ஶ்ரீ:
பதிவு : 585 / 775 / தேதி 28 ஆகஸ்ட் 2021
* ரங்கசாமி மூப்பனார் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 63.
வக்கீல் முருகேசன் மூப்பனாரின் காலில் அத்தனை நூறு பேர்களுக்கு மத்தியில் சிறிதும் தயங்காது வீழ்ந்து வணங்கியது மிகுந்த திகைப்பை கொடுத்த நிகழ்வு . பல காலம் அது எனது நினைவுகளால் தொடர்ந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது . அது அவர் மீது எனக்கு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது . அவரின் இறுதிக் கணம் வரை பல நிகழ்வுகளில் நாங்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய தருணம் ஏற்படும் போதெல்லாம் காலம் என்னை அவருக்கு எதிராகவே கொண்டு நிறுத்தியது . தெய்வம்,குரு ,ஆன்மீகப் பெரியவர்கள் போன்றவர்களின் கால்களில் அப்படி அனைவரும் வீழ்ந்து வணங்கி பார்த்திருக்கிறேன். அதன் பிண்ணனியில் பெரும் மரியாதை , பக்தி முக்கியமானதாக இருக்கும் . அன்று நிகழ்ந்தது எந்த வரையறைக்குளும் வராமல் வெளியிலேயே நின்றிருந்து . 1994களில் துவங்கி 2001 அவர் மண்மறைய சில வாரங்களுக்கு முன்புவரை.இலும் மூப்பனாரை பலமுறை சந்தித்திருக்கிறேன் அதற்கு அடிப்படை காரணமாக இருந்த அவரது தம்பி ரங்கசாமி மூப்பனாரை இந்த சந்தர்ப்பத்தில் அவரை நினைவுகூர்வது எனக்கு மிக அவசியமானது என நினைக்கிறேன். முதல் முறை அவரை கும்பகோணம் சுந்தரப் பெருமாள் கோவில் அருகே கபிஸ்தலத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் சந்திக்க சென்றேன் . அது பாலனை நிலைநிறுத்த அவருக்கும் முதல்வராக இருந்த வைத்திலிங்கத்திற்கும் உருவாகி வரும் இடம் இளைஞர் காங்கிரஸிற்கு முக்கியமான ஒன்றாக அன்று இருந்தது . சண்முகம் முழுமையாக வாழப்படியை சார்ந்து நின்றிருந்த சூழலில் மூப்பனாரின் ஆதரவாளர்களாக அறியப்பட்ட கண்ணன் சபாநாயகரானது மரைக்காயார் மத்தியில் அமைச்சர் பதவியில் இருந்து இறங்கியது போன்ற மிக முக்கிய கட்டத்தில் வைத்திலிங்கம் முக்கிய தலைவராக உருவெடுக்க அவருக்கு மூப்பனாரின் பின்புலம் தேவையாய் இருந்தது . அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவிற்கு மிக நெருக்கமானவராக கருத்தப்பட்ட அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர்ஜித் சிங் பிட்டா மூப்பனாரை தனது ஆசிரியர்களில் ஒருவராக கருதினார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தது சண்முகத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி அதன் பிண்ணனியில் மரைக்காயர் இருந்தார் . அது சண்முகத்தை பதவி விலகச் செய்யும் என்றும் புதிய தலைவராக ஜீவரத்திணம் உடையார் மரைக்காயரால் சிபாரிசு செய்யப்படுவார் என்றும் அதில் பாலன் மூத்த பொதுச் செயலாளராக பொறுப்பேற்பார் அது புதுவையின் அரசியில் புதிய களத்தை துவங்கி வைக்கும் என்றும் மரைக்காயரை மீளவும் புதுவை அரசியலில் நிறுவும் என கணக்கிடப்பட்டிருந்தது . அதற்கு ஊடாக பாலனுக்கு தனிப்பட்ட ஒரு கணக்கின் காரணமாக அவரை அடுத்து கமலக்கண்ணன் தலைவராவதை விரும்பாத பாலன் என்னை இளைஞர் காங்கிரஸ் தலவருக்கு சிபாரிசு செய்ய முயன்றார் . நான் இளைஞர் காங்கிரஸ் தலைவராக வருவது பாலன் இரு அமைப்பையும் தனது இருப்பில் வைத்திருக்க எண்ணியிருக்க வேண்டும் . ஆனால் மரைக்காயரின் எந்த அழுத்தத்திற்கும் சண்முகம் அசைந்து கொடுக்கவில்லை . அவர் தொடர்ந்து தலைவராக நீடிக்கும் வாய்ப்பு உருவானபோது மரைக்காயரின் அனைத்து திட்டமும் காலாவதியானது . அதில் தேவையற்று அடிப்பட்டது நான் . ஆரம்பம் முதலே என்னை இளைஞர் காங்கிரஸின் தலவராக கொண்டுவரும் திட்டத்தை நான் ரசிக்கவில்லை . என்னைப் பற்றி நான் கொண்டிருந்து மதிப்பீடுகள் வேறுவிதமானவை. அரசியல் பேசுகலை உள்ளவர்களுக்கானது. திக்கி திக்கி பேசும் எனது பிறவிக் குறைபாடே எனது முதல் தடை. ஒவ்வொரு மேடையிலும் அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் . ஆனால் என்னைப்பற்றிய புதிய பரிமாணத்தை நான் அறிந்து கொள அந்த நிகழ்வே அடிப்படை காரணமாகியது , என்னை நான் உருவாக்கிக் கொண்டது அதன் பிறகு.
