https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 2 ஜூன், 2017

அடையாளமாதல் - 86 * கருத்தெனும் துணுக்குகள் *

ஶ்ரீ:






அடையாளமாதல் - 86
* கருத்தெனும் துணுக்குகள்   *
இயக்க பின்புலம் - 13
அரசியல் களம் - 26



கண்ணனுடைய அறிவுதலின் படி அவர்கள் அனைவரும் சண்முகத்திற்கு எதிராக வேலை செய்கிறாரகள் என்று எங்கும் பேசப்பட்டது , ஒருகட்டத்தில் சண்முகம் தனக்கெதிராக வேளை செய்ததாக யாரை நினைக்கிறாரோ அவர்களைக்  காதி போர்டில் இருந்து வேலை நீக்கம் செய்வதை முழுநேரமாக செய்யும்படி சண்முகம் தரப்பு அவருக்கு அழுத்தம் கொடுத்தபடி இருந்தனர்

அதன்படி வேலை இழந்தவர்கள்  இன்னும் தெளிவாக சண்முகத்திற்கெதிராக தேர்தல் வேலை செய்ய போனார்கள் . இது சண்முகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது . கடலோரப்பகுதிகளில் வாக்கு பெறுவது இயலாது என்றாகிப்போனது . நகர் பகுதியில் சேகரிக்கும்  வாக்கு மட்டுமாவது தேருமானால் வெற்றி சிறு இக்கட்டிற்கு பிறகு சாதகமாகலாம் என்பது கணக்கு . ஆனால் அவரை சுற்றியிருந்தவர்கள் நகர்புறத்திற்கு மிக அன்னியர்கள் . ஓரிருவரைத் தவிற பிறர் சென்றால் கிடைப்பதையும் கெடுக்குமளவிற்கு வெகு ஜெனவிரோதிகள். மதிப்பு மிக்கவர்கள் வயோதிகர்கள் , அவர்கள் கண்ணனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சண்முகம் தோற்றுக்கொண்டிருக்கிறார் , என்றேன்.

நான் விரிவாக சொல்ல சொல்ல சுப்பாராயன் ஒன்றும் பேசாது கேட்டபடி இருந்தார் . பின்னர் நான் சொன்னவற்றில் முதல் பகுதி அவருக்கு தெரிந்ததே ஆனால் இரண்டாம் பகுதி அவருக்கு புதிதாக இருந்தது . என்னிடம் "எங்கிருந்து இவற்றை திரட்டினாய்" என்றார் . அதற்கு நான் " தகவல்கள் சிறு சிறு குறிப்புகளாகத்தான் கிடைக்கும் அவற்றை தொடர்புறுத்தி இணைத்து ஒருங்கினால் கிடைப்பதே செய்தி. அது ஒரு யூகம் மட்டுமே . இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை "என்றேன்

அட்டகாசமாக சிரித்தபடி என் தோளில் தட்டி தாமோதரனை பார்த்து "நான் அரியை பார்த்த முதல் பார்வையிலேயே முடிவு செய்தேன் , உங்களைவிட வேறு மாதிரி என்று நீ தான் நம்பவில்லை " என்றார் . தாமோதரனும் அதை ஆமோதித்து, தனக்கு சண்முகத்தை பற்றிய செய்தி தனக்கு கிரும்பாக்கத்தில் கிடைத்தும் ஏறக்குறைய இதுவே என்றார்.அடுத்த என்ன என்றதும் . நான் எனக்குத் தோன்றியதை  சொல்லத் தொடங்கினேன் திடீரென தாமோதரன் என தோள்மேல் கைவைத்து என்னை பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு மெல்லிய விசில் சப்தம் கொடுத்தார் அது தாக்கப்படுவதற்கான எச்சரிக்கை . எங்களுடன் வந்திருந்த நான்குபேர்கள் எங்களை சுற்றி நின்று கொண்டார்கள் .

அங்கிருந்து திரும்போதுதான் கவனித்தேன் எதிர் வேட்பாளர் சுபாராய கவுண்டர் வீடு டீ கடைக்கு வெகு அருகாமையில் இருந்ததைநங்கள் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் கேட்டிருக்க வாய்ப்புள்ளது . நான் காதுகளில் திடீர் உஷ்ணத்தை உணர்தேன் . அங்கு ரோட்டில் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தவர் சுப்பாராய காண்டரே . வைத்திலிங்கம் வீட்டிற்கு வேறு பாதைகள் இல்லை இவரை கடந்தே செல்ல வேண்டும் தாமோதரனை லேசாக குறிப்புணர்த்தினேன் அவர் சட்டென புரிந்துகொண்டார் . அவர் முன்னே சென்றார் .

தாமோதரன் ஆறடி ஆஜானுபாகு ஆள் தாடிவைத்தபடி பார்பதற்கு ஒருமாதிரி இருப்பதால் அவருடன் வம்பு வைத்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள் . அது நிஜமும் கூட சில பிரச்சனைகளில் அவர் நடத்திய தாக்குதல்களை பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறேன் . அந்தளவு ஒரு மனிதனை சற்றும் யோசிக்காது தாக்குவதை நெருக்கத்தில் பார்த்திருக்கிறேன் . என்னால் ஒருகாலும் அப்படி நடந்து கொள்ள இயலாது என்பதையும் புரிந்திருந்தேன்

அவர் முன்னே செல்ல நாங்கள் அவருக்கு பின்னல் சென்றோம் , ஆனால் நான் நினைத்தமாதிரி இல்லை. அவர்கள் நேராக தாமோதரனை யார் எந்த ஊர் என்கிற தோரணையில் ஏதோ கேட்க இவர் அதற்கு பதில் சொல்லாமல் கடக்க முயன்றார் . ஏறக்குறைய கைகலப்பு மாதிரி ஆரம்பிக்கும் முன்பாக எங்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர் அங்கு வந்து சேர கூட்டம் கூடிவிட்டது

என்னை அடையாளம் கண்டுகொண்டே இது துவங்கியிருக்குக் வேண்டும் . காவல்துறை ரோந்து வண்டி வர உஷ்ணம் குறையாது விலக்கி விடப்பட்டனர் . அதற்குள் பாலன் அங்கு வந்து அவர் சப்தம்போட ஒரு மாதிரி மோதல் முடிவுக்கு வந்தது . என்னுடைய கார் அருகில் வேகமாக வர அனைவரும் வண்டிக்குள் ஏறிக்கொண்டோம் . அந்த தெரு முனை வயல்வெளி சூழ்ந்த பகுதிகள் அதை தாண்டுவதற்குள் பெருத்த சப்தத்தை ஏற்படுத்திக்கொண்டு கல் ஒன்று வண்டியை தாக்கி தெறித்தபடி எங்களை தாண்டிச்சென்றது வண்டி டயர்தேயும் சப்தமும் நாற்றமுமாக நிற்க அனைவரும் ஒரேசமயத்தில் வண்டியிலிருந்து வெளியே பாய்ந்தார்கள்.

வண்டியை சடாரென நிறுத்தி ஒரே சமயத்தில் வெளியே வந்ததும்  சிலர் ஓடுவதை தெரிந்தது தாமோதரனுடன் சிலர் அவர்களை துரத்த எத்தனிக்க . மறுபடியும் போலீஸ் குறுக்கே வந்துவிட ஒன்றும் செய்வதற்கில்லாமல் வண்டியேறினோம் . பாலன் சுப்பாரனிடம் கடிந்து கொண்டார்


-ஏற்கனவே அவர்களுக்கு அரியை தெரியும் பின் எதற்கு கவுண்டர் வீடு அருகில் சென்றீர்கள் என கோபப்பட்டார் . தாமோதரன் பேச்சை மாற்ற "அரி நிறைய புதிய தகவல் சொல்லுகிறார் உங்களுக்கு தெரியுமா" என்கிறார் .பாலன் என்ன என்று பார்க்க , நான் விருப்பமில்லாமல் சுருக்கமாக சில விஷயங்களை சொன்னேன் . வைத்திலிங்கம் என்ன சொன்னார் என்றதும் . "எதையும் தெளிவாக பேசவில்லை கண்ணனுக்கு அஞ்சுகிறார் . தன்னுடைய பெயர் இதில் தேவை இல்லாமல் அடிபடுவதாக நினைக்கிறார் "என்றார் , "தான் நினைத்ததைவிட அரசியல் வேறுமாதிரி இருக்கிறது" என்கிறார் . இது எதிர்பார்த்ததுதான் . "அரசியலை விட்டு விலக நினைப்பதாக சொல்லுவது அரசியல் தலைவர்வதற்கு  முதல் தகுதி" என்றேன் . என்னை சற்று உறுத்து பார்த்துவிட்டு திரும்பி கொண்டார் தாமோதரன் மெல்ல சிரிக்க நானும் அவருடன் இணைந்து கொண்டேன்

வியாழன், 1 ஜூன், 2017

அடையாளமாதல் - 85 * நிழலிடும் மனிதர்கள் *

ஶ்ரீ:






அடையாளமாதல் - 85
* நிழலிடும் மனிதர்கள்  *
இயக்க பின்புலம் - 12
அரசியல் களம் - 25





க்பால் மரைக்காரின் தம்பி , அவரது அரசியல் முகம் , மிக மென்மையான குரல், கசப்பை ஒருபோதும் வெளிக்காட்டாத நல்ல உடல்மொழியினால் , உற்சாகமாக தன் பொறி விலங்குடன் உறையாடியபடி இருப்பவர் . மரைக்காரின் அரசியல் வெற்றிக்கு இக்பால் மிக முக்கிய ஆளுமையாக எல்லா அணியினராலும் அறியப்படுபவர் . மரைகாரின் அரசியல் நம்பகத்தன்மைக்கு வலுசேர்பவர், அவரது தாட்சனயமற்ற முடிபுகளின்  நுட்பமான அறுவை சிகிழ்ச்சை சிறு கத்தி  , அவை இக்பாலின் உறுதிமொழிகளுக்கு காரணமானவை . அவை மரைகாராலும் சில சமயங்களில் மீற இயலாதபடி செய்வதுண்டு

நான் அன்று மாலை கண்ணனை மிக கூர்ந்தபடி இருந்தேன் . இவர் ஏமாறுவாரா . இவரை ஏமாற்றமுடியுமா , அதன் பின்விளைவுகளை மரைக்கார் அறியாதவரா , எந்த அடிப்படையில் இவ்வளவு நெருக்கத்தில் அவரால் நின்று  விளையாடமுடியும்

உன்னுடைய யூகம் முற்றிலும் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறது என்றது என்னகம் . ஆனால் மனதில் ஒன்று எழுந்து எழுந்து மறுபடியும் மறுபடியும் சொன்னது 'தான் சரி' என்று. ஊழின் ஆடல் அது. இப்படித்தான் பெரும்தலைவர்களுக்கு சில உன்மைகளை காலம்  புரிந்து  கொள்ள முடியாதபடி செய்து விடும் . இது எங்கும் காண்பது, அது மாற்றித் திகழ்வது, அதுவே இங்கும் நிகழ்கிறது என்றது .அசைக்க முடியாத தன்னம்பிக்கை உறுதியான தகவல்களையும் இளிவரலாக அணுகும் . அந்த சூழலில் அவருக்கு மாற்று என்பது எடுத்து பேசவும்  லாயக்கற்றது . அதுவே கிடைக்கும் சிறு தகவலையும் உதாசீனப்படுத்தியது . சண்முகத்தின் தோல்வி உறுதி செயப்பட்ட ஒன்று, அதன் பின் தனக்கான ஆடல் பாக்கியுள்ளது என உறுதியாக  நம்புகிறார் .

கண்ணன் தரப்பில் சிலருடன் பேசியதிலிருந்து எனக்கு புரிந்தது , அவர்கள் மரைக்காயரை முழுவதுமாக நம்பவில்லை . அது இயலபானதே . சண்முகம் , மரைக்காரும் இல்லாத களத்தில் தன்னால் நின்று விளையாடமுடியும் என் நம்புகிறார் , அதுவும் சரியானதே . பெரும் பொருளியல் ரீதியான உதவிகள் கிடைக்க தொடங்கியதும் , அதனூடாக அவர் தன்னுடைய வெற்றியை உணராதத்தொடங்கிவிட்டார்

களத்திற்கு வெளியே அரசியல் போக்கை முடிவுசெய்யும் சக்திகள் எப்போதும் உண்டு . அரசியலை மட்டுமல்லாது அரசியல்வாதிகளையும்   வடிவமைப்பது இப்படிப்பட்டவர்களே. களத்தில் கிடைக்கும் தகவலை ஒட்டி, வெட்டி தங்களுக்கான  முடிவுகளைத் தேருவார்கள் . பின் அரசமைக்கும் வாய்ப்புள்ளவர்களின் தொடுகை நிதானமாக  நிகழ துவங்கும்

இவர்களில் மூன்று அடுக்குகள் உண்டு முதல் அடுக்கு ஆகப்மிகப்பெரியது அது கணிப்பை நிலுவையில் வைத்திருக்கும், அவசரப்படாமல் . எந்த நேரமும் அவர்களால் ஆட்சியாளர்களுடன் இணைந்துகொள்ள முடியும். யார் பின்னாலும் ஓட இயலாது , பெரும் தொகை முன்வைக்க வேண்டியிருக்கும் , தோற்பவருக்கு கொடுக்க இயலாது . கொடுக்காமல் போனால் வீண் விரோதம் மிச்சப்படும் , அவர்கள் வெற்றிபெறும் காலத்தில் எனர்கள் புறந்தள்ளப்படலாம் அது ஆபத்தானது , வெற்றி பெற்ற பின்னர் தொடலாம்  அவர்களாலும் இவர்களை ஒதுக்க இயலாது .

