https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 ஜூன், 2022

அடையாளமாதல் * கணக்கும் யதார்த்தமும் *

 ஶ்ரீ:



பதிவு : 626  / 816 / தேதி 17 ஜூன்  2022



* கணக்கும் யதார்த்தமும் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 22.




 

கூட்டம் நடக்கவிருக்கும் அரங்கை அடைந்தபோது மனம் சோர்ந்து போயிருந்தது . அத்தனை நாள் திட்டமிட்டதற்கு இந்த அர்த்தமின்மை தான் பதில் போலிருந்தது . இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை . இது முதற் கோணல் , இனி அது வரிந்து கொண்டே இருக்கப் போகிறது . உள்ளே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என அரசியலாகிறது . இந்த கூட்டம் இன்று எனக்கு எதிர் கருத்துக்களை உருவாக்குபவர்களை  மிக எளிதாக கடந்து சென்றுவிடப் பயன்படலாம் . ஆனால் கடந்த சென்ற பிறகு பெரும் தடையாக இருக்கப் போவது இந்த பாண்டியன் . அவன் கூட என் சிக்கல் அல்ல இதோ என் பக்கத்தில் நின்றிருக்கிறான் . அவனுக்கு எதாவது ஒன்று நடந்தாக வேண்டும். நாராயணசாமியை அனைவருக்கும் முன்னளித்து அனைத்தையும் கைக் கொள்ள பார்பான் . அல்லது பின்னர் சொல்லி மிரட்டவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு இணையான தலைமையாக இன்று வெளிப்பட்டு விட வேண்டும் என்கிற தவிப்பு அவன் என்னிடம் அந்த இடத்திற்கு மிக பொருத்தமாக நடந்து கொண்டதில் தெரிகிறது. அதை அப்படித்தான் என பிறருக்கு காட்டி கடக்க வேண்டியது என் அரசியல் . இப்போது என் சோற்றில் கல்லலென வந்திருப்பது நாராயணசாமிதான் இனி என்றும் என் சிக்கல்


இன்று கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் நாராயணசாமி அவனிடம் காலையில் தனது வருகை பற்றி சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சற்று முன்னர்தான் சண்முகம் சொன்னார். அவனது உற்சாகம் நான் கற்பனை செய்து கொள்வதா ? தெரியவில்லை . சண்முகம் நாராயணசாமியின் முரண் சரி செய்ய முடியாத பிளவை அடைந்திருந்தது . மேல் நிலை தலைவர்கள் அதை ஊகித்திருக்க முடியும் . மாநில தலைமை பிளவுறும் சந்தர்பங்களில் மேல் நிலை தலைவர்களின் நிலைபாட்டை கணிக்க முடியாது . அவர்கள் தங்கள் இடத்திற்கான பதட்டம் முழு அரசியலை முடிவு செய்யக் கூடியது . எனக்கு அது  சீக்கிரத்தில் வெளிப்படும் என்கிற நம்பிக்கை மட்டுமே என்னால் தெளிவாக மேல் நகர முடியும் . ஆனால் அது நிகழப்போவதில்லை


ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் விளக்குகள் மங்களாக இருந்தாலும் அரங்கின் உள்ளே இருந்து பளீரிடும் மஞ்சள் ஒளி உற்சாகத்தை தருவதாக இருந்தது . அந்த அரை இருட்டில் இன்று சற்று நின்று என்னைத் திரட்டிக் கொண்டு அரங்கை நோக்கி நடந்தேன் . வழியில் நின்று கொண்டிருந்த பாண்டியன் என்னைக் கண்டவுடன் ஓடிவந்து இணைந்து கொண்டான். அவனை இப்போது பொருட்படுத்தக் கூடாது . அவனை பக்கத்தில் இருத்திக் கொண்டு அடுத்த நகர்வை திட்டமிட வேண்டும் . அவனிடம் கூட்டத்தை ஒருங்கச் சொன்னேன். காரில் இருந்து கொண்டுவந்த நிகழ்ச்சி நிரல் கூட்டத்திட்டம் பற்றிய கோப்புகள் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கும் பேசு பொருள் குறித்த வரைவுகளும் 

அதில் இருந்தன.


கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் யாரும் உள்ளே செல்லாமல் வெளியே சிதறி சிறு சிறு குழுக்களாக அரங்க வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் . ஏறக்குறைய அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் . என்னை பார்த்ததும் மரியாதை வணக்கம் சொல்ல ஒவ்வொருவரையும் கைப்பற்றி குலுக்கி வரவேற்றது அவர்களுடன் சிறு சிறு பேச்சுகள் நலம் விசாரிப்புகள் என நெருக்கம் கொள்ள வைப்பதுடன் அவர்களுக்குள் நிகழும் மனமாற்றத்தை உடல் மொழியில் பார்க்க விரும்பினேன் . எல்லோருக்கும் அரசியலில் தங்கள் இடம் பற்றிய பிரக்ஞை ஆழத்தில் உறைவது . அதன் அருகினில் அவர்களை தயக்கமல்லாமல் அழைத்து செல்வேன் என்கிற நம்பிக்கையை உருவாக்கினால் மட்டுமே அவர்களுடன் தொடர்புறுத்த சிறந்த அது இடமாக இருக்க முடியும். அங்கு கூடியிருந்தவர்களில் இருந்து எனக்கான ஒட்டு மொத்த இடத்தையும் நான் திரட்டிக் கொள்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கறேன் .அங்குள்ள அனைவரும் அதிலிருந்து ஒரு துளியை பெற்றுக் கொள்ள விழைபவர்கள்.


