https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 23 ஜூன், 2019

அடையாளமாதல் - 445 *வழிகாட்டுக் குழு *

ஶ்ரீ:




அடையாளமாதல் - 445
பதிவு : 445 / 621 / தேதி 23 ஜூன்  2019

*வழிகாட்டுக் குழு 


எழுச்சியின் விலை ” - 47
முரண்களின் தொகை -03 .




இந்திய அரசியல் அமைப்பின் செயல்பாட்டு முறையில் , அகில இந்திய மற்றும் மாநில அரசியல் அமைப்பிற்கும் வித்தியாசமிருப்பதை உணர்ந்திருக்கிறேன். இரண்டின் மத்திய தலைமைகளின் மனநிலையை பொருத்தே அங்கு இரண்டாம் நிலைத் தலைவர்களின் நிரை உருவாகிறது.தனக்கு இணையாக பிறிதொரு தலைமை பண்புள்ள ஆளுமை தங்களது அமைப்பில் உருவாவதை அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை . இது எல்லா அமைப்பிற்கும்  பொதுவானது என்றாலும், அகில இந்திய அமைப்பிற்கான ஆளுமை மற்றும் அது ஆளுகிற நிலப்பகுதி வெவ்வேறாக இருப்பதாலும் அவற்றை ஒருங்கிணைக்க , தான் வலுவாக இருக்க பலமுள்ள மாநில தலைமையை அது எதிர் நோக்கும் இடத்தில்தான் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது .இதுவே அதன் அடிப்படை ஆதார பலம் ,ஆனால் தவிற்க இயலாத காரணத்தால் மத்திய தலைமை தன்னை பலகீனமாக உணரும் தருணங்களில் தங்களுக்கான  முகமில்லாத இரண்டாம் நிலைத் தலைமையை அது நோக்கியே நகர்கிறது .

காங்கிரஸ் இயக்கம் இன்று வந்து சேர்ந்துள்ள இடம் அதன் நெடுங்கால குழப்பமான முடிவுகளில் உழன்று கொண்டிரிந்தது முக்கிய காரணம் .காங்கிரஸின் வரலாற்று பிழைகளை பல குறுக்கு வெட்டுத் தோற்றத்தின் வழியாக ஆராயலாம் என்றாலும் , அது இன்று அடைந்திருக்கும் இடம் இதுவரை அது அறியாதது என்பதால் , வழமையான பகுப்பை இங்கு நிகழ்த்தாது , சோனியா காந்தி தலைமை ஏற்ற காலத்திலிருந்து பகுத்தல் இன்றைய சூழலின் கடுமையை உணரலாம் என நினைக்கிறேன.

நரசிம்ம ராவுடன் அவர் முரண்பட்டு அரசியலை துவக்கிய காலத்திற்கு பிறகு அவர் தலைமையில் நிகழ்ந்ததை இங்கு எடுக்க விரும்புகிறேன் .2009 தொடங்கி 2014 முடிய அதன் ஆட்சி காலத்திலும் , பின்னர் 2014 தொடங்கி 2019 முடிய அதன் எதிர்கட்சி காலத்திலும் நிகழ்ந்ததை விரிவான தனிப் பதிவுகளில் சொல்ல விழைகிறேன்.

சுய கௌரவமுள்ள தலைமை தனக்கான பாதையை தெரிவு செய்கிறது .அதை தனது நீண்ட கடந்த காலத்தில் , தனது செயல்பாட்டின் வழியாக அது பிறருக்கு உணர்த்தி வந்திருந்த ஒரு செய்தி .அது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும் .அது தான் இருக்கும் பதவியில் எப்போதும் நீடிக்க வரும்பும் அதே சமயம் , அதில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்கிற தன்விழைவை கடந்ததாக இருப்பதை தலைமையின் இலக்கணமாக” அறிந்திருக்கிறேன் .இவை இன்றைய அரசியலில் பொருந்தாது என நினைப்பது ஒரு மூட நம்பிக்கை.

அரசியல் நிலைப்பாட்டில் மாநில தலைமையின் கருத்து முக்கிய பங்கு வகிப்பது நிர்ணயமாவது இங்கு என நினைக்கிறேன். காங்கிரஸ் மாநிலத் தலைமை அவர்களின் ஆயுட்காலம்  இதைப் பொறுத்து அமைவதை புரிந்து கொள்ள இயலும்.

மத்திய தலைமையின் முடிவுகளை செயல்படுத்தும் அதன் அடுத்த நிலை தலைவர்கள் மாநில பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் . அவர்கள்  தங்களை இங்கிருந்தே வளர்த்தெடுக்கிறார்கள் . அவர்களின் களமும் இதுதான். எல்லா காலத்திலிலும் அவர்கள் தங்கள் தலைமையின் கருத்தை செயல்படுத்துபவர்களாகவே இருந்து விடுவதில்லை . அவர்கள் அனைவரும் தங்களின் அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ள இரு தரப்பும் ஒன்றை ஒன்று அனுகியும் , அகன்றும் இருக்கும் படியான இடைவெளியை உருவாக்கியும், நிறைத்தும் தங்களின் அரசியலை நிகழ்த்துபவர்கள். உட்கட்சி ஜனநாயகத்தின் தோற்றுவாய் இது .அது இன்று சரியாக நிர்வகிக்க இயலாமையால் தோல்வியுற்றிருக்கிறது. வழி காட்டுக் குழு போன்ற ஒரு அபத்தமான ஒன்று அதன் அடிப்படையாக இருந்தது .

மாநிலத் தலைமை தன்னுடைய இருப்பின் வழியாக தனது அரசியலை நிகழ்த்திக் கொள்ள மத்திய தலையால் அனுமதிக்கப்படும் இடமாக  இதைப் பார்க்கிறேன்.இங்கு மாநிலத் தலைமையின் தன்னறம் முக்கிய பங்கு வகிக்கிறது .அதை சரியாக நிர்வகிக்க முயல்பவர்களே வெல்கிறார் . நேரடியான பலன் சிலருக்கே விளைகிறது .அவர்கள் அனைவருமே வென்றவர்களாக அறியப்படுவது பிறிதொரு தளத்தில் .அங்கு வெகு சிலரே அதை தங்களின் ஆழ்மனம் வழியாக உணர்கிறார்கள். மற்றவர்களுக்கு காலம் அதை நிதானமாக நிகழ்த்திக் கொடுக்கிறது

தன்னறம் பேணும் காமராஜர் போன்றவர்களின்   நிரை அதில் மிகப் பெரியது. அதில் என்னால் சண்முகத்தையும் கொண்டு வைக்க முடியும் .அவர்கள் அனைவரும் அரசியலில் தன்னறத்தை கடைபிடித்து பின் எங்கோ ஒருப்புள்ளியில் அந்தக்  களத்திலிருந்து விலகினார்கள் .அங்கிருந்து வருத்தமும் கசப்பும் நிறைந்த தங்களின் கடைசி காலத்தை அவர்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். அதில் சிக்காமல் ஒருவரும்  ஓய்வுறுவதில்லை என்பது விசித்திரமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்