https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 12 பிப்ரவரி, 2022

ஜெ 60

 வணக்கம். ஜெ க்கு அறுபதாம் ஆண்டுக்காக மலர் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். 'ஜெயமோகன் உங்களுக்கு அளித்தது என்ன?' இந்த கேள்விக்கு 150 சொற்களில் ஓரு பதில் வேண்டும். ஒரேயொரு ஐடியாவை மையப்படுத்தி சொன்னால் போதும். எனக்கு அனுப்பவும்.


-சுனில் கிருஷ்ணன்-








அன்புள்ள சுனில், வணக்கம்.


ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? எனக் கேட்டுக்கொண்டால், அதுஅழகியல்என்கிற கோட்பாட்டுச் சொல் . அது ஒரு ஆப்த வாக்கியம் போல . என்னளவில் அது ஒரு தரிசனம் . அதன் விரிவாக்கமேவெண்முரசு”. வாழ்வியலில் அனைத்திலும் அதை போட்டு பார்த்தபடி இருக்கிறேன் . முடிவிலியாக அது அளப்பரிய புரிதலை கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எனது வாழ்வியல் தேடலின் பொருட்டே திரு ஜெயமோகனை கண்டடைந்தேன் . அது ஒரு கீதா முகூர்த்தம் . வாழ்வியலின் தொடர் அலைக்கழிப்பினால் அனைத்தின் மீதும் பெரும் கசப்பும் விலகலும்  கொண்டிருந்த சூழ்லில் அதலிருந்து மீளவே உந்தப்பட்டு என் தேடலை தொடர்தேன் . எனது முதல் கடிதத்திற்குஜெஅனுப்பிய பதிலில் அந்தசொல்இருந்தது . ஆனால் அது பற்றிய புரிதல் திறந்து கொள்ள சில மாதங்கள் தேவையானது. கம்போடிய பயணத்தின் போது தான் அந்தமெய்மைச்சொல் திடீரென எனது மதில் எழுந்தது . உளவியல் ரீதியில் அது ஒரு அற்புத தரிசனம் .ஒரு மாலை மழைக் காலம் கம்போடிய கோவிலை பார்த்து முடித்து வெளிய வந்து திரும்பி நின்று அந்த ஒட்டு மொத்த அமைப்பை பார்த்த போது திடீரென உளம் பொங்கி கண்ணீருடன் அச்சொல்லைநினைத்துக் கொண்டேன். மானுட முயற்ச்சியின்அர்த்மும் அர்த்தமின்மையுமாகஅந்த கோவில் பிரமாண்டமாக என்முன் எழுந்து நின்று கொண்டிருந்தது . அத் தருணம் வாழ்கையை புரிதலுள்ளதாக ஆக்கியஅந்த சொல்என்னுடன் என் இறுதி காலம் வரை இருக்க வேண்டும் எனஎன் முழுமுதல் இறையைஇறைஞ்சினேன்.


தினம் என் குலமூதாதை , குரு நிறைக்கு நீரள்ளிவிடுவது எனது பூஜையின் துவக்கம். எனது பூஜையின் குரு நிறை வியாசர் தொடங்கி பீஷ்மர் என நீண்ட வரிசை கொண்டது.எனது குருவாக வரித்துக் கொண்ட ஜெயமோகனின் தாய் தந்தை அந்த நிரையில் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள் . நான் ஜெயமோகனிடம் இருந்து  பெற்றவைகளுக்கு கைமாறாக இதை எப்போதும் செய்து கொண்டிருப்பேன் .


நன்றி 

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

புதுவை



வியாழன், 10 பிப்ரவரி, 2022

அடையாளமாதல். * அறம் கூச்சத்தின் உடல்மொழி *

 


ஶ்ரீ:



பதிவு : 606  / 796 / தேதி 10 பிப்ரவரி  2022


* அறம் கூச்சத்தின் உடல்மொழி



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 04.




கூச்சம் அறத்தின் உடல் மொழி . தற்கணிப்பின் வழியாக அதை நியாயப்படுத்தி தன்மதிப்பை நிலைநிறுத்திக் கொள்கிறது . அது ஒருவகை பணிவின் வெளிப்பாடு அவை ஒருபோதும் குறுகலாக உருவெடுப்பதில்லைஒருவருடைய தன்னறம் புறவய காரணங்களால் தாக்குதலுக்கு உள்ளாகும் போது  உள்ளே ஒன்று அசைக்கப்பட்டு விடுகிறது, ஒரு சீண்டலைப் போலஅதில் எழும் நிலையழிதலை தனது தர்க்கத்தின் மூலமாக தனக்குள் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து உரையாடி ஒரு புள்ளியை கண்டடைந்து மனதை அமைதியை நோக்கிச் செலுத்துகிறது . அவரவரின் தன்னறத்தை பொறுத்து அவை மாறுபட்டுக் கொண்டே இருந்தாலும் , ஒரு நிலை அல்லது செயலுக்காக தன்னுடன் ஓங்கி தர்க்கித்துக் கொள்ளும் மனிதன் எல்லாவகையிலும் மேலானவன்அவன் தன்னைக் குறித்த தாழ்வு மனப்பான்மைக்குள் ஒருபோதும் செல்வதில்லை


