https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 16 ஜூலை, 2022

அடையாளமாதல் * புதிய கோணம் *

 



ஶ்ரீ:



பதிவு : 631  / 821 / தேதி 16 ஜூலை  2022



* புதிய கோணம் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 27 .





அரசியலில் பிறரின் தன்மதிப்பை தன்னகங்காரத்தை சீண்டுவது சிலருக்கு போதுமானதாக இருப்பதில்லை. இருப்பவைகளில் உள்ள இல்லாதவைகளை அவர்கள் மனம் நெருடிக் கொண்டிருக்கிறது. அத்தால் தொடப்படும் ஒருவர் அதை செய்தவர் யாராக இருந்தாலும் மனம் அவரை மன்னிப்பதில்லை. அரசியல் பிழைத்திருக்க நினைப்பவர்கள் வாழும் உலகம். அதில் வாழ நினைப்பவர்களை அது எந்த தொந்தரவும் செய்வதில்லை. இருத்தலியல் சாரம் இது என்றாலும் அதை மனம் ஒப்புவதில்லை. அதற்கும் அமைதி காப்பதற்கும் வேறுபாடு உண்டு. காலங்காலமாக இது அரசியலில் நிகழ்ந்து பின் சரித்திரமாகிறது . பாதிக்கப்படும் அதே மனதின் பிறிதொரு பகுதி காலம் வரும் வரை காத்திருக்க சொல்கிறது . நகர்வு எப்போதும் அதை உத்தேசித்தே நிகழ்கிறது . இதிலிருந்து இன்னும் வசதியாக என்பதற்கு அளவுண்டா என்ன ?  


அரசியலின் இறுதியிடம் முதல்வர் மாற்றம். அதற்கென காரணங்கள் சரி , தவறு என எப்போதும் இரண்டு கரைகள் போல அவை இருந்து கொண்டிருக்கின்றன . அவை அரசியலின் அன்றாட நிகழ்வு என புரிதல் எனக்கிருந்தது . அரசியல் சரி நிலைகளுக்கும் இதற்கும் மிக மெல்லிய கோடு ஒன்றே அவற்றின் எல்லைகளை தீர்மானிக்கின்றன . 1998 களில் மிக விரைவில் அது போல ஒன்று நிகழும் என ஆழ்மனம் சொல்லிக் கொண்டே இருந்தது . ஆனால் அதற்கு அப்போது எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கமான ஆளுங்கட்சி ஆளுமைகளிடையேயான மோதல்கள். அவை நிலைபாடு நிர்வாகம் மரியாதை போன்றவைகளை சார்ந்திருக்கும்.நான் ஊகத்தது கண்ணனின் நிலையாமை. அவரின் முடிவுகளை யாராலும் கணிக்க முடியாது. காரணம் அவை தற்கணக்கை மட்டுமே அடிப்படையாக கொண்டது . அரசியல் சமரசங்களுக்கு அதில் இடமில்லை என்பதால் யாராலும் அங்கு செல்ல முடியாது. கண்ணன் தன்னை ஜானகிராமனின் திமுக அரசு ஒருவத அழுத்த்தில் வைத்திருக்கிறது . அங்கு தனக்கான இடம் இல்லை என நினைக்கத்தொடங்கினார். அது உண்மையும் கூட. மாநில அரசு சென்னையை மைய்யப்படுத்தியது . திமுக மற்றும் தாமாக தலைமைகள் சென்னையில் இருந்தது . மாநிலத்தில் அரசியல் சிக்கல் எழும் போதெல்லாம் முதல்வர் இரண்டு தலைமைகளையும் சென்று சந்திப்பது வழக்கமாக இருந்தது . அரசியலின் படி அது முறைமை என்றாலும் கண்ணன் அப்படி நினைக்கவில்லை. இங்கு கட்சி வென்று ஆட்சியமைந்தது தன்னுடைய சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகளின் வழியாக எனவே தன் சம்மந்தப்பட்ட அனைத்தும் தன்னிடம் மட்டுமே விவாதிக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்தார். புதுவை ஆட்சித் தலைமை தனக்கு சென்னை தலைமையின் அழுத்தம் வழியாக தனது காரியத்தை சாதித்துக் கொள்கிறது என நம்ப ஆரம்பித்திருந்தார். அவர் தனக்கு மூச்சு முட்டுவதாக எப்போது நினைத்தாலும் அதை தகர்த்து வெளியேற தயங்கியதில்லை. அந்த சூழலில் அரசியல் கணக்குகளை, கோட்பாடுகளை, பிறரின் மனநிலையை எப்போதும் பொருட்படுத்துவதில்லை.


நான் கண்ணனின் மனவோட்டத்தை எப்போதும் மிக அணுக்கமாக உணர்வதுண்டு. நான் நேரடியாக கண்ணனுக்கு கீழ் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் பணியாற்றியதில்லை. பாலனுக்கு அதுக்கமான பலர் பாலன் கண்ணனைவிட்டு பிறிந்த போது அவருடன் பேசாமலாயினர் என்ன காரணத்தினாலோ அவர்களை எங்கு சந்தித்தாலும் என்னிடம் மிக அணுக்கமாக அந்தரங்கமாக பேசுவார்கள். அவர்கள் வழியாக அந்த சில வருடங்களில் கண்ணனைப் பற்றி உள்தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. அந்த ஆட்சி அதன் முழு காலத்தையும் காணப் போவதில்லை என்பது தெளிவாக தெரிந்தாலும் எப்போது நிகழும் என கண்ணனே சொல்ல முடியாது என்பதுதான் அதன் விந்தை.


ஆட்சியில் சிக்கல் நிகழும் முன்பு உத்தேசித்த இளைஞர் காங்கிரஸ் அமைப்பு முழுமை பெற்றிருக்க வேண்டும் என நினைத்தேன் . பாலனைவிட்டு வலகிய பிறகு அது போல ஒரு அமைப்பை உருவாக்குவதோ இளைஞர் கங்கிரஸை உயிரோட்டமுள்ளதாக மாற்றும் சந்தர்பங்களோ இருப்பதாக நான் நம்பவில்லை . அவை  தூர்ந்து போன கனவு மட்டுமல்ல அது உருவாக காரணமாக இருந்த பின்புலம் மிக சிக்கலானது அதை ஒருபோதும் உருவாக்க முடியாது தானாக அமைந்து வந்தால் மட்டுமே . இனி ஒருபோதும் அது போல ஒன்றை கனவிலும் நினைக்க முடியாது என்றே எண்ணினேன் அதற்கான பிறிதொரு சந்தர்ப்பம் எழுந்து வரும்வரை . பயிற்சி முகாம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் இப்படி உருவாகி வந்ததே


அன்று நாராயணசாமி ஹோட்டல் சற்குருவில் கூடிய கூட்டத்தால் கடுமையாக சீண்டப்பட்டிருக்க வேண்டும். அதை அவர் தலைமை தாங்கி நடத்திய முறையில் வெளிப்பட்டது. அன்று ஏதோ சரியில்லை என்கிற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. இன்று அவற்றை முழுமையாக திரும்பிப் பார்க்கிறேன். காட்சிகள் மிக தெளிவாக அணுக்கமாக உணரமுடிகிறது. அன்றைய நிகழ்வில் முழுமையாக என்னை ஒப்புக் கொடுத்தேன். பின்னர் அதிலிருந்து அடைந்த புரிதல்கள் வழியாக எனது நீண்ட பயணம் இருந்தது . ஆனால் இன்று காட்சியாக தோன்றுவது அன்று என்னால் பார்க்கப்பட்டவை ஆனால் அன்று நான் அதை பார்க்கவில்லை வேறொன்று அதை மிகத் தெளிவாக பார்த்திருக்கிறது . அன்றைய மனதில் அவைசரியில்லைஎன்கிற ஒற்றைப் புரிதலாக மட்டுமே இருந்தது அதன் அத்தனை அளகுகளும் பிறிந்து இன்று முழு சித்திரத்தை அதிலிருந்து உருவாக்கிக் கொள்ள முயல்கிறேன்.


ஹோட்டல் சற்குருவில் கூட்டம் ஒருங்கி இருந்தது. அன்று மாலையே அதன் நிர்வாகிகளை சந்தித்து அரங்கு எப்படி அமைக்கப்பட வேண்டும் என பேசி வைத்தேன். அந்த அரங்கு  ஹோட்டலை வலப்புறம் சுற்றிச் சென்று கார் நிறுத்துமிடத்திற்கு எதிரில் ஹோட்டல் மையக் கட்டிடத்தின் வலது விலா பகுதியில் அமைந்திருந்தது . சற்று நீள் சதுர அரங்கு நுழைவு அதன் நடுப் பகுதியில் அமைந்திருந்தது . கார் நிறுத்துமிடத்தில் இருந்து நான்கு படிகள் ஏறி பின் இரண்டு படிகள் இறங்கினால் அரங்கில் நுழைந்து விடலாம் . உள் நுழைந்தவுடன் எதிரில் கண்ணை மறைக்கும் சுவர் எழுந்து அரங்கு சட்டென முடிந்து விட்டதைப் போல தோன்றும். அரங்கு நீளத்தை விட அகலம் பல மடங்கு குறைவு என்பதால்  இடம் வலம் என வால் போல நீண்டு கிடந்தது . அங்கிருந்து இடது பக்கம் உணவு விடுதிக்கு செல்லும் உள்வழி கண்ணாடி கதவால் மூடப்பட்டிருந்தது . முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை . ஒவ்வொன்றையும் மிக கவனமாக செய்யத் துவங்கினேன் அரங்கின் நடுவே நீள் கோள வடிவில் மேஜை அமைக்கப்பட்டு நடுவில் பூ அலங்காரங்களுடன் சுமார் 100 பேர் அமரும்படி அமைக்கப்பட்டிருந்தது . அரங்கு அதீத கவனம் குவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன்


பேசப்பட விருக்கும் நிரல் முன்வரைவு அனைவருக்கும் ஒரு பிரதி அவர்கள் அமரும் இடத்திற்கு எதிர் மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறிப்பெடுக்க சிறு நோட்டு மற்றும் பேனா . சிற்றுணவு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே பரிமாறும்படி செய்திருந்தேன் . மாலை 6:00 மணிக்கு கூடும கூட்டம் நிறைவடைய 3 மணி நேரமாகும் . முடிந்த பிறகு முழு இரவு உணவு தயாராக இருந்தது . அரங்கு அதீத ஒளியூட்டப்பட்டிருந்தது. பங்கு பெறுபவர்பளை வரவேற்கு சிறு குழு என அனைத்து  ஏற்பாடுகள் . அது அங்கு கூட இருக்கும் அனைவருக்கும் புது அனுபவமாகப் போகிறது. அரசியலின் பிறிதொரு இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்