https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

அடையாளமாதல் * காத்திருத்தல் *

 ஶ்ரீ:பதிவு : 583  / 773 / தேதி 10 ஆகஸ்ட்  2021


* காத்திருத்தல்ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 61.

மூப்பனாரை சந்திக்க காரில் அவர்களுடன் நான் புறப்பட்டு, காரில் அடுத்த என்னப் பேசப் போகிறார்கள் என அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன் . முன்னிருக்கையில் பாலன் அமர்ந்திருக்க பின்னால் என்னுடன் பூங்காவனம், கமலக்கண்ணன் தாமோதரன் இருந்தனர் . பிற அனைவருவரும் எங்களுக்கு முன் உப்பளம் அரசினர் விடுதிக்கு சென்றுவிட்டிருந்தனர் . அரசியல் ரீதியான சந்திப்புகளைப் பற்றி நிறைய பேசிக் கேட்டிருந்த எனக்கு அன்று ஒரு பெரிய தலைவரை நேரில் சந்திக்கும் முதல் வாய்ப்பு . ஒவ்வொரு சந்திப்பும் அரசியல் நகர்வின் திருப்புமுனை , அதற்கு காரணமான அவர்கள் முன்வைக்கும் தரவுகள் மற்றும் அரசுசூழ்தல் சாதுர்யம் என பல முறை என் முன்னால் அடுக்கப்பட்டதை வாய்திறந்து கேட்டிருக்கிறேன். அரசியல் தலைவர்கள் என்பவர்கள் நடப்புகளை மாற்றும் திறனுள்ளவர்களின் நிரை என்றும், எனக்கு புரியாத ஒன்றை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது எனது புரிதலாக் இருந்தது . அவர்கள் நான் அன்றாடம் சந்திக்கும் எளிய மானிடர்கள்தான் ஆனால் அரசியல் சந்திப்புகளின் போது தெய்வம் ஏறியவர்களாக சன்னதம் கொண்டர்வரகளாக மாறிவிடுகிறார்கள் என்பது  அவர்களை ஒருபோதும் சாமான்யர்களுக்கு மத்தியில் வைக்க என்னை தயங்கவைத்தது . இதோ எனக்கு முன்னால் அப்படி ஒரு வரலாற்று நிகழ்வு நடக்க இருப்பதும் அதை அது நிகழும் முதற் கணத்தில் நான் அதன் அருகிருந்து கொண்டிருக்கிறேன். என்ன ஒரு மகத்தான தருணம் . நான் என் வாழ்நாளில் காத்திருந்தது இதோ இப்போது என் முன்னே நிகழ இருக்கிறது . அதிலிருக்கும் அரசியலை முற்றாக கற்றுத் தேற இதோ நான் அவர்களுக்கு மத்தியில் ஒரு மாணவனாக அமர்ந்திருக்கிறேன் பரவசத்துடன். அத்தகைய உணர்வுகள் அலையாயும் மனத்துடன் அவர் பேசிக் கொள்ள இருப்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன்அங்கு இருந்த அமைதியை தள்ளி வழக்கம் போல ஐம்பது அகவையை நெருங்கிக் கொண்டிருக்கும் பூங்காவனம் தான் முதலில் பேசினார் . தனது எளிய அப்பாவித்தனமான கேள்விகளுக்கு அவர் புகழ் பெற்றவர். அத்தகைய கேள்விகளால் தான் தொடர்ந்து சிறுமை செய்யப்படுவதை எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை . அதே சமயம் மிக ஆழமாக உள்ளத்தை சென்று நெருடும் பலவற்றை அவர் துணிந்து சபையில் முன் வைத்த போதெல்லாம் பலர் அதற்கு பதில் சொல்ல திணறுவதை பார்த்திருக்கிறேன். அந்த இருமைகளே அவரை தவிற்க முடியாதவராக அவர் முன் வைக்கும் கேள்விக்கு பகடியாகவாவது சிலவற்றை சொல்லியாக வேண்டிய கட்டாயம் பிறருக்கு ஏற்படுவதை பார்த்திருக்கிறேன்


தனது கேள்வியாக அல்ல கருதாக அவர் முன்வைத்தது , மூப்பனார் புதுவை வந்திருப்பது மரைக்காயர் மற்றும் கண்ணனுக்கு சாதகமானதாக, சண்முகம் ஒருபோதும் மூப்பனாருடன் இணங்கிச் செல்லாதவர் ஆகவே இந்தமுறை கண்ணனுக்கு எதிர்ப்பாக சண்முகத்தின் நகர்வு வேலை செய்யாது  . மூப்பனாரை புதுவைக்கு வரவழைத்தற்கு பின்னால் மரைக்காயர் இருக்க வேண்டும் அல்லது அது தற்செயல் நிகழ்வு , எப்படி என்றாலும் சிக்கல் என்பது அவரது கருத்தாக இருந்தது . அதற்கு பாலன்கண்ணன் ஒருபோதும் மூப்பனாருக்கு ஆதரவானவர் அல்லர். மூப்பனாருக்கு அது வெளிப்படையாக தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு . வக்கீல் முருகேசன் அதை அவருக்கு சொல்லியிருப்பாரா என தெரியாது. அதை வலுவாக முன்வைப்பது மட்டுமே இன்று செய்யக்கூடியதுஎன்றார் பாலன் . அதிலிருந்து நாம் அடையப்படுவது என்ன என்கிற கேள்விக்கானது அல்ல அவர் அப்போது சொன்னது  அல்லது அந்த கேளவிக்கு பதில் சொல்ல அவர் விரும்பவில்லை . மரைக்காயருடன் இணைந்து முக்கிய அரசியல் நகர்த்தலில் பாலனுக்கு பங்கிருக்கிறது என இளைஞர் காங்கிரஸாரால் நம்பப்பட்டிருந்தது . வைத்திலிங்கம் முதல்வராக வருவதுனூடாக பாலனைத் தலைவராக கொண்ட இளைஞர் காங்கிரஸை ஆதரிக்கும் ஒரே மாநில அதிகாரமிக்க தலைமையாக அவர் இருப்பார் என்பது அதன் அடிகோடிட்ட ஊகமாக நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டது . காரணம் மரைக்காயரை சார்ந்து இயங்க நிர்வாகிகளுக்குள் இருந்த அடிப்படை கருத்து முரண்பாடு . அந்த நிமிடம் வரை கண்ணனை ஆதரிப்பதாக மரைக்காயர் வெளிப்படையாக அறிவித்திருந்தார் அதனுள்ளாக நடக்க இருப்பது அரசுசூழ்தல் என அதை சாதாரண தொண்டனுக்கு புரியவைக்க முடியாது .புதிய முதல்வர் தேர்தலில் பாலனுக்கு பெரிய பங்கில்லை அல்லது அவரை மீண்டும் கண்ணனை சார்ந்து நிற்க சொல்லி மரைக்காயரால் நிர்பந்திக்கப்படுகிறார் என்கிற அலர் நிலவியது . அந்த சூழலில் மூப்பனாரை சந்தித்து தனது இயக்க நிலைபாடாக தன்னால் கண்ணனை ஆதரிக்க முடியாது என வெளிப்படையாக அறிவிக்க நினைத்தார், ஆனால் அதை அந்த சிறு நிர்வாகிகளுக்கு மட்டுமேயாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் நினைத்திருக்கலாம் அல்லது அதுவும் மரைக்காயருடைய முதல் அரசியல் நகர்வுகளில் ஒன்றாக இருக்கலாம். கண்ணன் மூப்பனாருக்கு ஆதரவானவர் அல்ல என அவர் சொல்ல விழைந்தது  எதைவைத்து என எனக்கு அப்போது தெரியவில்லை. பின்னாளில் அது அவரது ஆழ்மன வெளிப்பாடு என உணர்ந்திருக்கிறேன் . சில சமயங்களில் மிக ஆழ்மனத்தின் வெளிப்பாடாக தனக்கு சிக்கலை உருவாக்கும் செய்திகளைக்கூட அவர் தயங்காது வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறேன்


நாங்கள் உப்பளம் அரசினர் விடுதிக்கு சென்று சேர்ந்தோம் அங்கு நான் எதிர்பாரத்த கூட்டம் ஏதுமின்றி இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. மூப்பனார் புதுவைக்கு வந்திருக்கும் செய்தி இன்னும் சரியாக கட்சிகாரர்களிடம் சென்று சேரவில்லை அல்லது அங்கு குழும வேண்டிய கூட்டத்தின் அளவு தேவைக்கு ஏற்ப தலைவர்களால் நிர்வகிக்கப்படுவது என கருதினேன் . அந்த இடம் நிறைய கார்களாலும் தலைவர்களாலும் நிரம்பி வழிந்தது . அங்கிருந்த பரபரபின்மையால் மூப்பனார் அங்கு இல்லை என புரிந்து கொண்டோம் . நாங்கள் வந்த காருக்கு அருகில் நின்று கொள்ள ஊசுடு பெருமாள் கூட்டத்தில் இருந்து வெளி வந்து பாலனை பார்த்துமூப்பனார் கவர்னரை சந்திக்க சென்றிக்கிறார்என்றான் . அது மரியாதை நிமித்தமான சந்திப்பு . நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தலைவர் தேர்தலில் கவர்னரின் கருத்தை அறிந்து கொள்ள அங்கு சென்றிருக்கலாம். அங்கு அவர் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்பதால் அங்கேயே காத்திருக்க முடிவெடுத்தோம் . சற்று நேரத்திற்கெல்லாம  மூப்பனாரின் கார் உள் நுழைவதை பார்த்த பிறகு அங்கு சட்டென பதற்றம் ஒரு அலை போல அடிப்பதை பார்க்க முடிந்தது . அது கண்களுக்கு தெரியாத ஒரு சரடு போல அனைவரையும் ஒரே இடத்தில் பிணைத்தது . முக்கிய தலைவர்கள் என  யாரும் இல்லாத நிலை அந்த ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...