Lk.அத்வாணி மற்றும் ரத்தன் டாடா போன்ற பெரும் ஆளுமைகள் கூட நம்ப முடியாத கூச்ச சுபாவிகளாக, அறிமுகமான உடன் சட்டென உரையாட தயக்கம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள் . ஒருமுறை அத்வாணியை சந்திக்க வந்த ரத்தன் டாடா அவருடன் ஒரு உரையாடலை துவங்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார் என சொல்லப்படுகிறது . அயோத்தியில் பாபரின் கும்மட்டம் பாதிப்புக்கு உள்ளாகாமல் போராட்டம் நடத்தப்படும் என அத்வாணியின் உறுதிமொழியை எப்படி அரசியல் மேதையான நரசிம்மராவ் நம்பினார் . அத்வாணியின் அறவுணர்வான கூச்சம் வெளிப்பாடுடன் அவரது ஆழ்மனம் உரையாடியிருக்க வேண்டும. அரசியல்வாதியின் உறுதிமொழி எப்படி ஏற்கலாம் என்பதை  ஒருபோதும் தர்ககத்தின் மூலம் விளக்கிவிட முடியாது,அது ஆழ்மனம் தொட்டெடுத்து தருவது . நல்ல அரசியல் ஆழ்மனதில் நிகழ்வது .


ஒரு பெரும் சுழல் போல உருவாகி வரும் மக்கள் திரளை எவராலும் கையாள முடியாது . அதை அத்வாணிக்கு அவரது அரசியலின் அனுபவம் சொல்லிக் கொடுக்கவில்லை. அல்லது அந்த கூச்சத்தினால் தன்னை முன்னிறுத்தாதல் மக்களின் நம்பிக்கையில் இருந்து தனது அரசியலை வென்றெடுக்க அவர் முயற்சித்து அவருக்கு எதிர்மறை விளைவை உருவாக்கியது அல்லது.கும்மட்டம் இடிக்கப்பட்டபிறகு நரசிம்மராவ் அத்வாணியின் மீது கடும் கோபம் கொண்டது அவர் தனது உறுதிமொழியை மீறினார் என்பதற்காக இருக்க முடியாது தனது ஆழ்மனக் கணிப்பு எப்படி பொய்த்தது என்கிற வலியில் இருந்து எழுந்திருக்கலாம் . பல வழக்குகள் அவர்மீது பாய்ந்தது போன்றவை வேறு செய்திகள். தலைவர் சண்முகமும் தயக்கமும், கூச்சமும் சுபாவமாக உள்ளவர் .


45 அகவை கடந்து வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் தரைவராக பொறுப்பில் வந்த போது அவருடைய கூச்சம் அவருக்கு தயக்கத்தை, தடுமாற்றத்தை கொடுத்திருக்கலாம் . பின்னர் தில்லியில் நடந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக தலைக்கு கரும் மை பூசி வந்த 55 வயது போளூர் வரதனை பார்த்த போது அந்த கூச்சம் சற்று விலகி என்னிடம்நான் பரவாயில்லை போலஎன கூறி சிரித்துக் கொண்டார் . வயது முதிர்ந்த குமரி அனந்தன் தமிழக காங்கிரஸ் தலைவரானதும் கூச்சமில்லாமல் போளூர் வரதனை இளஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க சிபாரிசு செய்தார் . அவர் குமரி அனந்தன் காலத்து இளைஞர் போல. அதற்கும் சண்முகம் சிபாரிசிற்கும் பெரிய வேறுபாடு உண்டு . குமரி அனந்தன் தனது தொடர்புறத்தலுக்கான இயலாமையை நீக்கிக் கொள்ள தனக்கு அணுக்கமான ஒருவரை கொண்டுவந்தார் . ஆனால் சண்முகம் வல்சராஜ் நியமனம் இளைஞர் காங்கிரஸை எந்த திசைக்கும் நகர இயலாது அதன் மேல் வைக்கப்பட்ட எடை. இளைஞர் காங்கிரஸின் வல்சராஜை தலைவராக நியமிக்கும் போது அவரது இளமை மிகுந்த உடல் தோற்றம் சண்முகம் தனது கூச்சத்தை கடக்க உதவியிருக்கலாம்


