https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 11 டிசம்பர், 2020

அடையாளமாதல் * மாமதவேழம் *

 



ஶ்ரீ:



பதிவு : 551  / 744 / தேதி 11 டிசம்பர்  2020


* மாமதவேழம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 29.






பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் புதுவையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை இந்திய அரசு அறிந்திருக்கிறது என்பதையும் , பிரான்ஸ் அரசுடன் ராஜாங்கப் பேச்சுவார்தை துவங்கிவிட்ட நிலையில் அதன் உள்ளூர் நிர்வாகம் நினைப்பது நடக்கப் போவதில்லை என்கிற செய்தி சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லப்பட்டப் பிறகு குபேருக்கு அதன் உள்சிடுக்குகளும் தனது எதிர்காலம் குறித்து  தெளிவாக புரிந்திருக்க வேண்டும் . காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளவும் அவரின் அரசியல் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்கிற செய்தி நேருவிடமிருந்து குபேருக்கு சொல்லப்பட்டது. அதன் பின்னர் 1954 ஆண்டு மத்தியில் குபேர் புதுவை இந்தியப் பகுதிகளுடன் இணைய வேண்டும் என தனது கட்சியின் கொள்கையாக முன்வைத்தார் . தனக்கு எதிரானவர்களை எந்நிலையிலும் விட்டுவைப்பதில்லை என்கிற நிலைப்பாடுகளைக் கொண்ட பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் அதீத காழ்ப்புடன் குபேர் மீதும் பாய்ந்தது. அதே சமயம்  பேரத்திற்கு இடம் வைத்து பிரெஞ்சு அதிகாரிகள் குபேர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர், ஆனால் மற்ற சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு அந்த வாய்ப்பில்லை அனைவர் பேரிலும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது . அதன்பின் காலனித்துவ நிர்வாகத்திற்கும் குபேரின் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையேயான உறவுகள் விரைவாக மோசமடைந்தது . புதுவை இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக கொள்கையில் ஏற்பட்ட திருப்பத்திற்கு பிறகு பிரெஞ்சு இந்திய நிர்வாகிகள் குபேரின் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்தனர். சில சமயங்களில் அவரது கட்சியினர் தாக்கப்பட்டனர். நிலமை தீவிரமடைய ஒருகட்டத்தில் குபேர் தான் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக தலைமறைவானர்.புதுவை அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம் என . ஏறக்குறைய புதுவை அரசியல் பாதை வகுக்கப்பட்டது இங்குருந்து என்பது வினோதம் . புதுவையின் வரலாறு முரணயகத்தின உச்சம் என இதை சொல்லாம் என நினைக்கிறேன்.புதுவை அரசியலில் பல வருடங்களாக நிகழ்ந்த முரணியகத்தின் விளைவுகள் வெளிப்படத் துவங்கியது இந்தப் பின்னனியில் . நிலைபாடுகளின் காரணமாக அரசியல் இயக்கங்களும் ஒன்றை ஒன்று  எதிர்த்தும் உள்ளூர் நிர்வாக ஆதரவு பெற்ற குழுக்களுடன் மோதி எந்த ஒரு தீர்வை அடைய முடியாத நிலையை உருவாக்கி இருந்தது . இந்திய அரசாங்கத்தின் தேவையை பிரதமர் நேரு மற்றும் காமராஜர் முன்வைத்த போதும் அது இந்த முரண்களினால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருந்தது

தலைவர் சண்முகம் என்னிடம் சொன்னது இதைத்தான் . குபேர் புதுவையின் முதல்வராக அவர் முடிந்ததின் பின்னனி இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் . இங்கிருந்து குபேர் , சண்முகம் இருவரின் போதல் துவங்குகிறது . குபேரின் வீழ்ச்சியும் அதனால் தலைவர் சண்முகம் அடைந்த வளர்ச்சியும் ஒன்றை ஒன்று பிண்ணி பிணைந்தது


இந்திய அரசாங்கம் குபேரிடம் பேசத்துவங்கிய பின்னர் புதுவை அரசியலில் பதட்டம் நிலவத் தொடங்கியதை ஊகிக்க முடிகிறது . முக்கியமான மூன்று நிகழ்வுகளை பார்க்க முடிகிறது . புறநகர் பகுதிகளில் பலம் கொண்ட காங்கிரஸ் இயக்கத்தால் மே 1954 17 அன்று நெட்டப்பாக்கத்தில் வெங்கிடசுப்பா ரெட்டியார் தலைமையில் இந்திய விடுதலை கவுன்சில் அமைக்கப்பட்டு புதுவையை அடுத்த கீழூரில் இந்தியாவுடன் இணையும் தீர்மானத்திற்கு அதரவாக சரித்திர முக்கியமான ஓட்டெடுப்பு நிகழ்தப்பட்டது . இரண்டு 1954 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புதுவை நகர் பகுதிகளில் இருந்து வெளி வந்து  சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற வெகுஜனக் கூட்டத்தில் வி.சுப்பையா உரையாற்றியது .சுதந்திர இயக்கத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கும் வகையில், 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி கம்யூனிஸ்டுகளால் திருபுவனை விடுவிக்கப்பட்டது. பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி மற்றும் இணைப்பு காங்கிரஸுடன் இணைந்து அப்பகுதிக்கான தற்காலிக ஐக்கிய அரசு அமைக்கப்பட்டது. பின்னர் மிக மெல்ல அனைத்துவித ஒப்பந்தங்களின் அனிப்படையில் புதுவை இந்திய நிலப்பரபுடன் இணைக்கப்பட்டது . இந்திய பிரெஞ்ச் ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்து ஒன்று இப்படி சொல்கிறது . “புதுவை மக்கள் விரும்பும் வரை அது இந்தியாவடன் இணைந்திருக்கும்என்று . ஜனதா ஆட்சி காலத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் புதுவையை தமிழகத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு தடையாக பல எழுந்தாலும் முன்னாள் பிரதமர் நேரு பிரெஞ்ச் அரசுடன் கொண்ட ஒப்பந்த ஷரத்து முக்கியமானதாக நின்றது என்பது கூடுதல் தகவல்  .


அரசியல் ஈடுபாட்டில் நான் கண்டடைந்த இடம் என்று ஒன்று உண்டு இந்த பதிவுகள் மூலம் நான் என்கு என மீள மீள சொல்லிக் கொண்டிருப்பது அதைத்தான் .அங்கு நேர்ந்த கற்றலின் வாய்ப்பு . அவை கசந்தும் , சோர்ந்தும் போகாத உரையாடல் வழியாக தொடர்ந்து நிகழ்கிற ஒன்று  . அது சாத்யமாகும் காலம் வரை கற்றல் எங்கும் எப்போதும் முடிவுறுவதில்லை. இதை எனக்கு கற்றுக் கொடுத்த தலைவர் சண்முகம் . ஆனால் அந்த கற்றலை ஒரு புள்ளியில் அவர் நிறுத்திக் கொண்ட போது அவருக்கு நன்கு பழகிய அரசியல் களம் என்கிற மதயானை அவரை விட்டு வைக்கவில்லை என்பதை பெரும் அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன் .பல துறைகளில் விளையாட்டாக நுழைந்து அதில் ஏதாவது ஒன்றை நிகழ்த்தி அதில் வெற்றியடைய காரணமாகவும் அதேசமயம் அந்த ஒன்றில் பிழைத்திருக்க அதில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்காததும். வெற்றிக்கு பிறகு அங்கு மேலதிகமாக செய்ய ஒன்றுமில்லை என ஆகிப் போகும் சூழலில் தயங்காமல் வெளியேறியதற்கு எனக்கிருந்த படைப்பூக்க மனநிலை முக்கிய காரணமாக இருந்திருக்கிறது என இப்போது நினைக்கிறேன் .அது ஒரு தீர்ககமான மனநிலை . சொற்களை வாரி எடுத்து நிரப்பிக கொள்ள முயன்று மனதில் தோன்றிய உறுதியான தர்க்க ரிதியான வரியை கண்டடைய இயலவில்ல,அனால் அந்த நிலைக்கு பெயர்படைப்பூக்கம்என்கிற சொல்லை பின்னாளில் நான் ஜெயமோகனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.அதற்கு இடமில்லாத இடத்தில் என்னால் பொருந்தி இருக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன் .


திங்கள், 7 டிசம்பர், 2020

அடையாளமாதல் * பாவனை *

 


ஶ்ரீ:



பதிவு : 550  / 743 / தேதி 07 டிசம்பர்  2020


* பாவனை



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 28.






பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்திற்கு எதிராக காரைக்கால் காங்கிரஸ் கட்சி தன் எதிர்ப்புகளை பெரிய அளவில் முன்னெடுக்கவல்லை , அல்லது  புதுவையை போல அவற்றின் செயல்பாடுகள் சிதறி இருந்திருக்கலாம் . எனவே அவர்கள் பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க மிகவும் தயங்கினர் , காரணம் அது மிகச் சிறிய நிலப்பகுதியை ஆண்டதால் அந்நிலப்பரப்புப் பற்றிய நுண் தகவல்களும் , அனைத்து முன்னனித் தலைவர்களின் பின்புலங்கலும் அதற்கு அத்துபடியாக இருந்தது, அதனால் தனக்கு எதிரான அனைவரிடமும் ஒரு தனிமனிதன் போல வன்மம்  கொண்டதாக இருந்ததைப் பார்க்க முடிகிறது . ஒரு சிறு எதிர்பையும் அதன் அடிப்படைக்கு சென்று நசுக்க தனது பிரபுக்கள் படையை பயண்படுத்த ஒருபோதும் தயங்கியதில்லை . ஒரு கட்டத்தில் பிரபுக்கள் எதிராக திரும்பிதும் சட்டம் என்கிற பாவனையில் அவர்களை அதே உக்கிரத்துடன் திருப்பி அடித்திருக்கிறது. நிர்வாகம் சார்ந்த உச்சகட்ட வன்முறையை 1946 துவங்கி 1955 வரையிலும் கூட அது தன் வழிமுறையாக வைத்திருந்தது . ஆதனால் சாதாரன மக்கள் மத்தியில் மீது மிகுந்த அச்சத்தை உண்டாக்கி இருந்தது . ஆரம்பம் முதலே அதை மிகத் தெளிவாக உணர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் பிரெஞ்ச் இந்திய அரசின் ஒற்றை அனுகுமுறையை எதிர்கொள்ள தங்களது அரசியலின் பொருட்டு  மிக நுட்பமான திருப்பங்களையும், நிலைப்பாடுகளையும் தொடர்ந்து மாற்றம் செய்தபடி பயணிப்பதை காணமுடிகிறதுகேரள கம்யூனிஸ்ட்களின் விடுதலை போர் தனித்துவமானது, புதுவை விடுதலை போராட்ட அமைப்பு  கம்யூனிஸ்ட் தனது போராட்ட வழிமுறையை அங்கிருந்து பெற்றிருக்கலாம். இந்தியா முழுவதும் விடுதலைக்கு போராடிய காங்கிரஸ் கட்சி உள்ளூர் நிலவரங்களை கருத்தில் கொண்ட பல ஊடுபாவுகளால் அமைக்கப்பட்டதும் மிக சிக்கலானதும் இருந்திருக்கிறது .அவற்றை கருத்தில் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு தனது தேசியக் கொள்கைகளை வகுத்துக் கொள்வது என்பது சாத்தியமில்லாதது. நுட்பமான நகர்வுகளை கொண்ட கம்யூனிஸ்டு கட்சியை காங்கிரஸ் தங்களது கொள்கைகளுக்கு விரோதமானது என்கிற இடத்தை அடைவதை புரிந்து கொள்ள முடிகிறது


புதுவை காங்கிரஸ் அமைப்பின் சில தலைவர்கள் இந்தியப் பிரதமரிடம் புதுவை நிலையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இந்திய அரசு நேரடியாக இதில் தலையிட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது ,ஆனால் நேருவின் பார்வை மாறுபட்டது . அவர் எதிர் கொண்ட சிக்கல் வேறுவகை தீவிரம் கொண்டவை அவற்றின் பின்னால் சர்வதேச வழிமுறைகள் உள்ளவை . ஆகவே விடுதலை நோக்கிய நகர்வு முதலில் புதுவையில் இருந்து முதலில் துவங்கப்பட வேண்டும் , பின்னர் அதை இந்திய அரசு அதை தங்கள் எடுத்துக் கொள்ள இயலும் என்பதே அவரின் நிலைப்பாடாக இருந்தது . ஓரளவிற்கு அதை ஒட்டிய நிலைபாடு கொண்டவராக மாஹி பரதன் , மற்றும் ஏனம் காமிச் செட்டி இருந்தனர்  . அதன் காரணமாக அந்தப் பகுதிகள் புதுவைக்கு முன்பாக பிரெஞ்ச் நிர்வகத்திடமிருந்து இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது . காரைகால் மற்றும் புதுவை பகுதிகளில் அது கடைசிவரை நிகழவே இல்லை . புதுவை பிரதிநிதிகளுக்கு பிரதமரின் பதில் உகப்பாக இல்லை என்பதால் உளச்சோர்வு அடைத்தனர் . நேரு நேரடியாக ஈடுபட வேண்டும் என அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. நேருவுக்கு அரசாங்கத்தின் உள்துறை மூலம் யதார்த்தமும் அதன் பின்னல் உள்ள சிடுக்கும் சொல்லப்பட்டது . அவை பிரெஞ்சு இந்திய நிர்வாகம் அனைத்து தரப்பிற்கும் மத்தியில் வரிவான வலைப்பிண்ணலில் பல தனிப்பட்ட கணுக்களை கொண்டதாகவும் சிக்கல்கள் பல அடுக்குகளாகவும் இருந்தது . பிரெஞ்சு நாட்டிற்கும் அதன் இந்திய நிர்வாகத்திற்கும் இருந்த இடைவெளி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் ஒத்த கருத்து உருவாகாமல் பார்த்துக்கொண்டது . தனக்கு எதிரான விடுதலை அமைப்பை மூன்று அடுக்குகளாக பிரித்து வைப்பதில் வெற்றி கண்டது அல்லது அந்த பிளவைகளை உபயோகப்படுத்திக்கொண்டது .மேலும் புதுவையை சேர்ந்த  மற்ற பிராந்தியத்திற்கு ஒன்றுடன. ஒன்று மைய்ய தொடர்பு அறவே இல்லாமல் பார்த்துக் கொண்டது . காரைக்கால் பகுதியில் ஏறக்குறைய புதுவை ஒட்டிய அரசியல் நிலையே காணப்பட்டது போன்றவை நேருவிற்கு எடுத்து சொல்லப்பட்டது. 1947 இல் இருந்து 1954 வரை பின்னர் 1962 வரையிலும் கூட ஏற்பட்ட தடைகளுக்கு பிரெஞ்சு இந்திய நிர்வாகம் முதன்மை காரணமாக இருந்தது .


இவற்றை மீறி அன்று  ஓரளவிற்கு அபைப்புகளாக இருந்தவை மாஹி மற்றும் ஏனாம் பகுதிகள் புதுவை இணைவதற்கு முன்பாக இந்தியாவுடன் இணைந்தன . சந்திராநாகூரி் வங்காளம் மூலம் மத்திய அரசாங்கம் தன்வயப்படுத்திக் கொண்டது . விடுபட்டது புதுவையும் காரைகால் பகுதிகள் மட்டுமே . காமராஜர் புதுவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு அவர் அரசுசூழ்தல் ஒன்றே புதுவையை இந்திய நிலப்பரப்புடன் இணைப்பதற்கான தீர்வு என பிரதமரிடம் சொல்லப்பட்டது். உள்ளூர் நிலவரங்களையும் அதன் எப்புறமும் நகர வாய்ப்பற்றத்தன்மையையும் பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் கையாளும் அரசு வன்முறை போன்றவை தில்லிக்கு சொல்லப்பட்ட பிறகு இந்திய அரசு அதை அரசு சூழ்தல் வழியை கையிலெடுத்தது. குபேர் போன்றவர்கள் தமிழகப் பகுதிகளுக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். இந்திய அரசின் நிலைபாடு அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறப்பட்டது . ஒத்துழைத்தால் அரசு ரீதியான சலுகைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என அவர்களுக்கு சொல்லப்பட்டது . புதுவையை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகி வருவதை குபேர் அறிந்து கொண்டார். கடத்தல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதை புரிந்து கொண்டனர் . இந்திய அரசாங்கம் இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அறிவுறுத்தப்பட்டதும் . அதை அடுத்து காட்சிகள் மாறத் துவங்கின



செவ்வாய், 1 டிசம்பர், 2020

அடையாளமாதல் * நிலைப்பாடுகளால் உணரப்படுபவை *


ஶ்ரீ:



பதிவு : 549  / 742 / தேதி 01 டிசம்பர்  2020


* நிலைப்பாடுகளால் உணரப்படுபவை 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 27.





1945 களில் துவக்கத்தில் இந்தியாவின் சுதந்திரம் தவிர்க இயலாதது என்கிற சூழல் எழுந்த அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய பிறகு , 1947 களில் கம்யூனிஸ்ட் கட்சி புதுவை சுதந்திரம் தொடர்பான தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தனது முதற்புள்ளிக்கு வந்து சேர்ந்தது , புதுவை அதனது மற்ற பகுதிகளுடன் இந்தியாவுடன் உடனடியாக இணையவேண்டும் என்கிற நிலையை எடுத்தது . இந்தியாவுடன் ஒருங்கிணையவும் அதுவரை பிரான்ஸின் நேரடி ஆட்சியலும் புதுவை இருக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணிகளை ஒருங்கிணைக்கத் துவங்கியது . புதுவை பிரான்ஸின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற நிலைபாடு அன்று நிலவிய இரு நிர்வாகத்திற்கிடையேயான பிளவை சுட்டுவதாக இருக்கலாம் . அந்த பிளவுகளுக்கு இடையே புதுவை பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்கிற புரிதலை அடையவேண்டி இருக்கிறது , அது விவாதத்திற்கு உரியது என்றாலும் பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் ஒற்றைப்படையான செயல்பாடுகள் அவற்றையே சுட்டுகிறது என நினைக்கிறேன் . கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டால் அதனுடனான தனது உறவை முறித்துக் கொண்ட பிரெஞ்ச் நிர்வாகம் , சுதந்திரத்திற்கு ஆதரவான பேரணிகளுக்கு தடை விதித்து . கம்யூனிஸ்ட் கட்சியும் , இந்திய தேசிய காங்கிரஸும் அதன் கிளை அமைப்பான மாணவர் காங்கிரஸும் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது போராட துவங்கின . இந்திய சுதந்திரப் பிரகடனத்தை ஒட்டி புதுவையில் பிரெஞ்ச் நாட்டுக் கொடியை இறக்கி, இந்தியக் கொடியை ஏற்றுமாறு அனைத்து போராட்ட அமைப்புகளும் அழைப்பு விடுத்தன . கம்யூனிஸ்ட்களின் செல்வாக்குள்ள புதுவை நகரப்பகுதிகளில் அவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது , பிரெஞ்ச் நிர்வாகத்தால் குபேர் கட்டவிழ்த்து விடப்பட்டார். சுப்பையாவிற்கு எதிராக 1948 இல் பிரெஞ்சு நிர்வாகம் மீண்டும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இரண்டு வருடம் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையின் உச்சமாக 1950 சுப்பையாவின் வீட்டில் இருந்த இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் எரியூட்டப்பட்டது . பிற நிர்வாகிகளின் வீடுகளும் தீக்கிரையாயின  . பிரெஞ்ச் இந்திய பகுதியில் அதன் ஆதரவாளர்களைக் கொண்ட சோசலிஸ்ட் கட்சி 1947 களில் உருவானது அதன் தலைவராக எட்வார்ட் குபேர் இருந்தார் . புதுவை விடுதலை போராட்டக் குழுக்களை நசுக்கும் வேலை அதன் பிறகே உச்சகட்டத்தை அடைந்தது . குபேரின் தலைமையின் கீழ், பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி, இந்தியக் குடியரசுடன் இணைப்பது பற்றிய எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக்கியது . புதுவை சுத்ந்திரம் பற்றி அதன் காலனி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார் . பொதுமக்களும் போராட்ட அமைப்பும் எந்தப் புள்ளியிலும் இணையவில்லை என்பதையும் அவர்களின் விருப்பத்தை பதிவு செய்ய எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் இது வெறும் அரசியல் அறிவிப்பு மட்டுமே . பிரெஞ்ச் இந்திய நிர்வாகத்தின் வன்முறைக்கு அஞ்சி பொதுமக்கள் அதை வெளிப்படுத்தப் போவதில்லை .


1948 நடைபெற்ற முனிசிபல் தேர்தலில் குபேரின்  ஆதரவாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக பிரெஞ்ச் இந்திய நிர்வாகம் அறிவித்தது . தேர்தல்கள் மோசடி என பிற கட்சிகள் குறை கூறின. பிரெஞ்ச் நிர்வாகம் எந்த பதிலும் சொல்லவில்லை . மூன்றாண்டு கால நிர்வாகத்தில் குபேர் அடக்க முடியாதவராக உருவெடுத்தார் . 1951 பொது மற்றும் நகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிரெஞ்ச் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்த விடுதலை இயக்கங்களின் அரசியல் அமைப்புகள் தேர்தலை புறக்கணித்தன. குபேரின் பிரெஞ்சு இந்திய சோசலிஸ்ட் கட்சி மீண்டும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. குபேர் பொது நிர்வாக அமைச்சராகத் தொடர்ந்தார். இந்திய அரசு புதுவை அரசியல் நிலை குறித்து கவலை கொள்ளத் துவங்கியது. முதல் முறையாக புதுவை அரசியல் விவகாரம் தமிழக அரசின் முதல்வர் பக்தவச்சலத்திடம் கொடுக்க, அவர் காமராஜரை புதுவை காங்கிரஸ் அரசியல் கட்சி பொறுப்பாளராக நியமித்தார் . அதன் பிறகு காட்சிகள் மாறத்துவங்கின .புதுவை காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக ஆனவுடன் அவருக்கு கிடைத்த புரிதல் புதுவை விடுதலை போரை முன்வைத்த இயக்கங்களுக்கு இடையேயான குளறுபடிகள்புதுவை விடுதலை குறித்து கம்யூனிஸ்டுகளின் தொடர் ஊசல்நிலை . அன்று அது இந்தியா முழுவதிலும் உள்ள கம்யூனிஸ்ட் அமைப்புகளுக்கிடையே பொதுப் போக்கு . அவர்கள் தங்களை காங்கிரஸிற்கு மாற்று என்கிற எண்ணம் இருந்ததுஎனவே அகில இந்திய காங்கிரஸ் அமைப்பிற்கு கம்யூனிஸ்டுகளின்  மனநிலை தெரிந்திருந்தது . அவர்களுடன் அரசியல் ரீதியாக தொடர்புறுத்தும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை  .


ரஷ்யாவுடன் நேருவிற்கு இருந்த நெருக்கமும்தொழிற்புரட்சியின் மீது நம்பிக்கையும் அதற்கு ரஷ்யா உதவக்கூடும் என கணக்கிட்டிருந்தார் . அதன் அடிப்படைக் காரணம் அவரது தொழிற் கொள்கை வடிவமைப்பாளர் . இலட்சியவாதத்தில் நம்பிக்கை கொண்ட காலம். நேரு ரஷ்யாவால் ஈர்க்கப்பட்டார் . சோவியத் ரஷ்யாவின் பின்னணி கொண்ட மகாலானோபிஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள் அவருக்கு அணுக்கமாக இருந்தார்கள் என்பது பிறிதொரு கோணம் . ஆகவே இங்கு நேரு ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நேரு உருவகித்திருந்தார் . இந்தியாவின் சர்வதேச நிலைப்பாட்டின் பொருட்டு  உள்நாட்டு அரசியலில் அவரின் போக்கு குறித்து புதுவை காங்கிரஸ் அமைப்பால் புரிதல் இல்லாமையால் அவற்றை சோர்வுற செய்திருந்தது .

புதுவை காரைக்கால் மற்றும் மாஹே காங்கிரஸ் பிரமுகர்கள் பாரதப் பிரதமரிடம் சொன்ன நிதர்சணமான நிலை நேருவிற்கு முதலிலேயே புரிந்திருந்தாலும் இந்திய அரசாக அவர் செய்யக்கூடியது குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது


அரசியல் வரலாறு அதன் தலைவர்களின் புரிதல்களில் இருந்தும் அவர்களின் விருப்பு வெறுப்புகளின் வழியாகவும் உருவாகி வருவது , தடம் பின் பாதையாக மாறுவதும் போல . போராட்டத்தில் பங்கு பெற்ற அனைவரும் விரும்பியும் விரும்பாமலும் அதில் பயணப்பட்டேயாக வேண்டி இருக்கிறது . வெகுசிலர் கடும் கோபத்துடன் அல்லது தாள இயலாத வருத்தத்துடன் அதில் பயணித்து வெளிவந்திருக்கிறார்கள் . தனது இளம் வயதில் தலைவர் சண்முகம் அத்துடன் ஒத்திசைய முடியாமையே அவரை உருவாக்கிய விசை . வயது மற்றும் பொருளியல் காரணமாக அவர் பொருட்படுத்த தக்கவராக அப்போது அறியப்படவில்லை  . காரைக்காலைத் தாண்டி அவருக்கு பெரிதாக யாரையும் தெரிந்திருக்கவில்லைஆனால் புதுவை பகுதிகளில் நிகழும் அரசியலும் அடக்குமுறையும் அதனால் ஒடுங்கிய விடுதலைப் போராட்ட அமைப்பின் மீது அவருக்கு கடும் கசப்பை உருவாக்கி இருந்தது . இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால அவரது உள வேகத்திற்கும் அரசியலுக்கும்  ஊர் பெரியவர்களான காங்கிரஸ்காரர்கள் தடையாக இருந்தனர்அப்போதெல்லாம் கம்யூனிஸ இயக்கமும் அதன் தோழர்களுமே அவருக்கு மிக அனுக்கமாக இருந்தனர் . காங்கிரஸ் அமைப்பிற்குள் சண்முகம் ஒரு கம்யூனிஸ்ட்டாக அறியப்பட்டிருந்தார்.

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்