https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 அக்டோபர், 2021

அடையாளமாதல் * சமனின் செயலன்மை *

 



ஶ்ரீ:



பதிவு : 590  / 780 / தேதி 11 அக்டோபர்  2021


* சமனின் செயலின்மை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 66.





1996 களில் தொடர் கட்சி நிகழ்வுகளின் வழியாக சண்முகத்தை முன் வைக்கும் திட்டம் வழியாக அரசியலில் முன்னகர நினைத்தோம். அப்போது அங்கு நிலவிய தேக்க நிலை மற்றும் அது எந்த அணித்தலைவரையும் எதிராக அல்ல. சண்முகத்துடன் முரண்பட்டவர்கள் ஒன்று அமைதியானார்கள் அல்லது கட்சியில் இருந்து வெளியேறினர். இருப்பவர்கள் அனைவரும் அவர்களின் நிழல்களைப் போல ஒருவேளை அந்த தலைவர்கள் திரும்ப வந்தால் அவர்கள் உயிர்த்தெழலாம் என நினைத்திருக்கலாம். சண்முகம் தன்னை எதிர்த்தவர்களுடன் ஓயாது பேசி அவர்களை இன்னும் வன்மம் கொண்டவர்காளாக உருவாக்கிக் கொண்டிருந்தார். அது புரியாத்தனமில்லை பொழுது போகாமல் செல்லப் பிராணிகளை உசுப்பேற்று விளையாடுவதைப் போல. அது வளர்ப்பவரை சந்தர்ப்பம் கிடைக்கும் வரை ஒன்றும் செய்யாது , ஆனால் மற்றவர்கள் சற்று தள்ளி நிற்பது நல்லது என்பதுபோல.


இளைஞர் காங்கிரஸ் கடந்த கால செயல்பாடுகளின் வழியாக பெற்ற அனுபவம், கள சூழல் அரசியல் மற்றும் தொடர்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது . அந்த மேடைகள் கட்சியில் உள்ள அனைத்து அணிகளின் அளவீட்டு சிக்கலை பொருட்படுத்தாது மாநில காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள் மற்றும் தொகுதி தலைவர்களுடன் அந்த பகுதிகளை சேர்ந்த இளம் மற்றும் அதுவரை அங்கீகரிக்கப்படாத முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவரும் இடம்பெற்றனர் . இளைஞர் காங்கிரஸ் நடத்தும் கட்சி கூட்டங்கள் என்பதால் அந்த அமைப்பைத் தவிர  பங்கு கொள்ளும் அனைவரும் விருந்தினர்களே அவர்கள் பங்கேற்கலாம் அல்லது தவிற்கலாம் என்பது மட்டுமே அவர்களின் முன்பு உள்ள வாய்ப்புகள் . வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பிருந்தது யார் எந்த அணி என்கிற வரையறை செய்து கொள்ளவில்லை . முதல் நிகழ்வு நடத்துவது குறித்த அழைப்பு வெளியான போது கடும் எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்தனர். அதில் சண்முகத்தின் ஆதரவாளர்களும் உண்டு . என்னை அழைத்து நான் கண்டிக்கப்படுவேன் என கணித்திருந்ததால் எவ்வகையிலும் அதை நிறுத்துவது என்பதை பற்றிய பேச்சிற்கு இடமில்லை என்பதை சற்று வலுவாக என் தரப்பு நியாயங்களை சண்முகத்திடம் முன்பே சொல்லியிருந்தேன். அவருக்கு இந்த சில்லறை அரசியலில் எப்போதும் ஆர்வமில்லை . ஆனால் புதிய நிகழ்வுகளால் உருவாக்கும் சமன்குலைவும் அதிலிருந்து முளைக்கும் புதிய சிக்கல்களும் அவருக்கு முன்பு திறந்து வைக்கும் புதிய சமன்பாடுகளையும் சண்முகம் விரும்பாதது . அவர் விரும்பாததை செய்வதில்லை என சொன்ன அவரது ஆதரவாளர்கள் எல்லா செயல்பாடுகளையும் தள்ளிவைத்தனர் அனத்திற்கும் அவரை சார்ந்து நின்று முகமிழந்தனர். வேறு சிலர் அரசுசூழ்தலில் திறனுள்ளவர்கள். அவர்கள்  திரைமறைவுகளில் செயலாற்றி அனைத்து தரப்பினராலும் அருவருத்து நிராகரிக்கப்பட்டனர். இந்த கடந்த கால வரலாறு காரணமாக எந்த அணியில் சென்று சேர்வதை நான் விரும்பவில்லை


அங்கு அதுவரை நிகழ்ந்தது சண்முகம் தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆதரவு அல்லது எதிர்பு என்கிற இரட்டைகள் மட்டுமே அரசியல் செயல்பாடாக பார்க்கப்பட்டது . அவரை எதிர்த்தவர்கள் சமரசத்தின் அடிப்படையில் பதவிகளை அடைந்தார்கள், ஆதரவளித்தவர்கள் அவரால் சமாதனப்டுத்தப்பட்டு காக்க வைக்கப்பட்டனர் பின்னர் அவர்கள் மெல்ல கானாமலானார்கள் என்கிற விசித்திர நீதி என்னை அச்சுறுத்தியது . என்முன்னே உள்ள ஒன்று நான் அரசியலில் நுழைந்து முதல் நாளில் இருந்து பார்த்தது சண்முகத்தின் எதிர்ப்பு. அது அவரை  பதவியில் இருந்து விலக்கி புது தலைவரை முன்வைப்பது . அதற்கான அத்தனை முயற்சிகளும்  சண்முகத்தால் முறியடிக்கப்பட்டது அல்லது அவை வெறும் பேரத்தை நோக்கி அழைக்கும் அரசியல் பிழைத்திருத்தல் யுக்தி . இரண்டும் மரைக்காயர் தில்லி அரசிலுக்கு சென்று திரும்பிய வேகத்தில் அது காலாவதியானது. இப்போது நினைத்துப் பார்க்கையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடங்கி மாற்று அரசியலை முன்வைக்கபடுவது போல எழுந்த அத்தனை உட்கட்சி அரசியலும் கரைந்து அதில் எஞ்சி நின்றது சண்முகம் மட்டுமே என்றாலும் அவர் தன்கீழ் உள்ள அரசியலை காத்திருக்க சொல்வது மட்டுமே அவர் செய்வதாக தோன்றியது. அங்கும் செயல்பட்டு வசைகளையும் எதிர்ப்புகளையும் பெற்று நிற்பது அல்லது செயலின்மையின் உச்சத்திற்கு சென்று திரளிலில் ஒரு துளியென கரைந்து போவது . செயல்படாமல் திரளில் கானாமலாவது என் வழிமுறையல்ல. எனக்கு முன்பாக வாய்ப்புகள் கதவை திறந்து வைப்பதை எனக்கான அறைகூவலாக நான் எப்போதும் எடுத்துக் கொள்வேன். அதை ஒருபோதும்நான் நிராகரிப்பதில்லை


அன்று நிலவிய ஒற்றை சூழலின் தனி ஆளுமையாக எஞ்சியது சண்முகம் மட்டுமே என்கிற இடத்திற்கு அரசியல் வந்து சேர்ந்திருந்தது . அதனடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி அரசியலில் மெல்ல ஊடுருவும் செயல்பாடு ஒன்றை வடிவமைத்திருந்தேன் . ஆரம்பத்தில் வழக்கம் போல சண்முகதின் கடும் கண்டனத்தை பெற்றேன். ஆனால் அதன் நீண்டகால பலனை எண்ணி அதை கடந்து செல்ல தீர்மணித்தேன். அது புதிய தலைவர்களை அறிமுகப்படுத்தும் நடைமுறை அதன் செயல்பாடுகளில் உள்ள அனைத்து இடர்களை நோக்கி கேள்விகளை வைக்கும். அதிலிருந்து எழும் விமர்சனங்கள் என்னை குறிவைத்து நிகழ்பவை என்பதால் முதல் கண்டனம் சண்முகத்திடம் இருந்து எழுந்தது. ஆனால் அவற்றில் இருந்து எழும் மாற்றத்தை கண்ட பிறகு அவர் தனது எதிர்ப்பை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார் . நான் மேலும் மேலும் அதில் பயணப்பட்டுக் கொண்டே இருக்க அவர் என்னைப் பற்றிய தன் முடிவுகளை மெல்ல மாற்றிக் கொண்டே இருந்தார் . எங்கோ என் மீது அவருக்கு கசப்பிருந்திருக்கலாம். எனது நிலைப்பாடு காரணமாக நான் அடைய வேண்டிய இலக்குகள் கை தவறிப் போன போதும். அதை தீர்த்து சண்முகம் பெரிதாக முனையவில்லை என்பதும் அரசியலில் இயல்பானது என புரிந்திருந்தது நான் அவர் மீது எந்த காழ்ப்பும் கொள்ளவில்லை . அவருடைய ஐம்பதாண்டு கால அரசியல் அவருக்கு சொல்லிக்கொடுத்தது யாரையும் நம்பும் ஒன்றிற்கு எதிரான கருத்தியலை” . நான் எனது அரசியலை வெளியில் உள்ளவர்களை நோக்கி நடத்திச் சென்றேன் . அதன் வெற்றியை அந்த நேர அரசியல் சூழல் முடிவு செய்தது . எனக்கானதை நான் அங்கிருந்து பெற்றுக் கொண்டேன் ஆகவே எந்த கசப்பும் இன்றி இறுதி கணம் வரை அவரை என் தலைவர் என்றே கொண்டிருந்தேன் அதற்கு பின்னால் இருந்தது எனக்கான அரசியல் கற்றலும் புதிய தலைவர்களை அறிமுகப் படுத்துவதில் இருந்து எனக்கான எதிர்காலத்தை நோக்கி நகர்ந்தேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்