சண்முகத்தை கட்சித் தலைவர் பதவியில் இருந்து இறக்க இயலாமல் போன பிறகு மரைக்காயரிடமிருந்து பாலன் விலக துவங்கினார் . பதவியை இழந்து பாலனை நிலையழியச் செய்தது . பித்துபிடித்தவர் போலானார் மீண்டும் தலைவராக வருவதற்கு முதல்வர் வைத்திலிங்கம் உதவ அவருக்கு நன்றிகடனாக புதுவையில் பெரும் விழா எடுத்து அதில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பங்கேற்கும் விழாவில் மூப்பனார் கலந்து கொண்டால் அது வைத்திலிங்கத்திற்கு பெரிய பின்புலத்தை உருவாக்கி கொடுக்கும் என கணக்கிடப்பட்டது . சண்முகம் அதன் உட்கூறுகளை உணர்ந்தவர் என்பதால் வக்கீல் முருகேசனை அனுப்பி மூப்பனாரை அதில் பங்கேற்க கூடாது என கேட்டுக் கொள்ள சொன்னார் . ஏறக்குறைய அதுதான் நடந்திருக்க வேண்டியது . அதை எதிர்கொள்ள பாலன் தரப்பில் சுப்புராயன் திட்டமாக அவருடன் ஆங்லோ பிரென்ச் நூற்பு ஆலையில் வேலை செய்யும் தனசேகருக்கு மூப்பானாரின் தம்பி ரங்கசாமி மூப்பனாரிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்த எண்ணினார் . தனசேகர் ரங்கசாமி மூப்பனாரை சந்திக்க ஏற்பாடாகி இருந்தது . ஆனால் இதில் நான் ஏன் நுழைக்கப்பட்டேன் என புரிந்து கொள்ள முடியவில்லை. விழாவிற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் பாலனே அதை செய்திருக்கலாம் . ஆனால் சுப்புரானின் மிகை கற்பனைத் திட்டத்தை அவர் ரசிக்கவில்லை . அது எந்த வகையிலும் எடுபடாது என அவர் நினைத்திருக்க வேண்டும் . தனசேகருக்கு எந்த கட்சி அடையாளமும் இல்லாததால் அவருடன் கட்சி சார்பாக ஒருவர் செல்லவேண்டும். சுப்புரானின் கணக்கில் நான் தேர்வானேன் . மிக ரகசியமாக வைக்கப்பட்ட பயணம் அது . ஆனால் ஊழின் கணம் நான் உடன் செல்ல வேண்டும் என முடிவானது . பாலனுடைய மொத்த அரசியல் களத்தை கலைத்து போட்ட நிகழ்வு அங்கிருந்து துவங்கியது . அவருடைய வீழ்ச்சிக்கு நான் காரணமானேன் . அதன் பிண்ணனி பற்றியும் அதை நிகழ்த்த வேண்டிய சூழல் பற்றியும் என்னை நான் அனுகி புரிந்து கொள்ள முநல்வதைப் பற்றியும் எனது பழைய பதிவில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் இன்று உள்ள கூறுமுறை அதில் இருக்காதென நினைக்கிறேன். இன்று இங்கு இருந்து கொண்டு அவற்றை மீளவும் பிறதொரு முறை அனுகி் பர்க்கிறேன் . வாழ்வின் அர்த்தமும் அர்த்மின்மையுமாக அவை என்முன் எழுந்து விரிந்து நிற்பதை உணர்கிறேன் . நான் மீளவும் எனக்குள் கேட்டுக் கொள்வது நான் ஆற்றியது சரியா என்றால் அதை இப்படி புரிந்து கொள்ள முயல்கிறேன் . நான் கடந்து வந்த பாதையில நான் சென்று அமர்ந்த இடங்கள் எனது தகுதியை குறித்து எனக்கு உரிவானவைகள் அல்ல . ஆனால் அந்த இடத்தை அடைந்ததும் மிக மெல்ல எனக்கான வடிவத்தை அது என்னிடம் கேட்கும் இடத்தை அடைந்து விடுகிறேன் . அந்த இடம் என்னிடம் என்ன கேட்கிறதோ அதை அளிக்க முயல்கிறேன் . அங்கு அமர வேண்டிய தகுதியை நோக்கி என்னை செலுத்திக் கொண்ட பிறகு அதிலிருந்து ஒருபோதும் சமரசம் கொள்வதில்லை . அந்த இடத்திற்கு ஏற்ப என்னை எந்த நெகிழ்வும் இல்லாமல் இறுக்கமாக உருவாக்கிக் கொண்டே முன்னகர்ந்திருக்கிறேன். எனக்கான புரிதலை அடைகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக