https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 3 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 424 * இணைப்பதின் முரண் *

ஶ்ரீ:



பதிவு : 424 / 589 / தேதி 03 டிசம்பர் 2018

* இணைப்பதின் முரண் * 


“ எழுச்சியின் விலை ” - 25
முரண்களின் தொகை -01 .





ராஜ்ய சபை தேர்தல் வெற்றிக்காக அரசியல் சரிநிலை என்கிற ஒன்றால்  , பாமக வுடன் இணக்கமாக போக விழைந்த நாராயணசாமியின் போக்கு உட்கட்சியில் விமர்சிக்கப்பட்டது . அவரவர் தங்களின் பிற கட்சி தொடர்புகளுடன் உரையாடுகையில் அதிருப்தியில் உதட்டை பிதுக்கினார்கள். தனது வெற்றிக்கு நாராயணசாமி  பகிரங்க மன்னிப்புபோல ஒன்று இந்த  சமன்பாடுகளை குலைந்தது . அதன் பின் பாமாக வினால் மொக்கையான காரணம் ஒன்று சொல்லப்பட்டு அவர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் அந்த நகர்வின் எதிர்வினையாக அதிமுக முற்றாக விலகி ,தங்கள் முடிவை தேர்தல் நடைபெறும் இறுதி நிமிடம் வரை  பூடகமாக்கினார்கள் .

புதுவையில் சண்முகம் இருக்க , ஒரு புதிய அத்தியாயம் எழுந்து இருப்பதையும் , கட்சியின் தலைமை அதில் தனித்து விடடப்பட்டு விட்டது என்கிற புரிதல் அப்போது எங்களை போன்றவர்களுக்கு இல்லை. இருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிவதும் அதில் எதிர்காலம் எழுந்து வருவதாக கற்பனையுமான காலமாக அது இருந்தது என நினைக்கையில் இப்போது வேடிக்கையாக தெரிகிறது.

பயிற்சி முகாமின் முன்வரைவு பற்றிய விவாத கூடுகையில் அனைவரையும் அவரவர் இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு நான்  என் அனுக்கர்களில் சிலரை  மட்டும் என்னுடன் இருத்திக் கொண்டு அவரை வரவேற்கும் பொருட்டு வெளி வாயிலில் காத்திருந்தேன். சிறிது தாமதமாக வண்டி வந்து சேர்ந்தது . முறைமைகள் நிகழ என்னுடன் நின்றிருந்தவர்கள் நாராயணசாமியை கூடுகை நிகழ இருக்கும் அறைக்கு கொண்டு சென்றனர் . நான் மெல்ல தயங்கி பின்னடைந்தேன்.

கோபாலிடம் “ஏன் இவ்வளவு தாமதம்” என்றதும் , கடைசி நிமிடத்தில் அவரை சிலர் சந்திக்க வந்ததால் தாமதம் என்றான் . “கூடுகை பற்றி நாராயணசாமி ஏதாவது சொன்னாரா? என்றதற்கு “ஏன் கூட்டத்தை ஹோட்டல்  சற்குருவின் நடத்திக்கிறீர்கள் , அங்கு என்ன கூட்டம் நிற்க முடியும், சிறு கூட்டம் வைத்து தனது செல்வாக்கை கட்ட நினைக்கிறாரா? என்கிற ஏளனம் தொனிக்க அவர் கேட்டதை என்னிடம் மிகவும் பதட்டத்துடன் சொன்னான் . 

அவனுக்கு நான் சென்று அவரை அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் தன்னை அனுப்பியது தவறாகப் பட்டது. தனது அதிருப்தியைத்தான்  அவர்  அப்படி சொன்னார் என்றான் . இன்று நிலவும் சூழலும் அடுத்தடுத்து நிகழ இருப்பதும் , அவரை அப்படி எண்ண வைத்திருக்கின்றன என்பதை அவனுக்கு விளக்க இயலாது. கூடுகை நிகழும் கூடத்திறகுள் நுழையும்வரை இது எனது மனதில் ஓடியபடி இருந்தது.  கூடுகிற கூட்டத்தின்  எண்ணிக்கை ஒருவரின் செல்வாக்கையும்  , ஆளுமையையும்  முடிவு செய்பவை என எப்படி அர்த்தப் படுத்திக் கொண்டார்? என வியந்தேன் . அவர் மனதில் எனது ஸ்தானம் என்னவாக இருக்கிறது என்றும், பாண்டியனின் சொல் அவரை எப்படி வெளிப்படையாக பாதிக்கிறது என்பதையும் , அவரது முன் முடிவுகள் எங்கிருந்து கிளைகின்றன எனபது புரிந்ததும் சற்று வருத்தமாக இருந்தது . 

நான் நேரில் சென்று அழைத்து வராததால்தான் அவர் இப்படி சொன்னதாக கோபாலின் எண்ணத்தை என்னால் பிறிதெப்போதும் மாற்ற இயலவில்லை , அவர் சொன்ன முக்கிய மனநிலை இவன் சொல்லும் அந்த தளத்திலிருந்து எழாது . நான் அவனுக்கு புரியவைக்க முயலாமல். கூட்டத்தை நிகழ்த்த வேகமாக அந்த கூட்டத்திற்குள் நுழைந்தேன் . அந்த கூடுகையிலேயே கோபால் சொன்ன விஷயமும் அதை சார்ந்து எனது எண்ணத்தையும் பதிவு செய்தேன் . ஆனால் அது அரசியல் நுட்பமான முறைமைகள் உணர்வுகளால் ஆனதாக இருந்தது. அது அவருக்கு புரியும் என நினைத்தேன் . ஆனால் அவர் அதைக்கடந்து வேறு எங்கோ இருந்தார் .

இந்த ஒரு இடத்தில் நின்று நான் சண்முகம் நாராயணசாமி இருவரையும் அவர்களது செயல்பாடுகளின் வழியாக புரிந்து கொள்ள முயலும் அதே சமயம் எனக்கு வேறொரு கோணத்தில் இந்த சிக்கலை வைத்து பார்க்காமல் அவற்றை அவதானிப்பது இயலாது என நினைக்கிறேன் . அரசியலின் பாதை செயல்களால் மட்டும் ஆனவைகள் அல்ல , அதை கடந்த வேறொரு பரிமாணமும் அதற்கு இருக்கிறது . தலைமை தனது எண்ணத்தை தன்னை சுற்றி உள்ள அமைப்பிடம் உரையாடுகைலயில் , நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் பல விஷயங்களில் இருந்து எழுபவை . அவை புரிதல்களால் ஆனவை .

ஒரு விஷயத்தை நம் பார்வையும் , புரிதலும் ஆழ்மனப் பதிவுகளும் முயங்கி ஒரு செயலாக உருவெடுப்பவை . அதிலிருந்து செயல் வடிவம் பெருவது இன்னும் சிக்கலானது , மனம் புத்தி சிந்தனை என மூன்றாக பிரியும் ஒன்று செயல் வடிவம் பெறும்போது காலத்துடன் முயங்கியே தன் வடிவம் பெறுகிறது , அது நிகழும் வரை அதை செய்பவர்  அதை செய்தவராக எப்போதும் இருந்து விடுவதில்லை . காரணம் நாம் என்ன சொன்னோமோ அது நாம் சொன்னதல்ல அதை பிறர் எப்படி புரிந்துகொள்கிறாரோ அதுவே நாம் சொன்னது . மனிதன் இதை ஒப்புக்கொண்டாலும் இல்லாது போனாலும்  அது விண்ணகத்து தெய்வங்களின் விதி.

அந்தக் கூடுகை மூலம் நான் ஒரு விஷயத்தை சொல்ல விழைகிறேன் என்பது உண்மை ஆனால் அவர் புரிந்து கொண்டதல்ல நான் சொல்ல விழைந்தது . முதலில் தலைவரை வைத்து அதை நிகழ்த்தும் எண்ணமெழுந்த போது அதன் அடிப்படை தொகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க தலைவர் ஒரு தடையாக இருப்பார் என்கிற என் அச்சத்தை விலக்கிக் கொள்ள அதை ஒட்டிய கூடுகையாக அது ஒருங்கி இருக்கும் . ஆனால் நாராயணசாமியை வைத்து அதை நிகழ்த்த சொன்னபோது நான் அவருக்கு சொல்ல விழைந்தது பிறிதொன்று.

ஒரு பூரணமான அமைப்பு உருவாக்கி வருகிறது அதை கைலெடுங்கள் . அதை செய்பவருக்கு  அது கட்டுப்பட்டு இயங்கும் என்பதாக இருந்தது . அவரை பற்றிய எனது அவதானிப்பு மீண்டும்  பிறழ்ந்து , அவர் எப்போதும் அமைப்புகளின் மனிதரல்ல . இப்போது மட்டுமல்ல எப்போதும் அவர் பிறிதொரு தளத்தில் இயங்குபவர் , அங்கு அவர் மட்டுமே நிற்க இடம் எஞ்சி இருப்பது என்கிற ஆழ்ப்புரிதலை எனக்கு கொடுத்தது .

சனி, 1 டிசம்பர், 2018

அடையாளமாதல் - 423 *சமன்பாடு *

ஶ்ரீ:



பதிவு : 423 / 588 / தேதி 30 நவம்பர்    2018

*சமன்பாடு * 


“ எழுச்சியின் விலை ” - 24
முரண்களின் தொகை -01 .



1996 முதல் 1999 வரை மத்திய அரசு குழப்பம் மிகுந்ததாக இருந்தது . அறுதி பெரும்பான்மை கிடைக்காததால் அடுத்தடுத்து தேர்தல்களை சந்தித்து. அரசில் அங்கம் வகித்த ஜெயலிலதா , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடான ஒரு “டீ பார்ட்டி” அப்போது மிகப் பிரசித்தம் , அதை ஒட்டி வாஜ்பாய் அரசாங்கம் கவிழ்ந்து போனது. அதைத் தொடர்ந்து காங்கிரஸுடன் இணக்கமாகியிருக்க வேண்டியவர் தேசிய அரசியல் சதுரங்கத்தில் சட்டென காங்கிரஸிடமிருந்து விலகி , சோனியா காந்தி மீது காழ்பபை கொட்டத் துவங்கினார் . இந்த சூழலில் புதுவை ராஜ்யசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது  . தில்லியுடன் முரண்பட்டாலும் புதுவை அதிமுக விற்கு அதன் தலைமை பிரத்யேகமாக ஏதும் சொல்லாத நிலையில் அனைத்து உறவுகளும் சாதக பாதகமின்றி சம தூரத்தில் நிலைகொண்டன. சட்டமன்ற தேர்தல் காலம் வரும்போது அனைத்தும் முடிவிற்கு வரும் என்கிற நம்பிக்கை இருத்தரப்பிற்குமே இருந்தது.

திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தமிழகத்திலிருந்து புதுவை அரசியலில்  அனைத்து அம்சத்திலும் மாறுபாடு இருப்பதை காண இயலும் . இரண்டுமே கூட்டணி அரசாக புதுவையை ஆண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் அல்லாத பிறிதொரு கட்சி தன் ஆட்சிகாலம் முழுவதுமாக ஆண்டதில்லை . சில அரசாங்கங்கள் நாட்கணக்கில் மட்டும் இருந்ததுண்டு. இதற்கு பின்புலத்தில் சண்முகத்தை சொல்வார்கள் . அது உண்மை .இருப்பினும் அவரைத் தவிர்த்த பிற காரணிகளும் இருந்தால் அல்லது அவரது முயற்ச்சிகள் வென்றிருக்க முடியாது.

இந்த இடத்தில் நான் வினோதமாக உணர்ந்த ஒன்று  . காங்கிரஸ் பலமுறை தனித்தும் , சிலமுறை கூட்டணி அரசுகளை கொடுத்திருந்தலும் , தலமையை விட்டுக்கொடுத்து கூட்டணி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தது திமுக வுடன் 1982 ல் . கட்சிக்குள் பெரிய மாற்றத்தை உருவாக்கியது அந்த வருடம் என யாரும் நினைத்திருக்கவில்லை. அதை தவிர்த்து கூட்டணி அரசாங்கம் என்பது பிற கட்சிகள் வெளியிலிருந்து தரும் ஆதரவோடு மட்டுமே. 

ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுகவுடனான கூட்டணி மிக இயல்பாக இருந்திருக்கிறது . அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சிகளின் இணைவை நுண்மையாக புரிந்து கொள்ள இயலும் , தமிழகம் மற்றும் புதுவையில் திமுகவுடன் கூட்டணி எப்போதும் கசப்பின் அடிப்படையிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அனைத்தையும் ஒருங்கிணைத்தது சண்முகம் என்கிற தனி ஆளுமை என இப்போது நினைக்கிறேன். காரணம் அதன் பிறகு ரங்கசாமி மற்றும் நாராயணசாமி காலத்தில் கூட்டணி கட்சிகள் ஆளும் அரசை மிஞ்சியே செயல்பட்டன. 