இரண்டாவது அடுக்கு , அரசியல் லாபத்தை முன்னிட்டு, தொழில்முதல் நிலைக்கான போட்டியாக, அரசியலில் அனைத்தையும் பிணையாக வைப்பர்  . அரசியலில் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள் . சில இடங்களில் இவர்களோ அல்லது இவர்களால் அடையாளம் காட்டபடுபவர்களோ பல கட்சிகளில் வேட்பாளராக களம் காண்பார்கள் . தங்களின் வியாபார போட்டிகளை சமன் செய்ய அரசியலை எந்த எல்லைக்ம்கும்  பயன்படுத்துவர் . அரசின் கொள்கை முடிவுகள்  செய்யும் அல்லது கூடும் தொழில் இவர்களை சார்ந்து இருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள் அல்லது அரசின் திட்டங்களினால் லாபமடைவதற்கு ஏற்ப புதிய  தொழில்களை தொடங்குபவர்காளாக இருப்பவர்கள் .

மூன்றாவது அடுக்கு வளரும் அரசியல்வாதிகள்,  நாளைய அரசியல் வெற்றியாளர்கள் என நினைப்பவர்களுக்கு  பொருளியல் ரீதியான உதவிகள் மூலம் தன்னுடைய எதிர்காலத்தை கணித்துக் காத்திருப்பவர்கள் .அனைத்திற்கும் தன்னை சார்ந்து இருக்குமாறு பார்துக்கொள்வர் . சிறு பொருளியல் உதவிகளே இவர்களால் செய்ய இயலும் . கண்ணனுக்கு அமைத்தவர்கள் இந்த மூன்றம் நிலை தொழில் முனைவோர் . ஆரம்பத்தில் கண்ணனுக்கு அணுக்கமாக இருந்தவர்கள் இவர்கள்தான் . பிற்காலத்தில் , தன்னுடைய தளத்தை இவர்களையும் , இவரைப்போல வேறு பலரையும்  வளர்த்தெடுத்தவர் பிறிதொருவரில்லை . மிக சரியான முடிவு இது . இவர்கள் கண்ணனின் எதிர்காலத்தை நம்புகிறவர்கள் . சிறு தொகை பல பேர் பெரும் பொருளியலாக திரண்டுவிடும் . முதல் நிலையாளரிடம் பொருள் தேவைக்கான காரணத்தை விளக்கவேண்டிவரும் , தகவல் கசியும் வாய்ப்புகள் அதிகம் ஆனால் மூன்றாம் நிலைக்கு அதற்கான விளக்கம் தேவையில்லை .

பொருளாதார உதவிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பின்னே அணிவகுக்க மறைக்காரை மட்டும் நம்பியிராமல் , வளர்ந்து வரும் தன்னுடைய பொருளாதார பலத்தாலும் , தொடர்பாலும் பல வேட்பாளர்களுக்கு உதவி செய்தும் , யார் வெற்றிபெற வேண்டும், வேண்டாம் என்கிற முடிவெடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்

1985 நடந்தது மறுபடி நிகழக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் . காசுக்கடைக்கு தொகுதியில் கடலோரப்பகுதி முழுக்க தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் . அவர்களிலிருந்து எழுந்த வந்தவரை சண்முகத்துக்கு எதிராக நிறுத்தினார்சண்முகம் தரப்பு இதை முறியடிப்பது பற்றி கவலை இல்லாது தினமும் அவருடன் பிரச்சாரத்திற்கு போவதும் வருவதுமாக பொழுதை போக்கினார் . அவரிடமுள்ள பெரிய குறை தொடர்புறுதல் . கண்ணனின் பலம் அது . தேர்தல் நாள் நெருங்கி வர அனல்பறக்க துவங்கியது

கண்ணன் முதல் முறை அமைச்சரானதும் காதி போர்டு அமைப்பை அரசியல் ரீதியாக பயன்படுத்தி நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் . அந்த வேலைக்கு ஆட்களை  பலமுறையில் நன்கு பரிசீலிக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் . தன்னுடைய நீண்டகால அரசியலுக்கு தேவையானவர்களை பழக்கும் ஒரு பட்டறை போல அது செயல்பட்டது . அதில் வேலை செய்தவர்கள் நிறையபேர் காசுக்கடை தொகுதியை சேர்த்தவர்கள்


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * முடிவுறாத துவக்கம் *

  ஶ்ரீ : பதிவு : 700  / 889/ தேதி 09 ஆகஸ்ட்   2026 * முடிவுறாத துவக்கம் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...