https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

அடையாளமாதல் * கடந்தவைகளின் தேங்குதல் *

 




ஶ்ரீ:



பதிவு : 662  / 852 / தேதி 29 ஜனவரி  2023



* கடந்தவைகளின் தேங்குதல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 57.






அறமீறல்கள் வஞ்சங்கள் வழியாக மட்டுமின்றி அசட்டுத்தனமாக கூட ஒரு சில அரசியல் தலைமை உருவாகி பதவியில் சில காலம் நீடித்து நிற்பதை எந்த கணக்கிலும் கொண்டு வைக்க முடியாது. அதைப் புரிந்து கொள்ள குறைந்தது ஒரு தசாப்தம் பின்னோக்கு பயணிக்க வேண்டியிருக்கும். அதில் இன்றைக்கான காரண விதையை கண்டடையலாம் என்றார் சண்முகம் . அரசியலின் அனைத்து விளைவும் ஏதோ ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்க முடியும் . எதனுடனும் சம்பந்தப்படாது முற்றிலும் புதியதாக ஒன்று உருவாகி வந்துவிடாது என்று சொல்லுவார் . அது புரிந்து கொள்ளக் கூடியதுஒவ்வொரு பத்து வருட அடுக்கும் ஒரு தசாப்தம். தசாப்தக் கணக்கை எந்த வருடத்தில் இருந்தும் தொடங்கலாம்முதல் அடுக்கு மற்றும் அதன் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு பயணிக்கும் போது அதன் மாபெரும் வலைப்பிண்ணலை பார்க்க முடியும் என்றார். சண்முகம் கை பிடித்து காட்டியதால் புரிந்து கொள்ள அந்தக் கோட்பாடு மிக எளிதாக இருப்பதாக தோன்றியது.நான் அது மாதிரி ஒன்றை உருவாக்க முயன்று ஒரு கட்டத்தில் அதில் தொலைந்து போயிருக்கிறேன். பல வருடம் கழித்து ஒரு நிகழ்வு என்னை பின்னோக்கி சிந்திக்க வைத்த போது சட்டென அந்த கோட்பாட்டிற்குள் பின்னர் நீண்ட அரசியல் காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி வந்தது திகைக்க வைக்கும் அனுபவம்.


எல்லா அரசியல்வாதியும் கொஞ்சம் முயன்று அதன் உட்கூறுகளை அறிந்து கொள்ள முடியுமானால் அரசியலின் போக்கையே அது மாற்றிவிடுமேஎன்று நான் அவரிடம் சொன்ன போது  “இந்த கணக்கில் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பிடி கிடைப்பதில்லை காரணம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் திளைத்திருக்கிறார்கள். அதிகாரம் தளைப்பதால்தான் அந்த தேக்க நிலையே உருவாகிறதுஎன்றார். “அதிகாரத்தில் இருப்பவருக்கு அதில் உள்ள சுமையால் உள்ளம் குவியாது என்பதால் இவற்றை பார்க்க முடிவதில்லை. மேலும் இயற்கை ஒரு விழியின்மையை கொடுத்து விடுகிறது. அந்த பதவிகாலம் முடியும்வரை பிறவற்றை அந்தக் கண்களால் பார்க்க இயலாதுஎன்றார்


அரசியலில் அனுபவமுள்ளவர்கள அந்த அகக்குருட்டில் இருந்து மனதளவில் மீட்சி கொள்ள நிகழ் அரசியலைப் பற்றிய புரிதலுக்கு அதை அவதானிக்க, கடந்த காலத்தை பிரித்து பிரித்து பார்த்து அதன் விதையை பின் அது உருவாக்கும் போக்கை அறிந்து கொள்வதுடன் , அந்த செய்திகளுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதன் ஒழுக்கு வேறு இடங்களில் எப்படி வெளிபடும் என புரிந்து கொள்ள முயல்வது அரசியலின் போக்கை ஒழுக்கை உணரச் செய்கிறது . பின் அங்கிருந்து தங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கக் கூடும் என்பது பற்றி அதனால் அரசியலின் விளைவு என்னவாக இருக்கும் என ஊகிக்க முயல்கிறர்கள் . நிகழ் அரசியலை உற்று நோக்குவதற்கு அவற்றின் வகைகளை அறிந்து கொள்ள மிக நுட்பமான வழிகளாக இவை சொல்லப்படுகின்றன . இது சண்முகத்திடம் இருந்து எனக்கு வந்த பழக்கம். ஒரு முறை தொட்டுவிட்டால் பின் அதிலிருந்து விலகுவது கடினமானது. அது ஒரு வகை மனப்பழக்கம் நம்மை மீறி மனதை அதில் ஒன்றச் செய்துவிடும். தன்னியல்பாக மிக தீவிரமாக பொருத்து பார்ப்பதை அது ஒருபோதும் நிறுத்தாது . உற்சாகத்தால் சம புரிதல் இல்லாதவர்களிடம் இது பற்றி உரையாடினால்கழன்ற கேஸ்பட்டம் நிச்சயம்.


அரசியல் அரசு சூழ்தலால் நிகழ்கிறது என்பது அதை ஆதரிப்பவர்கள் சொல்லுவது. அரசியலும் கூட அறத்தால் நிற்பது என்பதற்கு இங்கு மிக நீண்ட மரபு நமக்கிருக்கிறது. அரசியலின் பொருட்டு எதையும் இயற்றலாம் என்பது பரப்பிய அரசியல் எழுந்த பிறகு உருவானது. பின் அங்கிருந்து அது அடைந்த வீழ்ச்சியே இன்றைய அரசியல் பாணியாக இந்தியா முழுவதும் உருவாகி நிற்கிறது . அதை பொதுப் போக்காக கொள்ள முடியாது . அதை ஏற்காமல் அரசியலில் இருப்பவர்கள் மிகச் சிலர் என்றாலும் அவர்களை கொண்டே மொத்த அரசியலும் தன்னை வகுத்துக் கொண்டதை வரலாறு முழுக்க பார்க்க முடிகிறது


யாரையும் பொருட்படுத்தாத தலைமை ஒன்று நிகழும் போது அனைவரும் அதிர்ந்ததைப் போல பாவனை செய்தாலும் அதை பெயராளவில் கூட எதிர்ப்பதில்லை என்பது மொத்த அமைப்பை நீர்த்துப் போகச் செய்கிறது . அதன் வழியாக அவர்களும் அந்த வீழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள் . குழு குழுவாக அதைப் பற்றிய அலர் பேச்சு எங்கும் இருந்தாலும் யாரும் அதற்கு எதிராக சிறு புல்லைக் கூட அசைக்க மாட்டார்கள். பேச்சும் அங்கலாய்ப்புமாக காலம் ஓடிக் கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன் . அந்த தலைமையை நேரில் சந்திக்கும் போது பணிவும் அவர்களின் உடல்கள் வழியாக வெளிப்படும்  குறுகலும் குமட்டலை உருவாக்கிவிடும். அந்த தலைமை நீடித்தி நிற்கப்போகிறது என கூச்சமில்லாமல் பேசுவார்கள் அதற்கான் தர்க்கங்களை முன்வைத்து அரசியலை பேசி அவர்களும் அதன் அங்காமாகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் அத்தகைய அரசியல் நீடிக்கிறது. அத்தகைய தலைமை வந்து அமரும் போது அவர்களின் செயல்பாடுகள் எந்த தர்க்க நியாயத்திற்கும் பொருந்தாமல் அடிப்படைகளை நோக்கிய கேள்வியை அது எழுப்பிவிடுகிறது . அது ஒரு அராஜகம் அதை எதிர்ககாமல் போவது அரசியல் இழிவு. ஜனநாயக பன்பு கொண்ட தலைவர்கள் அதே பதவிகளில் இருக்கும் போது அவர்களின் எல்லா அரசியல் செயல்பாடுகளை பற்றி விமர்சிக்கும் , எதிர்க்கும் இதே கும்பல் அறத்தின் காவலர்களாக மீறப்பட்டு விட்டதாக கொப்பளித்து ஆர்பரித்து நிற்கிறார்கள் . ஆனால் எதிர்மறைத் தலைமைக்கு முன் அவர்கள் கானாமலாகி விடுகிறார்கள். அரசியலில் ஜனநாயகப் பண்பிற்காக இடம் அவ்வளவுதான் போல.

சனி, 28 ஜனவரி, 2023

மணிவிழா - 60 * காலாகால இடையே *

 


ஶ்ரீ:



28.01.2023


* காலாகாலங்களுக்கு இடையே  *






எனது அரசியல் குரு தலைவர் சண்முகத்திடம் கண்ட தலைமை பண்பு என்னை வடிவமைத்தது கொள்ள உதவியது. செயல்பாடுகளை கூர் தீட்டியது , அரசியலில் எனக்கென முகத்தை உருவாக்கிக் கொடுத்தது. காரணம் அறத்தை நெறிகளை விழுமியங்களை சார்ந்த அரசியலை அறிமுகம் செய்து வைத்து அன்றாட அரசியல் சரிநிலைகளை நிராகரித்து அதை நிராகரிப்பவர் அரசியலில் வெல்லவும் முடியும் என்கிற நம்பிக்கை அவரின் அசாத்திய வெற்றி ஏற்படுத்தியது. நான் அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டவை அந்த நம்பிக்கைகளை . அரசியலில் அனைத்திற்கும் இடமுண்டு என்றும் அதற்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என சொல்லுபவர்களுக்கு சராசரி அரசியலாளர்களுக்கு மத்தியில் அவர்களை மறுத்து சண்முகத்தின் வெற்றி பல பத்தாண்டுகள் நின்றிருந்தது. அதே சமயம் நம்பிக்கை செயல்படாத காலம் என ஒன்றுண்டு. விதைப் பருவம் போல அரசியலிலும் உண்டு. அந்த பருவங்கள் நம்பிக்கையால் மட்டுமே கடக்க இயல்வது. ஆன்மீகமான இருப்பு அதை துணைக்க வேண்டும். காலத்திற்கு காத்திருப்பது அரசியலின் பால பாடம். அப்படி ஒரு காலம் வாராமல் போகுமானால் அது ஊழ் என ஒதுங்கவும் தெரிய வேண்டும் என்பதையும் அவர் தான் கையளித்தார். அரசியல் இடம் விட்டு விலகாதவர்களின் களம். தோல்விகளை ஏற்காதவர்கள் தொழில். அவர்களை கைவிடாத முயற்சிகளினால் வெற்றிகளை ஈட்டுபவர்கள் என ஒரு பக்கம் சொன்னாலும் அதன் மறுபக்க எடைக்கு நிகர் வைப்படுவது ஊழ். அதை ஆழ் மனத்தால் உணராதவர் யாருமில்லை. உணர இயலாதவர்களுக்கு அரசியல் தேவையற்ற வீண் சுமை. அரசியல் என்னை முதன்மையாக கொள்ளும் ஒரு சூழல் எழுந்ததும் அனைத்திற்கும் அவரை முன்மாதிரியாக மனம் கொண்டது.


அதுபோன்ற தலைமையின் கீழ் அனைத்தையும் உரையாடி விவாதித்து விவாதித்து அல்லது முரண்பட்டு செய்ய வேண்டிய தேவைகள் ஏற்படுவதில்லை. விழுமியங்களில் நம்பிக்கையும் அதனால் உருவாகும் எளிய சமரசங்களை மறுத்து மாற்றமில்லாது நிற்கும் நிலைபாடுகள் போன்றவைகள் அவர்களுடன் நம் ஆழ்மனம் எப்போதும் பிணைந்திருக்க வைக்கிறது . அவர்கள் அடுத்து செய்யக்கூடியது என நம்மால் மிக எளிதாக ஊகிக்க முடிபவராக அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றது ஏற்காதது என நம்மால் அனைத்தையும் அவதானிக்க முடியும். அவர்கள் நினைப்பதை கடந்து பிறிதொரு இடத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும் தருணங்களின் வெற்றி பல வாய்த்துள்ளன. அவையே என்னை களத்தில் தனியாளுமையாக நிற்க உதவியது


வேளுக்குடி ஸ்வாமியுடன் அதற்கு நிகரான ஆழ்மன தொடர்பு பத்து வருடங்கள் மேல் நீடித்திருந்து. அந்த காலகட்டத்தில் நிகழ்த்திய ஆயிரமாவது ஆண்டு நிகழ்வுகள் , பிற ஏற்பாடுகள் மற்றும் பக்தி இலக்கியம் பற்றி புரிதலை உருவாக்கும் வாய்ப்புகள் திறந்து கொண்டு எழுந்து வந்தன. எனது தேவையென்ன என்பது குறித்த வடிவை மெல்ல உருவாக்கிக் கொண்டிருந்தேன். வேளுக்குடி ஸ்வமியுடன் வருடத்தில் சில முறையே நேரில் சந்தித்தாலும் அறுபடாத மனத் தொடர்ச்சியை உணர்ந்திருக்கிறேன்


ஆன்மீக உலகில் அவரது எழுச்சி அவரே எதிர் நோக்காத ஒரு தருணத்தில் நடந்தது . தொலைகாட்சி ஊடகங்கள் அந்த மாயத்தை நிகழ்த்தின. அதில் அவரது திட்டமிடல் என ஏதுமில்லை. திட்டமிடாமல் வந்து குவிபவை ஊழின் பகுதிகள் என்பதால் ஆபத்தானவை . எதிர் நோக்காத தருணத்தில் அதை எதிர் கொள்பவர்கள் பின் வாழ்கை முழுவதும் அதை தக்க வைக்க முயன்று கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். அதில் பெரும் வெற்றி பெற்றவராக நான் வேளுக்குடி ஸ்வாமியை பார்க்கிறேன்


வருடத்திற்கு ஒரு முறை புது வருடத்தை ஒட்டி அவரது வீட்டிற்கு அருகே அவர் நடத்தும் நிகழ்வில் அந்த வருடம் யாரும் எதிர் நோக்காத பிரம்மாண்டமான திரள் அவருக்கென முதல் முறையாக கூடி அவரை திகைக்க வைத்தது. அதுதான் துவக்கம் அது சொல்ல வந்த செய்தியை தெளிவாக உள்வாங்கி தன்னை அதற்கேற்ப வடிவமைத்துக் கொண்டார். மெல்லதான்மட்டும் தனித்து அது கோருவதை கொடுக்க முடியாது என உணர்ந்து தனக்கான நிர்வாக வளைவை உருவாக்கினார். ஆனால் அது அவரை நோக்கி வந்து கொண்டிருந்த திரளை எதிர் கொள்ள போதுமான கருவிகளை உருவாக்கிக் கொள்ளும் நேரத்தை அதற்கு தரவில்லை இயலவில்லை என நினைக்கிறேன். அவரை சூழந்திருந்த நிர்வாக குழுவின் போதாமையை அவர் அறிந்திருக்க வேண்டும். அவருக்கான தடைகள் அவர் சார்ந்த சமூகத்தின் வழியாக அவருக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. மூன்று வகையானவர்கள் அவரின் நிர்வாகத்தின் கீழ் வந்தவர்கள். ஒன்று வைதிகர்கள் ஆச்சாரத்தை சிறுவயது முதல் பேணுபவர்கள் என்பதால் எங்கும் தனியிடம் கோருபவர்கள். கோவில் நிர்வகத்திற்கு மிக அணுக்கமானவர்கள். அவர்களை உத்தேசித்து வேளுக்குடி நடத்தும் வேத பாடசாலை நிகழ்வுகள் போன்றவை அதன் இரு பக்க தேவைகளை தீர்க்க முயற்சித்தது


இரண்டாம் வகையினர் நேற்றுவரை அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். ஓய்விற்கு பிறகு செல்ல வேறு இடமின்றி ஆன்மீகத்திற்குள் வருபவர்கள். எந்த ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் இருந்தவர்கள் என்பதால் வைதிகர்களின் நிரையில் சென்று அமர முடியாது. அதற்குண்டான எந்த கருவியும் செயலும் இல்லாதவர்கள். ஆனால் அதற்கு இணையான இடத்தை பெற அதிகார அரசியலில் நிபுணர்களாக எப்போதும் இருக்கிறார்கள்.தங்கள் இடத்தை உறுதி செய்து கொள்ள அவர்களின் அரசியல் அதிகாரத்தை சாமானியனிடத்தில் கொண்டு வைத்து அவர்களுன் வெறுப்புக்குள்ளானவர்கள் . தங்களை மறுப்பவர்களுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ளும் அரசியல் அதிகார விழைவு வேளுக்குடி நினைக்கும் நிர்வகத்திற்கு நிரந்தர தடை. எவ்வகையிலும் அவர்களை கட்டுப்படுத்துவது நிகழ வாய்ப்பில்லை


மூன்றாவது தரப்பினர் வேளுக்குடியுடன் இணைந்து பயணிக்க விரும்புபவர்கள். தன்னார்வளர் போன்ற அடையாத்தை கொண்டவர்கள் நிர்வாகத்தில் பெறும் பங்கு கொண்டவர்கள் அங்கு நிகழும் அரசியலால் அலைக்கழிக்கப்படுபவர்கள். இவர்களே எண்ணிக்கையில் அதிகம்


வெள்ளி, 27 ஜனவரி, 2023

வெண்முரசு கூடுகை 56 நிகழ்வுகள்

 





மணிவிழா - 59 * கனவுகள் எளிதல்ல *

 



ஶ்ரீ:



27.01.2023


கனவுகள் எளிதல்ல *






எனது திட்டங்கள் எப்போதும் வலுவான அடித்தளத்தோடு துவங்கப்படுவதில்லை காரணம் அவை எப்போதும் கனவுமயமானவை. சூழலில் இருந்து பெறப்படும் நுண்ணுர்வும் அதற்கு அடிப்படையான ஆழ்மனமும் அந்த கனவை மிக தெளிவாக எனக்கு அளித்துவிடுகின்றன போல. பின் அங்கிருந்து பெறும் உந்துதல் என் சந்தேகத்திற்கிமின்றி முன்னகர வைக்கிறது. அந்த திட்டங்களை செயல்படுத்த பிறருக்கு எளிதில் வாய்க்காத நல்லூழ் எனக்கு. நினைத்தது அனைத்தையும்  நடைமுறை படுத்தி பார்த்திருக்கிறேன் என்பதே இன்று திரும்பிப் பார்க்கையில் அது வாழ்வை நிறைவுற்றதாக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் என் போன்ற எளிய ஒருங்கிணைப்பாளருக்கு அன்று அதை பிறருக்கு சொல்லி புரிய வைத்து உடன் அழைத்துச் செல்லும் நடைமுறை சாத்தியமாகவில்லை . ஒவ்வொரு முறையும் தனியொருவனாக துவங்கி அதன் பயணத்தில் சிலரை கண்டடைந்து அந்த திட்டங்களை செயல்படுத்தி வென்றிருக்கிறேன் . அதற்கு உதவும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்களை அரிதாக சில தருணங்களில் மட்டுமே அடைந்திருக்கிறேன். அவர்கள் பங்கு கொண்ட அந்த திட்டங்கள் யாவையும் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. அதுவும் நல்லூழ். ஆனால் அதில் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பயணித்ததில்லை. அது குறித்த வருத்தமுண்டு. என்றாலும் அது கோரும் எதையும் கொடுக்க நான் தயங்கியதில்லை. என் வெளியேற்றம் உட்பட


ஒரு முயற்சி பெரும் வெற்றி அதில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் போதுமானதாக ஆகிவிடுகிறது போலும். அதிலிருந்து மேலெழுந்து முன்நகரும் எண்ணம் இழந்தவர்களாக எது ஆக்குகிறது என புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதற்கு பல காரணம். முதன்மையாக நான். அவர்கள் என்னை நகர்த்தாமல் தாங்கள் முன்னுரிமை பெற இயலாது என கருதுகிறார்கள். அல்லது எனது முன்னகரும் அடுத்த கட்ட நகர்வு அவர்களுக்கு சோர்வளிக்கலாம் அல்லது பெற்ற வெற்றியே போதுமானது என தோன்றிவிடலாம். பின் ஒரு முயற்சியின் வெற்றிக்கு பிறகு அதில் இருந்து கொண்டிருத்தல் மட்டுமே நிகழ்கிறது. பிறருக்கு போதுமானதாக தோன்றுவதை நான் எங்கோ அதை ஏற்பதில்லை. ஏனெனில் அதில் மேலும் புதிய படைப்பூக்கம் நிகழ வாய்ப்பிருப்பதில்லை. தேடலை பின் தொடரும் போது அந்த இருத்தலில் மனம் ஒன்றுவதில்லை


அடுத்த கட்ட நகர்விற்கு அவர்களது ஆதரவை பெறவேண்டிய நிர்பந்தம் எனக்கு. அதன் பின் அங்கு நிகழத் துவங்குவது வெறும் அரசியல். நிழல் அரதியல் எனக்கு உகப்பதில்லை. அவை அரசியலை போலி செய்பவைஎனது கனவு திட்டத்தின் செயல்கள் உயர உயர அதை எழுப்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அதற்குறிய அடித்தளத்தை ஆழமாக ஊடுறுவி இறுக்கி அமைத்து அதற்கு வலு சேர்த்தபடி இருப்பேன். அது எனது பாணி. நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் இதை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறேன். அவை ஒருவகையில் அரசியல் சூழ்தல் போல. மிக கவனமாக திட்டமிட்ட நகர்விற்கு காத்திருந்த போதுதான் எதிர் நோக்காத தருணத்தில் தேசிகர் சபை உள்நுழைவு நிகழ்ந்தது


அன்றிரவு அவர்களுக்கு இடமளித்து விலகும் முன்பு வேளுக்குடி ஸ்வாமியிடம்நாளை காலை வருகிறேன்என சொல்லிவிட்டேன் இனி அதை தவிற்க இயலாது. நிகழ்ந்த நேற்றைய தகவல்களை சேகரிக்க நேரமில்லை. அங்கு செல்வதற்கு முன்பாக மனதில் என்னையும் எனக்கான வாய்ப்புகளையும் பற்றிய வரையறை செய்து கொள்வதன் வழியாக எனது நிலையழிதலை கடக்க முயற்சித்தேன் . துவக்கத்தில் சிறிய வயதில் அப்படி வரையறைகளை கொண்டு வருவது எளிதாக இல்லை. பின்னர் அனைத்து விஷயங்களிலும் எனக்கான விழுமியங்களை உருவாக்கிக் கொள்வேன். அதன் பொருட்டு பயிற்சியினால் மனம் அடங்கும் வரையறைகளை பின்னர் கண்டடைய துவங்கினேன். பின்னர் அது என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. அது எனது பிறவி பேச்சு குறைபாடு கரணமாக எனக்கு அருளப்பட்டதாக இருக்க வேண்டும். பேச்சு குறைபாட்டு காரணமாக எனக்குள் நான் எப்போதும் உரையாடிக் கொண்டே இருப்பவன். அதில் ஒவ்வொரு நிலையழிதலையும் மீள மீள எடுத்து விவாதித்துக் கொண்டே இருப்பேன். அது அந்த சூழலுக்கு தேவையான விழுமியங்களை எடுத்து அல்லது உருவாக்கி கொடுத்துவிடுவதை அறிந்திருக்கிறேன்


வேளுக்குடி தங்கி இருந்த வீட்டை அடைந்த போது தெரு திண்ணையில் அமர்ந்திருந்த ரமேஷ் என்னைக் கண்டதும் உற்சாகமானார். நேற்றிரவு என்ன நடந்தது என நான் கேட்பதற்கு முன்பாக அவரே சொல்லத் துவங்கினார். “பெரும் கூட்டமாக ஹயகிரீவர் கோவில் பிரசாதத்துடன் வேத கோஷம் முழங்க வேளுக்குடிக்கு சால்வை, மாலை அணிவிக்கப்பட்டு பல தட்டுகளில் கோவில் மரியாதை என தடபுடல் பட்டதுஎன்றார். இதைத் தான் உற்சாகமாக சொல்லி என்னை வெறுப்பேற்ற போகிறாரா ? அது எங்கோ எனது கட்டுமானத்தை சிதைத்துவிடக் கூடும். மையமாக சிரித்தபடி அவரை கடந்து செல்ல முயன்றேன். அவர் என்னை விடுவதாக இல்லை மேலதிக தகவலாக சொன்னது ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட அந்த சந்திப்பில் அவர்கள் தனியாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளில்வேளுக்குடியைபங்கெடுக்க சொன்னபோது. “இது நான் அரிகிருஷ்ணன் தலைமையிலான அமைப்பு ஏற்பாடு செய்து புதுவை வந்திருக்கிறேன். இந்த மூன்று நாட்களும் அவர்களுக்குறியது. அவர் வந்து என்னை எங்கு அழைத்து சென்றாலும் வருவேன். நானாக தனிப்பட்டு எதையும் செய்ய இயலாது இது என் நெறிஎன வேளுக்குடி தனது இயலமையை மிக மென்மையாக சொல்லி மறுத்துவிட்டார் என்கிற செய்தி எனக்கு மனநிறைவை கொடுத்தது. அவர் மறுத்ததது என்னை காப்பாற்றியது அதே சமயம் அதில் இருந்த அவரது தலைமைப் பண்பு என்னை ஆற்றுப்படுத்தியது. இனி நிகழ்த்த வேண்டியதில் தடையில்லை என எனக்குள் சொல்லிக் கொண்டேன்


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...