https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் - * சிதைந்து போன கடந்த காலம் *

 ஶ்ரீ:



பதிவு : 527  / 719 / தேதி 24 ஆகஸ்ட் 2020



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 04 .






தொகுதிகளுக்கு தலைவர்களாக வரக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்ததை இப்போது பயண்படுத்தி பார்க்க முடிவெடுத்தேன் . அதில் கடைசி நேர மாற்றங்களை செய்து அவர்களுக்கு முறைப்படி செய்தி அனுப்பினேன் . தில்லியில் நடைபெற இருக்கும் கூட்டத்தை யாரும் தவிற்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் . மிகச்சிலரை தவிர மற்றவர்கள் தில்லி வருவதை உறுதி செய்தனர் .பட்டியலை இறுதி செய்து தலைவரிடம் கொடுக்க காத்திருந்தேன் . 75 பேரை தில்லி அழைத்து சென்று வருவது மிகவும் செலவேறியது என்பதால் என்னால் அதற்கு செலவு செய்ய இயலாது . அனைவரும் தில்லி சென்று வருவதற்கான செலவை அவரே ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார் . அது அவரின்  வழமை .


கடைசி நிமிடத்தில் வல்சராஜ் தில்லி மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பது மேலும் ,புதுவை வருவதாகவும் இணைந்து செல்லலாம் என எனக்கு செய்தி அனுப்பி இருந்தார் .அவர் விமானத்தில் செல்பவர் .நான் புதிய நண்பர்களுடன் ரயிலில் செல்ல முடிவெடுத்தேன் .தில்லி ரயில் பயணம் சுமார் இரண்டு நாளெடுப்பது நண்பர்களுடன் உரையாட நிறைய நேரம் கொடுப்பது . அனைவரின் கவனத்தையும் சிதறரடிக்காமல் ஓரிடத்தில் குவித்து கொடுப்பது என்பதால் அதுவே சிறந்தது .

எனது எதிர்கால திட்டம் குறித்து விரிவாக உரையாட ஒரு நல் வாய்ப்பு . அதை ஒருபோதும் தவறவிடக்கூடாது .


எனக்கு ரயில் பயணங்கள் மிகுந்த உற்சாகம் தருவதாக இருப்பது என்பது அடிப்படையான காரணமாக இருந்தாலும் அந்த பயணங்கள்  எனக்கு எப்போதும் பல்வேறு ஆழ்மன புரிதல்களை கொடுத்திருக்கிறது . திகைத்து நின்ற முட்டுச்சந்துகளில் இருந்து வெளிவருவதற்கான வழிகளை நான் சட்டென கண்டுகொண்டது ரயில் பயணத்தின் போது .ரயில் பயணம் எதையும் நேர்மறையாக சிந்திக்க செய்வது , மிகுந்த செயலூக்கம் கொடுப்பது அது ஏன் என்பதற்கான   காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை . 


தில்லிக்கு வருபவர்கள் பட்டியலை பல முறை சண்முகம் வற்புறுத்தி கேட்ட பிறகும்  நான் அதை அவரிடம்  கொடுக்க காலம் தாழ்த்தி வந்தேன் . அவர் என்னிடம் கேட்பது போலவே மாநில அனைத்து தலைவர்களிடமும் கேட்டிருப்பார். அது தவிர கட்சியின் அனைத்து தொகுதி தலைவர்களிடமிருந்தும் ஒரு பட்டியலை கேட்டு வாங்குவார் என்பதால் நான் எனது பட்டியலை அவரிடம் கொடுக்க கால தாமதப்படுத்தினேன்.  


நிஜமான தற்சார்பு அமைப்பு ஒன்றை அதன் அடிப்படை கட்டமைப்புகளுடன் எழுப்புவது  மட்டுமே நீண்டகால இளைஞர் அரசியல் நிலைத்தன்மை உருவாகிவரும் .இதில் என்னை ஏற்பவர் மட்டும் இணைக்கப்படுவது குறுங் குழுவே உருவாகி வரும்  அதை நான் விழையவில்லை . அது எந்நிலையிலும் மாநில அரசியல் நுழைய இடம் கொடுக்காது.


 அதை கடந்த காலத்தில் இருந்து கற்றிருந்தேன் . முன்னாள் இளைஞர் இமைப்பின் பெரும் தலைவராக அறியப்பட்ட கண்ணனும் , அவரை நகல் செய்ய முயன்ற பாலனும் சென்று சேர்ந்தது முற்றழிவு மட்டுமே.அதை பிறருக்கு நிகழ்தியவர்கள் இறுதியில் அவர்களும் அங்குதான் சென்றனர்.


மாநில இயக்கத்தை நான் முன்னின்று வழிநடத்தும் காலம் என ஒன்று வரும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை . இப்போது அந்த வாய்ப்பு பலர் கைகளில் இருந்து நழுவி என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதை விருப்பு வெறுப்பிற்கு அப்பால் நின்று செய்ய முயற்சிப்பது அதன் முற்றான வெற்றிக்கு இட்டுச் செல்லும் . எனக்கான அடையாளம் அதில் மிக மெல்லத்தான் உருவாகி வரும் . ஒருக்கால் அப்படி நிகழாது போனாலும் , அதற்காக முயற்சித்தது மட்டுமே மனநிறைவை கொடுக்க வல்லது.


தில்லி மாநாட்டிற்கு நான் தெறிவு செய்து வைத்திருந்தார்களில் பெரும்பாண்மையோர் அந்தந்த தொகுதி தலைமைக்கு அனுக்கமானவர்கள் , அரசியல் காரணங்களுக்காக தொகுதி முக்கியஸ்தர்கள் , அவர்களை தவிர்ககவே எப்போம் முயல்வார்கள். மாநில அரசியலில் ஈடுபாடு  அரசியலின் நெளிவுகளை சொல்லிக் கொடுப்பது . ஒரு முறை மாநில அரசியலின் போக்கை அறிந்து கொண்டவர்கள் பின் ஒருபோதும் தொகுதி அரசியலை திரும்பமாட்டார்கள்..


அவர்களை தொகுதி அரசியலில் முடக்கிப் போட்டு தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர்களின் பெயர்களை இணைக்க மாட்டார்கள் .அவர்கள் தொகுதி அரசியலுக்கு திரும்பமாட்டார்கள் என்பதுடன் தொகுதி தலைமைக்கு கட்டுப்படாமல் போக வாய்ப்பிருப்பதாக அவர்கள் கருதுவதே அதற்கான காரணம் .


அனைத்து தலைவர்களும் கொடுத்த பட்டியலில், விடுபட்டவர்கள் பெயர்களை சூர்யநாராயணனிடம் இருந்து பெறுவது சிரமமல்ல ,  விடுபட்டவர்களின் பெயர்களை மட்டும் கொடுக்கும் பட்டியலில் இணைத்து கொடுப்பதின் வழியாக , நான் நினைக்கும்  முழுமையான அமைப்பை அது உருவாக்க உதவலாம் .


அது ஒரு முக்கிய அரசியல் சூழல் வெகு விரைவில் நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக தன்னை முன்னிறுத்த முயல்வார் என கணித்திருந்தேன் . ஆனால் அது குறித்து எனக்கு அனுக்கமானவர்களிடம் கூட கருத்து பரிமாறிக் கொள்ள இயலாத சூழல் . புதுவை மிக சிறிய மாநிலம் அலர் செய்திகளும் ஊகங்களும் காட்டுத்தீயாக பரவக் கூடியவை . அனைத்திலும் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன் .




வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அடையாளமாதல் - 526 .* மாறாத கோட்பாடு *

 ஶ்ரீ:






மிக நீண்ட  இடைவெளிக்கு பின்னர் மீளவும் எனது கடந்த சென்ற நினைவுகளில் இருந்து என்னை திரட்டிக் கொள்ள நான் துவங்கிய பதிவுகளை தொடர நினைக்கின்றேன் . இது ஒரு வித அவதனிப்பின் வேறொரு வடிவமாக இருக்கலாம் . சொல் திரளாத காரணத்தினால் இந்த இடைவெளி என நினைக்கிறேன் .பிறிதொன்று வெண்முரசு முடிவுறும் காலத்தில் இருந்தது . மிக விசையுடன் எழுதப்பட்ட நேரம் கண்ணனின் மறைவு பெரும் நிலையழிதலை கொடுத்தது . எந்த காரணத்திற்காக நான் வெண்முரசிற்குள் வந்ததேனோ அது நிகழும் அருகில் வேறு ஒன்றை என்னால் யோசிக்க இயலவில்லை .எனது மெய்மைக்கான சொல்லை அடைந்திருந்தேன் . தேடல்கள் அங்கிருந்து வேறொரு வடிவம் கொள்ள துவங்கி இருந்தது . அதனால் இதை மறுபடியும் எழுதி பார்ப்பது என முடிவு செய்தேன் .


கிருபநிதி அரிகிருஷ்ணன் 



அடையாளமாதல் - 526


பதிவு : 526  / 718 / தேதி 20 ஆகஸ்ட் 2020


* மாறாத கோட்பாடு * 



“ ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 01 .





1996 ல் பொது செயளாலராக பொறுப்பேற்ற பிறகும் பல வித தடைகளை தாண்டி எனது திட்டப்படி அமைப்பை கொண்டு செல்ல நான்கு வருடம் பிடித்தது .முதற் காரணம் பழைய நிர்வாகிகளை உள்ளே கொண்டுவரும் முயற்சியில்  தோல்வி அடைந்திருந்தேன் .இரண்டாவது புதியவர்களை கட்சி நிர்வாகத்திற்கு பழக்கி எடுப்பது சாத்தியமில்லை என தெளிவாக புரிந்திருந்திருந்தேன் . ஆனால் வாய்ப்புகளின் கதவு திறந்து கிடக்கும் போது அதை புறந்தள்ளிச் செல்வது  சரியல்ல என்பதே எனது எண்ணமாக அப்போது இருந்தது . புதியவர்களை கொண்டு முயற்சித்து பார்ப்பது என்று அவர்களை முறைப்படுத்தும் திட்டங்களை உருவாக்க துவங்கினேன் .


அரசியல் நுண்ணிய மனங்களின் விளையாட்டு அதை ஒருவருக்கு கற்றுத் தருவது என்பதை போல மடமை பிறிதில்லை .என்னுடன் நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகளின் செயல்படாமை எனக்கு சூழ்நிலையை சாதகப்படுத்திக் கொடுத்ததிருந்தது  . எனது எதிரணியினர் என்னை முடக்க  வல்சராஜை பயன்படுத்தினர்  .இப்போது அவர் ஒதுங்கிக் கொள்ள எதிர் நண்பர்களுக்கு சண்முகத்தை அனுக துணிச்சலில்லை . இருப்பினும் என்னுடன் நியமிக்கப்பட்ட ஐந்து பொது செயலாளர்களில் ஒருவரான வையத்தரசு மட்டும் சண்முகத்திடம் என்னை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார் . 


வையத்தரசின் குற்றச்சாட்டுகளை சண்முகம் தனது வழமையான பாணியில் எதிர்கொண்டார் , அது என்னை அனைத்தையும் கடந்து செயல்படும் அடங்காமையாக பிறரால் பார்கப்பட்டிருக்க வேண்டும் .மாநில இளைஞர் காங்கிரஸில் தலைவராக வல்சராஜ் அமைப்பில் ஐந்து பொது செயளாலர்களில் ஒருவனாக இருக்கையில் எனக்கென தனித்த அதிகாரங்கள் என எதுவும் இல்லை . ஆனால் எனக்கிருந்த “சண்முகத்துடனான அனுக்கம்” என்கிற   உரிய இடம் என்கிற பிறரின் புரிதல் !!! அப்போது  நன்றாக வேலை செய்யத் துவங்கி இருக்க வேண்டும்  .


அரசியலில் ஒருவர் பின்னால் அணித்திரளும் எளிய மக்கள் பற்றிய ஆச்சர்யம் எனக்கு எப்போதும் இருப்பது .அரசியலில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர்களே வெற்றிபெறும் நபரை கணிக்கின்றனர் . அவர்களின் கணிப்பு 90 சதவிகிதம் பொய்ப்பதில்லை . அவர்கள் யாரை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறார்களோ , அதை உணரும் இரண்டாம் நிலை தலைவர்கள் அவர்களை முறைப்படுத்த தங்கள் இடம் நோக்கி நகர்கிறார்கள் .அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . இந்த செயல்முறை தொடங்கிய பிறகு வெற்றி பெருபவராக கணிக்கப்பட்டவர் வெற்றியை நெருங்குகிறார் .இது என்றும் மாறாத இயற்கையின் விந்தையான வதி .


இவை அனைத்தையும் கடந்து தனது செயல்பாட்டை சரியாக வகுப்பவருக்கு முயற்சி அவரின்  உச்ச கட்ட வெற்றியை தொடுகிறது .வெண்முரசின் களிற்றுயானை நிறையில் “எளிய மக்கள், தங்கள் வாழ்வில் வெற்றி என ஒன்றை உணராதவர்கள். வெற்றியின் பொருட்டே அவர்கள் வெல்பவர்களை வழிபடுகிறார்கள், அவ்வெற்றி தங்கள் வெற்றியென கொண்டாடுகையில் வாழ்வை பொருட்செறிவு கொண்டதாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு அத்தலைவர்களின் கொடுமைகளைக்கூட பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்களின் தோல்வியில் உளம் சோர்கிறார்கள். ஆனால் மிக விரைவிலேயே தோற்றவர்களை விட்டு விலகிவிடுகிறார்கள். அவர்களை தங்களிலிருந்து இயல்பாக அகற்றிக்கொள்கிறார்கள் எச்சமின்றி மறக்கவும் அவர்களால் முடியும் என்பது சாமாண்யர்களின் உளவிவியல். வெண்முரசு அதை மிக செறிவாக முன்வைப்பது பிரமிப்பளிப்பது .


அமைப்பிற்கு புதிதாக வரும் சிலரை கொண்டே அதை நிரப்ப வேண்டிய கட்டாயம் எனக்கு  . அது மிகுந்த வெறுப்பையும் , ஆயாசத்தையும் கொடுத்த காலம் . நீண்ட யோசனைக்கு பிறகு தொகுதி நிர்வாக கமிட்டியை நியமனம் செய்வது என முடிவுசெய்தேன் . அது  மாநில கட்சி அமைப்பை கொந்தளிக்க செய்வது அதை விட தலைவரிடம் அதற்கான அனுமதியை பெறுவது மேலும் சிக்கலானது .ஏறாக்குறைய நடவாதது .பலர் பலமுறை தோற்றது ஆனால் அதை முயற்சித்து பார்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை .


சண்முகம் எனது முயற்சிகளுக்கு எதிரானவராக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அரசியல் நிகழ்தல் என்பது பலவித முரணியக்கம் வழியாக நிலைகொள்வது . சில சாதகமற்ற நிலைகளை தலைவர்கள் மாற்ற ஒரு போதும் முயன்றதில்லை காரணம் அது நிலவும் சமன்பாட்டை எங்கோ ஒரு புள்ளியில் குலைத்து விடுவதற்கான வாய்பபை அஞ்சுகிறார்கள் .


இதன் அரசியல் யதாரத்தம் புரிந்திருந்ததால் சரியான தருணத்திற்கு காத்திருந்த போதுதான் தில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டு அழைப்பு கிடைத்தது அதை  பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன் .சண்முகத்துடன் அது  ஒரு விபரீத விளையாட்டு என்றாலும் அதை செய்து பார்க்க முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் சண்முகம் அனுமதிக்கும் செறிவான உரையாடலும் அதற்கு பின் உள்ள அரசியல் யதரத்தத்தையும், அதை முன்வைக்கும் திறனையும் சரியாக செய்ய இயலுமானால் அவரால் அதை புறக்கணிக்க இயலாது என்பது நான் நன்கு அறிந்தது  அதை இம்முறை உபயோகப் படுத்திப் பார்க்க முடிவெடுத்தேன். .


வல்சராஜ் தலைவராக நியமிக்கப்பட்ட போது , பழைய அமைப்பில் இருந்த சுய மரியாதையும் செல்வாக்குமுள்ள இரண்டாம் நிலை தலைவர்களில் பலர் ஒதுங்கிக் கொள்ள பதவியில் இருப்பதனால் கிடைக்கும் அங்கீகாரத்தை விழையும் சிலர் மட்டும் வல்சராஜை சூழ அமர்ந்து கொண்டனர் .அவர்களும் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேறியதும் உருவான வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு தானாக வாய்த்தது  என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது .


புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...