https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 செப்டம்பர், 2020

அடையாளமாதல் * அனுபவம் என்கிற இடற்பாடு *

 ஶ்ரீ:



பதிவு : 529  / 722 / தேதி 03 செப்டம்பர் 2020



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 06 .





அரசியலில் அனைவரும் தன் பொருட்டு எதையும் செய்து அதற்கு அரசியலை, சந்தர்ப்ப சூழலை காரணம் சொல்ல கூடியவர்களே, சில சமயம் நம்பிக்கைக்கு உகந்தவர்களின் அரசியல் செயல்பாடுகள் அவர்களை உருவாக்கியவர்களுக்கு எதிராக சென்றதே எங்கும் காணக்கிடைக்கிறது . சிறு அளவாவது “கோட்பாடு” என ஒன்றை வைத்துக் கொண்டவர்கள் பாடு சமரசம் செய்து கொள்ள இயலாமல் வெளியேறி அடையாளமிழந்து போவதை தவிர பிறிதொரு வழியில்லை  . சமரசம் செய்து கொண்டு அங்கேயே உழன்று  தேங்குபவர்கள் சிலகாலம் அரசியல் லாபம் பெறக்கூடியவர்கள் ஆனால் காலத்தின் தீர்ப்பு அனைவருக்கும் ஒன்றே .அது அனுகும் காலம் அரசியலில் கோட்பாடு இல்லாது தேங்கி இருப்பவர்கள் நரகத்திற்கு இணையான ஒரு உலகில் வாழ நேர்கிறது .


வெளியேறுபவர்களில் சிலர் வேறு அரசியல் நிறுவனங்களுக்கு சென்று முகம் கரைந்து போகிறார்கள் . கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மிகச்சிலரே . அவர்கள் முற்றாக ஒதுங்கி விடுகிறார்கள் . தனது கடந்து வந்த பல அரசியல் சூழலில் ஆற்றியவற்றை சிலவற்றையாவது அசைபோட்டு நிறைவுற்று மன்மறைகிறார்கள் . அது ஒரு தியான மனநிலை . அனைவருக்கும் கூடுவதில்ல


மனிதர்களை மையப்படுத்திய அரசியல் எதிர்காலக் கணக்குகள் எப்போதும் யாருக்கும்  வசப்பட்டதில்லை .மிகப் பெரும்பாலும் அது பிழை என்றே நிருபிக்கப்பட்டிருக்கிறது. தன்கைக்கு என்றைக்கும் அடக்கமானவராக இருப்பார் என சண்முகம் நாராயணசாமியை பற்றி கணக்கிட்டது அவரது முன்னறிதல் பிழை .பிற மாநிலத் தலைவர்களை தன்னை ஒட்டிய நிலபாடுகளை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி  வைத்தது அவருக்கு இருந்த முன்னறிதல்.


ஆனால் அவரும் ஒரு எளிய மனிதர் தான் போலும் .தனது  அரசியல் வாழ்வில் அவர் தெரியாது இயற்றிய பெரும் அரசியல் பிழை .தெரிந்த பிழைகளும் உண்டு அதற்கான காரண காரியங்களுடன் .தனது  முன்னறிதல் பிழைக்கு விலையாக அவரது அரசியலை நாராயணசாமி முடிவிற்கு இட்டு சென்றார் .


ஆரம்ப கால அரசியலில் நாராயணசாமி சண்முகத்திற்கு அடக்கமானவாராகவே அனைவராலும் அறியப்பட்டார் . ஆனால் அவரின் அரசியலில் பாடத்தில் சண்முகம் அவரை பாதிக்கவேயில்லை என்பதை தனது பிற்கால அரசியலில் வெளிப்படுத்தினார் .“நரி” என்கிற குறியீட்டு சொல்லுடன் அவர் பிற்காலத்தில் அடையாளப் படுத்தப்பட்டார் . சண்முகத்திடம் கற்றுக்கொள்ள அவருக்கு ஒன்றுமில்லை . சண்முகம் இட்ட வேலைகளை செய்து முடிப்பவராக இருந்தார் .


1989 களில் சண்முகம் மாநில அரசியலுக்கு திரும்பும் விழைவு கொண்ட போது , அவர் அதுவரை பேணி வந்த மாநில அரசியல் அதன் சமன்பாடுகளை குலைந்துக் கொண்டு  புதிய கணக்குகளை கோரியது.அந்த சூழலில் 1990 ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் “உட்கட்சி சதியால்” சண்முகம் தோல்வி அடைந்தார்.அது அவரை கசப்பு நிறைந்த மனிதராக மாற்றி இருந்தது.


பின் மாநில்அரசியல் கோரிய புதிய சமண்பாடுகளை அவரால் கொடுக்க முடியவில்லை.பல்வேறு அரசியல் சூழலால் தான் நன்கு காலூன்றி வளர்ந்து விட்டதாக எங்கோ ஒரு புள்ளியில் சண்முகம் உணர்ந்திருக்க வேண்டும்.இனி அரசியலில் முதல்வர் என்கிற நிலையில் பலமிக்கவராக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டிருந்தார்.இனி மாநில அரசியல் தன் கணக்கிற்கு உட்பட்டு நடக்கும் என்கிற புது கோட்பாட்டிற்கு வந்து சேர்ந்தார்.


அரசியல் நரம்பின் முடுக்கில் , ஆழ்ந்த அனுபவமும் ஒன்று சேர்த்து சில அசாத்திய முடிவுகளை எட்ட வைக்கிறது . அதுநாள்வரை அடைகாத்து வந்த ஆசைகள் வெளிப்பட வேண்டிய காலம் கனிந்து விட்டதாக எங்கோ உணர்ந்திருக்க வேண்டும் .அது அவரது அனைத்து தயக்கங்களையும் உடைத்து வெளிவர செய்தது .ஆனால் தேர்தல் தோல்வி அவரை நிலைகுலையச் செய்து விட்டது .


அனுபவ முதிர்வு எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு நன்மை பயப்பதில்லை என்பது ஓர் பேருண்மை . அனுபவ ஞானம் எல்லோருக்கும் கடந்து செல்ல முடியாத பாதையை ஒன்றை அளிக்கிறது .தன்னம்பிக்க தன்னுணர்வை பெருகச் செய்வது , தன்னை  மட்டுமின்றி அதை கடந்து புற உலகைப் பற்றிய நம்பிக்கையை இழக்காதிருப்பதும் அனைத்திலும் அழகியலை நுழைத்துக் கொடுப்பது .வற்றாத அனுபவ ஞானத்தை இருக்கச் செய்வது.


உள்ளுணர்வாலும் செயலூக்கத்தினாலும் அந்த அனுபவ ஞானத்தை இடத்திற்கு தக்கவாறு பொறுத்தி பொருளை மேம்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே அது மேலும் மேலுமென அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருப்பது . மாற்றமடையாத ஏதும் தேங்கி நிற்பது .


புதியன கற்றல் இளமனத்திற்கு உரியது சிறியவர்களுக்கு உகந்தது .யார் உள்ளத்தில் அந்த சிறுவனை சாகாமல் வைத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பேரியற்கை அறிதல் எனும் கதவை திறந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது . அவர்களுக்கு கற்றல் முடிவுறவதில்லை .


ஒவ்வொரு உலகிலும் அதற்கான நியாய தர்மங்களும் கோட்பாடுகளும் அதன் எல்லைகளும் அதற்கான விதிகளும் உள்ளது . அது பொது மக்கள் அறியாதலுக்கானதல்ல . அரசியலில் “குப்புற தள்ளுவது” அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதிகளில் ஒன்று .அதில் ஏமாற்றுவதும் ஏமாற்றப்படுவதும் இயல்பில் உள்ளது .சண்முகம் எங்கோ தனது கற்றலை முடித்துக் கொண்டார் .அதுவரை கற்ற அனுபவம் மட்டும் அவருக்கு துணைநின்றது . ஆனால் மாறிவருகிற உலகில் அது போதாமை கொள்ளும் ஒரு சூழல் நிகழ்கிறது .கையில் உள்ளவற்றை மட்டும் கொண்டு அவற்றை அளந்து விட முடியாது .


எந்த கட்டுபாடும் இல்லாதவராக நாராயணசாமி அதனது அரசியலை முன்னெடுத்தார் . சண்முகம் தன் கணக்கை எங்கு தவறவிட்டார் என்பது அவர் மட்டும் அறிந்தது .


தில்லி இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு பயணப் படுவது முன்னமே சண்முகம் மற்றும் நாராயணசாமிக்கு இடையேயான பனிப்போரை நான் எங்கோ உய்துணர்ந்திருக்க வேண்டும். அது பற்றி சண்முகம் எங்கும் எதிலும் தன் அகக்கணக்கை எளிதில் எவளிக்காட்டாதவர்.நான் எனக்கான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி கொள்ளும் எண்ணத்தை வந்தடைந்தது அதன் பின்னரே.


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

வானப்பிரஸ்தம் “வாழ்கை அகத்தில் நிகழ்வது”

  வானப்பிரஸ்தம்    வாழ்கை அகத்தில் நிகழ்வது”


பதிவு : 001  / 721

“வாழ்கை அகத்தில் நிகழ்வது”

புதுவை

தேதி:- 30 ஆகஸ்ட் 2020






‘வாழ்கை என்பது மானுட அகத்தில் நிகழ்வது’ .எவ்வளவு அசலான விஷயம் , கடந்து சென்ற நாட்கள்  நினைவுகளாக, வர இருக்கின்ற நாட்கள் ஏக்கங்களாக அல்லது அச்சுறுத்துபவையாக நம்மிடம் இருக்கும் போது வாழுதல் எங்கே நிகழ்கிறது அல்லது வாழ்தல் என்பதுதான் என்ன? என்கிற கேள்வியை உருவாக்கிக் கொண்டால் இந்த வரி பெரும் அர்த்முள்ளதாகிறது.


அது அழகியல் கொண்டதாவதற்கு “இந்து ஞான மரபில்” சொல்லப்படும் நான்கு ஆஸ்ரமத்தில் முதல் மூன்றை ஒருகால் தவறவிட்டிருந்தாலும் நான்காவதாக உள்ள ஆஸ்ரமத்தை காலம் ஒவ்வொருவருக்கும் பணி ஓய்வு , உடல் உபாதை அல்லது நோய் என்று அளித்து அதை நோக்கி செலுத்துகிறது. அதை வானப்பரஸ்தமாக தெரிவு செய்வது கொள்ள ஒரு கீதா முகூர்த்தம் நிகழ்கிறது . அதை தவறவிட்டவர்கள் பின் ஒருபோதும் திரும்பி வர இயலாது பிறர் மேல் வன்மம் கொண்டு, கசப்படைந்து , அனைத்தின் மீதும் நம்பிக்கை இழந்து தங்களது கடைசி காலத்தை நரகமாக்கிக் கொள்கிறார்கள் .தன்னைச் சுற்றியுள்ள பிறரையும் அதை நோக்கி தள்ளி விடுகிறார்கள்.


வானப்பிரஸ்தம் . வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தும் , முடியாது போனாலும். மிச்சமுள்ளதை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள முயல்வது .இந்த நவீன யுகத்தில் வனங்களில் வசிப்பது முற்றாக பழக்கமில்லாத , அரசுகளால் அனுமதிக்கப்படாத மற்றும் நமது அனுபவத்தில் இல்லாதது .விரக்த்ரராக சந்நியாசம் செல்வது , மலைக்குகைகளில் வசிப்பது இன்றும் நிகழ்கிறது அது வேறு ஆஸ்ரமம் .குடும்பஸ்தனுக்கு சொல்லப்பட்டதல்ல.


இன்றைய நவீன யுகத்தில் வானப்பிரஸ்தம் என்பது சமூகத்தின் மத்ததியில் வாழ்வது .வனத்தில் வாழ்வதற்கு  இணையான மனநிலையை உருவாக்கி கொள்ள முடிந்தால் வானப்பிரஸ்தம் நாட்டிலும் நிகழக்கூடிதே என யூகிக்கிறேன். வனத்தில் வாழ்வதை காட்டிலும் நகர வாழ்வு மேலதிக சவால்கள் உள்ளடக்கியவையாக இருந்தால் வியப்பில்லை.


நகர வானப்ரஸ்தம் வெளியுலக தொடர்பு தேவையற்ற நிலையை உருவகித்து அதனால் நிகழும் மனப்பதற்றத்தை எதிர் கொள்வது .நேற்றின் தொடர்ச்சியை அறுத்து , நாளைய பற்றிய கவலை இல்லாமலிருப்பது . இன்றில் நிறைந்து இனிது வாழந்து முடிப்பது .இறப்பு ஒன்றை தவிர அதை இடையறுப்பது பிறிதொன்றில்லை .


வனத்தில் வாழ எதிர்கொள்ளும் சவால்களுக்கு இணையாக நகர வானப்பிரஸ்தத்திலும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளுதல் , வனவிலங்குகளிடம் அச்சம்  நோய் பற்றிய எச்சரிக்கை , உணவு பற்றிய எதிர்பார்ப்பு.இறப்பை ஒரு பொருட்டாக எண்ணாத சூழலில் மூன்றுமே அர்த்தமிழந்து போகின்றன . மரணத்தை எதிர்கொள்வதற்கும் தற்கொலை மனநிலைக்கும் உள்ள வேறுபாடுகள் ஆழ்ந்த அகவயமானது. அழுத்தமானது .  அதே நேரத்தில் மன நிறைவுற்று , அந்த வாழ்தலில்  திளைக்காதிருத்தல் மிக நுண்மையானது மகத்தானது . அன்றாடத்தில் உறிஞ்சபடாமல் அதை எதிர்கொள்ள நேர்கிறபோது.


நாட்டில் சமூகத்தில் வாழ்கிற போது “இல்லம்” பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது உணவுதேவைக்கு கைவசமுள்ள ஏற்பாடுகள் உதவலாம் . விலங்குகளின் அச்சுறுத்தல் இல்லை அதற்கினையாக உறவுகளிடமிருந்தும் சமூகத்தினிடமிருந்தும் . வனத்தில் புறவயமாக விலங்குகள் நிகழ்த்துவதை விட சமூகமும் உறவும் அகவயமாக செய்கின்ற அகவய பாதிப்புகள் அதிகம் என்றே நினைக்கிறேன்.அவற்றை எதிர்கொள்ள மரணத்தை பற்றிய அச்சமின்மையை உச்ச வரம்பாக வைத்துக் கொள்ள இயன்றால் இதிலிருந்து வெளி வருவது இயல்வதே என நினைக்கிறேன்.


“மானுடன் தன்னை கடைநிலையில் உள்ளவனாக உருவகிக்கிற போது பேரியற்கையை பெரும் கருணை கொண்டாதாக உணரும் ஒரு தருணம் வாய்க்க வேண்டும் . அத்தருணம் நிகழ்கிற போது அவன் தன்னை தனியனாக எண்ணமுடிவதில்லை .ஆனால் அந்த பேருண்மையை நோக்கிய பயணத்தில் உணரக்கூடியது உண்மைகள் இறுதிநிலையில் மிக எளியவை என்பதை . ஆனால் கீழ்த்தளத்தில் அவ்வுண்மைகள் நடைமுறை வாழ்க்கையாக ஆகும்போது சிதறிப்பரந்து பலநூறு வழிகளாகப் பல்லாயிரம் முடிச்சுகளாக உள்ளன”.


“பரமார்த்திக உண்மைகளை அன்றாட வாழ்க்கைமூலம் மட்டுமே மனிதனால் அறியமுடியும். அறிந்தவற்றைத் தொகுத்துத் தொகுத்து அதை அவன் செறிவாக்கித் தூய்மையாக்கி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது”-ஜெ


மரபான சம்பிரதாய நம்பிக்கையும் ,இன்றைய நவீன ஊலகின் அதற்கான மதிப்பீடுகளையும் மறு உருவாக்கம் கொள்வதனூடாக அதை கடந்து செல்லதும் இயல்வதே.

யாரையும் எதையும் சாராது , அல்லது எதிர்பாராது இருக்கும் மனநிலையை உருவாக்கிக் கொண்டால் அது அதை நம்மில் நிகழ்த்திக் காட்டலாம் .


குடும்ப பொறுப்புகளில் இருந்து முற்றாக விலகி வெளியேறிஅவற்றை நிகழ்த்திக் கட்ட வேண்டியதில்லை. காரணம் பொருப்பில் இருந்து விலகுபவனை இங்கு உதாரணமாக கொள்ள இயலாது . அது சந்நியாசத்திற்கு சில படிகள் கீழ் . அதை முதல் தளத்திலேயே மறுதளிக்கிறேன் . அவன் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை .


அனைத்து உறவுகளுடனும் அது சார்ந்த சமூகத்துடனும் உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ள முடியாத நிலையில் வானப்பிரஸ்தம் சாத்தியமா ? என கேட்டுக் கொண்டால் அது ஒருவித மன ஒழுங்கு மற்றும் கற்பிதம் பொறுத்தது என நினைக்கிறேன்.



சனி, 29 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் * கவனிக்கப்படுபவர் *

 ஶ்ரீ:





பதிவு : 528  / 720 / தேதி 29 ஆகஸ்ட் 2020


* கவனிக்கப்படுபவர் * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 05.






புதுவை காங்கிரஸ் தலைவர் சண்முகத்திடம் எனக்கிருந்தது “போற்றிபாடல்” போன்ற தலைமை வழிபாடா அல்லது அதைக் கடந்து அவரது ஆளுமை மீது எனக்கிருந்த தர்க்க ரீதியான மரியாதையா என பல முறை  எனக்கு நானே கேட்டுக் கொண்டதுண்டு . அவருக்கு எதிரான மனநிலை கொண்ட அமைப்புதான் என்னை அரசியலில் வளர்த்தெடுத்தது . நானும் அவருக்கு எதிரான மனநிலையில் தான் இருந்தேன்  முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கண்ணனும், பாலனும் .


எல்லாவிடத்திலும் உள்ள குரு சிஷ்ய பரம்பரை போல இங்கும் ஒரு நீண்ட நிரை உண்டு  . பாலன் கண்ணனின் அரசியல் பாணியை ஒட்டி தன் அரசியலை கொண்டருந்தார் . ஆனால் அது கண்ணனின் அரசியலை நகல் செய்தது .நிஜமான தலைமை பண்பை பாலன் பெற்றிருக்கவில்லை .வெகு விரைவில் பாலனின் அரசியல் வீழ்ச்சி கண்டது .கண்ணன் தனது அரசியல் நிலைபாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதன் வழியாக மற்றும் அதி நம்பிக்கையால் அதனது அரசியல் முற்றழிவை சந்தித்தார் .


இவர்களுக்கு மத்தியில் சண்முகம் கவனிக்கத் தக்கவராக இருந்தார் என்பது உண்மை .அவரைப் பற்றிய நேர் மற்றும் எதிர்மறை செய்திகள் அறிந்திருந்தேன் .ஒரு புள்ளியில் அவை ஒன்றை ஒன்று சமன் செய்வதாக இருந்தது . இரண்டும் உண்மை . இரண்டு வகைகளில் .மிக நுட்பமான அரசியல் களத்தையும் அதில் காய்கள் நகர்த்தப் படுவதையும் அதில் சண்முகத்தின் நிலைபாடுகளை வெகு அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை ஊழ் எனக்கு அளித்திருந்தது என்று நினைக்கிறேன்.அரசியல் சரி நிலைகளைக் கடந்து ஒரு மெல்லிய “கோட்பாடு அரசியல்” அவரிடம் இருந்தது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அரிதானது . மற்றைய அரசியலாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது அதுவே என நினைக்கிறேன்.


நேரு , இந்திரா , ராஜீவ் காந்தி என சண்முகம் அகில இந்திய கட்சி அரசியலில் தலைமைக்கு உகந்தவராகவும் அதனால்  பிற எவரிடமும் உதாசீனராக இருந்தவர் . எளிதில் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவராக , தில்லியின் நீக்குபோக்கான அரசியலில் வளைந்து கொடுக்காமல் அதில் இருந்து வேறுபடுத்தி  தன்னை வளர்த்துக் கொண்டதால் , அகில இந்திய காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஏராளமான  எதிரிகள் உருவாகினர் .தில்லி அரசியலில் பிழைத்திருப்பது ஒரு கலை .எதிலும் எவரும் உறுதியான வெகுஜன அரசியலை நிகழ்த முடியாது .எப்பேர்பட்ட தலைவர்களும் சூழ்நிலைக்கு ஏற்றபடியே தங்களை வைத்திருக்க வேண்டும் என்பது அரசியல் உண்மை .


தங்களின் அடையாளமாக சிலவற்றை உருவாக்கி வைத்திருந்தவர்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் அகில இந்திய அரசியலில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது .மிக சமீபத்திய உதாரணம் . வாழப்பாடு ராம மூர்த்தியும் , கருப்பையா மூப்னாரும் .தலைமை பொருப்பில் உள்ளவர்களும் வெகுஜன அரசியலை மனத்தில் கொண்டே தங்களின் அரசியலை வரையறை செய்கிறார்கள் . அந்த நிலைப்பாடுகள் சில சமயம் வெற்றிகளை கொடுத்திருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் காலை இடறிவிட்டிருக்கின்றன . யாராளும் புரிந்து கொள்ள முடியாதது அரசியல் குறித்து சமூகங்களில் நிகழும் முரணியக்க முடிவுகள் .


சீத்தாராம் கேசரி மற்றும் நரசிம்மராவ் அகில இந்திய தலைவராக நீடித்த போதும் அவர் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தார் அரசியலை உற்று நோக்கினால் புரிந்து கொள்ள முடியும் அரசியலில் ஏற்றமும் இறக்கமும் மிக இயற்கையானது , அதில் பிழைத்திருப்பது என்பது பிறிதொன்றை சொல்ல வருவது 


தமிழக காங்கிரஸ் அரசியலை பாரத்தாலே இதை விளங்கிக் கொள்ளலாம் . தமிழக மாநிலத் தலைமை கடந்த நாற்பது ஆண்டுகளில் பலமுறை மாற்றப்பட்ட போதும் சண்முகம் தலைவராகவே நீடித்தார் .அதற்கு தமிழக கூட்டணி அரசியலை காரணமாக சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள் . தமிழக கூட்டணி பொருத்து நிகழ்வதே புதுவைக்கும் சேர்த்தே நிகழ்ந்திருக்கிறது .


சண்முகம் புதுவை அரசியலில் தவிற்க முடியாத சக்தியாக தன்னை நிலைகொள்ள செய்ததற்கு முதன்மைக் காரணம் புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பல காலம் நீடித்தது என்பதும் . அதற்கு பின்னால் சண்முகம் இருந்தார் என்பதும் புதுவையில் காங்கிரஸ் ஒரு பலமிக்க அரசியல் கட்சியாக இருந்தது போன்றவை வெளிப்படையான காரணம் மட்டுமே .ஆனால் அதற்கு பின்னால் சண்முகத்தின் நிலைபாடு முக்கியமான காரணமாக இருந்தது .


பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவரல்ல சண்முகம் , ஆனால் பல கட்சி தலைமைகளுடன் மற்றும் பிற அமைப்புகளை இணைக்கும் ஒரு புள்ளியாக தன்னை நிலைநிறுத்துக் கொண்டது அவரின் அரசியல் தொடர் வெற்றிக்கு அடிப்படை காரணம் என நினைக்கிறேன்.


சண்முகம் பற்றி பிற அரசியல் தலைவர்களுக்கு ஒரு நிலையான கருத்துரு இருந்தது .எளிதில் வளைந்து கொடுக்காதவராக மென்மையான அதே சமயம் அரசியல் அழுத்தம் தாங்குபவராக அவர் எப்போதும் இருந்தார். இணையும் போது பிரியவும் , பிரியும் போது மீளவும் இணையும் வாய்பபை மிகத் தெளிவாக உணர்ந்தவராக இருந்தார்.தனது நிலைப்பாட்டை இதை ஒட்டி உருவாக்கிக் கொண்டார். இது ஒரு முதன்மை அரசியல் கோட்பாடு என நினைக்கிறேன்.அதே சமயம் தனக்கென ஒரு முகத்தை உருவாக்கிக் கொண்டது வியப்பானது


“நாளை என்ன கிழமை”? என்றால் தில்லியை கேட்டுச் சொல்லும் காங்கிரஸ் அரசியலில் அவர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியது மிகவும் ஆச்சர்யமான ஒன்று .அவர் எப்போதம் தயக்கம் மிகுந்தவராகவே இருந்தார் . அதீத கூச்சம் சுபாவம் உள்ளவர் என்பது மிக நெருக்கமாக இருந்தவர்கள் மட்டுமே அறிந்தது .


யாரையும் எந்த சூழலில்லும் நம்பாதராவே அவர் அதனது இறுதிகாலம் வரை இருந்தார் .எவரை பற்றியும் சந்தேகம் கொண்டவராக இருந்தார் . அரசியலில் யாரும் எதையும் சந்தர்ப்ப சூழலில் செய்யக் கூடியவர்களே என்பதால் அவரது சந்தேகங்கள் பெருமாலும் உண்மையாகிப் போயின.


புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...