ஶ்ரீ:
பதிவு : 623 / 813 / தேதி 27 மே 2022
* இணைப்பு *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 20.
நான் அரசியலில் எனது இடத்தை இப்படி வரையறை செய்து கொள்வேன். செயல்பாடு மற்றும் தொடர்புறுத்தல் எனக்கு மிக இயல்பாக வருவது . அதில் பிற எவரையும் விட என்னால் வெற்றிகரமாக செய்ய இலும் என என்னைப் புரிந்திருந்தேன்.
அவை இரண்டும் இருவழி சாலை கட்சியுடன் சமூகம் தொடங்கி தனிநபர்கள் வரை தொடர்புறுத்துவது . கட்சியின் அனைத்து நிகழ்விலும் பங்கெடுக்கும் அதே சமயம் அந்த குடும்ப நிகழ்வுகளுக்கு தலைவர்களை கொண்டு சேர்ப்பது என்பது எனது செயல்பாடாக இருந்தது. அது மிக சிக்கலான அதிக நம்பிக்கைதன்மை கோரும் ஒன்று . கட்சி அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மிகப் பொதுவாக இந்த இடத்திற்கு வருவார்கள். அங்கு வந்து சேருபவர்கள் இரண்டு வகையில் அங்கிருந்து தங்கள் இலக்கை சென்றடைகிறார்கள் . பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் அது . ஒன்று தேர்தலாரசியலுக்குள் சென்று சட்டமன்ற உறுப்பினர் எனத் தொடங்கி அந்த வரிசையில் இணைய முயற்சிப்பது . இரண்டு அவர்கள் பொருளியல் வளம் பெறம் அனைத்தையும் இடைநின்று செய்பவராக காரியங்களை முடித்து தருபவராக பொருளாதார தன்றிறைவு அடைந்து அங்கேயே தேங்கிவிடுகிறார்கள் . அல்லது அங்கிருந்து வாய்ப்பு கிடைக்குமானால் தேர்தலரசியலுக்குள் வாய்ப்புகளின் கதவுகளை தட்டி முடிந்தவரை அதன் உயரங்களுக்கு செல்கிறார்கள் . நான் பொருளியல் பலமும் பெயரும் கொண்ட பின்புலத்தில் இருந்து வருகிறேன் . அரசியல் எனக்கு கற்றல் மட்டுமே. அங்கிருந்து நான் அடையும் தொடர்புகள் அனைத்தும் நான் ஏற்கும் தலைமையில் வந்து நிலை கொள்ள செய்கிறேன். அங்கிருந்து என்ன கிடைக்கும் என்பது எப்போதும் என் கணக்குகளில் இல்லை.
பொதுவில் அனைவரும் செய்யக்கூடியதை நானும் செய்திருக்கிறேனா ? என்றால் இல்லை என நினைக்கிறேன். உள்நுழைந்து பின் அங்கு நிகழ்ந்த கற்றலில் என்னை புரிந்து கொண்டேன் . என்னால் இயல்வதை பற்றிய புரிதலினால் எனக்கான எல்லையை வகுத்துக் கொண்டேன் . பின்னர் ஒரு போதும் அதை மாற்றிக் கொள்ளவில்லை. அது அரசியலில் எனது இடத்தை எனக்கு அளித்ததா என்றால் பதில் ஆம்/ இல்லை என இரண்டையும் சொல்வேன் ஆனால் அந்த இடம் பொதுவில் இருந்தாலும் என்னுடைய பின்புலமுத்தில் இருந்து ஒருவர் அந்த இடத்திற்கு வருவது எப்போதும் நிகழ்வதில்லை என்றே நினைக்கிறேன். எளிதில் அணுக்கூடிய எனது நிலைபாடும் என்னை அவர்களில் ஒருவனாக அவர்களின் சிக்கலை அணுகுவதால் என்னை சுற்றி மிக விரிவான இறுக்கமான நட்புகள் உருவாகிவந்தன. என்னை நோக்கி வரும் உதவிகளை ஆழைத்துக் கொண்டு நான் யாரிடமும் சிபாரிசுக்கு செல்வதில்லை . அது எனது வழிமுறை இல்லை . அரசியல் மற்றும் அதிகார அமைப்பின் மீது என எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை . தந்தை மட்டுமே பிள்ளக்கு எந்தவித நிபந்தனையில்லாத உதவிகளை செய்யக்கூடியர் . பிறர் யாருக்கு என்ன செய்தாலும் அதற்கு பின்னால் நிச்சயம் ஒரு கணக்கு இருக்கும். அரசியல் அதிகாரத்தில் சிபாரிசு மேல் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது நிகழும் அந்த இறுதி கணம் அது உறுதிபடாது . இயலாமல் போகும் போது சம்பிரதாய வருத்தம் கூட தெரிவிக்கப்படுவதில்லை. யாரோ அதை தடுத்தது பற்றிய பிலாக்கணம் மட்டுமே சொல்லப்படும். அரசியல் வழியாக முயலும் எதுவும் தோல்வியடைஙதில்லை . போதும் என நிறுத்துவது மட்டுமே அந்த இறுதி முடிவை கொண்டு வரும் . சில தவறுகளால் அந்த முயற்சி தடைபடும். அந்த தவறுகளை சரி செய்து கொள்ளும் போது அடுத்த கதவு திறப்பதை பார்த்திருக்கிறேன் . என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் சொல்லும் பதில் கத்திருக்க இயலுமானால் என்னிடம் சொல்லுங்கள் என்பது .இன்றுவரை அதுவே எனது நிலைப்பாடு . இளைஞர் காங்கிரஸில் இருந்து அவர்கள் சென்று அமரமுடியாத இடத்தில் நான் சென்று அமர்ந்திருப்பதாக அவர்கள நம்பினார்கள். அரசியில் ஒருவருக்கு இடம் உருவாகிவது, பின்னர் அவர்கள் செல்வாக்கு அடைவது இயல்பாக நிகழ்வது . அதற்கு நல்லூழ் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. என் வாழ்நாள் முழுவதும் எனக்கான இடத்தை யாரும் ஒருபோதும் உருவாக்கித் தந்ததில்லை என் ஊழ் அப்படி . நான் அடைந்த உயரங்கள் அணைத்தும் நான் செய்ய முயன்ற முயற்சிகளில் மற்றும் செயல்பாடுகளில் இருந்து கிடைத்தவை. ஆகவே எப்போது் அதற்கு பின்னால் கருவிக் கொண்டிருக்கும எதிர் தரப்பு ஒன்றுண்டு .
சிலநாள் காலை முதல் இரவுவரை தலைவருடன் இருக்கும் சந்தர்பங்கள் கிடத்தன. அவருடன் காரில் பயணிக்கும் வாய்ப்பு அதை தொடர்ந்து வந்தது அவரது கார் இல்லத போது எனது காரில் அவர் செல்வது என அது மிக மெல்ல நடந்தது . தனது அணுக்கர்களாக இருப்பவர்கள் தன்னுடனான நெருக்கத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது பற்றிய எச்சரிக்கை உணர்வு அவருக்கு எப்போதும் கொடுக்கும் ஆரம்பத்தில் அது என்னிடமும் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் . எனக்கு அவரது பெயரையோ அவரது அணுக்கத்தையோ உபயாகப்படுத்திக் கொள்ள நான் விரும்பியதில்லை . பொதுவாக அரசியல் தலைவருக்கு அணுக்கராக இருப்பவர்கள் பொருளாதரத்தில் பின்னடைந்தவராக இருப்பார்கள் என்பது இயல்பாக நிகழ்வது . அவர்கள் மட்டுமே அத்தனை நேரமிருக்கும் . அதிலிருந்து லாபடையும் வழிகளை கண்டடைவார்கள். பிறரின் தேவைகளை அதன் பொருட்டு திறந்து கொடுப்பார்கள் . ஆகவே அவர் பலமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கான தேவை இரு தரப்பிற்கும் இருக்கும். அவர்களுக்கு மத்தியல் நான் வேண்டாத ஒரு கல்போல சென்று அமர்ந்திருந்தேன் .அவர்களை நான் அறியாமல் இடறச் செய்து கொண்டிருந்தேன அவர்கள் உலகியலின் எந்த தேவையும் இல்லாத ஒருவன் அங்கு வந்து அமர்ந்திருப்பது அவர்களையும் அவர்களை செயல்பட வைக்கும் நிலைசக்திகளையும் எப்போதும் பதட்டமடைய வைத்துக் கொண்டருந்தது. எனது முதன்மை சவால் அது மட்டுமே. எனக்கு எதிரானவர்கள் அவர்களால் உடனடியாக அடையாளம்காணப்பட்டு ஆதரவளிக்கப் பட்டார்கள் அதன் பின்னர் அவர்கள் இன்னும் மூர்கமாக என்னை எதிர்க்கத் துவங்கினர். ஊசுடு பெருமாள் அறிமுகம் செய்து வைத்தவர்கள் மெல்ல என்னுடன் தங்களை தொடர்புபடுத்துக் கொண்டார்கள். பழைய அனுபவம் காரணமாக அவர்களுடன் தனது தனிப்பட்ட உறவை பெருமாள் வளர்த்துக கொள்ள முயன்றதில்லை.