https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 23 ஜூன், 2022

அடையாளமாதல் * வாழ்வியலே ஒரு இடைசெருகல் *

 ஶ்ரீ:பதிவு : 627  / 817 / தேதி 23 ஜூன்  2022* வாழ்வியலே ஒரு இடைசெருகல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 23.

அங்கு கூடியிருந்த இளம் அரசியலாளர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருவேறு கணக்குகள் ஒன்றை பற்றி ஒன்று எழுந்து பெரியதாகி வளர்ந்து கொண்டிருந்ததை அவர்களின் மெல்லிய அக அசைவாகப் உணரமுடியந்தது . உணருதல் அரசயலின் பால பாடம் .அது என்னை மிக எளியவனாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அந்த உணர்வை ஊகிக்க முடிவது அதனூடாக வளர்வது . எனக்கு அதுவரை நிகழ்ந்தது அதுவே . “இடம்என்பது அரசியலின்  ஒரு சிக்கலான கருதுகோள் . அது பதவிகளில் வந்து அமர்வதில் இருந்து உருவாவதில்லை. கனவுகள் ஏதுமற்ற ஒருவர் ஊழ் என்னும் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு அங்கு சென்று சேர்ந்த பின் முதலில் தங்களை அழித்துக் கொள்ளத் துவங்கி பின்னர் அந்த இடத்தால் ரத்து செய்யப்பட்டவராகிறர்கள். காலம் அதற்கான நீண்ட இடைவளியை எடுத்துக் கொள்ளவதால் யாரும் அதன் தீவிரத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை. சில சமயங்களில் அது அப்பட்டமாக சட்டென நிகழ்ந்துவிடுவதும் உண்டு


நான் அரசியலில் கனவினால் செலுத்தப்படுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள முயல்கிறேன் . இதோ இன்று இங்கு அமர்ந்திருப்பவர்களில் சிலராவது அந்த கனவை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அரசியல் குறித்த மிகை கற்பனை கூட நல்லது என்றே சொல்லுவேன் . காலத்தில் உருவாகும் அனுபவம் அந்த கற்பனைகளின் சாத்தியமில்லாதவைகளை செதுக்கி வெளயேற்றிவிடுகிறது. மிச்சியவை அவனை உருவாக்குகிறது . என் கணக்கில் புதுவை சாராத பகுதிகளில் வரலாம் என வைத்திருந்த 30 பேரில் 21 பேர் வந்துவிட்டார்கள் காரைக்கால் மற்றும் மஹே மட்டுமே பங்கெடுக்கெடுக்கும். யேனாம் புதுவையில் இருந்து வெகு தூரத்தில் ஆந்திர காக்கிநாடா எல்லைக்கு அருகில் இருப்பது  அங்கிருந்து யாரும் வரும் வாய்ப்பில்லை என நினைத்திருந்தேன். எனக்கு பழக்கமிருந்த யேனத்தை சேர்ந்த பழைய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சிட்டிபாபுவிடம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பு விடுத்ததோடு சரி . அவர்கள் என் கணக்கில் இல்லை. ஆனால் அவர்கள் பங்கேற்க வந்திருந்தது கூட்டத்தை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றது . அந்தக் கூட்டம் எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும் தெளிவாக ஒன்றை சொல்லியிருக்க வேண்டும் என நினைத்தேன். மாநிலம் முழுவதிலும் இருந்து மிகச் சரியாக விகிதாசாரத்தில் அந்தந்த பகுதிகளைகள சேரந்த அனைவரும் வந்து கலந்து கொண்டதில் பிறர் பார்வைக்கு அவை மிகத் தெளிவாக திட்டமிட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிந்திருந்தால் ஆச்சர்யப்பட ஒன்றில்லை . ஆனால் அது நான் திட்டமிடாமல் நடந்தது .


அந்த கூட்டம் மாநில தழுவிய ஆதரவு என்கிற எனது இடத்தை உறுதி செய்வதுடன் இனி அடுத்த நிகழ வேண்டியது குறித்து முடிவெடுக்க எனக்கான அங்கீகாரத்தையும் அளிப்பது. நான் நீண்ட காலமாக எதிர்நோக்கியது அந்த அங்கீகாரத்தை . இப்போது நானே அதை உருவாக்கி வைத்து எடுத்தக் கொண்டேன்.   இரண்டாவது அங்கு கூடி இருந்த பலர் புதுவை நகர் பகுதியை சார்ந்தவர்கள் அவர்கள் என்னுடன் இருப்பதை இந்த கூட்டம் வழியாக உறுதி செய்திருப்பது என் அன்றாட அரசியலின் போக்கை ஒட்டி துணிவாக தனித்த முடிவெடுக்க வைப்பது . மாநில அரசியல் என்பது ஒரு சிக்கலின் போது ஒரு மணி நேரத்திற்குள்ளாக ஒன்று கூடிவிடுவது . நகரப் பகுதிகளில் இருந்து நூறு பேர் திரள்வது என்பது எதை நோக்கியும் அறைகூவல் வைக்கும் திரணை அளிப்பது. அதை செய்யக் கூடியவர்கள் அங்கு கூடியிருந்தது என் பலத்தை பலமடங்கு அதிகரிப்பது . புறநகர் பகுதியின் பங்களிப்பு என்பது திரளால் ஆர்ப்பரிப்பது எண்ணிக்கை கணக்கு கொண்டது ஆனால் அடிக்கடி கூட்ட இயலாது . முக்கிய நகர்விற்கு அவரது ஆதரவு தேவை. மாநில நிர்வாகிகளுக்கும் இந்த கூட்டம் தனது முடிவை அறிவித்துவிட்டதுநாங்கள் நாராயணசாமி வருகைக்கு காத்திருந்தோம். இரண்டு முக்கிய தலைவர்களின் ஆதரவு இருப்பதாக அதை அங்கிருப்பவர்களை மிரளச்செய்திருக்க வேண்டும் . அரங்கில் அசாத்திய மௌனம் நிலவியது .


நான் கோபாலிடம் நாராயணசாமியை அழைத்துவரும் வழிகள் பற்றி சொல்லியிருந்தேன் . மிஷன் வீதி வடக்கு புல்வார் சந்திப்பை அடைந்த பிறகு என்னை அலைபேசியில் அழைக்கச் சொல்லி இருந்தேன். அவன் எப்போதும் பதட்டமானவன். சரியாக செய்ய வேண்டும் என்கிற சிறு பதட்டம் இருந்தது . ஆனால் உடனே அதிலிருந்து மீண்டு சகஜமானேன். எதிர் நோக்கிய அழைப்பு வந்தது . நான் நண்பர்களுடன் அரங்க வாசலுக்கு சென்று அவரை வரவேற்க காத்திருந்தேன். சில நொடிகளில் கார் அரங்க வாசலுக்கு வந்து நின்றது . கோபால் முதலில் இறங்கி அவருக்கு கார் கதவை திறந்தான. இறங்கிய நாராயணசாமி அனைவரின் முகங்களைப் பார்த்து சிறு தலையசைவுடன் அவர்களை வேகமாக கடந்து அரங்கத்திற்குள்ளே நுழைந்தார் . அவர் நல்ல மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன் . கோபால் பதைப்புடன்நான் அப்பவே சொன்னேன்என ஏதோ சொல்லவர நான் அனை கைகாட்டத் தடுத்துவிட்டு அரங்கத்திற்குள் நுழைந்தேன். கூட்டத்தில் இருந்தவர்களுக்கு நாராயணசாமியின் மனநிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிர்வாகிகள் நாராயணசாமி இந்த கூட்டத்தை ரசிக்கவில்லை என்பதை ஊகித்திருந்தனர் . சற்று இறுக்கம் தளர்ந்து நாராயணசாமி எனக்கு உகக்காத ஏதாவது ஒன்றை செய்யும் அந்த கணத்திற்கு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை


நாராயணசாமி முனுப்புடன்என்ன இது மாதிரி ஒரு சிறு கூட்டத்திற்கு என்னை ஏன் அழைக்க வேண்டும்என்றார் குரல் சற்று உயர்ந்து கேட்டதாகப் பட்டது நிர்வாகிகளில் பலர் அதை கேட்டிருக்க வாய்ப்பு நான் அதற்கு எந்த எதிர்விணையும் கொடுக்காமல் அமைதியாக அவர் இன்னும் பேசுவதற்கு இடம் கொடுத்து காத்திருந்தேன். இங்கு சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களின் அணுக்கர்கள் பலர் வந்திருந்தனர் . அவர்கள் வழியாக நாராயணசாமி இங்கு பேசும் எதிர்மறை கருத்துக்கள் சண்முகத்தை சென்றடையும் என்பாதல் அந்த இடைவெளியை கொடுத்தேன்


கூட்டம் துவங்க இருக்கும் அறிவிப்பை செய்தவுடன் என்ன நோக்கி கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக யார் யார் எங்கிருந்து வந்திருகிறீரகள் என அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர்கள் அனைவரும் எனது ஆதரவாளர்கள், ஓரிரு தொகுதியில் இருந்து வந்திருக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். நான் முகம் மலரமர்ந்து அமர்ந்துவிட்டேன் . எனக்கு அதுவே மிகச் சரியான துவக்கம் எனப்பட்டது . எப்படியும் கருத்து சொல்லும்போது அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் கொடுக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். நான் பாண்டியனைப் பார்க்க அவன் என்னிடம் கெஞ்சும் பாரவையில் அமைதியாக இருக்க சொன்னான் . முகம் இறுக்கமடைந்திருப்பதாக உணர்ந்ததும் மெல்லிய சிரிப்பின் மூலம் இறுக்கத்தை விலக்க முயற்சித்தேன். ஒவ்வொருவராக எழுந்து தங்கள் பெயர் சார்ந்த தொகுதி போன தகவல்களை சொல்லி மிடிக்க அரை மணி நேரம் எடுத்துக் கொண்டது . நான் நாராயணசாமியின் மனவோட்டத்தை கணிக்க அவரது உடல் மவழியை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு உந்துதல் ஏற்பட்டடு சட்டென மேஜைக்கு கீழ் இருந்து அவரது கைகளை கவனத்த போது அவர் விரல்விட்டு எத்தனை தொகுதிகள் என கணக்கிட்டுக் கொண்டுருந்தார் . சில சமயம் நமக்கு வேண்டியவர்களே நம் வாழ்கையில் நமக்கு நன்மை செய்வதாக நினைத்து ஒன்றை கொண்டு வந்து திணித்துவிடுவார்கள் . நாமும் அத்தடன் வாழ்ந்து பழகியாக வேண்டும் போல .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

  கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...