https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 30 ஜூன், 2022

அடையாளமாதல் *தெளிவின்மையின் தொடுகை*

 ஶ்ரீ:



பதிவு : 628  / 818 / தேதி 30 ஜூன்  2022



*தெளிவின்மையின் தொடுகை* 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 24.





ஊசுடு பங்கூரில் நிகழ்ந்த அரசியல் வெறியாட்டத்தை நினைத்துக் கொண்டேன் . என்னை திரும்பவும் மாநில அரசியலில் கொண்டு வைத்த நிகழ்வு. அங்கிருந்து கற்றவைகள் நிறைய. முதிரா சிறுவன் பார்வையில் இருந்து வெளிவந்த தருணம். லட்சியவாதம் போன்ற ஒன்றை அமைப்பை மையப்படுத்தி நான் அதுவரை கொண்டிருந்த செயல்முறைகளில் பெரும் மாற்றம் செய்து கொண்டேன். முன்னாள் அமைச்சர் காந்திராஜுடனான மிக நீண்ட பயணம் அதுவரை கொண்டிருந்த பார்வையை மாற்றியது . அவர் முன்னாள் அமைச்சர் நீண்டகால காங்கிரஸின் உறுப்பினர். புதுவை சுதந்திர போட்ட தியாகியின் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்கிற அடையாளம் எதுவும் இல்லாதவராக 1996 ல் நடந்த தேர்தலில் தோல்வியுற்ற போது அவருக்கு அதுவரை இல்லாத அமைப்பு பற்றிய பார்வையை, அதன் தேவையை அது உருவாகியிருக்க வேண்டும். அந்த சூழலில் தான் நான் அவரிடம் சென்றிருக்க வேண்டும். அங்கிருந்து மிக நீண்ட பயணம் நானும் அவருமாக மிக அணுக்கமாக இயங்க வைத்தது . எந்த புது முயற்சிக்கும் கேள்வி கேட்காத ஒத்துழைப்பு நான் தயங்கி நிற்கும் வாசல்ளை திறந்து கொடுத்தது. அவரும் நானும் அமைப்பு ரீதியில் தெருக்கியது அந்த பங்கூர் மற்றும் பங்கூர் பேட் என்கிற இரண்டு ஊர்களுக்கு இடையேயான சிக்கல் பெரிய மோதலாக உருவான பிறகு. பதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமாக சட்டமன்ற உறுப்பினர் தனது தொடர் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள தனது சிக்கலை உள்ளூர் அரசியலில் கொண்டு வைத்த போது அது  30 க்கும் மேற்பட்ட குடிசைகளுக்கு தீ வைத்து நான்கைந்து பசுமாடுகளை வெட்டிப் போடும் கொடூரம் அரங்கேறியது . பதைக்கும் மனத்துடன் அதை சுற்றி சுற்றி வந்தேன் . ஏதோ மன்னர் கால போர் வெற்றிக்கு பின் நிகழும் சூறையாடலுக்கு உள்ளான இடம் போல அது காட்சியளித்தது . இதன் வழியாக அவர்கள் சொல்ல விழைவது நிச்சயம் அரசியலின் இடம் பற்றி. ஆனால் எங்களுக்கான அதன் அரசியல் வேறு புரிதல்களுக்கு கொண்டு சென்றது


அரசியலாளர்கள் தங்களின் ஒருவித முற்றதிகாரத்தை அங்கு கொண்டு வைக்க நினைக்கிறார்கள். அதன் ஆரம்ப கருவி அங்கு நிலவும் மனித சமமின்மை. ஜாதி அதிகாரத்தை அல்லது பொருளாதார வெற்றியை அதிலிருந்து உருவாகும் அரசியலை. நாராயணசாமி ஹோட்டல் சற்குகு அரங்கில் நிலைநாட்ட விரும்பியது ஏறக்குறைய அதைப் போன்ற ஒன்று . ஒரு காலகட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை நெருங்கிக் கொண்டிருந்த நான் நிராகரிக்கப்பட்டு பாண்டியனை அதன் தலைவராக கொண்டுவந்தது இந்த இயக்கம் இன்று நான் உருவாக்கி எடுத்த இந்த தலைவர்களை ஆளும் பொருட்டு என பாண்டியன் நினைத்திருக்க வேண்டும் . ஆனால் அது அப்படி நிகழவில்லை. அவனால் இந்த அமைப்பில் ஆழமான பிளவை உருவாக்கி அதை அழிக்கக முடிந்ததே தவிர அதை ஒருநாளும் ஆள முடியவில்லை . காரணம் நாராயணசாமியால் அந்த உருவாகி வந்த இயக்கத்தை ஸ்தம்பிக்க செய்வது மட்டுமே அவரது கணக்காக இருந்திருக்க வேண்டும். அதன் முதல் துவக்க புள்ள சண்முகம் . அவர் செய்த பிழை நகர்வு. எதன் பொருட்டு அதை செய்திருந்தாலும் அது பின்னர் ஒரு காலகட்டத்தில் நிற்க இருக்கும் எனது கட்டுமானத்தின் அடித்தளத்தின் முதல்கல் அசைக்கப்பட்டு விட்டிருந்தது. அவருடைய கோட்டையும் பின்னொரு நாள் நாராயணசாமியால் தகர்க்கப்பட்டது.