நிர்வாகிகளில் பலர் வந்திருப்பதையும் அவர்கள் அரங்கின் உள்ளே சென்று அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது . அனைவருக்கும் வன்மம் உள்முகமாக இருந்தாலும் வெளியே நட்பாக காட்டிக் கொண்டிருக்கலாம். உள்ளே இருப்பவர்கள் வெளியே நின்று கொண்டிருப்பவர்களுக்கு இடையே இப்போதுள்ள இடைவெளி அந்த நிர்வாகிகள் உருவாக்கி இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் வரும் காலத்தில் ஒரு இயக்கத்தற்கு மனமொன்றி செயல்பட இருப்பவர்கள் . ஆனால் துரதிஷ்டவஞமாக அவர்களை எனது ஆதரவாளர்களாக பகுத்துக் கொண்டார்கள் என்றால் அதைவிட பிழை புரிதல் வேறில்லை. அவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததை விட இங்கு இவர்கள் மத்தியில் அவர்கள் நின்றிருக்க வேண்டும். அவர்கள் அதுவரை செய்த அனைத்து எதிர்மறை அரசியலும் செயலற்றுப்போனதால் அந்த அமைதி திரும்பியிருக்க வேண்டும். சண்முகம் வரப் போவதாக நினைத்திருந்தனர். அங்கு எனக்கு கிடைக்க இருக்கும் இடம் பற்றிய எரிச்சலில் இருந்திருக்கலாம்.


அந்த நிகழ்வின் முன்னேற்பாடுகள் எனக்கு பிறிதொரு வாசலை திறந்து வைக்கும் என கணிக்கத் தெரிந்தவர்கள். சிலகாலம் அமைதியாய் இருப்பது என முடிவு செய்திருக்கலாம் . அவர்கான காலம் ஒன்று வரும் எனத்தெரிந்தவர்கள். அனைவரையும் அரங்கிற்கு அழைத்துச் சென்றேன்.நெடுநாளைய எதிர்பார்ப்பு , ஒரு கனவின் முதற்கணம். என்னை அவர்களுக்கு தெளிவாக அறிவித்தது. இனி இளைஞர் காங்கிரஸை வழிநடத்துபவர் யார்? அவர்கள் யாரை பின் தொடர வேண்டும் என்கிற சந்தேகத்திற்கு இடமில்லாமாமல். அது ஒரு தருக்கி நிமிரும் கணம். காலம் எப்போதும் அதற்கு மறு எடையாக பிறிதொன்றை கரந்து அதில் வைக்கிறது . அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று தொகுதி எண்ணனின் அடிப்படையில் அமரச்செய்தேன் சராசரியாக தொகுதிக்கு மூவர்  என வந்திருந்தனர் நிர்வாகிகளை சேர்த்துக் கொண்டால் 120 பேர் எதிர்பாரத்ததைவிட 30 பேர் அதிகம் . அதற்கு தேவையான நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தேன்.

பாண்டியனிடம் அவனிடமுள்ள கோப்புகளை சரிபார்த்து தொகுதி  எண் வாரியாக அவர்களுக்கான இடத்தை ஒருங்கச் சொன்னேன். பேச்சுகள் மிக மெல்லிய ஒலியாக , அவரவர் அவர்களுக்கான பெயர் எழுதப்பட்ட நாற்காலியில் அமரவைக்கப்பட்ட போது அவர்கள் முகத்தில் எழும் ஒளியை பார்த்தபடி சிறிய மேடைக்கு அருகே நின்றி கொண்டிருந்தேன்.கட்சி கூட்டங்களிலில் அரங்கு மேடை மற்றும் பார்வையாளர்கள் என எப்போதும் இரண்டாக பகுக்கப்பட்மிருக்கும். பார்வையாளர்கள் அங்கு எப்போதும் முகங்களற்ற திரள் மட்டுமே . அதை இங்கு உடைத்திருந்தேன் . அவரவர் தங்களின. இடத்தை கண்டடையும் நேரத்தை கொடுத்துக் கொண்டருந்தேன். பாண்டியன் அனைவருக்கும் முன்பிருந்த மேஜையில் நான் கொடுத்த அத்தனை கோப்புகளையும் அவர்களுக்கு எதிரே வைத்துக் கொண்டிருந்தான்


நான் ஒருங்குனர் மைக்கை எடுத்து கூட்டம் இன்னும் 30 நிமிடத்தில் துவங்க இருப்பதையும் நாராயணசாமி கலந்து கொள்ள போவதை சொன்னபோது கண்களால் பார்க்கக் கூடிய  அலை நிர்வாகிகளின் மத்தியில் மெல்லிய காற்று போல பரவியது  . அவர்கள் எதிர்பார்ககவில்லை . நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியன் என்னுடன் இருந்தான் . அவனும்மே அது புது தகவல் என அவன் திகைப்புறுவது தெரிந்தது . ஏன் எனக்கே கூடதான் . நான் நாராயணசாமியுடன் இணைக்கமாக செல்ல முடிவெடுத்து விட்டதாக அனைவரும் நினைத்தனர் . அது முன்னிலும் அந்த கூட்டத்தை இறுக்கமடைய வைத்தது . நான் என் அகத்தை வெளிக்காட்டாமல் அவர்கள் எனக்கு இப்போது கொடுக்கும் புது அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளத் துவங்கினேன் . அதுவும் அரசியல்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்