https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 12 ஜூன், 2022

அடையாளமாதல் * நம்பிவிடுகை *

 ஶ்ரீ:



பதிவு : 625  / 815 / தேதி 12 ஜூன்  2022



* நம்பிவிடுகை * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 21.





நாராயணசாமியின் தீவிர ஆதரவாளன் பாண்டியன் . தினம் என்னை சந்திக்கவருபவர்களில் தவறாமல் இடம் பெறுபவன் . மாதத்தில் மூன்று நான்கு நாள் புதுவைக்கு வரும் நாராயணசாமி புதுவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . அவர் புதுவைக்கு வரும் சமயத்தில் அவருக்கு உதவியாளனாக இருக்கும் நேரம் போக மற்ற நாட்களில் என்னைப் பார்க்க வந்துவிடுவான். சண்முகத்தை சந்திப்பதில்லை . நாராயணசாமி மீதிருக்கும் கசப்பை அவர் தன்மீது காட்டுவதாக என்னிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவு எளிய உணர்சிகளை பிறர் அறிய வெளிக்காட்டுபவர் அல்ல அவர் . அது உண்மையா என எனக்குத் தெரியாது . அவனது நெஞ்சுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.நான் நாராயணசாமியை பிறர் போல வந்து சந்திக்க வேண்டும் என்பது அவன் என்ன பேசினாலும் அதன் மையக் கருவாக இருக்கும். என்ன காரணத்தினாலோ அவரை சந்தித்த போது எனக்கு எதிர்மறையான உணர்வுகளை அடைந்ததால் அவரை சென்று சந்திப்பது எனக்கு உகப்பதாக இல்லை . இது ஒருவேளை சண்முகம் குறித்து பாண்டியன் சொன்னது போல இதுவும் இருக்கலாம்.நான் தர்க்கப்பூர்வமாக அதை நிறுவிக் கொள்ள முயன்றிருக்கிறேன்.


நாராயணசாமி புதுவை வந்திருப்பதை கட்சியை சேர்ந்தவர்களும் அவரை சந்திக்க விரும்பும் அனைவரும் அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் அவரது பேட்டி அல்லது அறிக்கை மூலமாக தெரிந்து கொள்கிறார்கள் . அதே போல ஒரு சில நாள் கழித்து அது போன்ற செய்தியை காண நேர்ந்தால் அவர் தில்லி கிளம்பிவிட்டார் என புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த செய்திகள் அதுக்காகவே என சிலர் பகடியாக சொல்லுவதுண்டு. பாண்டியனின் வற்புறுத்தலால் அவரை சிலமுறை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறேன் . அங்கு அதுபோல கட்சியை சேர்ந்த பலருடன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வந்த கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அவரை சந்திக்க காத்திருப்பதை பார்த்திருக்கிறேன் . நாராயணசாமி வழக்குரைஞராக தொழில் செய்பவர். அது அவரது சட்ட அலுவலகம் . அவரது ஜூனியர்கள் நிறைய பேர் அங்கு அமர்ந்து அவரது வழக்குகளை கவனித்துக் கொள்கிறார்கள்


நாரயணசாமியின் அலுவலகம் எல்லையம்மன் வீதியில் உள்ள அவரது வீட்டு கீழ் தளத்தில் அமைந்திருந்தது . அது மிக பழையபாணி கட்டிடம்ரோட்டில் இருந்து இரண்டடி உயரத்தில் உயரத்தில் இருந்தது . பழைய கொலாப்ஸபல் கேட் என்கிற குறுக்குவாட்டில் இழுக்கும் இடம் அடைக்காத கேட். அதைத் தாண்டி சிறிய நடை அதன் இடப்புறம் செங்குத்தாக முதல் மாடிக்கு செல்லும் படிகட்டு . அந்த வீடு மீளுவாக்கம் செய்யப்பட்டதை சொன்னது . சிறிய நடையைத் தாண்டி ஒரு பெரிய வரவேற்பறை எதிரே இடது மூலையில் அவரது சந்திக்கும் அறை . வந்திருந்த கட்சிப் பிரமுகர்கள் தனித்த அறையில் அவரை ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்துக் கொண்டிருந்தனர் . எனக்கு அது ஒவ்வாமை கொடுத்தது . எனக்கு அவரிடம் சென்று பேசி ஆகவேண்டியது ஒன்றுமில்லை . பாண்டியனின் நச்சரிப்பு தாங்கமால் வந்திருக்கிறேன் . இந்த முறையை கட்சி அரசியல் சார்ந்த தலைவர்கள் யாரும் புதுவையில் கடைபிடிப்பதில்லை . அனைவரும் பொது வரவேற்பறையில் அமர்ந்திருப்பார்கள். சந்திக்க வருபவர்கள் தனியாக பேசிவேண்டும் என்றால் மட்டும் பக்கத்திலிருக்கும் தனியறைக்கு செல்வார்கள் மற்றபடி சந்திக்க வருபவர்கள் அனைவருக்கும் மத்தியில் பொதுவாக அது நடக்கும் . ஆனால் இங்கு நாராயணசாமியை பொதுவில் சந்திக்க இயலாது


பாண்டியன் அவரது உதவியாளன் போல அங்கிருந்து கொண்டு அவரை சந்திக்க வருபவர்களை ஒருங்கு செய்து கொண்டிருப்பான் . அங்கு அது அவனக்கான இடம் . நான் அங்கு வந்த சில நொடிகளில் என்னை அவரை சந்திக்க நேரம் ஒருங்கிவிடுவான் . முதல்முறை அவரை தனியாக சந்தித்தபோது . தனிப்பட்டு அவரிடம் பேச வேண்டிய தகவல்கள் என என்னிடம் ஒன்றும்மில்லை.என்ன பேசப் போகிறேன் என திகைத்திருந்தேன் . பாண்டியன் என்னைப் பற்றி அவரிடம் என்ன சொல்லியிருப்பான் என எனக்குத் தெரியாது . முதல் முறை சென்று சந்தித்த போது நட்புடன் கைகுலுக்கி பின் பாண்டியனை பார்க்க அவன் அந்த அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான் . அவரே தொடங்கினார். பிற தலைவர்கள பற்றிய தகவல்களை ஆர்வமாக சேகரித்துக் கொண்டார். அது அவரது பாணியாக இருக்க வேண்டும். அவரை சந்திக்க சொல்பவர் ஆர்வமிகுதியால் பல உள் தகவல்களை அவருக்கு சொல்லாவார்கள் . நாராயணசாமி தான் ஊரில் இல்லாத போது அரசியல் ரீதியில் புதுவையில் நடந்த அவருக்கு சொல்லாமல் விடபட்ட தகவல்களை அவர்கள் வழியாக வாங்கி நிரப்பிக் கொள்கிறார் . அதே ஆர்வத்தில் அவர்கள் மீளவும் அவரை வந்து சந்திக்கும் போது பேசும் ஆரவமற்றவராக தன்னை வைத்துக் கொள்கிறார் . இரண்டுமுறை சந்தித்த பிறகு அவரது உளநிலை உருவாக்கிய ஒவ்வாமை காரணமாக அங்கு செல்வதை தவிற்த்துவிட்டேன்


உடனடி பலன் இல்லாத எதையும் செய்யத் தயாராக இல்லாதவராக அவரை அறிகிறேன். அவர் வேறேதோ ஒரு உலகில் வசிப்பவர். அவருக்கு இந்த உலகம் வெறும் தகவல்களால் ஆனது . அதைத் தவிற அவர் இங்கிருந்து பெற்றுக் கொள்ள ஒன்றுமில்லை போதுமென்ற அளவு கேட்டுவிட்டதாக உணர்ந்து விட்ட பின்னர் அவர்களை  இரண்டாம் முறை அவர் சந்திக்க விரும்புவதில்லை. அவரை தனது தலைமையாக கொண்ட பாண்டியனை எண்ணி வருந்தினேன் . அவனும் ஒருநாள் இதை உணர்ந்திருக்க வேண்டும். சில காலத்திற்கு பிறகு அவரை விட்டு விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்டான். ஒரு நடாளுமன்றத் தேர்தல் வீதிப் பிரச்சாரத்தில் அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்ததேன். அவன் சார்ந்த தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கும் நாராயணசாமி பற்றி மெட்டை வசவுகள் . பின்னர் ஓரிரு வருடங்களுக்கு பிறகு நாராயணசாமிடம் திரும்பச் செனழறு சேர்ந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின்னர்  நிராதராவாக கைவிடப்பட்டவனாகி அவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் ஒரு நாள் வந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்