ஶ்ரீ:
பதிவு : 584 / 774 / தேதி 17 ஆகஸ்ட் 2021
* கருப்பையா மூப்பனார் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 62.
காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் வக்கீல் முருகேசன் தலைமையில் மாநில கங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் நின்று கொண்டிந்தனர் அவர்களில் பலரை முதன்மையாக பார்க்க முடிந்தது . கட்சியின் நிர்வாகிகள் என்பதால் கட்சி சார்பாக நின்று மூப்பனாரை வரவேற்கும் பொறுப்பில் இருப்பவர்கள் . கட்சியின் முன்னனித் தலைவர்களான அவர்களை அங்கு ஒருங்கே பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது . அனைவரும் சண்முகத்தின் முகங்களாக அறியப்பட்டவர்கள், அவரின் அரசியல் நகர்வின் விரல்கள் கட்சி என்னும் பெரிய இயந்திரத்தின் உறுப்புகள் . அங்கில்லாத பிற எவரும் அவர்களது இடத்தை அரசியல் ரீதியில் விழைபவர்கள் . அவர்கள் ஒரு உடலென அங்கு நின்றுகொண்டிருந்தாலும் தனி ஆளுமைகள் பல முகம் கொண்டவர்கள். முதன்மை தலைவர்கள் , மரைக்காயர் மற்றும் கண்ணன் என யாரும் அங்கு இருப்பதற்கான அறிகுறியில்லை . அவர்கள் அந்த விடுதியின் மூடிய அறைகளுக்கு பின்னால் ஆலோசனையில் இருக்கிறார்களாம் . அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளுக்கு உள்ளே இருக்கலாம் . அந்த அறைகளுக்கு வெளியே நடையாதை முழுக்க அவர்களது ஆதரவாளர்கள் நிரம்பிக் காணப்பட்டார்கள் . அவர்கள் கீழே நடப்பதை எந்த பதட்டமும் இன்றி , இறங்கி வர எந்த முயற்சியும் செய்யாதவர்களாக அங்கேயே இருந்து கொண்டிருந்தனர் . நான் பங்கேற்கும் முதல் “அசலான” கட்சி நிகழ்வு அது . ஒரு திருவிழா மனநிலையில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன் . அங்கிருந்து கிடைத்த புரிதில் வழியாக பின்னாளில் அவர்களுடன் இணந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது அவர்களுக்குள்ளே ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் முரண் அலையில் சிக்கிக் கொள்ளாமல் அவர்களுக்கு இடையே ஊடாடும் இடத்தில் என்னை நானாக நிலைநிறுத்திக் கொள்ள அந்த சம்பவம் உதவியது . வக்கீல் வைத்தியநாதன், காசுக்கடை செல்வம் , வினாயகமூர்த்தி, பன்னீர்செல்வம் , தங்கப்பிரகாசம்,ஜோதி நாராயணசாமி, ஊசுடு அண்ணமலை ரெட்டியார், ஏப்பலம் ஜானகிராமன் ரெட்டியார் , உருளையன்பேட்டை சுந்தரம் போன்றவர்கள் முக அளவில் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள் . ஒட்டுமொத்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இவர்களை எப்போதும் அஞ்சினர். இவர்களுக்கு தலைவராக சண்முகம் அனைவரின் துர்சொப்பனம்.
பிற அணிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் காணப்படவில்லை, அல்லது அவர்களை எனக்கு தெரியாது . மற்றபடி அங்கு நெருக்கியடித்தபடி இருந்தவர்கள் எளிய தொண்டர்கள் மட்டுமே . மூப்பனாரின் கார் மித வேகத்தில் விடுதி உள்நுழைந்து வலப்புறம் உள்ள முக்கியஸ்தர்கள் தங்கும் விடுதி முற்றத்தை நோக்கி ஊர்ந்து சென்றது . அந்த சிறப்பு விருந்தினர் மாளிகை மாளிகை இரண்டடுக்குகளைக் கொண்டது மொத்தம் ஆறு தங்கும் அறைகள். ஒவ்வொன்றிலும் வரவேற்பரை உணவு அருந்தும் இடம் மற்றும் படுக்கை அறை என சிறு வீட்டின் முழு வசதியான அமைப்பைக் கொண்டிருந்தது . மூப்பனாருக்கு கீழ் தளத்தில் அறை ஒருங்கப் பட்டிருந்தது . அவரின் கார் வந்து அந்த விடுதி முற்றத்தில் நின்று அசைவிழந்ததும் அவரை வாழ்த்தி ஓங்கி ஒலிக்கும் முழக்கத்துடன் கட்டவிழ்ந்த திரள் ஒரு வித விசையால் செலுத்தப்பட்டவர்களை போல மூப்பனாரின் காரை நோக்கி வேகமாக நகர்ந்தனர். காவல்துறையினர் யாரும் அங்கு பாதுகாப்பிற்கு இல்லாதது எனக்கு வியப்பை அளித்தது. அது கட்சி தலைவர்கள் தொண்டர்களுக்கானது என்பதால் அவர்களே அதற்கு பாதுகாப்பாக இருக்க கூடியவர்களாக கருதப்பட்டிருக்க வேண்டும் . அல்லது நிலைசக்தியை எதிர்கும் போக்கு அங்கு இல்லை , காரணம் அதை இப்போது கைலெடுக்க முயல்பவர்கள் அதை வெளிக்களத்தில் போராட வேண்டிய அவசியத்தில் இல்லாதவர்கள் . இதுவரை போராடியது இங்கு வந்து சேர . பின் இங்கிருந்து அரசு அவர்களை அழைத்துச் செல்ல இருக்கிறது . அதற்கு முன் நிகழ வேண்டிய முதற் சடங்கு நாளை நடக்க இருக்கிறது . அது கட்சி இயந்திரத்தை அரசு இயந்திரத்துடன் இணைக்கும் ஒட்டு பசை . அதுவரை இனி பிறருக்கு உணர்த்த வேண்டியது ஒன்றுமில்லாதால் ஏற்பட்ட வெறுமையாக அது இருக்கலாம் . நாளை காலை நடக்க இருக்கும் பலப்பரிட்டசை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குள்ளே நிகழ வேண்டியது. அது கருக் கொண்டு பல காலமாகிறது அதற்கு மேலதிகமாக எதையும் வெளியில் இருந்து செலுத்தும் அவசியமின்மையை அவர்கள் அறிந்திருந்தார்கள் .
பாலன் தனித்து காரில் இருக்க நான் அவர்களிடம் இருந்து மெல்ல விலகி மூப்பனாரின் காருக்கு மிக அருகில் சென்று நின்று கொண்டேன் .எதிர்பார்ப்பு மிக்க பரபரப்பு எனக்குள் முழுவதுமாக நிறைவதை உணரமுடிந்தது . அனைவரும் காரின் அருகில் செல்ல முயன்றதால் நான் அனைத்து பக்கமும் அலைக்கழிக்கப் பட்டேன் ஆனால் அது சிறிது தேரம்தான், பின்னர் அங்கு மெல்ல பிறிதொரு விசை உருவாவதை அறிந்து கொள்ள முடிந்தது. ஒருவரைத் தாண்டி ஒருவர் முண்டியடித்தாலும் ஒருவரை பிறிதொருவர் தங்களது இருக்கைகளாலும் தடுத்து நிறுத்திக் கொண்டனர் . அது அவரின் காரின் கதவு திறந்து கொள்ளவும் அதிலிருந்து அவர் இறங்கும் அளவிற்கான இடத்தை உருவாக்கியது . பின்னிருந்து உந்தித் தள்ளுபவர்களின் விசையை முன்னால் நின்றவர்கள் தாங்கிக் கொண்டனர் . அது அந்த திரளை காரின் மீது மோதி வழிந்து விடாமல் இருக்க உதவியது . உருவாகிய வளயத்தில் மெல்ல காரில் இருந்து மூப்பனார் இறங்கினார் . பளீரிடும் வெள்ளை கதர் சட்டை வேட்டி எளிய வெள்ளை நிற ரப்பர் செருப்புடன் அணிந்து மிக ஒழுங்காக ஒட்ட வெட்டிவிடப்பட்ட நரைத்த சுருள் தலைமுடி அலையலையாக மழுங்க சவரம் செய்யப்பட்ட முகம் வெற்றிலையால் சிவந்த வாய் கருகிய பல் ஏதோ ஒரு சொல்லால் உறைந்த உதடு என தனிப்பட்ட ஆளுமையாக அனைவரையும் வசீகரிப்பவராக தோன்றினார். எது அந்த வசீகரத்தை அவருக்கு கொடுத்திருக்கிறது என அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன். வேறு எந்த சிந்தனையும் இன்றி அங்கு நிகழ்வதற்குள் இழுக்கப்ப்டடு மிக அருகில் இருந்த அவரை பார்த்தபோது ஏற்பட்ட முதல் உளப்பதிவு அவரை ஒரு ஆப்பரிக்க கருப்பின மனிதரை ஒத்தவராக நினைக்கத் தோன்றியது . ஆனால் அத்தனை கருப்பல்ல ஒரு வித சாம்பல் நிறத்திலிருந்தார் . மற்றபடி அந்த சாயல் நான் முன்பு நினைத்ததேதான்.
சட்டென ஒரு அதிர்வு உருவாகி நான் என்ன ஏது என திகைத்துப் பார்கையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் யாரோ தள்ளிவிட்டு ஒருவர் அந்த வளைத்திற்குள் வந்து விழுந்துவிட்டார் என நினைத்தேன் . எனக்கு முதலில் என்ன நிகழ்ந்தது என புரியவில்லை பதட்டத்துடன் யார் விழுந்தது என எட்டிப் பார்க்க முயல முன் வரிசை மனித சங்கிலியின் விசை என்னை பின்னோக்கித் தள்ளியது . விழுந்தவரை யாரும் தூக்கி விட முயலாமல் ஏன் அந்த வட்டத்தை மேலும் விரியச் செய்கின்றனர் என யோசிப்பதற்குள் நான் மேலும் மேலும் பின்னோக்கி தள்ளப்பட்டேன். என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அந்த கூட்த்தை முழு பலம் கொண்டு முன்னால் உந்தி பார்த்போது அது வக்கீல் முருகேசன் மூப்பனாரின் காலில் வழுந்து ஆசி வாங்குகிறார் என தெரிந்தது . நான் திகைத்து மூப்பனாரை பார்க்க அவர் இன்னதென சொல்ல முடியாத முகமும் உதடும் விரிந்த பாவனையால் அதை ஏற்றுக் கொண்டார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக