- 12 ஆண்டு வனவாசம் குறித்து சொல்கிறது.
- 12 கட்டங்களில் 9 கிரஹ சஞ்சாரங்களை அதன் பலன்கை நுட்பமாக சொல்லுகிறது
- மனித வாழ்வியலை தீர்மானிக்கும் 12 வகையான நிலை அல்லது நிலைப்பாட்டை குறிக்கிறது (உடல், தனம், தைரியம், சுகம், புத்திரர், சத்ரு, களத்திரம், ஆயுள், பாக்கியம், கர்மம், லாபம், விரயம்).
- நாவலின் 12 மாதங்களில் தருமன் எதையெல்லாம் இழக்கிறார் என்பதை கவனித்தால் அது ஜாதகக் கட்டத்தின் வரிசையோடு ஒத்துப் போகும்.
- கால புருஷ தத்துவம். பாரத பண்பாட்டில் காலம் என்பது ஒரு உருவமாக பார்கப்பட்டு அதன் உறுப்புகள் 12 ராசி என வரையறை செய்கிறது
- பன்னிரு படைக்களம் என்பதில் படை என்பது ஆயுதமட்டுமில்லாமல் “தளம்” என்றும் எடுக்கலாம்
- 10.12 மாதம் முடியும் போது 12 ஆம் வீடு நிர்வாணம்,மோட்சம் மற்றும் வீடு என்பதின் கூறியீடும்.
- 11.அதற்கு ஏற்ப பகடை எண்களில் அதில் பெருக்கும் மறைக்கும் தன்மையை குறிக்கிறது
- சித்திரை - ஆசையின் தொடக்கம்…..எட்டி மர தொடர்பு நாவல் சித்திரையில் தொடங்குகிறது. சித்திரை வசந்தத்தின் முடிவு, கோடையின் தொடக்கம். புதிய தளிர் விடுதல் போல, 'இந்திரப்பிரஸ்தம்' எனும் பேரரசை உருவாக்கிய கர்வம் மெல்ல எழுந்து . அந்த வெப்பம்தான் அவரை சூதாட்டக் களத்திற்கு இழுத்துச் செல்கிறது.
- ஆடி - காற்றும் அலைக்கழிப்பும்……….சூதாட்டம் ஆடி என்பது நிலை கொள்ளாத காற்றின் மாதம். தருமனின் மனநிலை அந்தப் பெருங்காற்றைப் போல அலைக்கழிக்கப்படுகிறது. பதற்றமும், எதைக் கொடுத்தாவது மீட்க வேண்டும் என்ற வெறியும் ஆடிக்காற்றின் வேகம் கொண்டது.
- கார்த்திகை - தீபமும் இருளும்… அரண்மனையில் விளக்குகள் எரிந்தாலும், பாண்டவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கத் தொடங்குகிறது.
- மார்கழி - உறைபனியும் மரணமும்….திரௌபதி சபைக்கு இழுத்து வரப்படும் அத்தியாயங்கள் மார்கழியின் குளிரைப் போன்றது. அங்கே கூடியிருக்கும் பீஷ்மர், துரோணர் போன்ற பெரியவர்களின் அறம் உறைந்து போயிருக்கிறது.
- பங்குனி - ஒரு யுக முடிவு………நாவலின் இறுதியில் பங்குனி வரும்போது, பாண்டவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிறார்கள். பங்குனி என்பது இலையுதிர் காலம்.
- பாண்டவர்களின் அரச வாழ்வு உதிர்ந்து அவர்கள் எளியவர்களாகக் காட்டிற்குப் புறப்படுகிறார்கள். 12 கட்டங்கள்: பிரபஞ்சத்தின் ஆடுகளம்…ஜோதிடத்தில் ராசி சக்கரம் என்பது 12 கட்டங்களைக் கொண்டது (மேஷம் முதல் மீனம் வரை). மனிதனின் முழு வாழ்க்கையும், அவனது விதியும் இந்த 12 கட்டங்களுக்குள் அடக்கம் என்பது நம்பிக்கை.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசிக்கும் காலத்தை குறிக்கிறது. சூரிய புத்ரன் கர்ணன் அனைத்திலும் பாண்டவர்களுக்கு எதிர் நிற்கிறான். இந்திரபிரஸ்தத்தில் கர்ணனின் தேவையற்ற நுழைவுடன் துவங்குகிறது. லக்கினமும் வீழ்ச்சியும்…….ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டமும் (பாவங்கள்) வாழ்வின் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் (உடல், தனம், தைரியம், சுகம், புத்திரர், சத்ரு, களத்திரம், ஆயுள், பாக்கியம், கர்மம், லாபம், விரயம்). நாவலின் 12 மாதங்களில் தருமன் எதையெல்லாம் இழக்கிறார் என்பதை கவனித்தால் அது ஜாதகக் கட்டத்தின் வரிசையோடு ஒத்துப் போகும்.ஆரம்பத்தில் நாட்டை (தனம்/சுகம்) இழக்கிறார், பின் தம்பிகளை (தைரியம்/சகோதரம்) இழக்கிறார், இறுதியில் திரௌபதியை (களத்திரம்) இழந்து, அனைத்தையும் விரயம் (12-ம் வீடு) செய்கிறார்.
பகடையும் கோள்களும்….சூதாட்டத்தில் உருளும் பகடைக்காய்கள் கோள்களின் சஞ்சாரத்திற்கு இணையாகச் சொல்லப்படுகின்றன.ஜோதிடத்தில் சனி (Saturn) காலத்தைக் குறிப்பவர். சகுனி இந்த நாவலில் சனியின் அம்சமாகவே அவனை அறிந்து கொள்ளலாம்.
பகடையின் எண்கள் (1 முதல் 12 வரை விழும் வாய்ப்புகள்) ஜாதகக் கட்டத்தின் 12 வீடுகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறுகின்றன.12 மாதங்கள் முடியும்போது, பாண்டவர்களின் பழைய 'அகந்தை' அழிந்து, அவர்கள் நிர்வாணமான உண்மையை (வனவாசம் எனும் தவம்) சந்திக்கிறார்கள். இது ஜாதகத்தில் 12-வது வீடான 'மோட்சம்' அல்லது 'விடுதலை' என்பதைக் குறிக்கும் குறியீடு.
எண்களின் விளையாட்டு
பகடையின் ஆட்டக் காயின் தொல் அமைப்பு இரண்டு பித்தலை குச்சிக் காய்கள் நான்கு பக்கங்களுடன் 1,2,4,6 என்றும் பிறிதொன்றில்0,2,4,6 என்று இருப்பது . அதில் 9, மற்றும் 11 திட்டமிட்டு தவிர்த்திருக்க வேண்டும் . ஏன்?
நவீன அறுபட்டை சதுரக் காய்கள் பின்னர் வந்திருக்கலாம்.
“3x3 = 9” என்பது வாழ்வியலை முழுமையாகக் குறிப்பதாக கருதப்படுகிறது , அது ஒரு கணிதச் சின்னம் மட்டுமல்ல; அதில் உள்ள வடிவமைப்புமற்றும் வாழ்க்கை தத்துவம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
3x3 = 9 என்பது பரிணாம வளர்ச்சி (Evolution) அல்லது பரிமாண விரிவு (Dimensional Expansion):
ஒரு மூன்று அடுக்குகள் (அளவுகள்) மற்றொரு மூன்று அடுக்குகளுடன் எதிரெதிராக அல்லது கூடிப் பின்னிப் பிணைந்து, ஒரு பரிணாமப்படியிலே வளர்கிறது.
எண் 9 என்பது எந்த ஒரு எண்ணையும் சேர்த்தாலும் எப்போதும் 9-இல் முடிவடைகிறது (உதா: 9+9 = 18 → 1+8 = 9).
இது வாழ்வின் ஒரு சுற்றுப் பயணம் முடிவதைக் குறிக்கிறது.
9 மாதங்கள் = மனித குருதித் தாயின் கர்ப்பகாலம் → வாழ்வின் தோற்றத்தையும் சுட்டும்.
வாழ்வியல் ரீதியாக “3x3” என்பது சமநிலையைச் சுட்டும்:
11 – ஒற்றை இழை அமையா நிலை.
11 என்பது ஒற்றையெண், சமநிலையில்லா எண்ணிக்கை. அது இரட்டை மையங்கள் கொண்ட பகடையமைப்பில் (பதிவுகள், பாதைகள்)
9 என்பது முழுமையையும்
11 என்பது பிளவு பட்டதையும் சொல்லும்
இது கண்ணன் + ஜராசந்தனை குறிப்பதாக பார்த்தால் இன்னும் சுவாராஸ்யமான்அணுகலை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக