https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 16 செப்டம்பர், 2021

அடையாளமாதல் * கடவு *

 


ஶ்ரீ:



பதிவு : 587  / 777 / தேதி 16 செப்டம்பர்  2021


* கடவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 64.





நாங்கள் அந்த அறையின் வெளியே அமைதியாக அமர்ந்திருந்தோம். யாரும் நாருடனும் பேசிக் கொள்ளவில்லை மூப்பனாரை சந்தித்து விட்டு வந்திருந்தது அபைவரிக்கும் ஒருவித கிளர்ச்சியை கொடுத்திருந்தது , அந்த ஊக்கம் போதும் இன்னும் ஆறு மாத த்திற்கு எந்த கேள்வி.ஐயும் கேட்காது ஓடச்செய்யும் விசையை கொடுத்துவிடும் . அறையில் இருந்து வெளியே வந்த பாலன் வெகு உற்சாகமாய் இருந்தார் முகம் பூரிப்பால் மலர்ந்திருந்தது என்ன?என்ன? என்று ஆவலுடன் கேட்ட அனைவரிடமும் முகத்தை இறுக்கமாக வைத்துஇங்கு பேச வேண்டாம்என்றார் ஏன என எல்லோருக்கும் அவரவர்களின் தகவல்களின் அடிப்படையில் புரிந்தது என்பதால் யாரும் அங்கு பேச விரும்பவில்லை . இதில் வேடிக்கை பாலனின் சமிக்ஞையை அவரவர் தங்களைப் பிற்றிய அதீத நம்பிக்கையில் இருந்தனர் பிறர் இருப்பதால் பாலன் பேசத் தயங்குகிறார் என ஊகித்தனர். அந்தபிறர்ஒவ்வொருவருக்கும் தன்னைத் தவிர என்கிற அர்த்தத்தில். அனைவரும் காரில் பாய்ந்து ஏற முயன்றனர். அங்கிருந்த மற்ற அனைவரையும் காலை 8:00 மணிக்கு உப்பளம் விருந்தினர் விடுதியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் காத்திருக்கச் சொல்லி புறப்பட்டார் . பாலனின் வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டு நாங்கள் பாலன் வீட்டை அடையும் போது இரவு 9:00 மணி. பாலன் வண்டியில் ஏதும் பேச விழையவில்லை. நான் அவரை கூர்ந்து அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன் அது பதட்டம் அல்லது பரவசம் என ஏதோ ஒரு உணர்வில் இருந்தார்


வீடு வந்ததும் பாலன் இறங்க அனைவருக்கும் பாலன் வீட்டு சாலையில் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டது. பாலன் ஒன்றில் அமர இன்னொன்றில் என்னை அமரச் சொல்ல நான் மறுத்து அவருக்கு பின்னால் இருந்த வீட்டுப்படியில் சென்று அமர்ந்து கொண்டேன் . பூங்காவனம் என் அருகில் அமர்ந்து கொள்ள பிறர் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர். காலியாக இருந்த அந்த நாற்காலியில் பாலன் மனைவி மலர் சப்பாத்தியை ஒரு தட்டில் சிறு கிண்ணத்தில் சாம்பாருடன் வந்து அந்த நாற்காலியில் வைத்தார் . மூப்பனார் கண்ணனைமக்கள் தலைவர்என அடைமொழி இட்டுச் சொன்னதை சுற்றியே அன்று இரவு பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. அதை வெகு உற்சாகமாக கைகளைத் தட்டி பாலன் சொ்லிக் கொண்டிருந்ததில் இரு௶்து எனக்கு ஏதும் பிடி கிடைக்கவில்லை. நான, கேள்வி ஏதும் கேட்காமல் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன். பீடி குடிக்க சுப்புராயன் எழுந்து கொண்டபோது நான் அவருடன் இணைந்து கொண்டேன் . இருட்டடைந்த தெரு முக்கில் சென்று நின்ற கொண்ட அவரிடம் மூப்பனார் கண்ணனைமக்கள் தலைவர்என அடைமொழி இட்டுச் சொன்னதல் என்ன பேச இருக்கிறது என்றேன் அவர் சிரித்து மக்கள் தலைவர் பட்டம் மூப்பனாருக்கான அடைமொழி அதை கண்ணனுக்கு பயன்படுத்தியதை அவர் ரசிக்கவில்லை . மூப்பனார் கண்ணனுக்கு ஆதரவாக வரவில்லை என்றார் . அவர் புதுவைக்கு வந்தது ஒன்று மரைக்காயரை சரிகட்ட சண்முகம் அவரை வரவழைத்திருக்கலாம் அல்லது அவர் வருகை தற்செயலான ஒன்று . நான் அந்த சொற்களில் இருக்கும் உள்ளர்த்தம் அரசியில் எப்படி எதிரொலிக்கும் என புரியாது நின்றேன் .


மரைக்காயரையும் பாலனையும் அழைத்துக் கொண்டு நான் விடுதியை நோக்கி கிளம்பினேன். மரைக்காயர் என்னிடம் நேராக விடுதிக்கு செல்ல வேண்டாம் மாற்று வழியில் செல்லலாம் என்றார் . மரைக்காயர் பாலனுடன் பேச விழைந்தார் என புரிந்து கொண்டேன் . அவர்கள் முன்பே சிலவற்றை பேசி இருக்க வேண்டும் . இப்போது அதன் தொடர்ச்சியை பேசினார்கள் என்னால் ஒன்றுடன் ஒன்று பொருத்தி புரிந்து கொள்ள முடிந்தது . பாலன் மரைக்காயரை நோக்கி கெஞ்சும் குரலில்என்ன காரணமா இருந்தாலும் கண்ணன் முதல்வராக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்என்று சொல்ல மரைக்காயர்எனக்கு தெரியாதா கவலைப்படாதேஎன்றார் . “சண்முகம் அதை தடுத்துவிடுவார் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிலர் தனி கணக்கு வைத்திருக்கிறார்கள்” . மேலும்இந்த முறை சுயேட்டசை உறப்பினர்கள் மூவர் எனவே கூட்டத்தில்தான் எல்லாம் முடிவாகும்என்றார். பாலன் தான் சந்தேகப்படு்ம் மூன்று சட்டமன்ற உறுப்பினர் பற்றியும்சுயேட்சைகளில் ஒருவர் சண்முகத்திற்கு ஆதரவளிக்கலாம் மற்ற இருவரை கணிப்பது கடினம்என்றார். மரைக்காயரிடம் எந்தப் பதட்டமும் இல்லை ஆனால் பாலன் நிலையழிந்தவராக இருந்தார். பாலனிடம் மூப்பனாரை சந்தித்தாகி விட்டதா? என்ன சொன்னார் ? என கேட்டதற்கு பாலன் முதல் நாள் இரவு அவரை சந்தித்தையும் கண்ணனை அவர் நலம் விசாரித்த தோரணையையும் சொல்லியபோது மரைக்காயர் அதிராமல் சிரித்தார் . அதன் பிறகு விடுதி வரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை


செஞ்சி சாலை பாலத்தை அடைந்தவுடன் காரை நெருங்கி நிறுத்தி ஏதோ சொல்ல வந்த காவலர் பாலனை பார்த்து சற்று திகைத்து பின்னால் அமர்ந்திருக்கும் மரைக்காயரை எதிர்பாராததால் பதறி ரோட்டை அடைத்துப் போட்டருந்த தடுப்புகளை விலக்கி வழி ஏற்படுத்திக் கொடுத்தார் . அங்கு நின்று கொண்டிருந்த கூட்டம் காரை நெருங்கி வந்த பார்த்து அதில் ஒருவர் அவசரமாகமரைக்காயர் வாழ்கஎன குரல் எடுக்க அவர் காரில் இருந்தபடி கும்பிட்டு பின்  என் தோளை தொட்டு முன்னே செல்லச் சொன்னார் . சுற்றி சூழ்ந்து கொண்ட கும்பலை இடிக்காமல் சற்று வேகமெடுத்ததும் கூட்டம் குழம்பியபடி வழிவிட்டது . சற்று மிகை வேகத்துடன் ரயிலவே லைனை கடந்து உப்பளம் விடுதியை அடைந்தேன் . உப்பளம் அரசினர் விடுதியின் நுழைவு வாயில் இரும்புக் கதவு சாத்தி வைக்கப்பட்டிருந்தாலும் உள்ளே கூட்டம் அம்மியது . எனக்கு காரை வெளியில் நிறுத்துவதாக? உள்ள விடுவதா? என குழம்பி நிற்க வெளியே கேட் அருகே நின்ற காவலர்கள் மரைக்காயரை பார்த்தது விரைப்பான சலாம் வைக்க கதவு பரந்து விரிந்து திறக்கப்பட்டது . உள்ளே சென்று வண்டி நிற்க வழி ஏற்படுத்திக் கொடுத்தனர் நான் விடுதி கார் நிறுத்துமிடத்தின் மையத்தில் உள்ள செயற்கை நீரூற்று மேடை சுற்றி விடுதியின் பெரிய போர்ட்டிகோ வாசலுக்குள் சென்று நிறுத்தினேன் . மரைக்காயர் தன்னை வாழ்த்தி எழுந்த கோஷத்தை ஏற்று அந்த கும்பலைக் கடந்து கரைத்து போனார் , பின்னால் பாலன் செல்ல நான் காரை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தேன். அங்கு காரை விட முடியாது . காரை நகர்த்தினால் காவலர்கள் வந்து மெல்ல மெல்ல வழிகாட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் அதன் பின் நகர்ந்து நகர்ந்து செஞ்சி சாலை பாலத்திற்கே வந்து சேர வேண்டியதுதான். திரும்பவும் விடுதிக்குள் வருவது சாத்தியமில்லை . சட்டென அதுவரை இருந்து எல்லா சிறப்பு அடையாளங்களையும் இழந்து திரளின் ஒரு துளியாவது போல கொடுங்கனவு பிறிதில்லை . எனக்கு பிறர் அடையாளமாக இருப்பதும் காருடன் நான் இருக்கும் கணம்வரை மட்டுமே எனது கௌரவம் இணைக்கப்பட்டிருக்குறது என்கிற எண்ணம் எரிச்சலை கொடுத்தது . இதுவரை திறந்த கதவுகள் அனைத்தும் எனது காரில் அமர்ந்திருந்தவருக்காக . எனக்கென அவை மீண்டும் திறக்காது . ஒரு அது ஒருநாள் திறக்கும் என்கிற நம்பிக்கையே அரசியலின் உந்து விசை


காவலரின் பார்வையில் இருந்து தப்பிக்க அந்த கார் என்னுடையது அல்ல என்பது போல சாவியை எடுத்துக் கொண்டு கும்பலில் ஒளிந்து கொள்ள முயன்றேன் . ஆனால் காவலர் அடையாளம் கண்டு கொண்டார்சார் இங்க வண்டி நிறுத்த முடியாது எடுங்கள்என்றார் . என்ன செய்வது என்று புரியமால் திகைத்தேன். இருபக்கமும் அடைத்து கை நீட்டி உப்பளம் சாலையை விழுங்க முயற்சிக்கும் அரக்கனைப் போல இருந்தது அந்த விடுதி நின்று கொண்டிருந்தது அதன் எல்லையில் இருந்து இரும்புக் கதவு மீண்டும் திறக்கப்பட முன்பு இருந்து உற்சாகம் அனைத்தும் சட்டென வடிந்து போனது.


விடுதியின் இடதுபுறமுள்ள முதல் மாடி அறையின் வெளியே பால்கனியில் நின்று கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து என்னை யாரோ பேர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டு அன்னாந்து பார்க்க ஒட்டு மொத்த இளைஞர் காங்கிரஸ் கூட்டம் அந்த இடத்தை ஆக்ரமித்து நின்று மேலே வரச்சொல்லி உற்சாகமாக கூவ என்னை நோக்கி கூவி மேல வரச் சொன்னது நான் கையில் இருந்த  சாவியை காற்றில் ஆட்மிக் காட்டி காரை என்ன செய்ய ? என கேட்க நல்ல வேளையாக வேறு ஒரு காரில் உள்ளே வந்த எனது ஓட்டுனர் முனுசாமி அந்த சாவியை பெற்றுக் கொண்ட பிறகே ஆறுதலடைந்தேன் . இந்த முறை அந்த கதவு வேறு ஒரு காருக்கு திறந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்