https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 20 அக்டோபர், 2021

அடையாளமாதல் * பொய் பாய்ச்சல் *

 


ஶ்ரீ:



பதிவு : 591  / 781 / தேதி 20 அக்டோபர்  2021



* பொய் பாய்ச்சல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 67.






தமிழக காங்கிரஸ் கட்சி தனது அடிப்படை முரண்களைக் கொண்டது . மூப்பனாருக்கு தமிழக அரசியலைப் போல புதுவையிலும் ஆர்வம் மற்றும் சண்முகம் தன்னை அனுசரித்து போக வேண்டும் என்கிற கருத்து அவரது அகில இந்திய கட்சி நிர்வாக அரசியலுக்கு தேவையாய் இருந்திருக்கலாம் அதன் நீட்சியாக மரைக்காயரும் கண்ணனும் தங்களை மூப்பனார் சார்பில் புதுவை அரசியலில் முன்வைத்தனர் . அது சண்முகத்தின் தலைமைக்கான அறைகூவல் அதற்கு மூப்பனாரின் ஆசி இருந்திருக்கலாம் அல்லது அப்படி சொல்லிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருந்திருக்கலாம் . 1991ல் மேலிடப் பார்வையாளராக மூப்பனார் வந்திருந்தது கண்ணனுக்கு சாதகமானதாக அனைவராலும் கணிக்கப்பட்டது . அங்கு கூடி இருந்த தொண்டர்களின் நிரை அதை மிக அழுத்தமாக மீள மீளச் சொல்லிக் கொண்டிருந்தது . ஆனால் மூப்பனாருடன் நேற்றைய எங்களது அனுபவம் எனக்கு புது செய்திகளை சொல்லியிருந்து . அரசியல் எப்போதும் நேரடித்தன்மை கொண்டதல்ல அது செய்திகளில் பேச்சுகளினாலும் உறுதி செய்யப்பட்டது போன்ற அழுத்தமான தோற்றத்தைக் கொண்டது , ஆனால் நிகழ் அரசியல் எப்போதும அதற்கு நேர் எதிரானதாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.


முதல்வர் தேர்வு நடைபெறும் இரண்டாவது மாடியில் நேர் எதிரே அந்த விடுதியின் வலப்புற நீட்சி பகுதியில் உள் நுழைவாயிலுக்கு அருகில் எங்களுக்கான அறைகள் மரைக்காயரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அவசியம் ஏற்பட்டால் வராண்டா நடைபாதை வழியாக சுற்றி தேர்வு நடைபெறும் இடத்தை அடைய முடியும். ஒரு வேளை அது அப்படி திட்டமிடப்பட்டிருக்கலாம் . அதற்கு எல்லாவித த்திலும் வாய்ப்பிருந்ததை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.அன்று அமைப்பாக இருந்தது மாநில காங்கிரஸ் கட்சி அதை அடுத்தது இளைஞர் காங்கிரஸ் . முதல்வர் தேர்வில் எழும் அரசியல் ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நாங்கள் தேவை என மரைக்காயர் நினைத்திருக்கலாம். ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு கூடி இருந்தாலும் அவர்கள் மரைக்காயர் மற்றும் கண்ணன் கோஷ்டி என அறியப்பட்டாலும் அவர்கள் அனைவரும் உதிரிகள் . மேலிட பார்வையாளர் அல்லது பிறரிடம் பேசும் வல்லமை உதிரிகளுக்கு இல்லை அமைப்பு மட்டுமே கட்சிக் கருத்தை முன்வைக்க முடியும் . மேலிடப் பார்வையாளர்களும் அவர்களின் கருத்தை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும். தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே நடப்பவைகளை அனைத்தையும் இங்கிருந்தே பார்க்கலாம் . கட்சி நண்பர்கள் சிலரை தேர்வு நடைபெறும் அரங்கிற்கு வெளியே நிறுத்து இருப்பதால் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் எங்களை வந்து சேர்ந்து கொண்டிருந்தன நாங்கள் தங்கி இருந்த மாடிக்கு செல்லும் வழி முழுவதும் ஆட்கள் நிறைத்திருந்தனர் அவர்களை தாண்டி மெல்ல ஒருவழியாக மேலேறி நிர்வாகிகள் நின்றி உந்த  இடத்தை அடைந்தும் அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர் நான் பாலன் மற்றும் மரைக்காயருடன் வந்து இறங்கியதை மேலிருந்து பார்த்து விட்டிருந்தனர் . நான் பாலன் மரைக்காயர் இருவரும் பேசிக் கொண்டதை எவ்வளவு தூரம் சொல்லாலாம் என தெரியததால் மூப்பனார் சொன்ன அந்த அங்கதம் பற்றி பாலன் சொன்னதை மரைக்காயர் நகைசுவையாக எடுத்துக் கொண்டார் அதில் பெரிய அரசியல் இருப்பதாக அவர் நினைக்கவில்லை என சொன்னேன்.


1991 எனக்கு எல்லாவகையிலும் மிக முக்கிய தருணமாக உணர்ந்திருக்கிறேன். என்னை அனைத்திலிருந்தும் வேறு பட்டவன் உள்ளிருப்பவன் ஆனால் எதனாலும் தீண்டப்படாதவன் என்கிற நிலைபாடு ஒருவகை ஆணவத்தின் வெளிப்பாடாக இருக்கலாம் , அன்றும் அந்தக் கோடு கலையாமல்தான் அந்தத் திரளை திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். யார் எந்த அரசயிலின் உயர்நிலைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் அவர் வெளியே வத்ததும் காவல்துறை இந்த திரளை நெட்டித் வெளித் தள்ளும். என்ன ஒரு அவமானம் . எதற்காக இங்கு இப்படி கூடி இருக்கிறார்கள். நான் இவர்களை விட பரவாயில்லை போல நான் சென்று அமர ஒரு அறை இருக்கிறது . ஆனால. நானும் அனைத்தின் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன் . ஏதோ ஒரு வகையில் நான் இந்த மாபெரும் இயந்திரத்தின் ஒரு சிறி திருகாணி. ஆனால் அப்படி அல்ல அந்த ஒட்டு மொத்த நிர்வாகத்தை அறிந்து கொள்ள அங்கு இருக்கிறேன். சட்டமன்றத்திற்குள் செல்லும் எந்த விழைவும் எனக்கு இல்லை . நான் கட்சி நிர்வாகத்தில் தவிற்க இயலாதவனாக இருக்க முயல்வேன்.

 

கண்ணன் முதல்வர் பதவி பற்றிய தீவிர கனவு கொண்டவர் மேலும் அதற்கான அடிப்படைகளை 1987 களில் தன்னை மிகச் சரியாக பொருத்திக் கொண்டவர் 1985 முல் 1990 வரையிலான மந்திரி சசையின் செயல்பாட்டில் அனைத்து தரப்பிலும் தனக்கான ஆதரவாளர்களை அடையாளம் கண்டு கொண்டார. அதிகாரிகளின் மத்தியில், அவருக்கு இருந்த செல்வாக்கு அதுவரை மரைக்கயருக்கு மட்டுமே இருந்தது . கண்ணன் அந்த இடத்திற்கு வந்து சேரந்தது அவர் இருவருக்கும் போட்டியாளராக உருவெடுத்த பிறகு. மரைக்காயர் அதைத் தான் முதலில் அஞ்சினார்.1991 என்பதால் துவக்கம் முதல் வைத்திலிங்கம் முதல்வராக வருவார் என்கிற அரசியல் கணக்கு எழும்போதே சண்முகத்தின் தோல்வி உணரப்பட்டது


நான் முதன்முதலாக வைத்திலிங்கத்தை நேரில் பாலானால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். அவர் தனது தொகுதியில் வாக்கு சேகரிப்பு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது .அன்று அதிகாலை பாலன் என்னை தொடர்பு கொண்டு பேசும் போது தன்னை உடனே வந்து அவரது வீட்டில் சந்திக்க சொன்னார் .அப்போது வைத்திலிங்கத்தை சந்திக்க அவரது தொகுதி மடுகரைக்கு செல்ல இருப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை . நான் அவரது வீட்டை அடைந்து அவரை அழைத்துக் கொண்டு புறப்பட்ட போதுதான் அவர் மடுகரைக்கு செல்ல இருப்பதை  சொன்னார் . அது ஒரு சந்திப்பு என்கிற அளவில் நான் புரிந்து கொண்டேன் . அப்போது பாலன் முதலியார் பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.அந்த பரபரப்பான சூழலில் மடுகரை செல்வது முக்கியமானதாக இருக்க வேண்டும என்கிற அளவில் புரிந்திருந்தேன் . வழியில் அவர் பேசவில்லை . மடுகரையை வைத்திலிங்கம் வீட்டிற்கு செல்லும் வழியில் நெருங்கும் போது அவர் வாக்கு சேகரிப்பில் இருப்பது தெரிந்தது அவர் இருக்கும் இடத்திற்கு சென்றோம் . எங்களை கண்டதும் புண்ணுருவலுடன் சற்று நேரத்தில் வருவதாக சொல்லி அருகில் இருக்கும் வீட்டில் காத்திருக்க சொன்னார். நாங்கள் அந்த வீட்டில் காத்திருந்தோம் . சற்று நேரத்தில் வைத்தியலிங்கம உள்நுழைந்ததும் பாலன் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அவரது பேச்சினூடாக என்னைப்பற்றி பாலன் வைத்திலிங்கதுடன் முன்பே பேசி இருந்தது தெரியவந்தது சற்று திகைப்பாக இருந்தது . என்னை பற்றி இருவரும் என்ன பேசி இருக்க முடியும் என குழம்பினேன் . பாலன் ஒருபோதும் தனது நிர்வாகிகளை முதன்மை தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில்லை. எனக்கு இது மேலும் திகைப்பை அதிகமாக்கியது. முதலில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என விளங்கவில்லை . நான் அமைதியாக நிகழ்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தேன் . சற்று நேர பேச்சிற்கு பின்னர் வைத்திலிங்கம் என்னிடம் நட்பாக கைகுலுக்கி விடைபெற்றார் .முதன் முறையாக பாலன் தனது குறுங்குழ அரசியலில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார் என புரிந்து கொண்டேன் . அது நல்ல மாற்றம் இனி அமைப்பை அது முன்னோக்கி எடுத்துச் செல்ல அது பயன்படும் என கணக்கிட்டேன் . நான் பொருமை இழ்ந்து என்ன நடக்கிறது என்றேன். அவர் வைத்திலிங்கம் சட்டமன்ற தேர்தல் கட்சி ரீதியில் அவரது தொகுதி நிர்வகிக்க சிலர் வேண்டும் என கேட்டபோது என்னை பரிந்துரைத்ததாக சொன்னார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்