https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

வெண்முரசு / எழுத்தழல் / காற்றின் சுடர் 3

ஶ்ரீ:


பதிவு : 307 தேதி / 28-10-2017


வெண்முரசு / எழுத்தழல் / காற்றின் சுடர்



வெண்முரசின் இந்த இறுதிப் பகுதி அபிமன்யுவைu மையப்படுத்தியே அனைத்தும் ஞானமயமானதாக உருமாறத்துவங்குகிறது


ஆம், வெற்றியை விழைந்து செல்கிறேன். ஆனால் வெற்றியென்று நான் எண்ணுவது பிறிதொன்று. அவரிடமிருந்து எதையேனும் நான் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அது இப்போதுதான். ஒவ்வொன்றும் அவரை விட்டுச் செல்கின்றன. ஒருவேளை அவர் துவாரகையை இழக்கக்கூடும். முன்புலரியில் அணியும் ஆடையுமிலாது கருவறையில் கரிய பெருமேனியுடன் எழுந்து நின்றிருக்கும் ஆழிவண்ணப் பெருமாளைப் பார்க்கும் தருணம் எனக்கும் அமையக்கூடும்என்றான்.

குருவாயூரில் அதிகாலையில் சிகப்பு கௌபீனம் மட்டுமே கட்டிக் காட்சிதருவது போல . நடை திறக்கும்வரை நாராயாணா , நாராயணா என கூவும் திரள் திறந்தவுடன் கதறுவது கண்ணா....குருவாயூரப்பா.....என . ஞானம் மறைந்து பக்தி பிரேமை மட்டுமேயாக....


உத்தரைஅவர் மெய்யாகவே சூடிய எதுவும் அவரிலிருந்து உதிர்வதில்லைஎன்றாள்.

நார - அயன தத்துவத்தை ஒரே வரியில் சொல்கிறார் , வகுப்பெடுப்பு போல் அன்றி எளிய உரையாடல்கள் வழியாக....


அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்என்றாள். அபிமன்யூஅவரா? அங்கிருந்து கற்றுக்கொண்டாரா?” என்றான். “என்ன ஐயம்? இப்புவிக்கு அவர் கற்பிப்பவை முழுக்க அவர் அங்கிருந்து கற்றுக்கொண்டவை மட்டும்தான்என்றாள்.

அவர் கால்களை முதலில் சென்னிசூடியவள் அவள். அப்பெயரை அவருக்கிட்டவள். அவர் ஏந்தும் இசைக்குழலையும் சூடும் பீலியையும் அளித்தவள். அவள் சுட்டிக்காட்டிய மண்ணும் விண்ணுமே அவர் அறிந்தது. இந்த பாரதவர்ஷம் இன்றுவரை அறியாத ஒன்றை அவள் அவரிடம் சொன்னாள். இது பெற்றுப் பெருகும் பேரன்னையரால் நிறைந்த மண். அவர்கள் வயிற்றிலிருந்து எழுந்து சொல்லும் வாளும் ஏந்தி திசையெங்கும் விரிந்த ஞானியரும் வீரர்களும் வாழும் நிலம். அசுரவேதம் அன்னையரை அறிந்தது. மானுடவேதம் அறிந்தது ஞானியரையும் வீரரையும்.”

ஆனால் பித்தெடுத்த பிச்சியரின் நிலை இரு வேதங்களுக்கும் தெரியாது. பெற்றுநிறைந்தோ தேடிச்சென்றோ கண்டடைய முடியாத ஒன்றை கனவு கனிந்து சென்று தொட்டுவிட முடியுமென்று அவள் அவருக்கு காட்டினாள். பாரதவர்ஷத்திற்கு அவர் கற்பிக்க இருப்பது அதுவேஎன்றாள் உத்தரை

ராதைஅப்படி ஒரு வெக்தியே கிடையாது என, பக்தி சித்தாந்தத்தில் உயர்ந்து ஒளித்து வைக்கப்படுபவர் , கண்ணனைவிட வயதில் மூத்தவள் , அவனுக்கான ஆசிரியை என்கிறது வெண்முரசு , நிஜம் அது பக்தியை பிரபலபடுத்த சொல்லப்படுவது , கோபிகைகளை உதாகரிக்கிறது இங்கு

சென்று வாருங்கள்! நீங்கள் அறிந்தவற்றைக் கடந்து பிற சிலவற்றை அறியக்கூடும்என்றாள். “நீ என்ன சொல்கிறாய்?” என்றான். அவள் மேலும் முகம் குனித்து முகத்திரையை இழுத்து மார்பு வரை சரித்து அமர்ந்தாள். “அறமும் நெறிகளும் முறைகளும் கடுகென்று சிறுத்து காலடியில் மறைய எழுந்து நிற்கும் பித்துக்கணமொன்று உண்டு. பிறிதொருவர் இல்லாத பாதையில் ஒவ்வொருவரும் சென்று அமரும் இடமொன்று உண்டு. இப்புவிக்கு அவர் சொல்ல வந்தது அவ்விரண்டைப்பற்றி மட்டும்தான். விண்ணிலிருந்து முனிவர் தொட்டு இறக்கிய வேதங்களிலோ மண்ணில் பரவி தொல்மூதாதையர் வார்த்தெடுத்த அசுர வேதங்களிலோ இல்லாதது அந்த மெய்மை ஒன்றுதான்என்றாள்.

இங்கு ஒவ்வொருவரும் ஐந்தாவது வேதம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாராயண வேதம். அது தனிமையின் கனவின் வேதம். விழைதலின், எய்துதலின், ஆதலின், அமைதலின் சொல்.” அவள் வடிவில் அங்கே அணங்கு ஒன்று வந்து அமைந்துள்ளதா? இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது? இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா? “எனக்கு அவர் அதை சொல்லவில்லைஎன்றான்.

அவர் எனக்கு அதை சொல்லவேண்டியதே இல்லை. காதல்கொண்ட கன்னியர் எவரிடமும் அதை சொல்லவேண்டியதில்லைஎன்றாள் உத்தரை. அபிமன்யூ எழுந்துநான் கிளம்புகிறேன்என்றான். “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக என வாழ்த்துகிறேன்என்றாள் உத்தரை. “ஆம்என்று சொல்லி தலைவணங்கி அவன் திரும்பி நடந்தான்.

பெண்னென ஏறிட்டுக்கொளவதை பிரேமையின் உச்சம் அற்புதமாக வெளியாகியிருக்கிறது .


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

வெண்முரசு/ எழுத்தழல்/ காற்றின் சுடர் 3

ஶ்ரீ:


பதிவு : 306 தேதி / 27-10-2017




வெண்முரசு/ எழுத்தழல்/  காற்றின் சுடர் 3





அவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் 
கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி 
சொல்லெடுப்பவர்போலமெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் 
பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல
முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே 
எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் 
அளித்ததில்லைஎன்றார்.
அற்புதம் . வர இருக்கும் கலியுகத்தை நோக்கி சொல்கிறாரா?. ஆழ்வார்களின் பெண்ணான 
தன்மையை ஏறிட்டுக்கொள்வதை....கோபியர்களை ....சரணாகதி தத்துவத்தை...கீதை என ........
இங்கேயே தொடங்கியாகி விட்டதா .....?

இளைய யாதவர்ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே
பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் 
வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம்
மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்என்றார்.
அற்புதமான சொல்லாட்சி , இரண்டு நிலைகளை பேசுகிறார் .
நடப்பது நடக்கட்டும் என்கிற மனநிலையை அடைத்து வீசும் 
காற்றில் அதன் ஒழுக்கோடு கவலையற்று பறத்தல் . மலையின் 
அசலம் போல இருக்கும் நிலையில் கவலையற்று வருவது 
வரட்டும் என இருத்தல் .

அபிமன்யூமாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் 
நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் 
அதில் உள்ளனரா?” என்றான். இளைய யாதவர் நகைத்து 
இல்லை, அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை
இணைவதற்கு முன்பேகூட பிரிவின்றி இருந்தவர்கள்என்றார்.
சக்திமானை விட்டு சக்தி பிறியாத தன்மையான அநபாயினி 
தத்துவம் பேசுகிறாரார் . எல்லாம் போகிற போக்கில்.....


இளைய யாதவர்மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் 
கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை
||| நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை
உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து 
நீ தப்ப இயலாது” ||| என்றார். அபிமன்யூ எழுந்து அவர் 
கால்களில் தன் தலையை வைத்துஆம்என்றான்
அவன் தலைமேல் கைவைத்துநிறைக!” என்றார் 
இளைய யாதவர்.

வெண்முரசு சில கணங்களில் தனது விதைகளை 
விதைத்தபடி சென்று கொண்டிருக்கிறது 
( திரு. துரைவேல் அவர்கள் இதை கண்ணிவெடி என்பார் )  
இதன் கிளை எங்கு விரிந்து  பூவென்று பழமென்று காத்திருக்கும் 
என அறியும் ஆவலில் இந்தப் பதிவுகளை சிறியதாக  என் 
நியாபகத்திற்கு இட்டிருகிறேன் . அவை பிரமாண்டமான 
திறப்புகளை கொடுக்க வல்லது என நினைக்கிறேன். அதை 
எப்படி வடிக்கிறார் எனஅறியும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி....


-கிருபாநிதி அரிகிருஷ்ணன்



வியாழன், 26 அக்டோபர், 2017

மழு ஆழியானது , எழுதழல் , வெண்முரசு

ஶ்ரீ:


பதிவு : 305 / தேதி 25-10-2017

மழு ஆழியானது , எழுதழல் - வெண்முரசு





மைந்தா, இளைய யாதவன் முன்வைக்கும் அந்த வேதத்தில் அசுரவேதம் அடக்கமா? இல்லையென்றால் எதன் பொருட்டு வஜ்ரநாபனும் பாணனும் சம்பரனும் பிற அசுரகுடிகள் நூற்றெண்மரும் அவனுடன் படை கூடியுள்ளனர்? சொல்க! இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக அசுரரும் அரசரும் போரிட்டது வேதத்தின் பொருட்டே. வேதம் காக்க அவன் நின்றிருக்கிறான் என்றால் அசுரர்கள் ஏன் அவன் பின் படைதிரண்டு நின்றிருக்கிறார்கள்? நேற்று மகாபலியின் பின்னால் அணி திரண்டார்கள். அதற்கு முன் ஹிரண்யாக்ஷனின் பின்னால். அதற்கு முன் விருத்திராசுரனுடன். அசுரர் திரண்டது அனைத்தும் வேதத்திற்கு எதிராகவே. மீண்டும் இன்று அவர்கள் ஒருங்கு திரண்டிருக்கிறார்கள். அதன் பொருளென்ன?”.

கொண்டாடும் இடத்தில் குழந்தையும் தெய்வமும் என்பார்கள். வெண்முரசு மிக நுட்பமான ஒரு விஷயத்தை இங்கு கையாளுகிறது . ஶ்ரீமத் பாகவதம் அசுரர் நிரையிலிருந்து விருத்ராசுரன் விலக்கி அவனை பக்தனென அடையாளப்படுத்துகிறது . பலிச்சக்ரவர்தியையும் பாகவதம் அப்படித்தான் சொல்கிறது . எதிர்மறை நிலைபாட்டிலிருந்து விலகும் போது தெய்வம் அனைவருக்கும் பொது என்றாகிறது . அங்கு இந்திரன் தெய்வத்தால் கைவிடப்பட்டு மறைந்து வாழ்ந்ததாக வெண்முரசிலும் சொல்லப்பட்டது . மாறிவரும் சூழலை கொண்டே கண்ணனின் நாரயணவேதம் கூர்தீட்டப்படுவதாக வெண்முரசின் வாதம் மறுக்கமுடியாததாகிறது . மழு ஆழியானதாக. அற்புதம்

மானுட உயிர்கள் அனைத்திற்கும் வேதம் அருளப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் புழுபூச்சிகளுக்கும்கூட அவற்றுக்கான வேதம் இருக்கக்கூடுமென்று சாந்தீபனி மரபு கொள்கிறது. வேதங்கள் வேறுபடுவது அவற்றை விளங்கிக்கொள்ளும் இடத்தில்தான்

இதைவிட நுட்பமாக வேறு எப்படி கூறமுடியும் . அற்புதமான சொல்லாட்சியாக வெளிப்படுகிறது.

காலமாற்றத்தினால் அனைத்தும் மாறுபாடுகள் அடையும் எனில் சில மேல்கீழ் அடுக்கில் மாற்றம் புதிதாக சொன்ன குற்றம் வாராது போகலாம் என்கிற முறையில் சொல்லப்பட்டிருப்பது சரியாக பொருந்தி வருகிறது. மாறாதது புரியைமையல்ல , விரும்பாமை அதை கடுமையாக கண்டிக்கிறான சுருதகீர்த்தி

உள்ளிருண்டவனே, ஞானமென்று எதை அறிவாய்? உன்னுள் நுரைத்திருக்கும் அந்த எளிய ஆணவத்தை மட்டுமே. இருந்து மறைந்த எண்ணிலாக் கோடிகள் கடக்கமுடியாத அழுக்கு நதி அது. அதற்கப்பால் நீ அறிந்ததுதான் என்ன?”


ஆம் ஆனவமென்பது பலர் விட்டு நிரம்பிய கடக்கமுடியத அழுக்கு நதிதான்

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்