கூச்சத்தை வெல்ல தர்க்கதை முன்வைக்கும் போது அதற்கு மானுட அறத்தை மட்டுமே அளவுகோல் எடுக்க முடியும் . ஆழுள்ளத்தில் உறையும்அறம்ஒருவரில்சுபாவமாகவெளிப்படுகிறது. அந்த கூச்ச சுபாவத்தால் வாழ்க்கையில் இழப்பவைகள் குறித்த வருத்தத்தை, நிலையழிதலை தங்களதுஅறவுணர்வுடன் நிகழ்த்திக் கொள்ளும் தருக்கத்தைமுன்வைத்து தங்களை வெல்கிறார்கள் . எதிலும் அறம் பற்றி நம்பிக்கையில்லாதவர்களை சற்றும் கூச்சமில்லாதவர்களாக பார்த்திருக்கிறேன் . அவர்களைஅறம்ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை. மூப்பனாரும் வாழப்பாடி ராம்மூர்த்தியும் சமூகத்தின் வெவ்வேறு பக்கத்தில் இருந்து வந்திருந்தாலும் சற்று கூச்சமுள்ளவர்களே . அவர்களது தன்மதிப்பு பாதிப்பிற்குள்ளான போது தயங்காமல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார்கள் . வாழப்பாடி ராம்மூர்த்தி காங்கிரஸிற்கு திரும்பினார் ஆனால் மூப்பனார் கூட்டணியாக தன் அடையாளத்தை இழக்காமல் உள்ளே வந்தார் . சண்முகம் ஒருபோதும் காங்கிரஸில் இருந்து வெளியேறவில்லை ஆனால் ஒதுங்கிக் கொண்டார். இவை அவர்கள் தங்களின் தன்னறத்துடன் உரையாடி அடைந்த இடமாக இருக்கலாம்.


வல்சராஜ் தயக்கம் காரணமாக இளைஞர் காங்கிரஸின் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. அங்கு நிலவிய குழப்பம் அனைத்து செயல்பாடுகளையும் உறைநிலைக்கு கொண்டு சென்றது . சண்முகம் அதைத்தான் அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்க வேண்டும் . தில்லியில் இருந்து தொலைபேசியில் என்னுடன் பேசும் போது என்னை முதன்மை பொதுச் செயலாளராக நியமித்திருப்பதாக சொன்னார். இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் பட்டியலுடன் தில்லியில் ஒப்புதலுக்காக சென்ற போது சண்முகம் வைத்தரசைதான் முதன்மைச் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என சொன்னதாக கூறினார். நான் எந்த பதிலும் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் தனது விருப்பம் காரணமாக அதைச் செய்யாமல் அந்த பதவிக்கு என்னை சிபாரிசு செய்திருப்பதாக கூறினார் . பாலனுக்கு அணுக்கனாக நான் இருந்ததை அறிந்தவர் சண்முகம் என் மீது அவருக்கு இருக்கும் அவநம்பிக்கையை குறித்து எனக்கு வியப்பில்லை.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

அடையாளமாதல் * தீர்வுகளை உள்ளடக்கி எழும் சிக்கல் *

 


ஶ்ரீந:



பதிவு : 606  / 796 / தேதி 04 பிப்ரவரி  2022


* தீர்வுகளை உள்ளடக்கி எழும் சிக்கல்



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 04.




ஆழுள்ளத்தில் எழும் அலை சிந்தனையாக நிகழ்ந்து கொண்டிருப்பதை ஏதாவது ஒரு உடல் மொழியாக பிறருக்கு மட்டுமின்றி அவருக்கும் கூட சமயங்களில் வெளிப்படுகிறது . காரணம் அது அவர்கள் அறியாமல் தங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆழ்மனச் செயல்பாடு . அது ஒருவரின் எண்ணத்தை பிரதிபலிக்கக் கூடியது என்பது என்னை பற்றி என் மகள் விஜி சொன்னபோது முதலில் அதை மறுத்தேன் சில நாட்களில் என்னையும் அறியாது அது நிகழ்வதை , என்ன முயற்சித்தாலும் அதை நிறுத்த முடியமையால் அந்த புரிதலை அடைந்தேன். ஒவ்வொரு முறையும் நான் பேசி முடித்து எழுந்து செல்வதற்கு முன்னர் கை விரல் முட்டியால் மேஜையை மெல்லக் குட்டுவது போல சிறிய ஒலியெழுப்பி செல்வதாக சொன்ன போது நான் அதை நம்பாமல் என் மனைவியை பார்க்க அவள் அமோதித்தாள் . பின்னர் நான் கூர்ந்து என்னை கவனித்த போது அது என்னையும் மீறி நடக்கும் ஒன்று அந்த கணம் அதை நிகழ்த்துவது வேறு ஒன்று . என் மனம் ஒரு விஷயத்தை மிக தீவிரமாக எண்ணி முடித்த பிறகு மேலதிகமாக பேச ஒன்றும் இல்லை என்பதை என் உடல்வழியாக வெளிப்படுவது எனப் புரிந்து கொண்டேன் . நான் வாழ்நாளெலாம் சந்தித்த பல துறை சார்ந்த ஆளுமைகளில் இந்த உடல் மொழி வெளிப்பாட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.


இரவு தலைவர் வீட்டில் சந்தித்து  அந்த பட்டியலை அவரிடம் கொடுத்த போது நான் சொன்ன இரண்டு விஷயம். ஒன்று புதிதாக சிலரை ஏன் அழைக்க வேண்டும் . இரண்டு எதன் அடிப்படையில் . இதை அவர்களுக்கு புரியவைக்க முயன்றேன்நான் எனது ஆதரவாளர்களை உள்ள நுழைக்க முயல்கிறேன் என்பதை கடுமையாக மறுத்தேன். அதற்கு சாட்சி அந்த பட்டியல் உள்ளவர்களில் பெயர் அவர்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது . அவர்களில் எனது ஆதரவாளரகளாக யாரை சொல்லகிறார்கள் என்பது கேள்வி . தொகுதியில் களப் பணிச் செய்து கொண்டிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கையளித்து உள்ளே கொண்டு வந்திருக்கிறேன் . நான்  அவர்களுக்கு பதவி குறித்து எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை என்பதை விட அவர்கள் அதை எதிர்பார்த்து வந்தவர்களும் அல்ல . அதே சமயம் இது பதவி நியமனம் குறித்த கூட்டமில்லை . புதியவர்களுக்கு கட்சியை புரியவைப்பதும் அதில் நம்பிக்கையை குறித்து பேசுவதும் . அரசியலின் விழுமியம் சார்ந்த நம்பிக்கை முன்வைப்பது . அரசியலில் தனிமனித ஒழுக்கம பற்றிய வளர்த்தெடுப்புகள் குறித்து மிக விரிவாக தயாரிக்கப்பட உள்ள கூட்டத்தில் நிரல்கள் அவர்கள் முன்னால் நிகழ வேண்டும் என நினைக்கிறேன் . இதில் என்னை முன்னிலைப்படுத்துக் கொள்ளும் தேவை எனக்கில்லை . கண்ணன் , பாலன் போன்றவர்களை முன்வைத்த அரசியல் சென்று சேர்ந்த இடமென்ன என்பதையும் அதன் இன்றைய நிலையை என்ன என்பதை புதிதாக உள்நுழைய இருப்பவர்கள் முன் வைக்க கூடாதென்றால், பின் எவர் முன்பாக அவை வைக்கப்பட வேண்டும் என கூறட்டும் .


இவர்கள் வேண்டாம் சரி . மாற்று நண்பர்களின் பெயர்களை இவர்கள் சொல்லட்டும் அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்கிறேன் . ஆனால் கொடுக்க் கூடாது என யார் நொல்ல முடியும் . யாரும் வேண்டாம் என்றால் யாருக்கானது இந்த இயக்கம் . கடந்த 4 ஆண்டுகளில் நீங்கள் நடத்திய கூட்டம் அல்லது போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கொடி மற்றும் பதாகைகளுடன் வந்து கலந்து கொண்டார்கள் அப்போது சொல்லியிருக்கலாம் இந்த மறுப்பை ,தவிர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான இவர்கள் முன்னெடுத்த செயல்பாடுகள் என்ன என்று இங்கு சொல்லட்டும் . இவர்களின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் வரட்டும் நான் அவர்கள் வேண்டாம் எனச் சொல்ல மாட்டேன் . இதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை என்றதும் . கூடியிருந்தவர்களில் நிகழ்ந்த உள அசைவை உணர முடிந்தது . சண்முகமும்அது சரிதானே விட்டுப் போனவர்கள் யார் என முடிவு செய்து அவர்களையும் அழைத்து வாருங்கள் பிரச்சனை இத்துடன் முடியட்டும்என் சொல்லிவிட்டார் . சிக்கல்கள் இந்த அளவில் முடிந்து  போன பிறகு எனக்குள் அதுவரை அடங்கி இருந்து சீற்றம் நிலையழிதலாக மாறியது உள்ளக்குள்ளே ஒன்று அசைந்து விட்டதை புரிந்து கொள்ள முடிந்தது . இதில் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளன் பாண்டினும் இருந்தான் .   

என்னை சார்ந்து நிற்பாதாக தோற்றம் கொடுத்தாலும். அவன் தன்னை முன்னிறுத்தும் அரசியலுக்கு காத்திருந்தான் . நாராயணசாமி இந்த விஷயத்தில் அவனை வெளிப்படையாக ஆதரிப்பார் என அனைவருக்கும் தெரியும் .நான் சண்முகத்தை விட்டு நாராயணசாமியை ஆதரிக்க வேண்டும் எனப் பல முறை என்னிடம் விவாதித்திருந்தான்


கட்சி அரசியல் என்பது எங்களைப் பொறுத்தவரை ஒரு தலைவரை பின் தொடர்ந்தே நிலைக்க முடியும் . அது ரசிகர் மன்ற செயல்பாடுகள் போல் இல்லாமல் நாம் யாரை பின் தொடர்கிறோம் அவரது அரசியல் விழுமியங்கள் என்ன அவை அவர் செயல்பாட்டில் எப்படி வெளிப்படுகிறது எனபது குறித்து முடிவு செய்யப்படுகிறது. நாராயணசாமி முதல் நிலை தலைவராக ஒரு நாளும் வர இயலாது . விதி வசத்தால் அந்த இடத்தை அடைந்தார் என்றால் அவர் தனக்கும் இருந்த பதவிக்கும் பழியே சேர்ப்பார். அவரால் நிரந்தரமாக ஒன்றை எப்போதும் முன்வைக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்றிக் கொள்வது அரசியல் என நம்புகிறவர். அவர் எத்தகைய உயர்ந்த பதவிநில் இருந்தாலும் தனக்கு பின்னால் ஒரு நிரையை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றேன் . இதில் வேடிக்கை அவன் என்னை மறுக்கவில்லை என்பதுதான் .


கூட்டம் விடபட்டவரகளின் பட்டியலுடன் தலைவரை வந்து சந்திப்பதாக கூறி கலைந்து சென்றார்கள். பறைவை கூட்டம கலைந்து சென்ற மரம் போல அமைதி திரும்பியது. கட்சியின் வேறு சிக்கல்களை சொல்ல வந்திருந்த முன்னணித் தலைவர்கள் சிலர் நாளை வந்து சந்திப்பதாக சொல்லி அகன்ற பின்னர் நானும் தலைவர் மட்டுலுமாக அங்கு மிச்சப்பட்டிருந்தோம் . காலை அலுவலகத்தில் வைத்த அதே வாதத்தை மட்டும் இன்னும் விரிவாக முன்வைத்தேன். கடந்த மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கும் கூட்டத்திற்கும் என்னிடம் கொடுக்கப்பட்ட நூற்றுக் கணக்கான அழைப்பிதழ்கள் உரிய இடத்தில் சென்று சேர்ந்து அவர்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள் அதை இங்குள்ளவர்கள் யார் மறுக்க முடியும் . அது போல இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யார் யரை அழைத்து வந்தனர் என்கிற பட்டியலை கொடுக்க இயலுமா . அவ்வாறு வந்தவர்கள் அனாமதேயங்கள் என்பது கடும் இளிவரல். இப்போது அவர்களை அழைக்க வேண்டாம் என்றார் நான் அதற்கு கட்டுப்படுகறேன் . இனி அவர்கள எதிலும் கலந்து கொள்ள அழைக்கமாட்டேன் . ஊசுடு நிகழ்வு அந்த ஒரு தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் இப்போது அந்த கூட்டதில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் அனாமதேயங்கள் என்றால் இந்த தலைவர்கள் நாளை அவர்களுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் . அமைதியாக இருந்து சண்முகம் சற்று சிரித்தபடிஇந்த கூட்டத்தில் மனம் சூம்பிய ஒருவனுக்கு இங்கிருந்து இந்த செயல்பாடு எங்கு செல்லும் என்கிற தெளிவான கணிப்பிருக்கிறது அது தான் அவனுக்கு இந்த நிலைகொள்ளாமையை கொடுக்கிறது . அவன் பிறரின் காழ்ப்பை தூண்டி இதை செயலிழக்க வைக்க முயல்கிறார்கள்.

சரி நீ ஆக வேண்டியதைப் பார் இனி இதுபற்றி விவாதிக்க வேண்டாம்என்றார்

புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...