https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 14 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * விரலிடுக்கில்*

 


ஶ்ரீ:



பதிவு : 532  / 725 / தேதி 14 செப்டம்பர் 2020


* விரலிடுக்கில் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 09.





அதிரடி அரசிலுக்கு பழக்கமற்றவரான மூப்பனார் ஜெயலலிதாவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர்.தில்லியில் பலகட்ட பேச்சுவார்தைகளில் தமிழக கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படாத சூழலில் . அகில் இந்திய காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு விடப்பட்டது .ஆரம்பம் முதலே மூப்னார் திமுக நோக்கிய மனச்சாய்வு கொண்டவர் என்பது வெளிப்படையானது . அவர் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தும் அதனாலேயே அடிபட்டது .


ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தில் திமுக மறைமுக காரணம் என அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராம்மூர்த்தியால் குற்றச்சாட்டப்பட்ட சூழலில் திமுக தலைமை ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகாமல் விடுபட்டது பல அழுத்தமான கேள்விகளை முன்வைத்து சென்றது .திமுக நோக்கிய வாழப்பாடி ராம்மூர்த்தி வைத்த குற்றச்சாட்டை அவரே எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி காங்கிரஸ் திமுக கூட்டணி வாய்பபை சிதறச்செய்து அவர் காங்கிரஸ, கட்சியிலிருந்து வெளியேறி திவாரி காங்கிரஸ் கண்டது பிறிதொரு வினோதம்


நரசிம்மராவ் மற்றும் சோனியாகாந்தியுடனான உறவு கொதிநிலையை அடைந்து விட்டிருந்தது.சோனியகாந்தி தனது நேரத்திற்கு காத்திருந்தார் . திமுக வுடான கூட்டணி முடிவு அதற்கான வாய்ப்பை திறந்து வைக்கும் என்கிற காரணத்தை ஒட்டி நரசிம்மராவ் அதிமுக வுடான கூட்டணியை அறிவித்தார்.அது தற்கொலைக்கு இணையான முடிவு.


தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த முடிவை எதிர்த்தனர்.அதிமுக விற்கு எதிரான மனநிலை தமிழகத்தில் காணப்படுவது அதை தோக்கிய கூட்டணி முடிவு சாதகமானது அல்ல என்கிற முடிவு ஆழமாக இருந்தது .


நரசிம்மராவின் முடிவால் சீண்டப்பட்டு முதல் முறையாக கோபம் கொண்டவராக மூப்பனார் வெளிப்பட்டார் .அவரை சென்னை விமான நிலையத்தில் சந்திக்கும் வாய்ப்பு .அதீத  கோபத்துடன் அதே சமயம் நிதானம் தவறாதவராக அவரை பார்க்க முடிந்தது ஒரு ஆச்சர்யம் .


சில நாட்களுக்கு பின் அதனது தயக்கங்களை உதறி வெளிவந்து தமகா வை துவங்கினார் .மேல்மட்ட அரசியல் தலைவராக அறியப்பட்ட மூப்பனார் ஒரு மாநில அரசியல் கட்சிக்கு தலைமை ஏற்றது அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரானது . மூப்பனாரின் இந்த முடிவிற்கு “சோ” போன்ற அரசியல் கட்சிகள் சாராத ஆளுமைகள் முக்கிய பங்கு வகித்தனர்.


தில்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதுக் கட்சி கண்டவர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர்  சிலர் மட்டுமே அதில் வெற்றி கண்டனர்.மிகப் பெரும்பாளோர் திரும்ப கட்சிக்குள் வந்து சேர்ந்தனர். தமிழகத்தில் காமராஜர் போன்ற ஆளுமைகள் கூட தான் துவங்கிய கட்சியின் அழுத்தம் காரணமாக தங்கள் கொளகைக்கு முரண்பட வேண்டியிருந்தது .


இவைகளே மூப்பனாரின் தயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் . முடிவுகள் தனது விழைவிற்கு அப்பாற்பட்டு எடுக்கப்பட்டவை என்பதும் அது குறித்து ஆழ்ந்த மனவருத்தம் அடைந்திருந்ததை உணரும் வாய்ப்பு கிடைத்தது .


சென்னை ராமசந்திரா மருத்துவமணையில் தனது இறுதி காலத்தை கழித்துக் கொண்டிருந்த மூப்பனாரை அன்றைய முதல்வர் சண்முகத்துடன் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது .அவர் சொன்ன அந்த வார்தைகள் தனது  மகனை திரும்பவும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க அனைத்து முயற்சிகளையும் சண்முகம் செய்யவேண்டும் என கேட்டுக் கொண்டார்.தனிக்கட்சி முடிவு தவறானது என கூறினார் , பிற இரண்டாம் நிலை தலைவர்களிடமிருந்து தன் மகனை காப்பாற்ற வேண்டும் என கூறினார்.


பா.சிதம்பரம் போன்றவர்களை குறித்து அவர் கொண்டிருந்த ஆழமான கசப்பு அதற்கு காரணாக இருந்திருக்க வேண்டும். மூப்பனாரின் வேண்டுகோள் படி GK.வாசன் காங்கிரஸில் இணைந்ததும் தந்தையின் கோட்பாட்டு அரசியலுக்கு முரண்பட்டு மத்திய அமைச்சராகி ,கட்சி மேலிடத்தில் கசப்பு கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி துவங்கியது பிறிதொரு முரண்நகை .


மூப்பனார் இந்தியா முழுவதும் தலைவர்கள் அகில இந்திய தலைமைக்கு முரண்படும் போதெல்லாம் அதை சரி செய்பவராக அறியப்பட்டவர் . “ஜென்டில்மென் பாலிடீஷியன்” என்கிற அடைமொழி கொண்டவர் .அன்றாட அரசியலில் கருத்து சொல்வதை எப்போதும் தவிற்தவர்.அவை அல்ப ஆயுளை கொண்டவை என அறிந்தார்.


உணர்வு பெருக்குகள் கால அளவிற்கு உட்பட்டவை. நீண்ட பயத்திற்கு ஏற்றவை அல்ல . அவை முழுதாக உருவாகி முடிவதற்குள் வடிந்துவிடக் கூடியவை . மேலும் மக்களை தொடர்புறுத்தும் தலைவர்கள் தங்கள் கோட்பாடுகளை விட சூழலை ஒட்டி முடிவெடுக்கும் நிற்பந்தத்தில் உள்ளவர்கள் , அதனால் எந்தவித சமரசத்திறகும் தயாராக இருப்பார்கள்.

தனக்கென முகம் உள்ளவர்கள் கூட எளிதில் இறங்க முடியாத இடத்திற்கு இறங்க வேண்டிய சூழலை சந்தித்தேயாக வேண்டியவர்கள் . மூப்பனார் போன்றவர்களுக்கு அவை கட்டுபடியாவதில்லை.அது மிக விரைவில் வெளிப்பட்டது.


சண்முகம் மற்றும் மூப்பனார் போன்றவர்கள் பழைய தலைமுறை அரசியல்பாணியின் நீட்சி .காமராஜரை ஆதர்சமாக கொண்டவர்கள் .அரசியல் ஆர்வலர்களின் பரபரப்பிற்கும் , இரண்டாம் நிலை தலைவரகளின் விழைவிற்கும் அப்பால் தங்களை வைத்துக் கொண்டவர்கள். அரசியல் சரி நிலைகளில் மத்தியில் நடைமுறைவாதிகளாக இருந்தனர். வெகுஜன அரசியலை மிக எச்சரிக்கையுடன் அனுகினர். அது மழை வெள்ளம் போல மிக சீக்கிரம் வடிந்து விடக்கூடியது .அதை ஒருபோதும் மையப்படுத்தியதில்லை என்கிற தெளிவு உள்ளவர்கள்.இதில் மூப்பனார் சிக்கியபோதும் அதில் உழலாதவராக சண்முகம் இருந்தார் என்பது உச்ச கட்ட ஆச்சர்யம் .


திராவிட பரப்பிய பாணி அரசிலுக்கு எதிரானவர் அதில் அனுபவம் இல்லாதவர். மறைந்த ஜெயலலிதா பாணி அரசியலில் ஆரம்பம் முதலே விலகியிருந்தார் .1991 அரசியலுக்கு கூட்டணி பேச ராஜீவ்காந்தி போயஸ் தோட்டத்திற்கு சென்ற போது உள்ளே செல்லாது வெளியே ரோட்டில் நின்றதை மிக ஆச்சர்யமாக பார்த்ததை நினைவுறுகிறேன்

வியாழன், 10 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * பரப்பியலரசியல் *

 ஶ்ரீ:



பதிவு : 531  / 724 / தேதி 10 செப்டம்பர் 2020



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 08.





பஜகாவின் முதல் பிரதமர் வாஜ்பாய் அரசு 16 நாட்களில் கவிழ்ந்து தேவக்கவுடா பிரதமாராக வந்த அந்த சூழலில் மூப்பனாரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டு திமுக அதை ஆதரிக்கவில்லை என்கிற அலர் எங்குமிருந்தது . மூப்பனார் பிரதமர் பதவியை விரும்பினாரா? இல்லையா என்பது பற்றி யாருக்கும் தெளிவில்லை. அதுவரை மத்திய அரசாங்கத்தில் அவர் கைகாட்டிவர்களுக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக முடிந்தது . அவருக்கான வாய்பை எப்போதும் தட்டிக் கழித்துவந்தார்.


நீண்டகால அரசிலுக்கு அது உகந்ததல்ல என அவர் நினைத்திருக்கலாம் .அமைச்சராக ஒருமுறை ஏறி சில காரணத்தால் அதிலிருந்து கீழிறங்கும் போது , அதுவரை பெற்றிருந்த அனைத்து செல்வாக்கை அழித்தே இறங்க வேண்டியிருக்கும் என்பதால் அது சரியான வழிமுறையும் கூட .ஆனால் பாரதபிரதமர் வாய்பபை பற்றி என்ன நினைத்தார் என்பது தெளிவில்லாமல் இருந்தது . அவர் தயங்கியிருக்கவே வாய்ப்பு.


1996 ல் திமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை எதிர் பார்த்திருந்த தமகா இரண்டாம்கட்ட தலைவர்கள் அது நிகழாததால் அதிருப்தியின் இருந்தனர் . அவர்கள் இந்த சிக்கலை ஊதி பெரிதாக்கினர் .திமுகா வை விட்டு வெளியேறவது பற்றி பலமுறை மூப்பனாரிடம் பேசப்பட்டது . ஆனால் அடுத்து என்ன என்கிற அவரது கேள்விக்கு பதிலில்லை.


தமகா வின் உதயமே நரசிம்மராவின் அதிமுக கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எதிர்த்தே நிகழ்ந்தது . தமிழக அரசியலில் மூப்பனார் தனது மென்மையான பாணி அரசியலை முன்வைத்தவர். வெகுஜன மட்டையடி அரசியல் தனக்கானதில்லை என பலமுறை வெளிப்படுத்தியவர்.தமகா வின் இரண்டாம் நிலை தலைவர்கள் சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார்கள் . புதுவையில் கண்ணனும் அதற்காக காத்திருந்தார் என்பது வினோதம்.


தமிழக தமாக வுடன் எந்த தொடர்பு இல்லாது தன்னை மையப்படுத்திய அரசியல் மட்டுமே கண்ணனின் நிலைப்பாடாக இருந்தது .மூப்னாரின் தீவிர ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கண்ணன் நிஜத்தில் அந்த மனநிலை கொண்டவரல்ல.மாநில அரசியலில் சண்முகம் மற்றும் மரைக்காயரை   எதிர்த்தே தன்னை வளர்த்துக் கொண்டார் .அதற்கு மூப்பனார் ஆதரவாளர் என்கிற அடையாளம் தேவையாய் இருந்தது.


கண்ணன் தொண்டர் பலம் மிக்கவராக அறியப்பட்டவர். பொது மக்கள் மத்தியலும் கண்ணனுக்கென செல்வாக்கு ஓங்கி இருந்தது .சண்முகம் மற்றும் மரைக்காயர் இடையே மூன்றாவது சக்தியாக கண்ணன் உருவெடுத்திருந்தார். சண்முகம் மற்றும் மரைக்காயரிடையே மோதல் முற்றும் போது கண்ணன் சாயும் பக்கம் வெற்றிபெற்றது. பெரும்பாளும் மரைக்காயரை சார்ந்தே அதனது முடிவுகளை எடுத்தார். மரைக்காயரும் கண்ணனை பயனபடுத்திக் கொண்டார்.


மரைக்காயரின் ஆதரவு நிலையானதில்லை  கண்ணனும் அறிந்தே இருந்தார்.அவர் தன்னை பிற தலைவர்கள் ஒதுக்க முடியாது படி செய்ய மூப்பனாரின் பெயரை பயன்படுத்திக் கொண்டார்.அவர் எவரின் பின்னாலும் நிற்பவரல்ல . அதை வெளிப்படுத்த 1999 ல் ஒரு வாய்ப்பு நிகழ்ந்தது. 


1991 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக நின்று வெற்றி பெற்று முதல்வர் வேட்பாளராக அறியப்பட்ட கண்ணன் சண்முகத்திற்கு எதிராக சதி குற்றச்சாட்டு மற்றும் மரைக்காயரின் மறைமுக எதிர்ப்பினால் வைத்தியலிங்கத்திடம் முதல்வர் பதவியை பறிகொடுத்திருந்தார் .சண்முகத்தின் பலவித காய் நகர்த்தலில் கட்சி சார்ந்து செயல்பட இயலாத சபாநாயகர் பதவியை ஏற்கவேண்டிதாயிற்று.


1991 தொடங்கி 1994 வரை வைத்தியலிங்கம் தலைமையிலான அரசுக்கு அனைத்து விதத்திலும் தொல்லை தருபவராக உருவெடுத்தார் . ஒரு புள்ளியில் தாங்க முடியததாகி தில்லி பிரதமர்வரை சென்று கண்ணன் பலமுறை எச்சரிக்கப்பட்டு அதனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை .


1994 ல் புதுவை சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அண்டு இருக்கும் சூழலில் , நிலைமை கட்டுமீறி போவதை விரும்பாத காங்கிரஸ் மேலிடம் கண்ணனிடம் சபாநாயகர் பதவியில் இருந்து வெளியேற அறிவுறுத்தியது . மறுத்தால் அவருக்கு எதிராக பதவி நீக்க தீர்மாணம் கொண்டுவரப்படும் என எச்சரித்தது . தீர்மாணம் கொண்டுவருவது கண்ணனின் அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து விடும் . கண்ணன் பதவி விலக துணை சபாநாயகர் சுப்பிரமணியம் சபாநாயகரானார். 

கண்ணன் அப்போதே மேலிட கங்கிரஸின் ஆதரவு தளத்தை முற்றாக இழந்திருந்தார்.கட்சியைவிட்டு வெளியேறுவதை விட வேறு வாய்புகள் இல்லை.


காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த கண்ணன் 1996 தேர்தலை ஒட்டி தனிக்கட்சி துவங்கினார்.தமிழக அதிமுக கூட்டணி என்கிற நிலைப்பாடு அதன் விளைவாக அரசியலில் இருந்து வந்த கொந்தளிப்பு அனைவரும் அறிந்தது . ஆனால் மூப்பனார் வாழப்பாடி ராம்மூர்த்தி போல் அதிரடி அரசிலுக்கு பழக்கமில்லாதவர் . நரசிம்மராவின் அதிமுக கூட்டணி என்கிற முடிவை எட்டப்படுகிற தருணத்தில் சீண்டப்பட்டவராக தமிழகம் திருப்பினார்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அசாத்தியமுயற்சி *

 


ஶ்ரீ:



பதிவு : 530  / 723 / தேதி 06 செப்டம்பர் 2020


* அசாத்தியமுயற்சி * 


“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 07.






தில்லிக்கு ரயில் வண்டியில் புதிய நிர்வாகப் பொறுப்பிற்கு வருபவர்களுடன் பயணம் செய்ய இயலாது போனது எதிர்கால அரசியலில் நிகழக இருக்கும் நுட்பமாண ஆடல்கள் குறித்த புரிதலுக்கு அவர்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எனது திட்டமிட்ட உழையாடல் நிகழாது போனது எனது எதிர்கால அரசியலுக்கு சிக்கலை உருவாக்கிவிட்டிருந்தது.


அது ஒரு மிக முக்கிய காலகட்டம் என என் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது .அகில இந்திய அளவிலும் அதை ஒட்டி தமிழக , புதுவை அரசியலில் திடீர்  மாற்றம் நிகழக்கூடும் என உய்த்துணர்ந்திருந்தேன் . அதை ஒட்டியே எனது நிலைப்பாடு வடிவமைக்கப்பட்டிருந்தது .அந்த சூழல் அடுத்த தலைமுறை அரசியல் தலைவர்களுக்கானது என உறுதியாக நம்பினேன் .இன்று அது உண்மை என காலம் சொல்லுகிறது.ஆனால் அதில் பங்கு பெறும் சூழலில் நான் இல்லாதிருப்பது ஊழின் காரணம்.


புதிய தலைமுறை தலைவர்கள் வெளிப்படுவது 2020 ல் முழுமையடையும் எனக் கணித்திருந்தேன். இடைப்பட்ட பத்து ஆண்டுகள் அதற்கான வடிவமைப்பை உருவாக்கித் தரும் என உறுதியாக நினைத்தேன்.


பாலனை விட்டு வெளியேறிய பின் அரசியலில் இருந்து விலகுவது என்றிருந்த எனக்கு மாநில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சண்முகத்திடம் சென்று சேர்வது பற்றி எந்த கணக்கும் இருந்ததில்லை .ஆனால் ஊழ் அதை செய்யும்படி நிகழ்த்தியதை. பிறகும்கூட மாநில அரசியலில் தனி ஆளுமையாக என்னை முன்னிறுத்திக் கொள்ளும் எந்த கனவும் எனக்கில்லை . எனது உடல் குறைபாடு மட்டும் அரசியலை முழு நேமுமாக என்னால் செய்ய இயலாது என்றே என்னைப்பற்றி எனக்கு கணிப்பிருந்த நேரம்.


கடந்த கால நிர்வாகிகள் கொடுத்த தேவையற்ற அழுத்தம் .வல்சராஜ் அதை பயன்படுத்திக் கொண்டு  என்னை உதாசீனப்படுத்தியது. தொடர்ந்து செயல்பட முடியாதபடி என்னை முற்றுகையில் வைத்திருந்தது போன்றவை பெரும் மன அழுத்ததை கொடுத்திருந்தது .


என்னைப்பற்றி எனக்கு உரிய புரிதலை அந்த காலகட்டம் கொடுத்திருந்தது . அதுவரை என்னை நான் அறிந்திருக்கவில்லை என்பது விசித்திரமானது .பாலன் எனக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அதிலிருந்து திமிறி எழுந்து இயக்கத்தை உடைத்து எனது கோபத்தை வெளிப்படுத்தும் வரை அதை நான் செய்யக்கூடியவனாக் என்னை அறிந்திருக்கவில்லை . அதன் பின் பாலனுக்கான இடம் இறுதிவரை அவருக்கு கிடைக்காமலானது.அப்போது கூட நான் யார் கவனத்தையும் பெரிதாக கவரவில்லை . என் உடன் இருந்த அந்த குழு மட்டுமே என்னை அறிந்திருந்தது.


