https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

அடையாளமாதல். * இருப்பு *

 


ஶ்ரீ:



பதிவு : 585  / 775 / தேதி 05 செப்டம்பர்  2021


* இருப்பு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 63.





இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலன் மீண்டும் நியமிக்கப்பட்டதன் பிண்ணனியில் முதல்வர் வைத்திலிங்கம் இருந்தார். அதை ஒரு வெற்றி விழா மாநாடாக தேதி குறிக்கப்பட்டு சிறப்பு அழைப்பாளராக மூப்பனார் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முதல்வர் வைத்திருக்க வேண்டும். அதன் பிண்ணனியில் வெள்ளாழத் தெரு கிருஷ்ணமூர்த்தி இருந்தார். மூப்பனாருக்கு செய்தி யார் மூலம் தெரிவிக்கப்பட்டது என எனக்குத் தெரிவில்லை ஆனால் அவர் புதுவைக்கு வருவது சாத்தியமில்லை என்கிற தகவல் பாலனுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் . அதை சரி செய்வதில் அவருக்கு பெரிய ஆர்வம் இருக்கவில்லை என்பது அவரை சம்மதிக்க வைத்து அழைத்து வர என் போன்ற மூன்றாம் நிலையில் இருக்கும் ஒருவரை அனுப்ப முடிவு செய்தது அவரது மைத்தினர் சுப்புரயன் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம் . கபிஸ்தலத்தில் வைத்து ரங்கசாமி மூப்பனாரை நான் அறிமுகம் செய்து கொண்டது அப்போதுதான் . அதுவே பின்னர் எனக்கு ஏற்பட்ட அரசியல் சிக்கலுக்கு அவரிடம் செல்லும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது . அவர் வழியாகத்தான் மூப்பனாரை சந்தித்தேன் அவரை நெருங்கி பின்னர் எனது திருமணத்திற்கு அழைக்கும் வாந்ப்பு கிடைத்தது . ஆனால் அந்த தேதியில் அவரது உதவியாளர் பாலுவின் பெண்ணுக்கு திருமணம் வர இயலாதென்றார் பின்னர் எப்போது புதுவைக்கு வந்தாலும் வீட்டிற்கு வருவதாக கூறினார். அரசியல் சூழல் அதற்கான வாய்ப்பை உருவாக்கி தரவில்லை . என்பதெல்லாம் தனிக்கதை.


உப்பளம் விருந்தினர் விடுதியில் நடந்த சம்பவத்திற்கு பிறகு நான் வக்கீல் முருகேசனை பல முறை சந்தித்திருக்கிறேன். அவரை பார்க்கும் ஒவ்வொரு கணமும் என நினைவில் எழுவது அவர் அத்தனை நூறு பேர்களுக்கு மத்தியல் புழுதி பரவ தடுக்கி விழந்ததைப் போல மூப்பனாரிடம் அவர் வாங்கியதுஆசிஎன்கிற வரையறைக்குள் வராதது . அதில் இருப்பது வெறும் அரசியல் மட்டுமே . ஒன்றும் அளிக்க முடியாத ஒருவருக்கு பிறிதொருவர் அளிக்கும் இறைஞ்சல் அவரை பணிதல் அதை குற்றமாக நான் எண்ணவில்லை ஆனால் இங்கு அது பரிதாபகரமானதாக தோன்றியது . அவரை தொடர்ந்து சிலர் அவர் காலை தொடும் முயற்சி போல ஒன்றை செய்ய முயற்சித்த போது தடுக்கப்பட்டு மூப்பனார் திரும்பி அங்கு கூடி இருந்த அனைவரையும் பொதுவில் கும்பி்ட்டு தனது அறையை நோக்கி சென்றார் . நான் திகைப்படன் எனது அருகில் நின்று கொண்டிருந்த சுப்புராயனை நோக்கிஇப்படி காலில் விழுந்து பிறகு தான் அவரை பார்க்க வேண்டுமா”? என கேட்டதற்கு அவர் இல்லை என தலையசைத்து முகச்சுழித்தது  ஆறுதளிப்பதாக இருந்தது . மதிப்பு மிக்க ஒருவரை வணங்க எனக்கு தயக்கமிருந்ததில்லை ஆனால் அரசியலின் நலன் பொருட்டு அதை என்னால் ஒருபோதும் செய்ய முடியாது என உணர்ந்திருந்தேன்


தன்னுடைய அறைக்கு மூப்பனார் சென்ற பிறகும் அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தனர் . எனக்கு அடுத்து என்ன நிகழ இருக்கிறது என புரியவில்லை. சுப்புராயனிடம்நாம் சென்று அவரை பார்கப்போகிறோமா”? என்றதற்குஇல்லை இன்னும் கட்சித் தலைவர் அவரை சந்திக்க வேண்டும் அதன் பின்னர் நாம் என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம்என்றார். அங்கு கூடியிருந்த யாருக்கும் ஒருவருடன் ஒருவர் எந்த தொடர்பில் இல்லாத போது ஒருவர் பின் ஒருவர் என்கிற விதி அங்கு எப்படி செயல்படுத்தப் படும், யாராவது அதை செய்ய இருக்கிறார்களா? என புரியாமல் அந்தக் கூட்டத்தை பார்த்தபடி இருந்தேன் . ஒரு அம்பாசிடர் கார் வந்து நிற்க அதிலிருந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சண்முகம் இறங்கனார். பொது இடத்தில் அத்தனை அருகில் அவரையும் முதல் முறையாகப் பார்கிறேன். கதர் வேட்டி முழங்கை வரை ஏற்றி விடப்பட்ட ஜிப்பா . ஒரு ஜாடையில் மூப்பனாரைப் போலவே இருந்தார். கிராமத்து எளிமையில் அது தஞ்சாவூர் சாயல் என நினைத்துக் கொண்டேன் , ஆம் சண்முகம் கரைகால் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் அது தஞ்சைக்கு மிக அருகில் இருக்கும் புதுவையை சேர்ந்தப் பகுதி. அவருடன் திருக்கணுர் ஆதிகோபாலகிருஷ்ணனும் வந்திருந்தார் . சண்முகத்தை கண்டதும் அங்கு கூடியிருந்தவர்கள பேயை கண்டது போலானார்கள் . அந்த மிரட்சி வெளிபடையாக தெரிந்தது. சிறு அலைக்கழிப்பிறகு பிறகு கூட்டத்திலிருந்து தன்னை திரட்டிக்கொண்டு யாரோமக்கள் தலைவர் கண்ணன் வாழ்கஎன கோஷம் கிளப்ப கூட்டம் அதை வாங்கி மீளவும் சொல்லியது . சட்டென கலவரம் போல உணரப்பட்டது .அது கண்ணனின் ஆதரவாளர்கள் கூட்டம் என தெளிவாகியது


கட்சி நிர்வாகிகள் மூப்பனாரின் அறைக்கு வெளியே நின்றிருந்தனர், அவர்கள் சண்முகத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர் எனத் தெரிந்தது அந்த கோஷத்தை அவர்கள் எந்த சலனமும் இல்லாமல் எங்களைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் . ஒரு புள்ளியில் காரில் இருந்து இறங்கிய சண்முகத்தை மறிப்பது போல நின்று கொண்டாலும் முன்வரிசை வளையம் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்தியது . “வாழ்க கோஷஒலி வலுத்தபடி வந்தது . சட்டென திருக்கணூர் ஆதிகோபாலகிருஷ்ணன்புதுவை காமராஜர் சண்முகம் வாழ்கஎன குரல் எடுத்தத போது சுற்றி இருந்த கூட்டம் சுதாரிப்பதற்குள் காரில் இருந்து வேகமாக இறங்கிய சண்முகம் கடும் வன்மத்துடன் அவர் முதுகில் ஓங்கி அறைந்தார்திடுக்கிட்ட கூட்டம் அடுத்த அடி தங்களுக்கு என எண்ணியது போல இரண்டடி பின்னால் நகர்ந்து கொண்டது. காற்றே இல்லதது போல அனைத்தும் அசைவிழந்ததிருந்தது . சுற்றியிருந்த ஒவ்வொருவரும் அந்த அறையை தங்கள் முதுகில் உணர்ந்தனர் . மயான அமைதியில் சண்முகம் குரல் தனியாக கேட்டது . அசந்தர்ப்பமாக தன்னை வாழ்த்தை விட அங்கிருந்த சூழல் அவரை கடும் எரிச்சலடைய வைத்திருக்க வேண்டும் . பின்னர் திரும்பி மூப்பனார் தங்கி  இருந்த அறைக்குள் சென்று மறைந்தார் அறைக்கு வெளியே நின்றிருந்து  நிர்வாகிகளும் உடன் சென்றனர் . கூட்டம் வினையழிந்தது போல கலைந்து நின்றது. சண்முகத்தின் எதிரவினையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அனைவரின் கவனம் ஆதிகோபாலகிருஷ்ணன் பக்கம் திரும்பியது அவரும் திகைத்திருந்தார் . முகம் அவமானத்தால் கன்றி அந்த அடி அவரை குன்றச்செய்துவிட்டது . சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளிருந்து அவருக்கு அழைப்பு வர , அவர் தக்கத்துடன் அந்த அறைக்கு உள்ளே சென்றார் அவரை அழைத்தவர் கதவை விரி்ந்து திறந்து வைத்து தோளில் கைவைத்தார் . ஏதாவது ஆறுதல் சொல்லியிருக்க வேண்டும்.   கூட்டத்தில் யாரோஅவருக்கு இன்று நூறு ரூபாய் பேட்டா அதிகம் கிடைக்கும்என்றார் சுற்றி நின்றிருந்தவர்கள் சிரித்தனர் . என்னால் அதை ரசிக்க முடியவில்லை . அந்த காட்சி அவதானித்தேன் . சண்முகத்திற்கு எப்படியும் அறுபது அகவை கடந்திருக்க வேண்டும் . ஆனால் அந்த அடியின் வலிமை அதைச் சொல்லவில்லை . திருமணமாகாத கிராமத்து ஆள் என்கிற படிமம் ஆழமாக இருந்தது.நான் மெல்ல திரும்பி பாலன் நின்றிருக்கும் இடத்தை நோக்கி சென்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...