https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

அடையாளமாதல் * தும்பி *

                                                                                   ஶ்ரீ:பதிவு : 582  / 772 / தேதி 03 ஆகஸ்ட்  2021


* தும்பி ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 60.


மரைக்காயர் வீட்டில் நான் அமர்ந்திருந்த நாற்காலிக்கு பின்னே அந்த வரவேற்பரையின் பெரும் கதவுகளில் ஒன்று ஓசையின்றி திறந்து கொள்ள பளீரிட்ட ஓசை முதுகில் அறைந்தது . மரைக்காயர் வெளியே வர அவரை சுற்றி சிலர் உரத்தக் குரலில் பேசியபடி  உடன் வந்தனர் . அனைவரும் ஒரே சமயத்தில் பேச முயன்றதால் எதுவும் அர்த்தமாகவில்லை . சற்று பின்னால் பாலன் வேறு ஒருவருடன் பேசிய படி வந்தார் . நான் எழுந்து கொண்டு அங்கு நிகழ்வதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே பேச முடியாத ஒன்றை அங்குள்ள அனைவரும் மரைக்காயருடன் தனிப்பட்டு பேச விழைந்ததால் சற்று நேரத்தில் அவரை சூழ்ந்திருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக விலகிக் கொள்ள மரைக்காயர் பேச விரும்பிய நபர் மட்டும் அவர் அருகில் இருந்தார் . பாலன் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக வந்து என்னருகில் அமர்ந்து கொண்டார் . நாங்கள் பேசிக் கொள்ள ஒன்றுமில்லை. உப்பளம் அரசினர் விடுதிக்கு செல்வது மட்டுமே அடுத்து நிகழ வேண்டியது . நேரம் காலை 10:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது, யாரிடமும் எந்தப் பரபரபும் இல்லை என்பதால் சட்டமன்ற தலைவர் தேர்வு முன்பு முடிவெடுத்தது போல அன்றி நேரம் மாற்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். செல்போன் வராத காலம் எனது கார் ஓட்டுனரை சென்று பார்த்து வர எழுந்தேன் . அவர் கிளம்பும் கடைசி நேரத்தில் டீ குடிக்க சென்றிருந்தால் தேவையற்ற சிக்கல் . எழுந்த என்னைப் பார்த்து பாலன் எங்கே ? என்றார் , நான்ஒட்டுனரை பார்த்து விட்டு வருகிறேன்என்றேன் . ஓட்டுனர் முனுசாமி காரின் அருகில் நின்று கொண்டிருந்தார் நான் அவரிடம் எந்த நேரமும் கிளம்ப வேண்டி இருக்கும் , அங்கேயே காத்திருக்க சொன்னேன் , அதற்குள் திட்டி வாசல் கதவு திறந்து கொள்ள மரைக்காயர் வீட்டிலிருந்து வெளியே வந்தர் . ஓராள் நுழையும் அளவு என்பதால் ஒருவர் பின் ஒருவராக வெளிவந்தபடி இருந்தனர் . குட்டிகளை ஈனும் தாய்போல அந்த கதவு தோன்றியது . அந்த கதவு பல வருடங்களாக பல கதர் சட்டைகளை பிரசவித்துக் கொண்டே இருக்கிறது . அவர்களுள் தலைவராக எவராவது ஆனார்களா? என கேட்டுக் கொண்டேன். தும்பி போல அடையடையாக கிளம்பும் இவர்கள் ஒரு சிட்டுக்குருவி உயரம் கூட அடையவில்லை. உணவு சங்கிலியின் கடைகோடியில் இருப்பவர்கள்ரோட்டை அடைந்த பின்னரும் அவர்களின் பேச்சு நிற்கவில்லை . மரைக்காயரிடம் செய்ய வேண்டியதை முழுவதும் செய்து முடித்தவரின் தெளிவு இருந்தது இனி அடுத்த நிகழ வேண்டியது முதல் காட்சி அதன் பின் ஒன்றை தொடர்ந்து பிறதொன்று தானாக ஆதரவாக எதிர்ப்பாக எழுந்து முரண்கொள்ளத் துவங்கி தனது வழியை தானே கண்டடையும் என அவர் நினைத்திருக்க வேண்டும் . மேலதிகமாக அவர் பேச விரும்பவில்லை என்பது அவரது உடல் மொழியில் தெரிந்தது . அவர் மெல்ல அந்த கூட்டத்தை விட்டு விலகி பாலனை நோக்கி வந்ததும் பிற அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர் . பாலனிடம் எப்படி விடுதிக்கு செல்கிறீர்கள்? என்றார் . பாலன் என்னுடை காரை கட்டினார் . மரைக்காயர் சட்டென என்னிடம் காரை எடுத்து வரச் சொல்ல நான் கை காட்டியதும் முனுசாமி வேகமாக சென்று காரை எடுத்து வந்தார் . மரைக்காயர் என்னிடம்ஓட்டுனர் வேண்டாம் நீங்கள் காரை எடுங்கள்என்றார். நான் சற்று புரியாது திகைத்து பின் முனுசாமியை அங்கிருந்த கார் ஒன்றில் ஏறி விடுதிக்கு வரச் சொல்லிவிட்டு நான் காரை எடுத்தேன் . மரைக்காயர் பின்னால் ஏறிக்கொள்ள பாலன் எனக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டார் .நான் விடுதியை நோக்கி கிளம்பினேன். என்னிடம் நேராக விடுதிக்கு செல்ல வேண்டாம் கடற்கரைவரை சென்று பின்னர் விடுதிக்கு செல்லலாம் என்றார் . மரைக்காயர் பாலனுடன் பேச விழைந்தார் என புரிந்து கொண்டேன் . அவர்கள் முன்பே சிலவற்றை பேசி இருக்க வேண்டும் . இப்போது அதன் தொடர்ச்சியை பேசினார்கள் என்னால் ஒன்றுடன் ஒன்று பொருத்தி புரிந்து கொள்ள முடிந்தது . பாலன் மரைக்காயரை நோக்கி கெஞ்சும் குரலில்என்ன காரணமா இருந்தாலும் கண்ணன் முதல்வராக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்என்று சொல்ல மரைக்காயர்எனக்கு தெரியாதா கவலைப்படாதேஎன்றார் . “சண்முகம் அதை தடுத்துவிடுவார் ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிலர் தனி கணக்கு வைத்திருக்கிறார்கள்” . மேலும் இந்த முறை சுயேட்டசை உறப்பினர்கள் மூவர் எனவே கூட்டத்தில்தான் எல்லாம் முடிவாகும் என்றார். பாலன் தான் சந்தேகப்படு்ம் மூன்று சட்டமன்ற உறுப்பினர் பற்றியும் சுயேட்சைகளில் ஒருவர் சண்முகத்திற்கு ஆதரவளிக்கலாம் மற்ற இருவரை கணிப்பது கடினம் என்றார். மரைக்காயரிடம் எந்தப் பதட்டமும் இல்லை ஆனால் பாலன் நிலையழிந்தவராக இருந்தார்


முதல் நாள் மாலை மூப்பனார் புதுவைக்கு வந்திருக்கும் செய்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கெட்ட சகுனம் போல பரவிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த தகவலை பெறும் நபரிடம் நிகழும் மெல்லிய உளநடுக்கத்தை பார்க்க முடிந்தது . அவர் உடனடியாக அந்தத் தகவலை வேறு ஒருவருக்கு அதை சொல்லவில்லை என்றால் தலை சிதறிவிடும் ஊழ் வந்து சேரும் என்பது போல கிடைத்த தகவல்களை சொல்லி சொல்லி அது மட்டுமே கண்ணால் பார்க்கக் கூடிய பருப்பொருளைப் போல அங்கு இருந்து கொண்டிருந்தது . முதல் தகவல் அனைவராலும் பெறப்பட்டு அது இனி கடத்த முடியாத பொருளாகி நின்றது . இன்னும் அரை மணி தேரத்திற்குள் அனைவரும் புலிக்கு பயந்து திரளுக்குள் பதுங்கிக் கொள்ளும் நினைப்புடன் வந்து சேர்வார்கள். குளிருக்கு அஞ்சியவன் சூட்டை தேடி ஓடுவது போல அலுவலகம் நோக்கித் குவியும் தொண்டர்களால் இனி அங்கு மனித சூடு ஏறி நிற்கும் . அந்த வெம்மை அவர்களை அமைதி கொள்ள வைக்கும் ஆற்றுப்படுத்தும். நிர்வாகிகள் பாலன் அமர்ந்திருக்கும் அறையில் கூடத்துவங்கி இருந்தார்கள். யாரும் கவலைபட்டவர்களாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. முதல் கல் யார் எறிவது என்கிற எண்ணம் ஓங்கி நின்றது. அசந்தர்ப்பமாக எதையாவது சொல்லி வைத்தால் அன்று அவர்தான் பலி என எல்லோருக்கும் அச்சமிருந்தது . பல நிமிடம் கரைந்த பிறகும் பாலன் ஏதும் சொல்லாததால் மெல்ல எழுந்து பின் கட்டிற்கு நழுவினர் . அனைவருக்கும் ஆறிய காயத்தை எதுக்கு பிராண்ட வேண்டும் என நினைத்திருக்கலாம் . தூங்கு மூஞ்சியாய் அங்கே அமர்ந்து கொண்டிருந்த என்னை பின் கட்டிற்கு வரச் சொல்லி சைகை செய்து சென்றனர் . மேலதிக சூட்டிற்கு டீயும் சிகெரெட்டும் அவர்களுக்கு தேவையாய் இருந்தது . நான் மெல்ல நழுவி பின் கட்டிற்கு செல்வதை பாலன் பார்த்தாலும் ஒன்றும் சொல்லாமால் அன்று வந்திருக்கும் செய்திதாள்களை புரட்டிக் கொண்டிருந்தார் . பின்கட்டிற்கு சென்ற போது அனைவருக்கும் சற்று நேரத்திற்கெல்லாம் டீயும் சிகரெட்டும் வந்திருந்தது . இரண்டையும் குடித்து முடித்து இனி அவர்களுக்கிடையே கணக்குகளும் அச்சங்கங்களும் பெருக்கெடுக்கும் என நினைத்துக் கொண்டேன்.அவர்களுக்கு கண்ணன் முதல்வராக வர இருப்பது பலவித மனக் கலவரங்களை ஏற்படுத்தி இருந்தது . ஏதோ ஒரு வகையில் பழைய நினைவுகளை கிளறியது . பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களின் தலைவர் இந்த இலக்கிற்கு வந்து சேர்வார் யாராவது சொல்லியிருந்தால் அது பகடி என நினைத்திருப்பார்கள் . கட்சியில் அங்கீகாரம் என உரக்க சொன்னவர்களுக்கு அதற்கு என்ன அர்த்தம் என அப்போது தெரிந்திருக்கவில்லை . இதோ இப்போது அதன் அருகில் அவருக்கு தெருக்கமானவர் வந்து சேர்ந்திருக்கிறார் ஆனால் அவருக்கு அருகில் தாங்கள் இல்லை என்பது ஆதங்கம் , விழைவு இனி அது நிகழ வாய்ப்பில்லை என்கிற எண்ணம் அனைத்தையும் கொட்டிக் கவிழ்க்க நினைக்கிறது என்கிற எளிய மனநிலையை தவிர பிறிதொன்றுமில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் பாலன் என்னை அழைப்பதாக சொன்னார்கள் . அவரை சென்று பார்த்த என்னிடம் மூப்பனாரைப் பார்க்க உப்பளம் அரசினர் விடுதிக்கு செல்லாம் என சொன்னார். அனைத்திலும் பரபரப்பு ஏறிக் கொண்டது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...