https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 4 ஜூலை, 2022

அடையாளமாதல் * நாட்கள் *

 


ஶ்ரீ:



பதிவு : 629  / 819 / தேதி 04 ஜூலை  2022



* நாட்கள் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 25 .


 



நல்ல இலக்கிய வாசிப்பு மற்றும் சினிமா மனிதனுக்குள் அவன் இயல்பில் இல்லாத நல்லுணர்வுகளை உருவாக்க முயல்கிறது. அதற்குத்  தன் கலையைப் பயன்படுத்துகிறது. அது உருவாக்குவதே தியான நிலை. மாறாக மோசமான சினிமா மனித மனத்தில் உறையும் இயல்பான மிருக உணர்வுகளைத் தூண்டுகிறது. அது உருவாக்கும் ஈர்ப்பு நேர் எதிரானது அது தியான நிலையை உருவாக்குவதில்லை. அது உருவாக்குவது கொந்தளிப்பைத்தான். இது பற்றி யோசிக்க பத்து வயது சிறுவனின் உள்ளம் தேவை படுகிறதுஎன்கிறார் மலையாள இயக்குனர் லோகிதாஸ் ஒரு பேட்டியில். என் வாழ்நாள் முழுவதும் இதுவரை எதிலாவது செயாலற்றிக் கொண்டே இருப்பது அந்த முதியரா சிறுவனின் கண்களில் உலகை பார்க்க முயலுவது என நினைக்கிறேன். ஆனால் பெற்ற அனுபவங்களில் இருந்து அதில் உள்ள எதிர்மறை தன்மைகளை கருத்தில் எடுத்துக் கொண்டு நடைமுறைவாதம் போன்ற ஒன்றை அன்று முன்வைத்துக் கொண்டிருந்தேன். இன்று சொல்லும் எந்த கலைச் சொல்லும் அன்று எனக்கு அறிமுகமில்லை. ஆனால் கள நிர்வாகத்தில் இருந்து அவற்றை நான் பெற்றிருக்க வேண்டும். அன்று விவாதம் போல ஒன்றை நான் முன்வைத்ததில்லை. அனுமானமாக அவற்றை சொல்லியிருக்கிறேன். சண்முகம் என்ன பாத்தித்தது இந்த சொல்லாடல்கள் வழியாக


புதுவை மார்க்ஸியர்கள் இளைஞர் காங்கிரஸிற்குள் புயலைப்போல நுழைந்த காலம் ஒன்று உண்டு. பாபுலால் ஏறக்குறைய அதே உரையாடல் சாயல் கொண்டவன். அவன் முன் வைக்கும் அனைத்தும் ஒரு போதும் காங்கிரஸில் கொண்டு வைக்க முடியாதவை முதிரா இளைஞனின் அரசியல் நோக்குக் கொண்டவை . எங்கள் மொத்த உரையாடல்கள் எப்போதும் அதை சுற்றி இருந்தது. அவனுக்கு மாநில கட்சி அரசியல் நடைமுறை வாதம் குறித்த புரிதல்களை சொல்லிக் கொண்டிருப்பது எனது வழக்கம் . தினம் ஒரு புதுக் கருத்தியலுடன் வந்து சந்திக்கும் நொடி அது தீப்போல பற்றி எரியும். பின்னர் நடைமுறை சாத்தியங்கள் குறித்ததாக அவை நிறைவடையா மனத்துடன் முடிவடையும். ஒரு காலகட்டத்தில் எனது நிலைபாடுகளை ஏற்கத் துவங்கிய பிறகு என்னுடன் தயக்கமில்லாமல் செயல்பட்டான். பிற நிர்வாகிகளுடன் விவாதிக்கும் போது அவன் குரல் ஓங்கி ஒலிப்பதை பார்த்திருக்கிறேன். அது அவனுக்கான இடம் அதில் நான் ஒருபோதும் குறுக்கிட்டதில்லை. அவர்களுக்குள் தொடர்ந்து நிகழ்ந்த உரையாடல்கள் அவர்களை மேல் கீழ் என கட்டமைத்தது . அவர்களுக்குள் அது மிக இயல்பாக நடந்தது என்பதால் அந்த அடுக்கு உறுதியாக இருந்திருக்க வேண்டும்


எனக்கு அந்த உரையாடல்கள் தேவையாய் இருந்தது . அத்தகைய உரையாடல் என்னை தொகுத்துக் கொள்ள புதிதாய் எழும் சிந்தனையை அவதானிக்க .நான் என்னை முழுவதுமாக வடிவமைத்துக் கொண்டது அந்த உரையாடல்கள் வழியாக. அரசியல் என்பது அனைத்தையும் மீறும் அதிகாரத்தை வழங்குவாத புரட்சி மனநிலையை நான் நினைப்பதில்லை. நான் என்னை நடைமுறைவாதியாக இருந்திருக்கிறேன் என இப்போது தொகுத்துக் கொள்கிறேன். அமைப்பு வெற்றிகரமாக செயல்பட பல விதமான திறமை கொண்ட தனியாளுமைகள் தேவையாகிறார்கள். அந்த காலகட்டத்தில் பல திறமைகள் கொண்ட ஆளுமைகள் என்னை நோக்கி வர ஆரம்பித்தனர் . அவர்கள் பல்வேறு தொகுதி தலைவர்களால் கட்சிக்குள் கொண்டு வரப்பட்டவர்கள். எனது செயல்பாடுகளில் ஊக்கம் கொண்டவர்களாக என்னை பின் தொடர்ந்தனர். பாபுலால் போல பலர் விரிவான உரையால்களுக்கு பிறகு எனது அரசியல் கருத்தியலை ஏற்று எனது பயணத்தில் உடன் இருந்தனர்


ஒரு தலைமை பொறுப்புக்கான இடம் பல விதமாக கருத்துக்கள் வழியாக எட்டப்படுகின்றது . உரையாடல்கள் நிலைப்பாடுகள் செயல்பாடு என அதன் அத்தனை பரிமாணங்களும் வெவ்வேறு நண்பர்கள் வழியாக ஏற்கப்பட்டு அங்கீரிப்பதன் வழியாக உருவாகிறது. அது பதவி மற்றும் பொருளியல் பலத்தை மையப்படுத்துதலுக்கு எதரானது. ஆனால் இதை நிகழ்த்த நேரமும் காலமும் தேவை படுகிறது. பிறருக்கான இடத்தை உருவாக்கி கொடுப்பது உரையாடல்களின் வழியாக கருத்தியல் ஏற்கப்படுவதும் விமசர்சனங்களை எதிர் கொள்வதும் எதிர் நிலைபாடு மற்றும் கசப்புகளை கையாளத் தெரிந்து கொள்வதுமான ஒரு நீண்ட பயணத்தில் மிக அணுக்கமா இருந்த 30, 40 நண்பர்களில் பாபுலாலும் ஒருவன். உரையாடல்கள் என்னுடன் நின்று போனவை அல்ல அந்த கூட்டத்தில் மேலதிக கேள்விகள் வழியாக அதில் பங்கு கொள்ள தயக்கமுள்ளவர்கள் அவர்களுக்குள்ளே அதை நிகழ்த்திக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மீளவும் அந்த கருத்தியிலை அழுத்தமாக வைப்பவர் இரண்டாம் நிலை தலைமை பெறுகிறார்கள், பாபுலால் அவர்களில் ஒருவனாக மிக விரைவில் நிலைகொண்டான் . அந்த இடத்திற்கு பலர் மெல்ல உருவாகி வந்தனர். அவர்கள் அனைவரும் மேலதிக  கேள்விகளை கேட்பவவர்களாக அறியப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் என்னுடன் இணங்கி செய்யும் செயல்பாடுகள் வழியாக அவர்களுக்கு கீழ் திரளும் அமைப்பிற்கு தெளிவாக ஒன்றை சொல்லுகிறார்கள் அது சரியானது என்கிற நம்பிக்கையை பிறருக்கு கடத்துகிறார்கள் . முதல் நிரை தலைவர்கள் என்ன செய்கிறார்களோ அதை பின்பற்றும் போது மெல்ல ஒரு இருக்கமான அமைப்பு உருவாகி வருகிறது.


ஒவ்வொரு நாளும் இரவு என்னை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தானர் . நான்கு ஐந்து பேர்களுக்கு குறையாது. சுகுமார், பாபுலால்,ஹலீம் , ரஹ்மான், விஜயகுமார், பெருமாள்,பரசுராமன்,குமார் கோபால், குப்புசாமி என இவர்களுடன் அரசியலில் மிக நீண்ட உரையாடல்கள் அன்று எல்லாவற்றை பற்றியும் நான் கொண்ட கருத்தை ஆழாமாக்க இன்னும் விரிவு செய்து கொள்ள உபயோக்கமாக இருந்திருக்கிறார்கள் . கற்றல் எப்போதும் இரு தரப்புக்குள்ளும் நிகழ்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்