இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
புதன், 3 ஜனவரி, 2024
செவ்வாய், 26 டிசம்பர், 2023
சமுத்திரா பேலஸ் மகாபலிபுரம்
மகாபலிபுரம் அருகே “சமுத்திர பேலஸ்” ராஜஸ்தானிய பாணி நட்சத்திர விடுதி. ஒரு நாள் பயணமாக சென்று தங்கி வரலாம் என நிவாஸ், செல்வி பேரன் கிருஷ்ணவுடன் சென்றிருந்தோம். வரவேற்பு அலங்காரம் மேளம் பொய்கால் குதிரை ஆட்டம் என வெளிநாட்டினர்களுக்காக செய்யப்பட்டிருந்தது. நாங்களும் அவர்களப் போல அவற்றை பார்த்து கொண்டிருந்தோம். பேரன் கிருஷ்ணாவிடம் மேளக்காரர் வாசிக்கும் கோலை கொடுத்தும் ஒரே உற்சாகம்.
பெரிய நீச்சல் குளத்தை சுற்றி அனைத்து தங்கும் அறைகளையும் கட்டியிருந்தார்கள். விடுதியின் பின் பகுதி மிக நீண்டதாக கடற்கரை வரை சென்று தொட்டது முற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம். மொத்த விடுதியை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்தது. விடுதி உள் அலங்காரத்திற்கு முறையான ராஜ்தானி கட்டகலைக்கு அதிக கவனம் செலுத்தபடாமல் மேம்போக்காக இருப்பதாக பட்டது. கட்டடம் கட்டப்பட்டு இடையில் என்னமோ நடத்திருக்க வேண்டும்
![]() |
![]() |
![]() |
திங்கள், 11 டிசம்பர், 2023
புதன், 6 டிசம்பர், 2023
மறைக்க இயலாத காதல்
மறைக்க இயலாத காதல்
பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை. என் மனைவி என்னிடம் கேட்டார் “அது தான் அஜி திருமணம் செய்யப் போகும் பெண் போல” என்றாள் . நான் இருக்காது என்றேன். விழாவின் இறுதியில் அரங்கில் இருந்து வெளிவருகையில் அஜிதனை சந்தித்தேன் ஜெ அஜிதனைப் பற்றி பேசிய அந்த சொற்கள் நினைவிற்கு வர அஜியை பார்த்து புண்ணகைத்தேன். பதிலுக்கு அஜியும் தனது வெட்கப் சிரிப்புடன் விலகினார் அப்போது உடனிருந்த அந்த பெண்னை பார்த்தேன். அது இப்போது தெளிந்து வருகிறது அது தன்யா தான்.
நான் ஜெ பேச்சினால் அஜி சிறு சங்கடத்தில் இருப்பதாக நினைத்தேன். இன்று புகைப்படத்தை பார்த்த போது அன்று பார்த்த பெண் இவர்தான் என நினைக்கிறேன். மறுநாள் ஜெ வை அவரது அறையில் சந்தித்த போதும் அங்கு அந்த பெண் இருந்ததாக எனது மணைவி சொன்னாள். எனக்கு அது நினைவில் இல்லை.
அஜிதனுக்கே நவம்பர் மாதம் தான் தன்யா தனக்கு யார் என்னு உணர்ந்ததாக அவர் தந்தை, தாய் மற்றும் சகோதரிக்கான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். என் மனைவி அதை எப்படி ஊகித்தால் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை
ஜெ யின் 60 கொண்டாட்டம் கோவையில் நிகழ்ந்த போது நான் மனைவியுடன் கலந்து கொண்டேன். எனக்கு இரண்டு காரணம். ஒன்று விழாவில் கலந்து கொள்வது. இரண்டு இன்னும் ஒரு மாத காலம் கழிந்து நடைபெற இருக்கும் எனது 60 நிறைவு விழாவிற்கு ஜெ தம்பதிகளை அழைப்பது.
இருவரும் எனது 60 அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்டு எனக்கு மங்கள நான் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சிறு புண்ணகையுடன் ஜெ மறுப்பேதும் சொல்லாமல் இசைந்தார். விழாவிற்கு இருவரும் வந்து கலந்து கவண்டது வாழ்நாள் மகிழ்வான தருணங்களில் ஒன்று . ஜெ சென்னையில் இருந்து வர அருண்மொழிநங்கை நாகர்கோவிலில் இருந்து ரயிலில் வந்தது. ஜெ எனக்களித்த உச்ச இடம்.
கோவையில் நிகழ்ந்த ஜெ 60 மணிவிழாஙில. கலந்து கொள்ள மனைவியுடன் சென்றிருந்தேன். கிக்கானி அரங்காம் வெளிநில் குழுமியிருந்த நண்பர்களிட் அளவளாவி அரங்கு உள் நுழைய சற்று தாமதமானுத. விழா இன்னும் துவங்அகி இருக்க வில்லை. ஜெ வின் இருக்கை அருகே சென,று அவருக்கு வணக்கம் சொல்ல சட்டென எழுந்து அவர் பதில் வணக்கம் சொன்னது சற்று திகைப்பை கொடுத்தது.
நண்பர் டைனமிக் நடராஜன் பெரு முயற்சியால் நிகழும் விழா. வழக்கம் போல கோவை முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஆஜராகி இருந்தனர் மேடையும் நிரம்பி இருந்தது. ஒரு நிறைவான நிகழ்வு. அடுத்த மாதம் புதுவையில் அதே போன்ற ஒரு நிகழ்வை மிகச் சிறிய அளவில் நடத்தும் திட்டம் உருவானது.
புதிய பதிவுகள்
அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *
ஶ்ரீ : பதிவு : 700 / 889/ தேதி 09 ஆகஸ்ட் 2026 * முடிவுறாத துவக்கம் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 506 பதிவு : 506 / 692 / தேதி 27 டிசம்பர் 2019 * எதிர்பாராதது * “ ஆழுள்ளம் ” - 03 உளப்ப...
-
ஶ்ரீ : பதிவு : 290 / 377 / தேதி :- 06 ஜனவரி 2018 * தொடர்புறுத்தல் * “ ஆளுமையின் நிழல் ” - 36 கருதுகோளின்...
-
ஶ்ரீ : பதிவு : 701 / தேதி 19 ஜனவரி 2020 Netflix “Takers ” **** சில சமயம் இலக்கிய வாசிப்பை தவிர காட்சி ...
-
ஶ்ரீ : மணிவிழா - 82 07-08-2026 * அபௌர்ஷேயம் * ரிஷிகேசத்தல் இருந்து திரும்பிய பிறகு உருவான மனநிலை என்பது கூட ஒருவித ...
-
ஶ்ரீ: பதிவு :205 தேதி :-19 ஜூலை 2017 வெளியை நிறைத்த சொற்கள். "கோருவன அனைத்தையும் அளிக்கும் தெய்வம் அது. ஆனா...
-
ஶ்ரீ : பதிவு : 610 / 800 / தேதி 10 மார்ச் 2022 * முடிவில்லா சாத்தியகூறுகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 09. வேட்பாளர்...
-
https://www.jeyamohan.in/185015/ தூரன் விருது, இளங்கோவன் பொது தூரன் விருது, இளங்கோவன். கடலூர் சீனு June 28, 2023 தமிழ்விக்கி – தூரன் விர...
-
ஶ்ரீ : பதிவு : 374 / 555 / தேதி :- 19 ஜூலை 2018 * சில வாழ்வியல் தருணங்கள் * “ நெருக்கத்தின் விழைவு ” - 69 வி...











































.jpeg)













