https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 21 ஜூன், 2019

வெண்ஜூமுரசு புதுவை ஜூன் மாதக் கூடுகை 27ஶ்ரீ:


பதிவு : 620 / தேதி 21 ஜூன்  2019


வெண்முரசு நூல் மூன்று வண்ணக்கடல்’   | பகுதி ஏழு : கலிங்கபுரி
37 இந்திரவிழா மற்றும் ராமாயணம் பற்றிய சிறு விவரணம் . வசுவின் வானத்தில் ஊர்ந்த மேகங்களெல்லாம் நீர்கொண்டவையாக இருந்தனவே ஒழிய சூல் கொண்டவையாக இருக்கவில்லை”.

38 
இளைய அரசி சம்படையை அணங்கு கொண்டிருப்பதாகவும்”.

குந்தியின் ஆற்றாமையும் , தனக்கான இடத்தை தன் மைந்தர்களின் வழியாக அடைய இயலும் என்கிற நுண்மையை புரிந்து கொள்ளும் சந்தர்பம் ..

மொழி குறித்து என்ன பேசினாலும் அது ஒரு வகை மொழி 

இந்திர விழா குறித்து வரிவான வர்ணனை .

39 அனைவரிடமும் தர்கிக்கும் அர்ஜுணனை சிலேகித்தும் , அறிவுறுத்தியும் செல்கிறார்கள் . அவன் தனது குருவிற்கு காத்திருப்பதை சொல்லுகிறது.

40 பிரமாண்டமான அடுமனையின் வர்ணனை , ஜாட்ராக்னியின் ஆற்றலை அன்னமாக , அன்னத்தை ஆற்றலாக மாற்றுவதை பற்றி , அன்னம் பிரம்மம் என்கிற இந்து ஞானமரபை விவரிக்கிறது.

41 பெண்கள் அனங்கு கொள்வதை விவரிக்கும் பகுதி , சம்படையை குறித்து பேசுகிறது.

பெண்களைப்பிடிக்கும் அணங்குகள் அவர்களை அமரச்செய்கின்றன. ஆண்களைப்பிடிப்பவை அவர்களை அலையச்செய்கின்றன. இரண்டுமே சிதைநெருப்பின் புகை வழியாக மட்டுமே வெளியேறுகின்றன என்கிறார்கள்” தருமன் சொன்னான்.

முதுமையில் இழக்கும் உயரம் பற்றிய கூற்று.....

மிருகங்கள் , மனிதர்களுக்கு இடையில் உள்ள நெகிழ்வான உறவை சொல்கிறது 

துரோணரின் அஸ்தினாபுர வருகை , அர்ஜுணனை கண்டடைதல் . யானைகளில் மூத்ததும் நிறை வாழ்வினை அடைந்ததுமான காலகீர்த்தி இறந்து கொண்டிருக்கிறது 

துரோணர் மலர்ந்த முகத்துடன் என்னை பிராமணன் என எப்படி அறிந்தாய்?” என்றார். உங்கள் உதடுகளிலுள்ள காயத்ரியால்” என்று அர்ஜுனன் சொன்னான். அவரது உடலே கிளர்ந்ததெழுந்தது. வா, நீ என் முதல் மாணவன். நான் கற்றதெல்லாம் உனக்கு அளிப்பதற்காகத்தான் என்று இக்கணம் அறிகிறேன். என் வாழ்வின் நிறைவு உன்னால்தான்” என்று கூவியபடி தன் கைகளை விரித்தார். அவரது சிறிய மார்பு விம்மித்தணிந்தது. கைகள் நடுங்கின. அர்ஜுனன் அவர் அருகே செல்ல அவனை அள்ளி தன் மார்புடன் இறுக அணைத்துக்கொண்டார்..

42 தனுர் வேத குருப்பரம்பரையை பேசுகிறது , தனுர் வேதத்திற்கும் , வில்ஙித்தைக்குமான வித்தியாசத்தை சொல்லுகிறது .

வில் என்பது ஒரு சொல் என்று நீ அறிந்த கணமே உண்மையில் தனுர்வேதத்துக்குள் நீ நுழைந்தாய். பிறர் இங்கே கற்பது வில்வேதத்தை அல்ல, வில்வித்தையை மட்டுமே. அது கொல்லும், வெல்லும். ஆனால் கொண்டுசெல்லாது. எது உன்னில் இருக்கிறதோ”

அதை வளர்க்கும். உன்னை விடுதலைசெய்யாது. வேதமெனப்படுவது விடுதலையை அளிக்கவேண்டும். துயரறுத்து முழுமை நோக்கி கொண்டுசெல்லவேண்டும். தனுர்வேதம் அதைச்செய்யும் என்பதை நான் என்குருநாதரில் கண்டேன்.

பார்வை வளையத்தின் 180 கோணத்தை சித்தத்துடனும் ஆத்மாவுடனும் பொருத்தி புரிந்து கொள்வதை பற்றி

வில் என்பது ஒரு சொல். அம்பு என்பதும் சொல்லே”
அகத்தில் இருக்கும் சொல்லைத்தீட்டும் கலையைத்தான் நான் உனக்குக் கற்பிக்கவேண்டும். உன் கைகளால் நீ அடையக்கூடிய திறன் என ஏதும் இனி எஞ்சவில்லை.

வேதங்களை ஆறு வேதாங்கங்களைக் கொண்டு பயிலவேண்டும்”

என்பது நெறி. சிக்‌ஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம் சந்தஸ், ஜோதிடம் என அவற்றை மூதாதையர் வகுத்திருக்கின்றனர். இப்புவியில் உள்ள உயிர்க்குலங்களின் வகைகளையும் செயல்பாடுகளையும் தொகுத்தும் பிரித்தும் அறிவதே சிக்‌ஷா. உயிர்க்குலங்கள், பொருட்தொகைகள், விசைகள் என மூன்றால் ஆனது இப்புடவி. அவை சாத்விகம், ராஜஸம், தமஸ் என்னும் முக்குணங்களாலும் ஓசை, வாசனை, சுவை, வடிவம், எடை, வண்ணம், எழுதல், வீழ்தல், உருமாறுதல் என்னும் ஒன்பது இருத்தல்கூறுகளாலும் ஆனவை. இது இது எனத் தொட்டு ஒவ்வொன்றாய் அறிந்து இவை என்றறிந்து பின் இது என்னும் முழுமையை அறிபவனே சிக்‌ஷாஞானி.

பகுத்தும் தொகுத்தும் அறியப்படும் அனைத்தும் அறிவாகி அகத்தில் நிறைகின்றன. அவ்வறிதலை பகுத்தும் தொகுத்தும் வகுப்பதை கல்பம் என்கின்றனர் மூதாதையர். ஞானம் என்பது முற்றிலும் தனித்தனியான கோடானுகோடி துளிகளால் ஆனது. அத்துளிகள் ஒவ்வொன்றையும் தனியாகவே அறியவேண்டும். ஆனால் அவை இணைந்து மழையாகப்பெய்வதையும் அறிந்தாகவேண்டும். கல்பஞானி முழுமையில் தனித்தன்மைகளையும் தனித்தன்மைகளில் முழுமையையும் அறிபவன்.

அறிவு என்பது மொழியிலமைவதே. உயிர் உடலில் அமைவதைப்போல. உடலை ஓம்புதல் உயிரை ஓம்புதலென்பதுபோல சரியான மொழி என்பதே சரியான அறிவு. மொழியை தெளிவாக வரையறை செய்துகொள்வதும் அதன் இயங்குவிதிகளை வகுத்துக்கொள்வதும் வியாகரணம் எனப்படும். இலக்கணமே ஒலியை பொருளுடன் பிணைத்து அதை சொல்லாக்குகிறது. சொற்களை இணைத்து அறிவாக்குகிறது. அறிவை உடைத்துச் சொற்களாக்குகிறது. சொற்கள் என்பவை தேனீக்கள். இலக்கணமே சிறகு. தேன் என்பது பொருள்.

சொல்லில் நிற்கும் பொருள் என்பது உடலில் நிற்கும் உயிர் போல ஒரு தற்காலிக லீலை. இங்கே இப்போது இச்சொல்லில் இப்பொருள் நிற்கிறது என்ற வகுத்தறிவை நிருக்தம் என்றனர் முன்னோர். ஒவ்வொரு சொல்லும் பொருள்குறித்ததுவே என நிருக்தத்தின் முதல்விதியை அகத்தியமாமுனிவர் சொன்னார். எங்கு எப்படி சொல்லில் பொருள் தங்குகிறதென்றறிந்தவன் மொழியை அறிந்தவனாகிறான். மொழியை அறிந்தவன் அறிவையும் அறிவை அறிந்தவன் அகிலத்தையும் அறிந்தவனாகிறான்.

சொல்லென்பது ஒலி. செவிணரும் ஒலி அகமுணரும் ஒலியாலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஒலிகளை இணைப்பதன் அறிவையே சந்தஸ் என்றனர் முன்னோர். தவளைமுட்டைகளை அன்னையின் கருவறைப்பசை இணைத்திருப்பதுபோல சொற்ளை சந்தஸ் இணைக்கிறது. ஓடும் பிரக்ஞை எனும் ஓடையில் ஆடி அலைந்து ஒன்றாய் நிற்க அவற்றுக்கு உதவுவது சந்தஸே. அவை ஒவ்வொன்றும் தன்னை தானறிந்து உயிர்கொண்டெழும்போது சந்தஸை மீறிச்செல்கின்றன. சந்தஸில்லாத சொல் என்பது வானமில்லாத விண்மீன் வெளி என்றே அறிக.

சொல்லில் அமர்ந்திருக்கும் பொருள் ஒவ்வொன்றும் விதைகள். அவற்றை முட்டித்திறக்கும் தியானத்தையே ஜோதிடம் என்றனர் முன்னோர். சித்தமறியும் சொல்லை சித்தம் பறந்துகிடக்கும் சின்மயப் பெருவெளியால் அறிவதே ஜோதிடம். ஜோதிடம் சொற்களை முளைக்கச்செய்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் உறைந்துள்ள சித்தத்தை வகுத்துச் சொல்லும் வேதாங்கம் அது.

விசும்பின் துளி விழுந்த கதிர் என புல்லைச் சொல்கிறார்கள் மூதாதையர்.

43 அஸ்வ சாஸ்திரம் போல ஒன்று விரிவாக சொல்லப்படுகிறது . அத்துடன் மானுடர் , விலங்கு மற்றும் தேவர்களின் இருப்பு பற்றிய கருத்துகள் உள்ளப் பகுதி.

அர்ஜுணனும் , துரோணரும் ஒருவரை ஒருவர் அனுக்கமாக உணர்ந்து கொள்ளும் குரு சிஷ்ய பாவனையை விளக்குகிறது.

அவன் தன் அகச்சொல்லோட்டத்தை முற்றிலும் அகற்றி அங்கே அவரது சொற்களை அமைக்க கற்றுக்கொண்டிருந்தான். அவ்னுள் அவரது சொல்லே அகமாக நிகழத்தொடங்கியபின் நினைவுகொள்ளல் நினைவுகூர்தல் என்னும் இருசெயல்களும் பொருளிழந்தன..

விலங்கினங்களை , குளம்பு , கொம்பு , சிறகு , வால் , துதிக்கை மற்றும் நகங்களால் இனம்மென பிரிக்கும் இந்திய பண்டைய முறையின் சிறு பகுதியை விரிவாக சொல்கிறது.அவற்றில் சத்வம் , ரஜஸ் மற்றும் தமோ குணம் பிரிவுகளை விளக்குகிறது.

அஸ்வத்தமனை சந்திக்கும் நொடி தன் அகம் பற்றிக்கொள்ளவதை அறிகிறான் .

44 தன்னை இழித்து பேசியவர் முன்னே தருக்கி நிற்பதையே ஒவ்வொரு மானுட உள்ளமும் விரும்புகிறது .அதற்கு அரசு துணைக்கும் போது அரசான்மையின் முதிரச்சியாக உணர்வதை துரோணர் சொல்லுகிறார்.

இருந்து அவருக்காகவும் அவரது வழித்தோன்றல்களுக்காகவும் உயிர்கொடுத்தலே என் அறம். அதற்கப்பால் என்றும் எச்சிந்தனையும் எனக்கில்லை. இதோ என் மைந்தனுக்கும் அக்கடமையை விதிக்கிறேன்.

அர்ஜுணன் மட்டுமின்றி அஸ்வத்தாமனும் ஒருவரை ஒருவர் இணையாக வெறுக்கும் சூழலை துரோணர் உருவாக்கி வைக்கிறார் .

அர்ஜுணனை தனது முதல் மாணவன் என்று கூறி அவனது கோத்திரத்தை தனக்கு அளித்துக் கொள்ளகிறார் .

அர்ஜுணனும் , அஸ்வத்தாமனும் ஒருவரை ஒருவர் களத்தில் சந்நிப்பதை தங்களின் உள்ளாழத்தில் உணர்ந்து கொள்கிறார்கள் .

45 தனுர் வேதத்தில் உள்ள யானை மற்றும் குதிரையேற்றம் குறித்த விரிவான வர்ணனைகள்.

யானையின் உலகிற்கு அழைத்துச்செல்கிறது இந்தப் பகுதி.

அஸ்வத்தாமனின் காழப்பு அர்ஜுணனை சீண்டி போருக்கழைக்க , அவர்களின் போர் அஸ்வத்தாமன் என்கிற யானையை தாக்குகின்றது . பாரதப்போரில் அந்த யானையால் துரோணர் மரணமடைகிறார்.

46 அம்பின் நிரல்களைக் கூறும் பகுதி

அஸ்வத்தாமனை எந்நிலையிலும் கொல்லுவதில்லை என்கிற உறுதிமொழியை அவனிடமிருந்து துரோணர் பெறுகிறார் .


47 யானை அஸ்வத்ததனை மாளவத்நிறகு பரிசாக அனுப்புகிறார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...