https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 29 அக்டோபர், 2018

* வெண்முரசு கூடுகை 20 எனது பதிவு *

ஶ்ரீ:


பதிவு : 576 / தேதி 29 அக்டோபர்   2018

* வெண்முரசு கூடுகை 20 எனது பதிவு   * 




ஒரு நல்ல இலக்கிய படைப்புக்கு அர்த்தத்தின் ஆதிக்கமோ அல்லது அதற்கு ஏதாவது பட்டயமோ கட்டித் தொங்கவிட வேண்டும் என்ற தீவிரமோ இருக்கக் கூடாது’. ‘கலைஞன் பெற்றெடுக்கிறான், விமர்சன்ப் பாதிரிகள் பெயர் சூட்டுகிறார்கள் என்பார் ஜி.கே.செஸ்டர்டன்என்கிறார் இந்திரா பார்த்தசாரதி .

மேலும் சிறப்பான படைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குள் இன்னொரு பிரதி இருக்கத்தான் செய்யும். அந்தப் பிரதியைத் தேடுவது வாசகனுடையதே தவிர அதைப் படைத்த கலைஞனுடையதன்றுநான் கூறுவது மேல்நாட்டினின்றும் இறக்குமதியான கருத்து இல்லை. நம் நாட்டு அபிநவகுப்தாவும் தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார்கள்த்வொனி’, உள்ளுறைஎன்று நம் இலக்கண மரபில் கூறப்படுவையெல்லாம், ஒரு வகையில் பார்க்கப்போனால், படைப்பின் உட்பிரதிகள்தாம். அவை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

மாத்ரி, மனிதர்களுக்கு இறையாற்றல்கள் அளித்திருக்கும் வாய்ப்பு ஒன்றுள்ளது. இறப்பை தேர்ந்தெடுப்பது. இறப்பின் வழியாக அழிவின்மையை அடையமுடியும் என்று அறியாத மானுடரே இங்கில்லை. ஒவ்வொருவரும் அகத்தே காணும் கனவு அதுதான்.”

ஆனால் இந்த எளிய உடலை, இது அளிக்கும் இருப்புணர்வை, இதன் உறவுவலையை விடமுடியாமல் தளைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளியை நோக்கியே ஒவ்வொரு அகமும் திரும்பியிருக்கிறது. கனவுகண்டு ஏங்கியபடி கண்ணீர் விட்டபடி மெதுவாக இருளை நோக்கிச் செல்கிறது. மீளமுடியாத இருள். எல்லையற்ற இருள்வெளி.”

அவன் உடல் விதிர்த்தது. "என் நினைவறிந்தநாள் முதல் அந்த இருளை நான் கண்டுகொண்டேன். ஆகவேதான் ஒவ்வொருநாளும் நான் ஒளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒளியை அன்றி இந்த மண்ணில் எதையும் நான் ஒருபொருட்டாக எண்ணியதில்லை.”

வெண்முரசு-2:மழைப்பாடல் அத்துடன் என்னால் வெண்முரசு - 19 “திசைதேர் வெள்ளம்பொருத்திப் பார்க்காமல் இயலவில்லை. அவன் தந்தை அவனிடம்புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றனஎன்றார். மெய்மையை நோக்கி செல்லும் மிக எளிய வரிகளாக இவை தெரிந்தாலும் , ஆழத்துடன் தொடர்புள்ளது நினைக்கையில் இதை எளிதில் என்னால் கடந்து செல்ல இயலவில்லை .

அனிலையை அவன் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவான். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். மானுடரில் நோக்கிலேயே அடிமையும் மிடிமையும் கொண்ட புல்லர்களை அவன் கண்டதுண்டு. புரவிகளில் நோயுற்றும் உணவின்றியும் நொய்ந்தவற்றையே கண்டிருக்கிறான். நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகு அவனை விழிநீர் கசிய வைப்பதுண்டு. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.

நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண். பிற விலங்குகளை நிற்கவைத்தோ அமரவைத்தோ படுக்கவைத்தோ மருத்துவம் பார்க்கலாம். புரவி நின்றிருக்கையிலும் விரைந்தோடிக்கொண்டிருப்பதென்றே அதன் உடல் அமைந்திருக்கும். விரைந்து புண் ஆறும். ஆறாப் புண் உயிர்குடித்துச் செல்லும். புண்பட்ட, நோயுற்ற புரவி அதுவே தான் உயிர்வாழவேண்டுமென்று எண்ணவேண்டும். அப்புண்ணை குளிர்விக்க வேண்டுமென்று அதனுள் வாழும் தெய்வங்கள் கருதவேண்டும்.

புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். மண்ணில் பெருகி நிறைந்துள்ள உயிர்க்குலங்கள் பிரம்மத்தின் வடிவங்கள். எண்ணிலாக் குணங்கள் நிறைந்த பிரம்மத்தின் ஒவ்வொரு இயல்பும் ஓர் உயிர். மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. எண்மூன்று மாருதர்களும் புரவியுடலில் குடிகொண்டுள்ளனர் என்றறிக!” என்றார் தந்தை.

-நிகழ்வனவும் நிகழ்ந்தனவும் வருவனவும் ஒரு சரடின் மூன்று முடிச்சுகள்போல. சரடின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு ஒன்று பிறிதொன்றுடன் தொடர்புடையதல்ல. முழுச் சரடையும் நோக்குபவருக்கு அது ஒன்றே என்று அவன் தந்தை ஒருமுறை சொன்னார்.




வியாழன், 25 அக்டோபர், 2018

அடையாளமாதல் - 412 * தன்னில் தன்னை அறிதல் *

ஶ்ரீ:


பதிவு : 412 / 575 / தேதி 25 அக்டோபர்   2018

தன்னில் தன்னை அறிதல்  * 


எழுச்சியின் விலை ” - 13
முரண்களின் தொகை -01 .




அனுபவம் பட்டறிவு என்றாலும் , அது முதிர்ந்து இயல்பாக ஒருநாளும் மாறுவதில்லை என்பதும் ,நாளும் பயிற்சியினூடாக அவற்றை எண்ணி எண்ணி சூழலுக்கு ஏற்ப ஒப்பிட்டு ,ஒப்பிட்டு , பிறித்து, பிறித்து  வகைமைகளுக்குள் கொண்டு பொருத்தி  தன்னில் நிலை பேணிக்கொள்வது போலும்  , ஒவ்வொரு நாளின்  புதிய பொழுது எழுகைக்கும் அது நுண்ணிய மாற்றங்களுடன் தன்நடைமுறை படுத்துதலை கோருவது . அதை புதுப்பிக்கபடாவிடில் அது அவர்களை  கைவிடுகிறது என்பது எனக்கு பேரச்சத்தைக் கொடுப்பதாக இருந்தது. தனது இறுதிக் காலத்தில் சண்முகம் முதல்வர் பதவியில் அமர்ந்த போது , முதல்வரின் இலக்கணத்தை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வார் என்கிற எதிர்பார்பபு எங்குமிருந்தது . தனது ஆளுமையாளும், அரசியல் நிலைபாட்டினாலும் , தனக்கென அடையாளத்தை கொண்டவர் , பதவிக்கு வந்த பிறகு  எப்போதும் நிலையழிந்தே காணப்பட்டார்.

நீண்ட காலமாக அவரது அடையாளம்   நிதானம் என்கிற அவரது அணிகை , அவரை விட்டு விலகி நின்றது அந்த தருணத்தில்தான் , எதிர்கால அரசியலில் நிகழ இருக்கும் பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் காலம் அதை அற்ப விஷயங்களில் இருந்தே  எப்போதும் தொடங்குகிறது. அது தொடர்ந்து நிகழ்ந்து  அடர்த்தியாகி  அங்கிருந்தே ஏதும் செய்யவியலாத மற்றம் நிகழ்கிறது. தனக்கு எதிரான அரசிலை எப்போதும் தனது செயல்வடிவால் திட்டமிட்டு எதிர்கொள்ளும் வழமை அவரை விட்டு விலகியிருந்தது. பதவியும் அனுபவமும்  நிறைந்து நின்றதால் , பிறர் தன்மீது கொள்ளும்  ஒவ்வொரு முரண்பாட்டையும் தனக்கான அவமானமாக கருதி அவற்றை சினத்தால் எதிர்கொண்டார்.

நிகழ இருக்கும் மாற்றத்தை ,வெறுத்ததால் அவற்றை , அறிவுறை வழங்குவதால் அதை சரி செய்ய முயன்றார்  . பதவியில் வந்த ஒருவரின் அறிவுரையை யாரும் விழைவதில்லை . தேவைகளை செய்து கொடுக்கும் நபராக அவரை அது எதிர்கொள்கிறது . அமர்ந்திருக்கும் பதவியில் இருந்து கொண்டு அதற்கான எதிர் ஆடலை தான் நிகழ்ததுவது தனது இருப்பிற்கு அவமானம் என்கிற  நிலையை  அவர் அடைந்திருக்கலாம் . எதிர் கொள்ள வேண்டியது தன்னை அஞ்சும் என்கிறகருத்து நிலை வெரும் கனவு என்கிற உண்மை புரிந்த போது , அவர் எங்கும் சினமும் கொந்தளிப்புமாக தன்னை வைத்துக்கொண்டார்

தனது இடையறாதவெறுப்பினால் அனுக்கர்கள் அனைவரையும் விரோதிகளாக மாற்றி தனது எதிர் அணிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார் . எப்போதும் பிறரை நெறிப்படுத்தும் கோட்பாடுகளை அவருக்கு பிறர் நினைவுறுத்திய போது , தான் பிறருக்கு சொன்னவைகளைக் கொண்டு தன்னைக் கட்ட முயற்சிப்பதாக எண்ணினார் . ஆனால் அது பிழை புரிதல்.அதனால் வெருண்டு அவர்கள் சொல்லிக்காட்டிய கோட்பாடுகளுக்கு  அப்பால் தன்னை கொண்டு நிறுத்தியபோது , அவர்கள் திகைத்து விலகினர். சண்முகம் தனித்து விடப்பட்டார்

சண்முகத்தின் அரசியல் கோட்பாடுகள் என்னை வியக்க வைத்தவை . அதை அறிந்து கொண்டவர்களை அது பிறிதெவரிடமிருந்தும் வேறுபடுத்திக்காட்டுவதுடன், சிறந்த அரசியல் ஆளுமையாக ஒருவரை வனையக்கூடியது என்பது எனது நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தது . அதை கற்றவரை அது ஒருநாளும் கைவிடாது என்கிற புரிதலே அதை கற்பதில் எனக்கு பெரும் நாட்டத்தை கொடுத்திருந்தது . அனுபவங்கள் எவருடைய இயல்பையும் மாற்றி அமைத்துவிடுவதில்லை . அதன் மீதுள்ள நம்பிக்கை அல்லது அச்சம் அது எவரையும் தன்னை மீற விடுவதில்லை . எவரும் பெரும் போராட்டத்தினூடாகவே தங்களை அதில் செலுத்திக் கொள்கிறார்கள்

பல வருட அனுபவத்தினால் அது தனது கைப்பொருள் என நினைத்த  சண்முகம் தன்னை கோட்பாடுகளுக்கு அப்பால் வைக்க முயன்றபோது அது அவரை முற்றிருளில் கொண்டு விட்டதுதலைவர் தனது இறுதி நாட்களில் அதுவும் அவரை விட்டு விலகின . கோட்பாடுகள் இரக்கமற்றவைகள் போலும் அவை யாருக்கும் எந்த சலுகைகளையும் வழங்குவதில்லை . அது திகைப்பை அவருக்கு பிறகு அமைப்பு  ரீதியில் கருத்தியலியலில் நம்பிக்கை அல்லது  முரண் கொண்ட தலைவர்கள் யாரும் பின்னர் எழுந்து வரவில்லை என்றே நினைக்கிறேன் . இப்போது அது பதவியை அதிகாரத்தை நோக்கிய முரண்பாடுகளாக எழுந்து , உடன்பாட்டில் அவை சமன் செய்ப்பட்டு தற்காலிக முடிவிற்கு வந்து விடுகின்றன . சாமான்ய உறுப்பினர்களுக்கு இதில் எந்த பங்குமின்றி வேடிக்கை பார்க்கும் சாட்சி மட்டுமேயாகி நின்றார்கள் . அவர்களை கட்சி இயங்கு விசைக்குள் கொண்டு வர யாராலும் இயலவில்லை என்பதே எதார்ததம் .

பலரிடம் நான் ஒரு அனுகுமுறையை பார்த்திருக்கிறேன் . தாங்கள் மதிக்கக்கூடிய தலைமைக்கு அவர்கள் முற்றாக தங்களை ஒப்புக் கொடுத்தவர்கள் என கட்டுப்பட்டிருந்தார்கள் .எந்த எதிர்பார்ப்பின்றி தலைமையுடன் இணைந்து முயங்குவது ஒன்றே அரசியல் என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்கள் . அவர்களின் பொருட்டே பலம் வாய்ந்த தலைவர்கள் உருவாகி வந்தார்கள் . பின்னாளில் அது போன்ற தலைமை எழுந்து வராததற்கு அமைப்பில் ஏற்ப்பட்ட சிதைவு மனப்பான்மை  முதல்மை காரணமாக இருந்தது

பாலன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டது . புதிய முகங்களை உட்புகுத்த தயங்கியது , கிடைப்பவர்களை பலமுள்ளவர்களாக மாற்ற பாலன் முரண்பட்டது இரண்டுமாக , அவரது கமிட்டி ஆர்வமற்ற ஆதரவாளர்களை மட்டுமே கொண்ட அமைப்பாக உருமாறி ஒரு கட்டத்தில் சூம்பிப்போனது .ஆனால் இப்போதோ எனக்கு மாநில கட்சித் தலைமையின் முழு ஆதரவு இருக்கிறது , என்னை எதிர்ப்பவர்களையும் உள்புகுத்த எனக்கு தயக்கமிருக்கவில்லை

இந்த சூழலில் எனது அனுக்கர்கள் சிலர் தங்களின் சார்பாக சிலரை பரிந்துரை செய்திருந்தார்கள். அந்த ஸ்தானங்களுக்கு அவர்களை தாண்டி நான் பிறிதொருவரை நியமித்த போது அதை மறைமுகமாக எதிர்த்தார்கள் . அது நேரடியாக என்னுடன் நிகழவில்லை என்பதால் நானும் அதை பெரிது படுத்தவில்லை , ஆனால் அதை தங்களின் மனத்தாங்கள் என்கிற நிலையையே , தனிப்பட்ட உரையாடல்களில் அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் . அவ்வப்போது எனக்கு தெரியவந்தாலும் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவர்கள் சிபாரிசு செய்த நபர்களைவிட நான் நியமிக்க நினைத்திருந்தவர்களுக்கு அவர்கள்  எவ்விதத்திலும்  ஈடு இல்லாதவர்கள் , ஆகவே இந்த முரண்களை காலம் அவர்களுக்கு புரியவைக்கும் அப்போது அவர்களாகவே தங்கள் ,முரண்களைக் களைந்து கடந்து வர நான்  காத்திருந்தேன். என்னை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரு இடம் கொடுக்கப்பட்டது, கொடுக்கப்பட்ட இடத்திலிருந்து அவர்கள் விழையும் இடத்திற்கான பாதை இருக்கிறது


புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்