ஊசுடு பங்கூர் கலவரத்தில் ஓட்டு அரசியலை கூட  அவதானிக்க அவர்கள் விரும்பவில்லை. என்னுடன் வந்த பலருக்கு அது பழகியிருக்க வேண்டும் பாகூரிலும் இந்த நிகழ்விற்கு இணையான ஒன்றை பின்னர் சந்திக்க நேர்ந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டு வாசல் கதவின் தலைக்கு மேல் உயரத்தில் போடப்படும் பழையகால சங்கிலி முறை அவர் உயிரைக் காப்பாற்றியது .இது போன்ற சம்பவங்கள் எந்த நியாங்களினாலும் சமன் செய்ய முடியாதது . அதன் பிறகு பல முறை அதற்கு காரணமானவரை பார்க்கும் போதெல்லாம் ஆழ்மனத்தல் எழும் குமுறலை என்னால் தவிற்க இயலவில்லை . அந்த கொடூரத்தை பார்வையிட வந்த கட்சியின் பிற முக்கிய தலைவர்கள் அதை ஒன்றுமே இல்லை என்பதைப் போல பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் தலைவர்களின் கால்களை பற்றிக் கொண்டு கதறியதை பார்த்த போது முதுகுத்தண்டில் மெல்லிய தொடுகையை உணர்ந்தேன் . நான் அப்படி பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி கால்களைக் கட்டியபடி கதறுவேனா………… தெரியவில்லை என்றே முதலில் தோன்றியதுசற்று நிதானித்து யோசித்தால் இல்லை ஒரு போதும் அப்படி செய்யமாட்டேன் என்று தோன்றியது. அரசியல் மற்றும் அரசு இரண்டிற்கும் செவிகள் இல்லை . அதற்கென தனித்த முகமும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது உணர்ச்சியேற்றப்பட்ட குரலும் உண்டு .அதன் பின் அது மற்றொரு நிகழ்வு என கடந்து செல்லப்படும்


வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் போது நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டது போல அது நிகழ்ந்து முடிகிறது. அது ஒரு கொலை தெய்வம் வந்தேறியது போல அப்போது அவர்கள் மனிதர்களில்லை எதிர் நிற்பவரும் யாரும் கருணைக்குரியவர்கள் இல்லை . நிச்சயம் அது மன நோய் கொண்ட ஒருவர் சொல்லில் இருந்து நடந்தேறுகிறது . பதில் தாக்குதல் என திரும்பி அதேபோல அவர்களும் தாக்கப்பட்டுவதை பார்த்திருக்கிறேன் அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து அறுதல் அளிக்கும் போது இதே போல அப்பாவியாய் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு கதறுகிறார்கள். அறம் என்கிற ஒன்று இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும். ஒரு போர், கலவரம் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து மிருகம் வெளிவருகிறது . எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்து விட்டுவிட முடிகிறது! ஆகவே மீண்டும் மீண்டும் அறம் கருணை அன்பு என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இலக்கியம் உருவாக்கும் உலகம் என்பது என்ன? கருணையும் அறமும் மேலோங்கிய ஒரு கற்பனை உலகம் அதை நிஜம் போல அவை நிகழ்த்திக் காட்டுகின்றன. இந்த மூர்க்கமான உலகிலிருந்து மக்களை சில மணிநேரம் அங்கே போய் வாழ வைக்கின்றன. அதன் மூலம் அவனை மகிழ்விக்கின்றன. அவனை இளைப்பாற்றுகின்றனநம்பிக்கையூட்டுகின்றன என்கிறார் லோகிதாஸ் ஜெயமோகனுடனான ஒரு பேட்டியில் .


நீதியும், கருணையும், அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல என ஜெயமோகன் எப்போதும் சொல்லுவார்  மனிதனுக்குள் இருப்பது ஆசை, குரோதமும் , போகமும் மட்டும்தான் . அரசியலில் அதற்கான இடம் நோக்கி மிக இயல்பாக ஒருவனை கொண்டு சென்றுவிடுகிறது . தனக்கென சிறு தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்ளாதவனை அது அலைக்கழித்து எதையும் அரசியலின் பெயரால் அவனை செய்ய வைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...