சண்முகமில்லாத அரசுகள் மாறி மாறி ஆட்சியில் அமர்வது 1999 லேயே துவாங்கிவிட்டது என்றாலும் அதற்கான முழு விலையை அவர் 2001ல் கொடுத்தார் . அதன்பின் அவரது ஆளுமையின் வீழ்ச்சிகளைதான் பல புள்ளிகளில் அவரது இறுதி காலம்வரைஎதிர்கொண்டார் . நான் இதை அவரின் வயோதிகம் அல்லது அரசியல் பிறழ்வுகள் என்கிற இரு கருத்துகளின் மூலம் பார்க்க விழைகிறேன். முதலில் எனக்கு நினைவுக்கு வருவது அவரது பிறழ்வுகளே , வயோதிகத்தினால் அது சமாளிக்க முடியாத இடத்திற்கு சென்று சேர்ந்தது.

இம்முறை ராஜ்யசபை தேர்தல் நாழாயணசாமியின் முழுத்திட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி மூத்த உறுப்பினர்கள் , தங்களை இருவருக்கும் இடையில் வைத்துக்கொளண்டார்கள் . பல வருட கட்டுப்பாடு , நிரபந்தம் என அனைத்தும் தளரத்துவங்கி இருந்தது. அதிமுக வின் வாக்கு ராஜ்யசபை தேர்தலுக்கு மிக முக்கியமான , நாராயணசாமி , தலைவருக்கு  ஜெயலலிதாவிடமுள்ள அவரின் தனிப்பட்ட செல்வாக்கை பயண்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க . சண்முகம் மௌனமானார்..

மாநில அரசியலில் கட்சிகளின் செயலபாடுகள் பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் . 
-அவை மிக நுண்ணியவை , மாநிலத் தேர்தலை மட்டுமே அது மையமாக கொண்டிருக்கும் , அவரவர்களுக்கு சில ஏற்புகளும் , ஏற்கவியலாமைகளும் உள்ளடங்கியதே அதன் விசை , அந்த காலகட்டத்தில் பாமக புதுவையில் தனி கவனம் செலுத்திய நேரம் , புதுவையில் தனித்து ஆட்சி அமைப்பது குறித்த கனவில் அவர்கள் இருந்தார்கள் , 30 சட்டமன்ற தொகுதி எனபது மிக சிறிய எண்ணிக்கையாக அவர்களுக்கு தோன்றி இருக்கலாம் , சிறிவைகளின் சிக்கல் தனித்துவமானவை என்பதை மிகத் தாமதமாக அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது வேறு விஷயம் . 

பாமக வின்  தலைவர் ராமதாஸ் அப்போது ஒவ்வொரு தொகுதியாக முறைவைத்து கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் . தமிழகத்தின் பலம் பெற்ற அமைப்பின் முதல் நிலைத் தலைவர் புதுவை அரசியலில் காட்டிய தீவிரம் அவர் புதுவை அரசியலை அறிந்திருக்கவில்லை என்றே குறிப்புணர்த்தியது. அவர் புதுவை போன்ற சிறிய மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியாக நுழைந்தது மாநில கட்சிகளின் சமன்பாட்டை குலைத்தார் . ஒவ்வொரு தொகுதிக்கும் தனி கவனம் கொடுத்தபோது பல உள்ளூர் சிக்கல் எழுந்து அதை அவர்கள் கையாண்ட முறை அனைவரின் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் பாமாக விற்கு எதிரான மனநிலை அனைத்து  மாநில அமைப்புகளுக்குள் வெளித் தெரியாத ஒரு உடன்பாட்டை உருவாக்கி இருந்தது.  தனது வெற்றிக்கு நாராயணசாமி கலைக்க நினைத்தது இந்த  சமன்பாடுகளைதான்.

நாராயணசாமி பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்துகொள்ள முயன்ற அரசியல் சமன்பாடு என்னைப் போன்ற களப் பணியாளர்களின்  மனம் கசக்க செய்துவிட்டது , பாமக உடன் எங்களுக்கு எந்த தனிப்பட்ட விரோதமில்லாதபோதிலும் , அவர்களின் ஜாதீய மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை நாங்கள்  வெறுத்தோம் . தனது வெற்றியை முன்னிறுத்த நாராயணசாமி முயன்ற அந்த சமன்பாடு புதுவையில் சண்முகம் இருக்க , ஒரு புதிய அத்தியாயம் தொடங்க இருப்பதையும் , கட்சியின் தலைமை அதில் கையறு நிலையில் தனித்து விடப்பட்டு விட்டது என்கிற புரிதல் அப்போது எங்களை போன்றவர்களுக்கு இல்லை

புதிய பதிவுகள்

மணிவிழா 93 * யானையின் வருகை*

  ஶ்ரீ : மணிவிழா - 93 18-09-2026 * யானையின் வருகை * திருக்கண்ணபுரம் எனக்கு மிக அனுக்கமான ஒரு திருத்தளம் . எனது தந்தைய...