https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 6 ஜூன், 2019

அடையாளமாதல் - 442 *பொறுப்புகள் *

ஶ்ரீ:





பதிவு : 442 / 616 / தேதி 06 ஜூன்  2019

*பொறுப்புகள் 


எழுச்சியின் விலை ” - 44
முரண்களின் தொகை -03 .




அகில இந்திய காங்கிரஸின் உட்கட்சி நிர்வாக முறையும் மற்றும் அது தன்னை நிலைநிறுத்த முயலும்  ஜனநாயக போக்கு ஆகியவை ஒரு காலம்வரை அதை நிலைநிறுத்தி வந்தது .அதிலிருந்து சிறிது சிறிதாக விலகி இன்று அதன் நீட்சியென பிறிதொன்றாக மாறி நின்றாலும் , பிற தேசிய அரசியல் கட்சிகளைத் தவிர்த்து , மாநில கட்சி அமைப்புகளின் அனுகுமுறையில் இருந்தும் முற்றாக  வேறுபட்டதும் , சிக்கலானதும் கூட .அதற்கு தனது சவால்களைக் குறித்து தற்புரிதலுடன் ,பொது அபிப்ராயங்களை பற்றிய  அறிதலும் அவசியமாகிறது .

அகில இந்திய தலைவர்கள் தங்கள் மாநில அமைப்பின் உள்ளூர் மற்றும் உட்கட்சி அரசியல் பற்றிய தரவுகளை  குறித்து தனக்கேயான பிரத்யேகப் பார்வையும் , மேலதிகமாக அதன் உள்ளூர் தலைவர்களின்  அனுமானங்களையும் இணைத்தும்  புரிந்து கொள்ள முயல்கிறது  .கையிலுள்ள தகவல்களை கொண்டு செயல்பாட்டிற்குள் நுழையும் போது அவற்றை யதார்த்த சூழலுக்கு உருமாற்றுவது எளிதில் நிகழ்வதில்லை. ஆகவே அவற்றை பற்றிய முடிவுகளை  எப்போதும் உறுதி மற்றும் நெகிழ்விற்கு இடையே வைத்துக் கொண்டிருப்பது என்பதே அதன் அரசியலென ஆகிறது .

கட்சி நிர்வாகம் என்பது பல்வேறு அடுக்குகளின் வழியாக வரும் தகவல்களை ஒப்பிட்டு , அனுகும் பார்வை முரணியக்கத்தின் வழியாக மத்தியத் தலைமை தனது அரசியல் வல்லமையை பெருக்கிக் கொள்ள முயல்கிறது  .  அதை அடிப்படையாக வைத்து செயலில் இழியும் போது கையிலுள்ள தகவல்களை கொண்டு அன்றைய அரசியல் சிக்கல்களை  அனுகியும் , விலகியும் அதற்குள் உறைந்திருக்கும் ஒத்திசைவு அல்லது வேறுபாட்டை அறிய முயல்கிறது  . வேறுபாடு புலப்படுகிற தருணம் வரை காத்திருந்து , அதன் இறுதிக் கணத்தில் அதை முடிவு செய்கிறது .இது நிகழாத எந்த முடிவும் பிறிதொரு சுழற்சியில்  தவறான ஒன்றாக உருமாற்மாற்றம் அடைந்து தலைமையை வதைக்கிறது.

அதை தவிற்க தனது அரசியலாடல் குறித்து மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தும் மத்திய தலைமை அவற்றை தன்னிடமுள்ள தகவல்களில் இருந்து  பெறுகிறது .பல சமயங்களில் அவை மாநில தலைமையின் பரிந்துரைகளாகவே இருக்கும்.மாநிலத் தலைமை சுதந்திரமான, தன்னறம் பேணும்  ஆளுமையாக இருந்தால்  அதை செயல்படுத்தும் வாய்பபை அது பெறுகிறது .அதற்கான இடத்திற்கு  அவரவர் தங்களை உருவாக்கி வைத்திருப்பதை பொறுத்தே அது அமைகிறது .

மத்தியத் தலைமையால்  நியமிக்கப்படுகிற மாநில பொறுப்பாளர்கள் அனைவருக்குமான அறிவுறுத்தலை ,ஒற்றை வரியாக எதையும்  சொல்லுவதில்லை என்பதிலிருந்து அவர்களுக்கான அரசியல் நிலை கொள்கிறது.என்ன நிகழ வேண்டும் என்பதை மத்திய தலைமைக்கு மாநில பொறுப்பாளர்களே விளக்குவார்கள்.அதன் பிண்ணனி உட்பட அனைத்து கணக்குகளையும் அவர்களே விரித்துரைக்க வேண்டியவர்கள் .அதனடிப்படையில் அவர்களது செயலபாட்டிற்கு ஒப்புதலைப் பெறுவர் .
மாநில பொறுப்பாளர் தான் பொறுப்பேற்கும்  மாநிலத்தின், அனைத்து பிரிவினரையும்  தொடர்பு கொண்டு தங்களின் தகவல் தளத்தை மேம்படுத்திக் கொள்வார்கள் .பல முக்கிய முடிவுகள் தங்களின் அரசியலுக்கு  எதிர் வருவதை அனுகும்  மத்திய தலைமையுடன் மாநில தலைமை எக்காலத்தும் இணங்கி செல்ல இயலாது .தன்தரப்பு வாதத்தை அது தொடர்ந்து வலியுறுத்துவதற்கு ஆகப் பெரும் ஆத்ம சுத்தி அவசியமாகிறது .

நூறு ஆண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தனது போக்கை நிர்ணயிக்கும் முடிவுகளில் இருந்து இது தொடங்குகிறது . அதை பல காலத் தொகுதிகாளாக பிரித்து கொள்வது , அதன் போக்கை புரிந்து கொள்வதற்கு உதவும் . கடந்த காலத்தை நோக்கிய கசப்புடன் அனுகும் மூத்தவரகளின் பார்வையில் இருந்து , யதார்த்த போக்கை புரிந்து கொள்ளவது ஒரு பொருளை புரிந்து கொள்வதற்கான வழி என நினைக்கிறேன்

இந்த கட்டுரையின் நோக்கம் அதன் இன்னைய நிலையும் அதன் போக்கும் அருகி போனதற்கு யாரும் எதிர்நோக்காத இந்திரகாந்தியின் துர்மரணத்திலிருந்து துவங்குகிறது. என்பதை கோட்பாடாக வைத்துக் கொண்டு காங்கிரஸின் மத்திய தலைமையில் நிகழ்ந்த அடுத்தடுத்த மாற்றம் , அதன் பல பரீட்சார்த்மான முயற்சிகளின் விளைவாக கிளைத்தவைகள்.

பல காலமாக நின்றிருக்கும் நிலை சக்திகளை மாற்றி அமைப்பது புரட்சிகரமான ஒன்றல்ல என்பதை காலம் காட்டிவந்திருகிறது . அது தேவையுறும் சீர்திருத்த்திற்கும் ஒட்டு மொத்த மடைமாற்றத்திற்குமான வேறுபாடுகளால் நிகழ்பவை .அதிலிருந்து எழுந்த எடையே தற்போதைய தலைமையின் தோள்களை அழுத்தி நிற்கும் பாரம் .இன்றைய தலைவரின் விலகல் மனப்பாண்மை இயல்பானதும் , புரிந்து கொள்ளக் கூடியதே .பல்நெடுங்காலமாக நிகழ்ந்த நிகழ்வுகளில் இருந்து எழுந்த முடிவுகளின் விளைவுகள் கைமாற்றப்பட்டு இன்றைய தலைமையிடம் வந்து சேர்ந்துள்ளது , எனவே இன்றைய அரசியல் நிலை மிக சிக்கலானது .

தனக்கென உறுதியான மாற்று வழிமுறைகள் இருக்கிறது என ராகுல் காந்தி நினைப்பாரென்றால் . அவர் இப்போது எடுத்திருக்கும் முடிவே மிகச் சரியானது என நினைக்கிறேன்.நிர்வாகம் என்பது ஒரு எல்லைவரை அனுசரித்து செல்வதே . ஆனால் ஆத்மார்த்தமாக உணரும் ஒன்றை செயல்படுத்த பிறருடன் ஒத்திசைந்து செல்வதை கைவிட வேண்டிய நேரம் வரும்போது , அதை செய்யும் ஆற்றலை அந்த தலைமை பெற்றிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்