https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

அடையாளமாதல் * பெருமையின் இடம் *

 


ஶ்ரீ:பதிவு : 586  / 776 / தேதி 10 செப்டம்பர்  2021


* பெருமையின் இடம்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 64.

சண்முகத்துடன் மூப்பனார் தங்கி இருந்த அறைக்குள் அவரை சந்திக்க சென்றவர்கள் ஏறக்குறைய ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வெளியே வந்துவிட்டனர்நீண்ட நேத்திற்கு பிறகு வெளியே வந்த சண்முகம் வெளி முற்றம் அருகே வந்து கூடி நின்றிருந்த அனைவரையும் நோக்கி கும்பிட்டு பின் காரில் ஏறினார் . ஆதி கோபாலகிருஷ்ணன் மிக அடக்கமாக வந்த காரின் முன் சீட்டில் ஏறிக் கொள்ள கார் கிளம்பிச் சென்றதுஆதிகோபாலகிருஷ்ணன் ஒடிசலான உருவம் முகத்திற்கு பொருந்தாத கண்கண்ணாடி சற்றே கூன் போட்ட நடை நான் கண்ட அந்த விசித்திரமான ஒன்று என்ன? என்று யோசித்த போது அவர் நெற்றியில் இட்டுக் கொண்டிருந்த திருமண் போல ஒன்று நினைவிற்கு வந்தது . கைக் கட்டைவிரலால் இட்டுக் கொண்டது போல பருமன் கொண்டது , வடநாட்டில் குங்குமத்தை அப்படி இட்டுக் கொள்பவர்களை பார்த்திருக்கிறேன் புதுவையில் அப்படி ஒருவரை பார்ப்பது புதிதாக இருந்தது . அதை ஒரு வித மிகை அல்லது மீறலைப் போல உணர்ந்தேன் . அவரின் அந்த மீறல் மனப்பான்மையே அங்கு நிலவிய அதீத சூழலை கருத்தில் கொள்ளாது எதிர் வாழ்த்து வைக்க அவரால் முடிந்தது என்றால்அந்த அடி நியாயமானதே என நினைத்துக் கொண்டவுடன் சிறு முகம் சிறு புண்ணகையால் விரிந்தது .


அடுத்து யார் பார்க்கப் போகிறார்கள் என நினைத்த போது, பாலன் அனைவரையும் நோக்கிப்போகலாம்என்றார் , மீண்டும் என்னுள் பரபரப்பு தொற்றிக் கொண்டது . நாங்கள் சுமார் பதினைந்து பேர் . மெல்ல நகரத் துவங்கியதும் கூடி இருந்த கூட்டம் அமைதியாக வழி விட்டது சிலருடன் பரஸ்பரம் புண்ணகையுடன் அவர்களை கடந்து சென்றோம் . அந்த சிறப்பு விருந்தினர் மாளிகையின் பொது வரவேற்பறையை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது முகத்தில் அறைந்தது நடுக்கம் ஏற்படுத்தும் அளவிற்கு  தேவைக்கு அதிகமாக குளிரூட்டப்பட்டிருந்த அறை பின் அங்கு நிலவிய அமைதி அதில் தனித்துக் கேட்ட ஏசி ஓடும் உருமல் சத்தம். மூன்று புறமும் அலங்கார சோபாக்கள் போடப்பட்டு நடுவில் ஒருவர் அமரக்கூடி நாற்காலி தனி சோபா போன்று பெரிய அளவில் இருந்தது .அதன் பின்னே வேலைப்பாடு நிறைந்த மடிப்பு மடிப்பாக வைக்கப்பட்ட மரத் தடுப்பு . அதன் பின்னே பாத்திரங்கள் ஒன்றினுடன் ஒன்று பட்டுக் கொள்வதால் ஏற்படுத்தும் மிக மெல்லிய கிணுகிணுப்பு. அப்போது தான் உணவு மேஜையை மறைத்தது அந்த மரப்பு எனப் புரிந்தது . அதிகம் உருத்தாத ஒருவித உணவு வாசனை, யாரோ சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் . எவ்வளவு கூர்ந்து கேட்டபிறகும் எந்தப் பேச்சுக் குரலும் ஒலிக்கவில்லை . நான் அறையை சுற்றும் பாரத்துக் கொண்டிருந்தேன் .பளீரிடும் மஞ்சள் விளக்குகளாலும் இரண்டு சுவர்களிலும் இன்னதென விளங்காத இருண்ட ஓவியங்களாலும் அந்த அறையை அழகூட்டும் முயற்சி நடந்ததிருந்ததது , அலங்காரம் என்பது வேறுவிதமானது அதற்கென தனி ரசனை இருக்கிறது, அரசு சார்ந்த கட்டுமான ஒப்பந்தக்கரர்கள் இந்த அழகூட்டும் வேலைகளை மேலதிகமாக செய்கிறார்கள். அரது அதிகாரிகளுக்கு இருக்கும் கற்பனை வரட்சியும் சிறிதும் ரசனை என ஒன்றி இருப்பதாக நான் அறிந்ததில்லை அவர்கள் செலவேறிய பொருட்களை வாங்கிக் குவிப்பது ஒரு இடத்தை அழகு செய்துவிடும் என நினைப்பதை பார்த்திருக்கிறேன்ஒரு வகைமையில் அது நன்கு ஒளியூட்டப்பட்ட பொருள் சேகரிப்பு அறை போல இருந்தது . ஜண்ணல்கள் அனைத்தும் அடர் சந்தன கலர் அலங்கார துணி மறைப்புகளால் முடப்பட்டிருந்து. மிக புதிதாக இருந்தன , மூப்பனாரின் வருகையை ஒட்டி அவை சமீபத்தில் மாற்றி போடப்பட்டிருக்க வேண்டும் . நேரம் கரைந்து கொண்டிருந்தது யாரும் பேசிக் கொள்ளாதது ஒரு விதமான பதட்டத்தை கொடுத்து . அங்கு சோபாவில் வினாயகமூரத்தி , வைத்தியநாதன் , போன்ற கட்சி நிர்வாகிகள் ஆறேழு பேர் கலைந்து அமர்ந்திருந்தனர். சண்முகத்துடன் அறையை விட்டு வெளியேறிய அவர்கள் எப்போது திரும்பவும் வந்து அமர்ந்து கொண்டார்கள் எனத் தெரியவில்லை. வக்கீல் வைத்தியநாதன் மட்டும் பாலனை பார்த்து அளவாக சிரித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு  அனைவரும் பின் எழுந்து வெளியேறினார்கள் . யாரும் யாருடனும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்பதை கவனித்தேன்நாங்கள் உள் நுழைந்ததும் அவர்கள் எழுந்து வெளியேறியது ஒருவித நாகரீகம் போல என நினைத்துக் கொண்டேன் . மேலும் இரண்டு மூன்று பேர் அங்கே அமர்ந்திருந்தார்கள் அவர்கள் தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் . அவர்களில் ஒருவர் பூங்காவனத்திடம் நோக்கி வந்து சத்தம் எழாமல் விசாரித்துக் கொண்ட பின்னர் அவர் பாலனிடம் வந்து வணங்கிஐயா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் சற்று நேரம் காத்திருங்கள்என்றார் . சோபாக்களில் அமர்ந்திருந்த மற்றவர்களும் எழுந்து வெளியில் செல்ல , காலியான இடத்தில் முதலில் யார் உட்காருவது எனத் தயங்கி நிற்க பாலன் பூங்காவனம் அமர்ந்து கொள்ள சுப்புராயன் என்னை அமரச் சொல்லிவிட்டு என் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் . அங்கு அமர இடமிருந்தும் உடன்வந்தவர்கள் உட்காராமல் நின்று கொண்டனர் .


அந்த மர மறைப்பின் பின்னால் இருந்து மூப்பனாரின் உதவியாளர் உணவு பறிமாறப்பட்ட பாத்திரத்துடன் எடுத்துக் கொண்டு வந்தனர் . அதன் உள்புறம் இருக்கும் தங்கும் அறையின் கதவு விரிந்து திறந்தே இருந்தது . கைகளை மெல்லிய கதர் துண்டில் கைகளை துடைத்த படி வெளிவந்தார் பாலனை பார்த்த மெல்லிய சிரிப்புடன் நலம் விசாரித்தார் , பாலன் கை நீட்ட அருகில் இருந்த பூங்காவனம் பளபளக்கும் சால்வையை எடுத்து அவரிடம் கொடுக்க அதை மல்ல உதறி மூப்பனாருக்கு அணிவித்து முதுகு வளைந்து மூப்பனாரின் முட்டியைத் தொடுவது போல ஒன்றை செய்தார் . நாங்கள் அதை பார்த்துக் கொண்டிருந்தோம் . வக்கீல் முருகேசன் அவரை வீழ்௶ வணங்கிய போது ஏற்பட்ட ஒவ்வாமை ஏன் இப்போது ஏற்படவில்லை எனக் கேட்டுக் கொண்டேன் . இது ஒரு அளவிற்கு உட்பட்ட மரியாதை போல இருந்து நான்மூப்பனார் தடுப்பில் இருந்து வெளிவந்து அமர்ந்ததும் அறையில் அவருடன் வந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக எழுந்து சென்று அந்த மரத் தடுப்பிற்கு பின்னால் சென்று மறைந்தனர் . மீண்டும் பாத்திரங்கள் ஒன்றினுடன் ஒன்று பட்டுக் கொள்ளும் ஏற்படுத்தும் மிக மெல்லிய கிணுகிணுப்பு கேட்டது.


அவர் அந்த தனி இருகையில் அமர்ந்து கொண்டு பாலனை பார்த்து முதலில் கேட்டதுஎப்படி இருக்கிறார் மக்கள் தலைவர்என அறையில் இருந்த அனைவரும் ஒருவித வெட்கச்சிரிப்புடன் அவரை பார்த்து கொண்டிருக்க . பாலன் ஒருவித பதட்டத்துடன்நன்றாக இருக்கிறார்என்றபின் திரும்பி எங்களைப் பார்க்க நாங்கள் அனைவரும் மூப்பனாரை வணங்கி எழுந்து அறையை விட்டு வெளியே வந்து வரவேற்பறையில் போட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம் . யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை . மூப்பனாரை வந்து சந்தித்தது முக்கிய அரசியல் நிகழ்வு ஒன்றில் எங்களுக்கான பணியை செய்தது போல ஒரு மன நிறைவு. வெளியில் நின்று கொண்டிருக்கும் அந்த நூற்றுக் கணக்கானவர்களை விட எங்கள் இடம் இன்னும் சிறப்பானது போன்ற எண்ணமே அங்கிருந்து அனைவரையும் தருக்கி நிமிர வைத்தது . அது ஒரு புகைப்படத்தில் இருக்கும் உறைநிலையை ஒத்த ஒன்றுபல தலைவர்களின் வீட்டின் வரவேற்பறையில் அவர்களின் புகழ் சொல்லும் புகைப்படங்கள் ஏறக்குறைய இந்த வகையை சேர்ந்தவைகள் . ஒருவேளை உள்ளே நாங்கள் அனைவரும் மூப்பனாருடன் இருக்கும் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அது அனைவரையும் பின்னாளில் சட்டமிட்டு மாட்டச் சொல்லலாம் ஆனால் அங்கு எங்களின் அரசியல் இடம் வகுக்க நாங்கள் ஒன்றும் பேசவில்லை. இதோ பாலன் உள்ளே பேசிக் கொண்டிருக்கிறார் அவர் வெளியே வந்து என்ன பேசினார் என சொல்லலாம் அல்லது மௌனமாக நாளை செய்ய வேண்டியதை வழி நடத்தலாம் . இந்த சில நொடி அங்குள்ள அனைவரையும் முக்கிய அரசிலாளராக ஆக்கி இருக்கிறது , சிலரை பற்றி எரியச்செய்திருக்கலாம் . ஆனால் அது எவ்விதத்திலும் எங்களை அரசியல் ரீதியாக உயர்த்தவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக