிடமும் உரையாடி சலிக்காதவர் . பெரியவர் ,எளியவர் ,சிறார் என்கிற வேறுபாடுகளை அறியாதவர் .அல்லது பிறர் அதை அறியும்படி செய்வதில் வல்லவர் .எல்லா தரப்பு மக்களும் தன்னை மிக எளிதில் வந்து சந்திக்கும்படி வைத்துக் கொண்டவர் .

வாசலில் எந்த காவல் கட்டுப்பாடுகளும் இருப்பதில்லை.அவர் முதலவராக வந்த போதும் அதுதான் நிலை.கடற்கரை சாலையில் வாடகை வீட்டில் இருந்தார். கடற்கரையில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் ரோட்டில் இருந்தபடியே அவர் அறையில் அமர்த்திருப்பதை காண முடியும் .எந்த காரணமும் இன்றி அவரை அனுகமுடியும் என்கிற உணர்வை அது கொடுத்து விடுகிறது.


பல தரப்பட்ட மனிதர்களை சந்திப்பது ஆயாசத்தை பொடுப்பது .ஆனால் உரையாடலில் விழைவு உள்ளவர் தன்னை சுற்றி நிகழ்வதை அத்தகைய எளிய மனிதர்கள் வழியாக பெற்றுக் கொள்ள முடியும் .அவர்கள் பலநூறு வாய்ப்புகளை எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் . நமக்கு சரியானதை அதிலிருந்து விரித்து எடுத்துக் கொள்ள முடியும் என்பதை பார்த்திருக்கிறேன்.அந்த மனிதர்களை் அரசியலின் அத்தனை சாத்தியகூறுகள் பல உடல்களாக நிகழ்த்திக் காட்டக் கூடியவர்கள் .அவற்றை ஒற்றை பேருடாலாக பார்க்கக் கூடியவர்களுக்கு அடுத்து நிகழ இருப்பது வசப்படுகிறது .


ஆட்சிமாற்றம் மட்டுமே வாய்ப்பு என்கிற சூழலில் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்கும்  தீர்வு ஒன்று முன்வைக்கப்படும்.எதிர் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த சறுக்கல் இல்லாத சமன்பாடுகள் முன்வைக்கப்பட்டு சிக்கல் தள்ளிவைக்கப்படும் .பிறிதொரு கால சூழலை பொருத்து அது பெட்டிக்குள் இருந்து எழுந்து வரும்.அப்போது அதுவே அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு எழுத்தில் வராத உடன்பாடு என்றாகும்.


அதுவரை இருந்த அந்த அரசியல் நடைமுறை 1989 களில் புதிய கோணம் கண்டது . தில்லியில் காங்கிரஸ் ஆட்சி இழந்து சந்திரசேகர் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சூழல். தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசியலில் கனிந்து கொண்டிருந்த நேரம் .திட்டம் மற்றும் கணக்குகளில் இருந்து  எதார்த்தம் மாறுபட்டது .ஒரு தோல்வி மட்டுமே அதை அருகென பார்க்க வைப்பது .


தில்லி சூழலை மிக நுட்பமாக புரிந்து கொண்ட மரைக்காயர் முதல்முறையாக சண்முகத்தை கடந்து D.ராமசந்திரன் தலைமையிலான் திமுக ஜனதா தள் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர முயன்று கொண்டிருந்தார்.ஆட்சிக்கு எதிரான சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாமிட்டிருந்தனர்.


ஏறக்குறைய மரைக்காயர் தனது இலக்கை அடைந்து விட்டிருந்தார் .அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தில்லியில் முகாம் கொண்டிருப்பதை அறிந்த பிறகும் தனது அழைப்பிற்காக காத்திருந்தார் .அதுவரை ஏற்படுத்தப் பட்டிருந்த சமன்பாடுகளை மரைக்காயர் குலைத்து சென்றது சண்மகத்தை பற்றியெறியச் செய்திருந்தது.இனி அவருடன் எந்த விதத்திலும் மாநில அரசியலில் இணைந்து பணியாற்றுவதில்லை , அவருக்கான இடம் இனி இல்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டிருந்தார்.


தனது சாமர்த்திய காய் நகர்த்தலில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்பை முற்றிலுமாக தகர்த்தார் .மரைகாயரை முதல்வரென ஏற்று தில்லி சென்ற அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி கவிழ்க்கட்டதை அறிந்து கொள்ள நேர்ந்தது .இது புதுவை அரசியலில் மரைக்காயர் மீதான நம்பிக்கையை முற்றாக அழித்தது.


1989-90 களில் சண்முகம் எடுத்த மிக முக்கிய முடிவு முதலில் மரைக்காயரை மாநில அரசியலில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அதிகார அரசியலில் நீந்த தெரிந்த அவர் 1991 ல் நரசிம்மராவின் அரசில் மத்திய இணையமைச்சராகி சண்முகத்தின் ஊழல் புகாரினால் பதவியிழந்தார் . ஆனால் தனது  அரசியல் சாதுர்யத்தால் சட்டீஸ்கர் மற்றும் கேராள மாநில ஆளுனர் என பதவியை பெற்று மன்மறைந்தார் . அவரால் இறுதிவரை புதுவை மாநில அரசியலுக்கு திரும்ப முடியாது போயிற்று . சண்முகத்தின் கோபம் அப்படிப்பட்டது .


செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அரசியல் யுக்தி *

 


ஶ்ரீ:



பதிவு : 534  / 727 / தேதி 22 செப்டம்பர் 2020


* அரசியல் யுக்தி * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 11.






இரண்டாம் நிலைத் தலைவர்கள் தங்கள் விழைவினால் நரசிம்ம ராவிற்கு எதிராக சோனியாவை பின்னாலிருந்து  இயக்கினார்கள் . சோனிகாந்தி எதிர்பார்த்த வயோதிகரல்ல நரசிம்மராவ்.அவரின் எளிய தோற்றம் அவர்பற்றிய பிழை புரிதலை அனைவருக்கும் கொடுக்கவல்லது.ஒரு கட்டத்தில் சோனியாகாந்தி நரசிம்மராவை அஞ்சினார். தனது அனுபவத்தில் இருந்து தனக்கானதை நரசிம்மராவ் கண்டடைந்தார் . அனுபவம் சில தடைகளை உருவாக்கும் . அவருக்கும் அது நிகழ்ந்து .என்ன என்பதை பிற்காலத்தில் சண்முகம் முதல்வராக பொறுப்பேற்ற பின் வீழ்ந்து போனதில் இருந்து அறிந்து கொள்ள முடிந்தது .


காலம் சறுக்கலை எவருக்கும் நிகழ்வது. வயதும் அனுபவ அறிவும் பெற்றவர்களுக்கும் அதிலிருந்து விதிவிலக்கில்லை. அது அதன் தேவையை எடுத்துக்கொள்ள சிலரை தேர்ந்தெடுக்கிறது .அதை மிகச் சரியாக இயற்றி எவரும் தன் செயலில் இருந்து ஓய்வு பெரும் போது எந்த எதிர்பார்புமின்றி நிம்மதியுற்று வெளியேறுகிறார்கள் .சிலருக்கு அது நிகழ்வதில்லை .சற்றேறக்குறைய மாநில அரசியலில் சண்முகம் சென்று சேர்ந்தது அங்குதான். 


மிக திறமையாக செயல்பட்ட பிரதமர்களில் என்னளவில் நான் நரசிம்மராவை முன்னிறுத்துவேன் .1988 முதல் 2008 வரை பல முறை தில்லிப் பயணம் , பலருடன் உரையாடியது ஓரிரு சந்தர்ப்பத்தில் புதுவை அரசியல் காரணமாக சண்முகத்துடன் நரசிம்மராவை சந்தித்து .அவர் பற்றி தலைவர் சண்முகம் சொன்ன தகவல்கள் என்னை அரசியலை உள்ளும் புறமுமாக பார்க்க வைத்திருந்தது .அது எனக்கு நரசிம்மராவைப் பற்றிய நேர்மறை எண்ணம் உருவாக காரணமாக இருந்திருக்கலாம்.

நரசிம்மராவ் ஆட்சிக் காலம் இந்தியாவின் மிகச் சிறந்தவையாக இன்றளவும் நினைக்கிறேன்.


புதுவை திரும்பிய பிறகு சிலநாட்கள் கழித்து தலைவர் சண்முகத்திடம் பலவருடங்களாக நிரப்பபடாமல் இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார தலைவர்கள் அவர்களின் நிர்வாக அமைப்பு நியமிக்கபட வேண்டிய சூழல் எழுந்திருப்பதை பற்றி சொன்னபோது , நான் எதிர்நோக்கியபடி கடும் சொற்களால் அதை மறுதளித்தார் .தில்லியின் தலைமையிடம் தான் பேசிக் கொளவதாகவும் என்னை “சற்றே சும்மாயிரும்” என்றார்.


அதற்கென்ன பொருள் என நான் முன்பே அறிந்து கொண்டதே. மாநில குழப்ப அரசியலில் முகத்தில் வெடிக்க எது முதல் கிழிச்சல் என்பதே அப்போதுள்ள கேள்வி .புதிய சவால்களையும் அது கேட்கும் சமன்பாடுகள் பற்றிய அச்சத்தில் என் கைகளை கட்டிப்போட பார்கிறார் .தில்லியில் நிகழ்ந்த மாநாட்டிற்கெல்லாம் அவரளவில் என்ன மதிப்பு என நான் அறிந்தது தான்.


அரசியலில் முக்கிய முடிவுகள் ஊர்கூட்டி எடுப்தல்ல . அது ஒரு அரசியல் நகர்வு . அதே சமயம் தலைவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள மாநாடு நடத்துவது ஒரு யுக்தி மட்டுமே. அது அவர்ளை மேலிடம் அறிந்து கொள்வதற்கான பாதை மட்டும.

அரசியலில் முக்கிய இடத்தில் உள்ளவர்களுக்கு அன்றாடம் அதன் முனையை தொட்டபடி இருப்பவர்கள்.ஏதாவது ஒரு வகையில் மையத் தலைமை நிலைபாடுகளை முன்பே யூகித்திருப்பார்கள் . எதிர் நோக்காது ஒன்று நிகழும் போது மேலிட பொறுப்பில் உள்ளவர்களுக்கு அது குறித்த சமிக்ஞை அனுப்பட்டிருக்கும் . அனைவரும் ஒரே குரலில் உணரச்சிகளற்றுப் பேசுவார்கள்.அது எப்போதும் திகைப்பை பின் கசப்பையும் தருவது.


1990 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது . சட்டமன்றத்திற்கு யாரையும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது காங்கிரஸில் வழக்கமாக இருந்ததில்லை . அது சண்முகம் மன்றும் பாரூக் மரைக்காயர் இருவரின் அரசியல் சமன்பாடுகளின் விளைவுகளால் உருவாவது . தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பதவியை கடைசி வரை பேரத்தில் வை்திருப்பது சண்முகத்தின் நிலைபாடாக இருந்தது .அது அகில இந்திய காங்கிரஸின் நிலைப்பாடு கூட.


ஏகமனதான தீர்மாணம் என்பதற்குளே இருக்கும் சமன்பாடுகள் அனைவரும் அறிந்தது.தே்தலில் கட்சி பெரும்பான்மை பெற்றதும் இந்த “ஏகமனதானது” உருவாகி முடிவு தில்லியிடம் விடப்படும்.பிற நேரங்களில் அந்த சமன்பாட்டை  கொண்டு வருபவர் அதில் முன்னுரிமை பெறுவார்.


சண்முகம் மற்றும் பாரூக் மரைக்காயர் என்கிற இரு முனை கொண்ட அரசியலில் பாரூக் மரைக்காயரை பலவீனமான இடத்திலேயே வைத்திருப்பது சண்முகத்தின் அரசிலில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுக்தி . கட்சி அமைப்பை அதற்காக வலுவுள்ளதாக வைத்திருந்தார்.கட்சி அரசியலில் மரைக்காயர் ஆர்வம் கொண்டவராக இருந்ததில்லை. தனது அரசியல் நிலைபாட்டிற்கு உகந்த வழிகளில் கட்சி அமைப்பை கொண்டு செல்ல சண்முகம் தயங்கியதில்லை . ஆனால் அது 1990 களில் காலாவதியானது.


புதுவை போன்ற சிறிய எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி அமைப்பில் அதிருப்தி மிக எளிதாக அடையப்படுவது .மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முதலமைச்சர் ஒரு தலைமை அதிகாரியின் இடத்தில் உள்ளவர் மட்டுமே.ஆறே மாத த்தில் ஒரு முதல்வருக்கு எதிராக மிக எளிதில் அதிருப்தி திரண்டுவிடும் .


மற்ற மாநிலங்கள் போல அமைச்சர் மாற்றம் எளிதில் நிகழ்வதில்லை .ஆட்சிமாற்றம் மட்டுமே எப்போதைக்குமான வாய்ப்பு.அதை நோக்கியே அனைத்தும் திரளும் . கட்சி தலைமைக்கு அது கரையுடைக்காமல் பார்த்து கொள்ளவது மட்டுமே .எல்லை மீறும் போது ஆட்சி மாற்றம் தவிற்க இயலாது போகிறது

சனி, 19 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * நிலைத்த வேறுபாடுகள் *

 .

ஶ்ரீ:



பதிவு : 533  / 726 / தேதி 19 செப்டம்பர் 2020


* நிலைத்த வேறுபாடுகள் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 10.





1997 இறுதிகளில் நிகழ்ந்த தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு எனக்கு அனைத்து விதத்திலும் முக்கியமானது .மாநில அரசியலில் பெரும் மாற்றம் நிகழவிருப்பதை உய்த்துணர்ந்தாலும் அது எங்கே தொடங்கும் என்பது பற்றி எந்தக் கணக்கையும் என்னால் வந்தடைய முடியாத சூழல் .காரணம் குறந்தபட்சம் மூன்று வித கோணங்கள் ஒன்றுடன் ஒன்று  முயங்கி முரண்பட்டு நின்று யாரும் கணிக்கவியலாத புது வண்ணத்தில் அது எழுந்து கொண்டிருந்தது.


கட்சியில் முக்கிய தலைவர்களின் முரணரசியல்.சண்முகம் அணியில் நாராயணசாமியின் விலகிய மனப்போக்கு ,மூன்றாம் நிலைத் தலைவர்கள் இரண்டாம் இடம் நோக்கிய நகர்வு போன்றவை உட்கட்சியை பாதித்த சூழலில் ,திமுக ஆட்சியில் கண்ணனால் நிகழும் இடர்பாடுகள் . தமிழக அரசியலில் நிகழும் மடைமாற்றம் போன்றவை.அந்த கணிக்க இயலாத புது சந்தர்ப்பங்களை உருவாக்கி இருந்தது.


1996 களில் மத்தியில் பஜக ஆட்சி அறுதிப் பெரும்பான்மையற்று நிலைதடுமாறியதை தொடர்ந்து மேலும் அரண்டு  பாராளுமன்ற தேர்தலில் கொண்டு விட்டது .அதில் இரண்டு முடிவுகள் அ்ன்று நிலவிய அரசியல் குழப்பத்தை உறுதி செய்து தெளிவான வாக்கை அளிக்கவில்லை . அது மீள மீள தேர்தலை திணித்துக் கொண்டிருந்தது .அதே சமயம் தமிழக அரசியலில் கடும் விளைவை உருவாக்கியிருந்தது .


1998 பாரளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தமகா அதனது கூட்டணியை முடிவு செய்யவேண்டிய நிர்பந்தம். ஆனால் மூப்பனார் திமுக வுடான கூட்டணியில் நீடித்தார். கட்சிக்குள் உள்ளவர்கள் அதற்கு எதரான மனநிலையில் இருந்தனர்.1998 பாராளுமன்றத் தேர்தல் அவருக்கு சாதகமாக இல்லை .1996 களில் இருந்த மனநிலையில் மக்கள் இல்லை.இன்று வேறுவிதமான சமநிலை கோரினர்.


இந்த சூழலில் தான் தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாடு நடந்து முடிந்திருந்தது . அதன் மையக் கருத்து “அரசியல் பயிற்சி முகாம்” நடத்துவது பற்றி இருந்தது .இதை எனக்கான ஆகச் சிறந்த வாய்ப்பாக பார்த்தேன். 


புதுவை இளைஞர் காங்கிரஸ் முதிய முகங்களை அறிமுகப் படுத்த நினைத்ததும், அகில இந்திய மற்றும் தமிழக அரசியலில் நிகழக்கூடிய வாய்ப்புகள் பற்றி எனது உரையாடலை கொண்டு செல்ல நினைத்திருந்தேன் . அரசியல் எதிர்காலம் குறித்த சிக்கல்களுக்கும் கணக்குகளுக்கும் வெளிப்படையான உரையாடலில் வாய்ப்பில்லை . சொல்லப்படும் பல சொற்களில் இருந்து கேட்பவர் அதை விரித்தெடுத்துக் கொள்ள வேண்டியது. அதை அவரவர் புரிதலுக்கு விட வேண்டியதே நான் செய்யக்கூடுவது.


அங்கிருந்து உந்தப்பட்டு மேலதிக அரசியல் கணக்கிற்கு விழைபவர்களுக்கு அவர்களுக்குறிய கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களை அடையாளம்கண்டு அரசியலை முன்னெடுப்பது என எண்ணமாக இருந்தது.


தில்லி மாநாடு முடிந்து அனைவரும் புதுவை திரும்பினர். எனக்கு ரயிலில் முன்பதிவு இல்லை என்பதால் நான் அவர்களுடன் திரும்ப முடியவில்லை .இந்தியா முழுவதிலும் இருந்து பலர் வந்திருந்தமையால் கடைசி நேர ரயில் புக்கிங் சாத்தியமில்லாது போனது .


அனைவரும் புதுவை திரும்பினர் , அவர்கள் அனைவரையும் நிஜமதாபாத் ரயில் நிலையத்தில் சந்தித்து விடை கொடுத்து அனுப்பினேன் . அங்கு கிடைத்த சில மணிநேரத்தில் கடந்த மூன்று நாட்களாக மாநாட்டிற்கு மத்தியில் கிடைத்த நேரத்தில் துணுக்குகளாக உரையாடிதை தொகுத்துக் கொடுத்தேன் . அதில் நமக்கான இடம் அதிலுள்ள சவால் .மேலும் மாநில அரசியல் தலைவர்களுக்குள் நிகழும் பனிப்போரை வெளிப்படையாக பேச இயலாத சூழல் போன்றவை . அது வெளிப்படும் காலம்வரை காத்திருக்க முடிவு தெய்திருந்தேன் .


தில்லி மாநாடுகள் கூட்டங்கள் அனைத்தும் ஹிந்தியில் நிகழ்பவை . ஒரு சில முக்கிய ஆளுமைகளும் தலைமை மட்டும் ஆங்கிலத்தில் உரையாற்றினர்.1996 களில் நடந்து பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த பிறகு நரசிம்மராவ கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தது .அதே சமகாலத்தில் புதுவையிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தது . 1996 முதல் 1999 அவரை இந்திய அரசியல் நிலைத்தன்மை இல்லாததாகி இருந்தது .


1991 இந்தியவிற்கு மிக ஆபத்தான காலகட்டம் . நாடு திவாலை நோக்கி சென்று கொண்டிருந்தது அவருடன் மன்மோகன் சிங் இணைந்து இந்தியாவின் மிக முக்கிய காலகட்டத்தில் இந்தியாவின் வளர்மிகு எதிர்காலத்தை வடிவமைத்தார்கள். இன்று ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்திற்கான அடித்தளம் அன்று அமைக்கப்பட்டது .நரசிம்மராவை போன்ற தீயூழ் கொண்டவர் பிறிதெவரும் இல்லை . அவர் வாழும் காலத்திலேயே முகமற்று போனார்.


இந்திய பொருளாதாரத்திற்கு வித்திட்ட பெருமை மன்மோகன் சிங்கை சூழ்ந்து நிற்கவைக்கப்பட்டு நரசிம்பராவ் மறக்கடிக்கப்பட்டார் .ஆனால் 2004 முதல் 2014 வரையில் பிரதமராக மன்மோகன் சிங் செய்பாடுகளை கணித்தால் அவரை பின்னின்று இயக்குபவரை வைத்தே அவரது வெற்றிகள் நிலைகொண்டது தெரியவரும்.நரசிம்ம ராவை புரிந்து கொள்ள அது போதுமானது,


நரசிம்ம ராவின் பெரும்மாண்மை இல்லாத அரசு இரண்டு மூன்று சிறு கட்சிகளின் ஆதரவில் முழுமையான ஆட்சிகாலத்திற்கு நீடித்தது .அதை தொடர்ந்து ஊழல் குற்றச்சாண்டு ஏழுந்து நரசிம்மராவின் இறுதி காலத்தை நிம்மதியற்ற போகச் செய்திருந்தது . 


இதில் எதிர்கட்சிகளை வட சொந்தக் கட்சியே முனைந்த செய்தது .அரசியலில் திற்மபட செயல்படுவது ஒரு திறமை என்றால் அரசியலாளர்களை திறம்ப கையாள்வது பிறிதொன்று .அவரது அரசியல் செயல்பாட்டினால் பலரின் கோபத்தை சம்பாதித்திருச்தார்.கட்சி ரீதியில் தன்னை பலப்படுத்திக் கொண்டு தேர்தலை சந்திக்க நினைத்தபோது . அந்த தொடர்புறுத்தும் நிலை அவருக்கு முற்றாக அறுந்திருந்தது . நம்பிக்கையாளர் என யாரையும் அவர் பெற்றிருக்கவில்லை  . சோனியா காந்தியின் கடும் கோபத்தை சேர்த்து வைத்திருந்தார் .தனது கோபத்திற்கான விலையை சோனியாகாந்தி பிறிதொரு சந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டியிருந்தது

புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...