புதுவை அரசியலில் இருந்த வெற்றிடம் , தமிழக அரசியலால் எந்த கணிப்பும் கொள்ளமுடியாத சூழல் புதுவை அரசியலில் பெரும் குழுப்பத்தை உருவாக்கி இருந்தது . இந்த இடைவெளியில் எனக்கான இடம் துலங்கி வந்து . அதை பற்றறியெடுத்து எனது அரசியல் போக்கை முடிவெடுத்தேன் . காலம் சாதகமான காற்றை வீசிக் கொண்டிருந்தது .அது விடுக்கும் சவாலை ஏற்பது மட்டுமே என்கிருந்த ஒரே வாய்ப்பு.அதை துணிந்து ஏற்றுக்கொண்டேன்.மாநில தலைவர் சண்முகத்துடன் நெருக்கமாக இருந்தது அன்றைய அரசியல் சூழல் குறித்து தெளிவான புரிதலை கொடுத்திருந்தது .


1996 களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலமையில் மாற்றம் அதன் பாரளுமன்ற தேர்தல் தோல்வி ஒட்டி நிகழ்ந்தது.இந்தியவின் மிக முக்கிய பிரதமர் , நாட்டை திவாலாகாமல் காத்தவரான நரசிம்மராவ் அடையாளமிழந்து போனார் .தனியாளுமையாக அவர் வெளிப்படாமல் அது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.அதுவே அவரை பெரும் அச்சுறுத்தலாக சோனிகாந்தி நினைக்க வைத்தது ஆச்சர்யமில்லை. அன்றைய அமைப்பை பிரித்து அடுக்கியதன் விலையை இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது . நரசிம்மராவை அடுத்து சீத்தாராம் கேசரி தலைவராக வந்தார்.


1996 களில் தமிழகத்தில் மூப்பனார் தனிகட்சி துவங்கி திமுகா வுடன் கூட்டணி அமைத்து அதிமுகாவின் தோல்விக்கு வழியமைத்தார் .அதையொட்டி புதுவையிலும் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்த அரசியல் பிளவை கண்ணன் பயன்படுத்திக் கொண்டு திமுகாவுடன் கூட்டணி ஆட்சியை கொண்டுவந்தார் .பலமிக்க உள்துறை புதுவையில் முதல்முறையாக முதல்வர் இலாக்காவில் பிரிக்கப்பட்டு கண்ணனுக்கு கொடுக்கப்பட்டது .


தனது நிலையை தக்ககவைத்துக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் புதுவை முதல்வருக்கு தலைவலியானார் .அவர் எப்போதும் பிறரால் கணிக்க முடியாத சிக்கல் நிறைந்தவராகவே ஆரம்ப காலம் முதலே இருந்து வந்தார். ஆனால் புதுவை முதல்வராக இருந்த ஜானகிராமனிடம் கண்ணனின் அரசியல் அழுத்தம் எடுபடவில்லை . திமுக தலைவர் மட்டும் மூப்பனார் மூலமாக கண்ணன் அழுத்தப்பட்டு கடும் அதிருப்தியில் உழன்று கொண்டிருந்தார்.


1996 முதல் 1998 வரை அகில இந்திய அரசியல் கடும் நிலையற்ற தன்மை கொண்டிருந்தது இந்த கால கட்டத்தில் இந்தியா மூன்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்து .கடசிகளின் நிலமையும் சிக்கலில் நீடித்தது .அது மாநில அரசியலிலும் பிரதிபளித்தது .தெளிவற்ற அரசியலை விதைத்திருந்தது.


புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...