ஶ்ரீ:
பதிவு : 624 / 814 / தேதி 02 ஜூன் 2022
* எதிர் காலமெனும் நம்பிக்கை *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 20.
ஹோட்டல் சற்குருவில் நிகழ்த்த திட்டமிட்டிருந்த பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டம் நடபெற இருந்த ஒருமணி நேரத்திற்கு முன்பாக சண்முகம் அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்வதைவிட நாராயணசாமி கலந்து கொள்வது எனது எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறிவிட்டார். அதன் பின்னணி அரசியலை நான் உணர்ந்திருந்தாலும் இதன் வழியாக அவர் எனக்கு என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. மேல்மட்ட விளையாட்டில் எப்போதும் எளிதில் பிடி கிடைப்பதில்லை . ஆரம்பத்தில் நான் அதற்கு சம்மதிக்காமல் மறுத்து ஒரு கட்டத்தில் அதனால் பயனில்லை என புரிந்தது . சண்முகம் தன் முடிவில் உறுதியாக இருந்தார் . இறுதியில் அவர் சொன்னதை ஏற்று நாராயணசாமியை அழைப்பதாக சொல்லிவிட்டு வெறுப்புடன் ஹோட்டலுக்கு புறப்பட்டேன்.
போகும் வழியில் என்னுடன் இருந்த கோபாலிடம் என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு, நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வரச் சொன்னேன் . முதலில் அதிர்ந்து மறுத்தான் . நான் அவரை நேரில் சென்று அவரை அழைக்க வேண்டும் அது தான் முறை , இது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என சொன்னான் . இனிமேல் புதிதாக உருவாக ஒனழறுமில்லை . நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கும் அவருக்குமான உறவு இனி எந்த வகையிலும் சுமூகமாக இருக்கப் போவதில்லை . இந்நிலையில் நான் முயற்சிக்கும் எந்த சமாதனமும் அதற்கு உதவாது . அவன் சென்றேயாக வேண்டும் என சொல்லி ஹோட்டலில் இறங்கிக் கொண்டேன். எவ்வளவு யோசித்தும் தலைவர் சொன்னதை என்னால் உருவகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிக வருத்தமாக உணர்ந்தேன். அந்தக் கூட்டம் நடத்த இருந்த உற்சாகம் முழுமையாக வடிந்துவிட்டிருந்தது .
இன்று பார்க்கையில் அது முதல் கோணல். அங்கிருந்து எல்லாமே தவறான முணைக்கு சென்று அமர்ந்தன. அதுவரை அடைந்த வெற்றிகள் தற்காலிகமானது என்கிற சொல்லுக்கு அன்று அர்த்மிருந்தது . ஒரு தவறு அதை அடுத்து முறை சரி செய்து விடலாம் . எதிர்காலம் என ஒன்று நீண்டு கிடந்தது . அதில் எத்தகைய தவறுகளையும் திருத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது . வெற்றியும் அர்த்தமின்மையும் இன்று புரிந்து கொண்ட அளவு அன்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அவரைப் புண்ணகையுடன் கடந்து சென்றிருப்பேன். சண்முகம் கட்சியின் அடையாளம் . எனக்கு கட்சியின் அடைப்படையிலான கையகப்படுத்த வேண்டியது சந்திதேகத்திற்கிடமில்லாத தலைமை யார் என சொல்லியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது . என்னிடம் காலமல்லை.
நான் அடுத்தடுத்து செய்ய திட்டமிட்டிருப்பதை செயல்படுத்த சண்முகம் இங்கு என் அருகில் அமர்ந்திருப்பது என்னளவில் மிக முக்கியம் .
புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர் காங்கிரஸிற்கு முதல் முறையாக தங்கள் தொகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் சரியானவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். நான் சாத்தியப்படுத்திய கனவு அது. அதன் முந்தைய தலைவர்கள் முயன்று அதன் வெறுமைக்குள் சென்றமர்ந்தனர். இதோ அதை நான் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இந்தக் கூட்டம் வழியாக நான் அவர்களுக்கு சொல்ல நினைத்தது எந்தளவு வெற்றி பெறும் எனத் தெரியவில்லை . ஆனால் இவர்களை சண்முகம் நேரடியாக பார்ப்பது எனக்கு மிக முக்கியமானது . அவர் அப்படிப்பட்ட கனவுடன் புதுவைக்கு வந்தவர். அதன் பெருட்டு அவர் வாழ்நாளெல்லாம் சீண்டப்பட்டார் . அவருக்கு தெரியும் இந்த கனியின் விலைமதிப்பற்றதைப் பற்றி. இந்த கூட்த்தில் இருப்பவர்களில் பலர் அவருக்கு முன்பே அறிமுகமானவர்கள் . என்னைப் பற்றிய அவரது தயக்கங்கள் என ஏதாவது மிச்சம் இருந்தால் இந்தக் கூடுகை அதை கலந்துவிடும். இன்று இது முழு அமைப்பாக உருவாகி விட்டது என அங்கீகரிக்க வேண்டியவர் அவரே. அவரைத் தவிற பிற எவருக்கும் இது சிறு மனிதத் திரள். அவருக்கு அது அளிக்கும் அரசியல் ரீதியாக கணக்கும் அர்த்தமும் பிற எவருக்கும் உருவாகப் போவதில்லை. நாராயணசாமிக்கு போன்றவர்களுக்கு இது மிக சிறிய கூட்டம் இது நான் சண்முகத்தை ஏமாற்ற நினைக்கும் சிறுபிள்ளை விளையாட்டு . அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் தான் வட இந்தியாவில் சந்தித்த ஆயிரமாயிரம் தொடர்களுக்கு முன் இது ஒன்றுமில்லை என தருக்கி வந்தமர்ந்தால் அந்த நினைப்பே எனக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்கும் எதிராகவே முடிவும் .
தில்லி தலையகத்தில் அமர்ந்து கொண்டு கருத்தியல் ரீதியில் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இங்கு ரத்தமும் சதையுமாக அமர்ந்திருப்பவர்களின் வாழ்வில் அரசியில் எந்த வகையில் ஊடுருவி இருக்கிறது. இதில் உருவகப்படுத்துவது என ஒன்றில்லை என்கிற மேட்டிமையால் ஆவது ஒன்றுமில்லை . தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் இழைக்கும் சிறு அரசியலின் பிழை முடிவுகள் இவர்களின் நாளை காலையை இருட்டடியச் செய்துவிடும் . தலைவர்களின் தலைவர் என தருக்குபவர்களுக்கு தொண்டர்களின் தலைவர்களின் மத்தியில் இங்கு பேசப்படும் மொழியும் அரசியலும் புரியாது , ஒருவேளை இளிவரலாகக் கூட தோன்றலாம். இந்த மண்ணில் இருந்து வேரரறுந்து போன ஒருவருக்கு இங்குள்ளவர்களின் அரசியல் புரியப் போவதில்லை.அனைத்தையும் விட அரசியலில் முதல் நிலை ஒழுங்கமைவதற்கு முன்பான இங்கு பல கட்டத் தலைமை இருப்பதாக பிழையாக புரிந்து கொள்வதும். அனைவரயும் அனுசரிக்கவேண்டும் என்கிற பிழைப்புரிதல் இந்த அமைப்பை எடுத்துச் செல்வதில் சவால்களை உருவாக்கிவிடும் .
என் பக்கத்தில் அமர நினைத்து இதோ என்னை விடாது சுற்றி சுற்றி வரும் பாண்டியன் தன்னை தீவிர நாராயணசாமியின் ஆதரவாளனாக முன்வைப்பவன். அவனது உண்மை நிலை என்ன என அவனுக்கும் தெரியும். இருப்பினும் அதை பிறர் காண தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பவன் . அது அவனது அரசியல் என நிகழ்ந்தாலும் அதை மீள மீள முன்வைத்தபடி இருப்பவன் . ஒரு நாள் தன்னை நாராயணசாமி முழுமையாக அங்கீகரிப்பார் என நம்புகிறான்.வல்சராஜ் தலைமையில் புதிய நிர்வாகக் குழு நியமிப்பது குறித்து பரிசீலனையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் விடாமல் என்னை சந்தித்து தன் பெயரை அந்தப் பட்டியலுக்கு சிபாரிசு செய்யச் சொன்னான். அது நான் முன்பே ஊகித்திருந்தேன. நாரயணசாமியின் அரசியல் அப்படிப்பட்டது . அவனிருந்த உண்மை நிலையை புரிந்து கொண்டேன். அரசியலில் மிக இயல்பானது அது . “நாராயணசாமியின் அணுக்கான உணக்கு வல்சராஜ் சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராக இருக்கும் போது என் சிபாரிசுக்கு என்ன பொருள்” என்றதற்கு . நாராயணசாமி தன்னை சிபாரிசு செய்யாமாட்டார் என்றான் . நான் அவனிடம் அவன் தன்னை பிறர் முன்பாக உருவகிக்க நினைக்கும் இடம் ஒரு நாள் நாராயணசாமியால் தகர்க்கப்படும் என எச்சரித்திருந்தேன் .
அவன் என்னை நாராயணசாமி அணுக்கர்களின் நிரையில் கொண்டு வைக்க என்னுடன் எப்போதும் முயன்று கொண்டிருப்பான் . நான் நாராயணசாமிக்கு அணுக்கமாவது தன்னுடைய நலனுக்காக என பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். அவன் செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் . நாராயணசாமியின் அணியில் செயல்பாடுகள் என எதுவும் இல்லை . அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொடங்கி அவரது செயல்பாடு என்பது தில்லியில் நிலை கொண்டிருந்தது . அது எந்த மாதிரியானவை என யாருக்கும் தெரியாது . நான் அறிந்த வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தின் அணியில் ஒரு நிலையில் இருந்தார் அவருக்கான அரசியல் அல்லது பணிநிமித்தமான உத்தரவுகள் அவரிடமிருந்து பெற்று அதை செயல்படுத்துபவராக அவர் இந்தியவின் அனைத்து மாநிலங்களினூடாக பயணம் செய்தபடி இருந்தார். அந்தப் பயணத்தில் அவருக்கு அரசு அதிகாரிகள் பெரும் தொழிலதிபர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் என இந்திய பல வேறு துறையைச் சேர்ந்த ஆளுமகைள் அறிமுகமாயினர்.அவர் அவர்களை அனைவரின் கணக்குகளின் நன்மைக்கு செயல்பட்டுக் கொண்மிருந்தார். இதற்கு பின்னால் குலாம்நபி ஆசாத் இருந்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக