https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 29 அக்டோபர், 2021

அடையாளமாதல் * முன்னிற்கும் அறத்தின் நிழலின் *

 



ஶ்ரீ:



பதிவு : 592  / 782 / தேதி 29 அக்டோபர்  2021


* முன்னிற்கும் அறத்தின் நிழல்  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 68.





1991 சட்டமன்ற தேர்தலில் மடுகரை தொகுதி கட்சி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக என்னை வைத்திலிங்கம் நியமிக்க இருப்பதை அவருக்காக காத்திருந்த நேரத்தில் என்னிடம் சொன்னார். எனது பெயரை தான் சிபாரிசு செய்ததாக பாலன் சொன்ன போது அந்தப் புரியாமை திகைப்பைக் கொடுத்தது . பாலன் தன் இயக்கத்திலிருந்து ஒருவரை கட்சிப் பொது வெளியில் தொடர்புறுத்த அனுப்புவது அவரை பொருத்தவரை தற்கொலைக்கு ஒப்பானது . அவர் ஒட்டு மொத்த இளைஞர் அமைப்பை தன்தாழ்வணர்வினால் உருவான நம்பிக்கையின்மையால் அவரது கண்களுக்கு அனைவரும் ஒரு நாள் துரோகம் இழைக்க காத்திருப்பவர்களாக தெரிந்தனர். கண்ணனை விட்டு அவர் குமுறி வெளியேறியவர் அதையே தனக்கு ஒருவர் செய்யக்கூடும் என்றால் அது துரோகம் என நம்பினார் . அதற்காக அவரின் எதிர்வினை அமைப்பை சூம்பி தேங்க வைத்தது . குறுங்குழுவாக அதை கொண்டு சென்றதில் பாலன் உட்பட அனைவரும் மூச்சு திணறிக் கொண்டிருந்தோம் . அரசியலின் கருத்தியலில்முரண் மற்றும் பெறப்படும் தகவலின்”  அடிபடையில் உருவாகி நிலை பெறுவது . கட்சி அரசியலில் உடன் இருப்பவர் ஒருவரை பற்றி எப்போதும் எதிர்மறை செய்திகளே முதலில் வெளிப்படும். அது சொல்பவரின் பார்வையில் இருந்து அர்த்தமாகிறது. பெறப்படும் செய்திகளும் தகவல்களுக்கும் தேரடி பொருளும் அதற்கு ஆதாரமும் ஒரு நாளும் கிடைக்காது என்பதால் அரசியலின் அடிப்படை துரோகம் வழியாகவே நிலை கொள்கிறது . அதுவே அதன்அறம்” . 


ஒவ்வொரு செய்தியும் அதிலிருந்து எழும் சந்தேகத்தையும் தனக்கு எதிரான அறைகூவலாக நினத்தார் வாழ்நாள் முழுவதும் அதற்கு எதிர் நிற்பதை அரசியல் என கருதினார்.அதன் வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார். அதன் பொருட்டு எல்லோரையும் முள்முணையில் நிறுத்தினார். ஒருவருக்கு ஒருவர் ஒற்று சொல்வதை ஊக்கினார். பிறரின் ரகசியத்தை தெரிந்து கொள்வது வழியாக அவர்களை கட்டுக்குள் நிறுத்த முடியும் என நம்பினார். எதிர்ப்பு என்கிற கதவை மூடிவிடுதனூடாக அதை கடந்து விட இயலும் என நினைப்பமைபோல போதாமை பிறிதில்லை. அரசியலில் தலைமை என்பது எங்கோ ஒருவருக்கு வாய்ப்பது . செயல்படுவது எப்படி என தெரிவு செய்ய வேண்டிய சூழலை காலம் ஒருவருக்கு உருவாக்கிக் கொடு்கிறது . அவை இரண்டே வழிமுறைகள் அரசியலில் இன்று வரை எழுதாத சட்டமாக இருந்து வருகிறது . ஒன்று பொருளியல் வழியாக தேர்தல் களம் காண்பது இரண்டு தொண்டனை திரட்டி அதனூடாக எழுந்து வர முயற்சிப்பது. இரண்டாவது வழிமுறை வெற்றி பெறுவதன் ஆதார பலம் அறவுணர்வை முன்வைப்பது வெல்வது வென்ற பிறகு தக்கவைப்பது .அதில் தவறியவர்களை அந்த அறம் மன்னிப்பதில்லை. வெற்றிக்கு பிறகு அறத்தை நிராகரிப்பவர்கள் சென்று சேரும் இடம் வெறுமையின் இருள்



இளைஞர் காங்கிரஸின் செயல்பாடுகளின் களம் அறச் சீற்றத்தில் இருந்து மட்டுமே பிறக்க முடியும் அதை சமரசம் செய்து கொள்ளும் எவரும் அடைவது மரணத்திற்கு நிகரான ஒன்று . எனது ஆழ்மனத்தில் மிக அழுத்தமாக விழுந்த இந்த எண்ணத்தை வெறும் உணர்வுகளாக மட்டுமே அன்று புரிந்திருந்தேன் . அதை அன்று என்னால் தர்க்க பூர்வமாக முன்வைக்க இயலவில்லை . புது தலைவர்களை உருவாக்கி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து அதன் பெரும் வெற்றி என் கண்முன்னே நின்று கொண்டிருந்ததுஆனால் அதை விட பெரிய அரசியலின் அறம் சூழ்ச்சியென உருவாகி அனைவராலும் நான, கைவிடப்பட்ட போது எனக்கு முன்பாக இருந்த கேள்விகள் இரண்டுஒன்று எல்லோரையும் போல அதை  முறியடிக்க முயலப்போகிறேனா? அல்லது அது காலத்தின் எண்ணம் வேறு என உணர்ந்து செய்ததில் நிறைந்து அதிலிருந்து வெளியேறுவதா? என . நான் இரண்டாவது வழியை தயக்கமில்லாமல் எடுத்து அனைத்திலிருந்தும் வெளியேறினேன். அது பிறரால் எப்படி பார்க்கப்பட்டாலும்  கவலை கொள்ளவில்லை .


வைத்திலிங்கத்திடம் எனது பெயரை பாலன் சிபாரிசு செய்திருப்பதாக சொன்ன போது இதை அவர் உவந்து செய்திருக்கப் போவதில்லை. இளைஞர் காங்கிரஸின் நிர்வாகிகளில் பலர் என்னை விட இதை சிறப்பாக செய்யும் முன் அனுபவம் உள்ளவர்கள் , என்னை தேர்ந்தெடுத்தது நான் அவரை கடந்து செல்லமாட்டேன் சென்றாலும் அது குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் என கணக்கிட்டிருக்கலாம் . வைத்திலிங்கம் தனக்கு ஒருவரை பரிந்துரைக்க கேட்டதன் பின்னணி எனக்கு தெரியாது . அவர் கேட்டதனால் பாலனுக்கு தவிற்க இயலாமலாகி வேண்டும் . முதலியார் பேட்டையில் போட்டிடும் வாய்ப்பிற்கு பிறகு தனது குறுங்குழு அரசியலில் தொடர்ந்து இருந்து வரும் சலிப்பு மற்றும் இடர்பாடுகளில் இருந்து வெளியேற நினைத்திருக்கலாம் என்றால் அது ஆரோக்கியமானதே. அந்நாள் வரை அவரது இலக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு , அது இன்று நிறைவேறி இருக்கிறது இனி சென்று அடையவேண்டிய இலக்கின் முதல்படியில் ஏறியாகிவிட்டது


தொகுதி கட்சி அமைப்பை தேர்தல் துறையுடன் தொடர்புறுத்தும்  வேலை சற்று சிக்கலானது  என பின்னர் தெரிந்து கொண்டேன். வேட்பாளர் வைத்திலிங்கத்தின் கட்சி மற்றும் தேர்தல் அலுவலகத்துடன் ஒருங்கிணைக்க அவரின் அதிகாரபூர்வ முகவராக நான் முதலில் அறிவிக்கப்பட வேண்டும்பின்னர் அதற்கான தனி அடையாள சீட்டை தேர்தல் துறை வழங்கும். அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு வகுக்கப்படும் எல்லைகளை கடந்து உள் செல்ல கார் கடவு சீட்டு உட்பட பல நிர்வாக உத்திரவுகளை கையாலும் வாய்ப்பு. வாக்களிக்கும் இடம் வரை செல்லவும் மேற்பார்வையிடமும் அந்த கடவு சீட்டு அனுமதியளிக்கும். வாக்களிப்பு நிகழ்ந்து முடிந்த பிறகு ஓட்டுப் பெட்டி சரிபார்க்கப்பட்டு சீல் வைத்து அனுப்புவதில் தொடங்கி ஓட்டு எண்ணப்படும் நேரத்தில் சீல் பிறித்து, எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டதற்கு வழங்கும் சான்றிதழ்க்கான சாட்சி கையெழுத்து வரை தொடர்வது . ஓட்டு எண்ணப்படும் மேஜைகள் எட்டு தேர்தல் நடத்துனர் மேஜை ஒன்று. ஓட்டு எண்ணப்படும் போது எட்டு மேஜைகளில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் RO மேஜைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அமர்ந்திருக்கும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு முன்பாக தீர்வடையும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் அதை நிர்வகிப்பது அது சம்பந்தமாக அடையாள மற்றும் கடவு சீட்டு பெற என்னைப்பற்றிய நகராட்சி மற்றும் வருவாய்த்துறை வழங்கும் சில சான்றிதழ்களை அன்று மாலைக்குள் தேர்தல் துறையில் சமர்பிக்க வேண்டும் என அவரது தனிச் செயலர் பாஸ்கரன் என்னிடம் சொன்னார். என்னால் அன்று மாலைக்குள் அவர் கேட்பது கொடுக்க இயலாது என்பதை சொன்ன போது அவர் சிரித்தபடி அன்று மதியம் அவர் அனுப்பும் நபர் என்னை வீட்டில் வந்து சந்திப்பாதாக அவர் பார்த்துக் கொள்வார் இது பற்றி பிறகு பேசலாம் என்றார். எனக்கு புரியவில்லை . நான் அவரிடம் விடை பெற்று பாலனுடன் முதலியார் பேட்டை இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் வந்து சேர்ந்தேன் . வரும் வழியில் வைத்திலிங்கத்தை சந்தித்தது பற்றி ஒருவரிடமும் சொல்ல வேண்டாம் என்றார் . எனக்கு புரிந்தது . சுப்புரானுக்கு மட்டும் முதலிலேயே தெரியும் என்பது அவர் அது பற்றி என்னிடம் பேசிய போது புரிந்து கொண்டேன். வைத்திலிங்கத்தின் உதவியாளர் என்னை வீட்டில் வந்து சந்திக்க இருப்பதை அவரிடம் சொல்லலாமா என தெரியாததால் சொல்லவில்லை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்