https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 2 அக்டோபர், 2021

அடையாளமாதல் * வளர்சிதைவு *

 


ஶ்ரீ:



பதிவு : 589  / 779 / தேதி 02 அக்டோபர்  2021


* வளர்சிதைவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 65.






புதுவை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சண்முகத்தை அனுசரித்து போக வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது , ஆனால் எதார்த்தம் இங்கு அவரை எதிர்தாலொழிய அரசியலில்லை என்கிற சூழலில் மாற்று மற்றும் எதிர் கட்சிகளின் தலைவர்களும் அவரிடம் ஏன் நட்பாக இருந்தனர் ஏன் அவரை மீறிச்செல்ல தயங்கினர் என்பது முதலில் எனக்குப் புரியவில்லை . சண்முகம் ஒரு தேர்ந்த கதை சொல்லி . நாடகம் போல பல கதாப்பாத்திரங்களில், அவரவர் குரலில் வெளிப்படுவார் . சில தருணங்கள் அப்படி  கதைக்கானதாக அமைந்துவிடும் எப்பொழுதோ நடந்தவை இன்றைய உயிரோட்டத்தோடு இருக்கும் . அவரை மிக அரிதாக சந்திக்க வரும் ஆளுமைகளுடன் அவரது உரையாடலைத் தொடர்ந்து அவர்கள் சென்றபிறகு சண்முகம் திடீரென மலரும் நினைவுகளுடன் கதை சொல்லியாக உருவெடுப்பார் . அன்று அதிமுக அரசில் இரண்டு முறை முதல்வராக இருந்த ராமசாமி சண்முகத்தை சந்திக்க வந்திருந்தார். இரண்டு முறையும் அவரது அரசாங்கம் கவிழ்கப்பட்டதின் பின்னணியில் சண்முகம் இருந்தார் என கூறப்படுவதுண்டு.MGR தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய அதே சம காலத்தில் புதுவையிலும் அதிமுக ஆட்சியில் அமர்ந்தது . இரண்டு முறையும் மிக அற்ப காலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பட்டதால் சண்முகத்தின் மீது கடும் ரௌத்திரத்தில் இருந்தது புதுவை அதிமுக . ஆனால் MGR உடன் சண்முகம் கொண்டிருந்த கட்சிக்கு அப்பாற்பட்ட நட்பு அதனால் ஏன் எந்த சேதமும் அடையவில்லை? என்பது ஆச்சர்யம் .


அவர் சொல்லும் கதையின் பல பகுதிகளை முன்பு இளைஞர் காங்கிரஸில் அல்லது சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவரது விமர்சகர்கள் என யாராவது எப்போதோ சொன்னது சட்டென நினவிற்கு வந்து விடும் , அதிலிருந்து சண்முகம் சொல்லும் கதையின் மையக் கருத்து பெரிதும் மாறுபாடைந்திருக்காது ஆனால் நோக்கத்தில் அதுவரை எனக்கு சொல்லப்பட்டதில் இருந்து  புதிதாக ஒன்று எழும். நான் அதையும் ஒரு தகவலாக பதிந்து கொண்டு அந்த வாரம் முழுவதும் நான் சந்திக்கும் பலரிடம் அதில் உள்ள மையச் சரடை எடுத்துப் பார்க்க முயல்வேன் . எனது அரசியல் கற்றல் அப்படி நிகழ்ந்ததுதான். இவை எல்லாமே ஒரு காலத்திற்கு பிறகுகூந்தல் பிளக்கும்வேலை என சலிப்படைந்தது உண்டு . ஆனால் பெறும் அறிதல், மெய்மை நோக்கிய பயணம் என்பது கற்றலில் பிண்ணப்பட்டிருக்கும்  அனைத்திலிருந்தும் ஒன்றைச் சென்று அடையும் உச்சம் என பிறகு அறிந்து கொள்ள முடிந்தது . அவை எங்கோ ஆழ்மனத்தல் உறையும் ஒன்றை தொட்டு எழுப்புவது . புதுவை கூட்டணி குறித்த தொகுதி பேச்சு வார்த்தை அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் புதுவை தலைவர்களுடனான கடும் இழுபறிக்கு பிறகு முடிவுறாத சில தொகுதிகள் குறித்து இறுதி வடிவம் கொடுக்க அன்றைய முதல்வர் MGR இன் ஒப்புதலுக்கும் சென்றனர் . முதல் கட்டத் தலைவர்கள ஒப்புக் கொண்ட 20:10 என்கிற எண் அது பழைய உடன்பாட்டு குறியீடு அதற்கு இருபக்கமும் ஏற்கனவே பல முறை பேசி ஒப்புக் கொண்டதுபல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையின் இறுதி கணத்தில் காங்கிரஸ் பலமாக இருந்த சில தொகுதிகள் இடம்மாறி குருவிநத்தம் தொகுதி காங்கிரஸிடம் சென்றது . தொகுதி பங்கீடு என்கிற பேச்சு வார்த்தை மூளையை சூடாக்கக்கி  பெரும் உளச்சோர்வை அளிப்பது . எந்த கட்டத்தில் அது முறிந்தாலும் பின்னர் நிகழும் தொடர்ச்சியில் அனைத்தும் முதலில் இருந்து ஆரம்பிக்கப்படும் . முதல் உடன்பாடு 20/10 என்கிற இலக்கு தமிழக அரசியலுடன் தொடர்புள்ளது . தமிழக மற்றும் புதுவையில் இருந்து மக்களவை உறுப்பினர்கள் காங்கிரஸிற்கும்  மாநிலத்தில் அதிமுக ஆட்சி என்பது அடைப்படை அம்சம் . அதையொட்டி  தமிகத்தில் காங்கிரஸ் அதிமுக வுடன் கூட்டணி அரசாங்கம் பற்றி  மூச்சுவிடக்கூடாது . ஆறுதல் பரிசாக புதுவையில் அதிமுக மாநிலத்தில் கூட்டு அரசாங்கம் பற்றி பேசாது . பல கட்ட சலிப்படைய வைக்கும் பேச்துவார்த்தைக்கு பிறகே இறுதி கட்டம் எட்டப்படும். அதன் பிறகு ஏற்படும் சிறு கருத்து மாற்றம் கூட்டணி பேச்சுவார்த்தை முறிவிற்கு கொண்டு சென்றுவிடும்இரு பக்கமும் நெருக்கடி மிக்க சூழலில் இதை செய்து முடிப்பார்கள்.  


புதுவை மாநில அதிமுக காங்கிரஸிடமிருந்து அது வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை கைப்பற்ற முயற்சிப்பதும் பலகீனமானவற்றை அதற்கு ஒதுக்கவும் முயற்சிப்பார்கள் . தேர்தல் களத்தில் பலகீனமான தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியடைய நேருமானால் அதிமுகவுடன் கூட்டணி மந்திரி சபை என்கிற உள் கணக்குண்டு . MGR ரின் ஆசியும் அதற்கு இருக்கலாம் . புதுவை கூட்டணி அரசில் இடம் பெறுவது மத்திய ஆளும் கட்சியுடன் பேரம் நடத்தும் வல்லமையைத் தருவது . அதைப் போன்ற ஒரு சூழலில் காங்கிரஸிற்கு ஒதுக்கி இருந்த குருவிநத்தம் தொகுதி வெல்லும் வாய்ப்புள்ளவர் இல்லாமலானது . அது ஒரு சூது போல புதுவை மாநில தலைவர்கள் தொகுதி உடன்பாட்டில் அந்த இடத்திற்கு சண்முகத்தை நகர்த்தி சென்றனர். இறுதி கட்ட பேச்சு வார்த்தையின் போது புதுவை அதிமுக தலைவர்கள் MGR இடம் அந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என கேட்கும்படி சொல்லினார்கள். அவரும் சண்முகத்திடம் வேட்பாளர் குறித்து கேட்டார். சண்முகம் அந்த ஆட்டத்தை புரிந்து கொண்டு சிரித்தபடி அதிமுக வில் சீட்டு கேட்டிருந்த தியாகராஜனை காங்கிரஸ் சார்பாக கடனாக கேட்டுப் போட்டியிட வைத்து MGR அனுமதியுடன் இது குறித்த அவர் சொன்ன அந்த கதை.


சண்முகத்துடன் நல்ல உறவை பேணும் அனைத்து மாற்று மற்றும் எதிர் அரசிலாளர்கள் அன்றாடம் பத்திரிக்கைகளில் பரஸ்பரம் சண்முகம் குறித்த குற்றச்சாட்டுகளை வைத்து வெளிவரும் செய்திகள் அத்தனையும் மக்களுக்கானவை . அதன் அடியில் அவர்களுக்கு உள்ள நிர்பந்தம் வேறு விதமானவை . திமுக மற்றும் அதிமுக இரண்டும் தமிழக தேர்தல் கூட்டணியை  புதுவையில் தொடரும் ஏற்பாட்டைச் செய்வது எனவே அவை காங்கிரஸ் கட்சியை சார்ந்தே தங்களின் நிலைப்பாடே எடுக்க முடியும் . சண்முகத்திற்கு கட்சிக்கு அப்பால் தனிப்பட்ட செல்வாக்கு திமுக மற்றும் அதிமுக தமிழக தலைவர்களிடம் இருந்தது . தமிழகத் தலைவர்கள் தனது சொந்த கட்சிக்காரர்களின் கருத்தை சண்முகம் சொல்லி மாற்றிக் கொண்ட பல நிகழ்வுகள் உண்டு. அந்த தலைவர்களிடம் மாற்றிக் கொடுத்த சம்பவங்களால் அவரை கடந்து செல்ல அவர்கள் தயங்கினர். தமிழகத்து மாற்றுக் கட்சி தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்தது அவர் மீதிருந்த அச்சத்தை அதிகப்படுத்தியது . அவர்கள் அனைவரும் அரசியலில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய இடம் அவர்கள் அறியாமல் சண்முகத்தால் ஏதாவதொரு முனையில் மறுக்கப்படும் என்கிற நினைப்பே அதற்கு காரணம் . இதன் அடிப்படையில் நான் அவரிடம் எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை. அவரிடம் சென்றது எனது உளக் கொந்தளிப்பில் இருந்து வெளியேற. ஆனால் ஊழ் அவருக்குஅவரின் அரசியலுக்கு உகந்த வழிகளில் உள்ள வாய்ப்புகளை நான் அறிந்து கொள்ள முடிந்ததும் அவற்றை அவரின் பொருட்டு முயற்சித்து பார்பதன் வழியாக எனது செயல்பாடுகளை வகுத்துக் கொள்வது. ஆனால் அது எளிதில் இயல்வதல்ல அனுபவத்தால் அரசியலின் சாத்தியங்களை அறிந்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் பின்னர் அதிலிருந்து புதியவற்றை நோக்கிச் செல்லுவதில்லை. அது இருப்பதை அழித்துவிடும் என நினைத்தார்கள் அது அனைத்து விதத்திலும்  மிகச்சரியான கணிப்பு . அது புதிதாக எவரையும் உருவாக்காது . ஆனால் என்னை போன்ற ஒருவருக்கு வயதின் காரணமாக அடையவேண்டியதை பற்றிய கனவுகள் எளிதில் இருப்பு கொள்வதில்லை அரசியல் அப்படி பட்டவர்களால் நகர்ந்து புதிய எல்லைகளுக்குச் செல்கிறது . நல்ல தலைமை அதன் வெற்றிகளில் பங்கு கொள்கிறது . ஆனால் அப்படி அப்படி விதிகளினால் கட்டி நிறுவப்பட்ட ஒன்று மாற்றுவழியில் முயற்சிகளாக நிகழ அவர்கள் ஒருபோதும் வெளிப்படையாக அனுமதிப்பதில்லை . ஆனால் இளைஞர் காங்கிரஸ் அமைப்பில் நடைபெறுவது தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாது என்கிற அவரது எண்ணம் அதன் மீது அவருக்கிருந்து கசப்பில் இருந்து உருவானது . சில முயற்சிகளை சொல்லி ஒரு போதும் அவரிடம் அனுமதி கிடைத்ததில்லை அவற்றை ஒரு வசை போலஒழிஎன்பது போலவே அது எப்போதும் அனுமதிக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்