https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 1 ஜூலை, 2022

கோலாபூர் மஹாலக்ஷ்மி

 




என் தங்கை செல்வி ஒருநாள் திடீரென அலைபேசியில் அழைத்து பண்டரிபுரம் போவதைப் பற்றி சொன்னபோது , இரண்டு மனநிலை போகலாம் , வேண்டாம் என்று. இப்போதெல்லாம் பயணங்களை விரும்பாத மனநிலை உருவாகிவிட்டது. எந்தளவு பயணங்களில் ஆர்வமுடன் இருந்தேனோ அது முற்றாக மாறிவிட்டது. இருந்தும் பண்டரிபுரம் ஒரு கனவு போல இருந்து கொண்டிருந்தது. அந்த பயணதில் இணையவில்லை. அவர்கள் புயல்போல அதை திட்டமிட்டிருந்தார்கள். எனக்கு பயணங்கள் ஒருவித ஆறுதல் தருபவைகளாக விடுதலையாக உணர்ந்த நாட்கள் உண்டு. இன்று ஏன் என்று கேட்பாரில்லை என்றாலும் மனம் அந்த பழைய விடுதலையை நோக்கி ஏங்குகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேன் தடவப்பட்டு விடிகிறது. அபத்தம் என்றாலும் அது மனதளவில் தேவையாகிறது  என்பதால் பயணத்தை மிக நிதானமாக எடுத்துக் கொள்வேன். அவர்கள் பண்டரிபுரம் சென்று சமூக ஊடகத்திற்காக எடுத்த படங்கள் வைரலாகி அடுத்த குழு கிளம்பியது. முதலில் ஏன் என நினைத்தாலும் இறந்து போன தாத்தா கோவிந்தசாமி பிள்ளை கோபித்துக் கொள்ள போகிறார் என்கிற பயம் காரணமாக அந்த பயணம் நிகழ்ந்தது. எதிர் பார்த்து போல பண்டரிபுரம் அனுபவமாக ஏனோ மனதில் நிற்கவில்லை. ஆனால் கோலாப்பூர் அந்த லிஸ்டில் வராது

கடைசி நாள் ஊர் திரும்பல் திட்டத்திற்கு நடுவே கோலாபூர் மஹாலக்ஷ்மி கோவில் முடிவானது. லாவண்யா எல்லா ஏற்பாடுகளையும் நான் மறுத்தேன் என்பதற்காக இன்னும் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். அழாமல் செல்லவேண்டி இருந்ததுகோவிலில் நுழைந்த அந்த கணம் பல பழைய நினைவுகள். பேன்டில் இருந்து கடைகாரர் உதவியில் அவசர பஞ்சகட்சம் கட்டி அபிஷேகத்திற்கு கண்ணுக்கு தெரிந்த சன்னதியிக்கு செல்ல ஏன் முட்டி முயங்கினோம் என தெரியவில்லை. அந்த திருமஞ்சனம் திரில்லிங். வீடு திரும்பிய பின்னரும் நினைவில் நின்றதுவீட்டு ஊஞ்சல் பின்னால் இந்த படம் மாட்டப்பட்டு தினம் தரிசனம் தருகிறாள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்