https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 26 டிசம்பர், 2023

சமுத்திரா பேலஸ் மகாபலிபுரம்

 மகாபலிபுரம் அருகே  “சமுத்திர பேலஸ்” ராஜஸ்தானிய பாணி நட்சத்திர விடுதி. ஒரு நாள் பயணமாக சென்று தங்கி வரலாம் என நிவாஸ், செல்வி பேரன் கிருஷ்ணவுடன் சென்றிருந்தோம். வரவேற்பு அலங்காரம் மேளம் பொய்கால் குதிரை ஆட்டம் என வெளிநாட்டினர்களுக்காக செய்யப்பட்டிருந்தது. நாங்களும் அவர்களப் போல அவற்றை பார்த்து கொண்டிருந்தோம். பேரன் கிருஷ்ணாவிடம் மேளக்காரர் வாசிக்கும் கோலை கொடுத்தும் ஒரே உற்சாகம். 

பெரிய நீச்சல் குளத்தை சுற்றி அனைத்து தங்கும் அறைகளையும் கட்டியிருந்தார்கள். விடுதியின் பின் பகுதி மிக நீண்டதாக கடற்கரை வரை சென்று தொட்டது முற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம். மொத்த விடுதியை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்தது. விடுதி உள் அலங்காரத்திற்கு முறையான ராஜ்தானி கட்டகலைக்கு அதிக கவனம் செலுத்தபடாமல் மேம்போக்காக இருப்பதாக பட்டது. கட்டடம் கட்டப்பட்டு இடையில் என்னமோ நடத்திருக்க வேண்டும்



















புதன், 6 டிசம்பர், 2023

மறைக்க இயலாத காதல்








மறைக்க இயலாத காதல்

பெண்களின் கண்களில் இருந்து காதலர்கள் தப்பிப்பதல்லை. என் மனைவி என்னிடம் கேட்டார் “அது தான் அஜி திருமணம் செய்யப் போகும் பெண் போல” என்றாள் . நான் இருக்காது என்றேன். விழாவின் இறுதியில் அரங்கில் இருந்து வெளிவருகையில் அஜிதனை சந்தித்தேன் ஜெ அஜிதனைப் பற்றி பேசிய அந்த சொற்கள் நினைவிற்கு வர அஜியை பார்த்து புண்ணகைத்தேன். பதிலுக்கு அஜியும் தனது வெட்கப் சிரிப்புடன் விலகினார் அப்போது உடனிருந்த அந்த பெண்னை பார்த்தேன். அது இப்போது தெளிந்து வருகிறது அது தன்யா தான்.

நான் ஜெ பேச்சினால் அஜி சிறு சங்கடத்தில் இருப்பதாக நினைத்தேன். இன்று புகைப்படத்தை பார்த்த போது அன்று பார்த்த பெண் இவர்தான் என நினைக்கிறேன். மறுநாள் ஜெ வை அவரது அறையில் சந்தித்த போதும் அங்கு அந்த பெண் இருந்ததாக எனது மணைவி சொன்னாள். எனக்கு அது நினைவில் இல்லை. 

அஜிதனுக்கே நவம்பர் மாதம் தான் தன்யா தனக்கு யார் என்னு உணர்ந்ததாக அவர் தந்தை, தாய் மற்றும் சகோதரிக்கான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். என் மனைவி அதை எப்படி ஊகித்தால் என்பது எனக்கு இன்னமும் புரியவில்லை

ஜெ யின் 60 கொண்டாட்டம் கோவையில் நிகழ்ந்த போது நான் மனைவியுடன் கலந்து கொண்டேன். எனக்கு இரண்டு காரணம். ஒன்று விழாவில் கலந்து கொள்வது. இரண்டு இன்னும் ஒரு மாத காலம் கழிந்து நடைபெற இருக்கும் எனது 60 நிறைவு விழாவிற்கு ஜெ தம்பதிகளை அழைப்பது. 

இருவரும் எனது 60 அகவை நிறைவு விழாவில் கலந்து கொண்டு எனக்கு மங்கள நான் எடுத்துக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். சிறு புண்ணகையுடன் ஜெ மறுப்பேதும் சொல்லாமல் இசைந்தார். விழாவிற்கு இருவரும் வந்து கலந்து கவண்டது வாழ்நாள் மகிழ்வான தருணங்களில் ஒன்று . ஜெ சென்னையில் இருந்து வர அருண்மொழிநங்கை நாகர்கோவிலில் இருந்து ரயிலில் வந்தது. ஜெ எனக்களித்த உச்ச இடம். 

கோவையில் நிகழ்ந்த ஜெ 60 மணிவிழாஙில. கலந்து கொள்ள மனைவியுடன் சென்றிருந்தேன். கிக்கானி அரங்காம் வெளிநில் குழுமியிருந்த நண்பர்களிட் அளவளாவி அரங்கு உள் நுழைய சற்று தாமதமானுத. விழா இன்னும் துவங்அகி இருக்க வில்லை. ஜெ வின் இருக்கை அருகே சென,று அவருக்கு வணக்கம் சொல்ல சட்டென எழுந்து அவர் பதில் வணக்கம் சொன்னது சற்று திகைப்பை கொடுத்தது. 

நண்பர் டைனமிக் நடராஜன் பெரு முயற்சியால் நிகழும் விழா. வழக்கம் போல கோவை முக்கிய ஆளுமைகள் அனைவரும்  ஆஜராகி இருந்தனர் மேடையும் நிரம்பி இருந்தது. ஒரு நிறைவான நிகழ்வு. அடுத்த மாதம் புதுவையில் அதே போன்ற ஒரு நிகழ்வை மிகச் சிறிய அளவில் நடத்தும் திட்டம் உருவானது. 





சனி, 25 நவம்பர், 2023

வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்

 கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடைந்தது. நிறைவு உரையாடலை நண்பர் சிவாத்மாவும் ஏழாவது நூல் முவுறும் விழாவினை சிறப்பிக்க நண்பர் ராஜகோபால் வந்திருந்தார். நிகழ்வின் துளிகள்.



















புதுவை. வெண்முரசு கூடுகை 66 நிகழ்வு

 












வெள்ளி, 24 நவம்பர், 2023

ஜெ.அடியடைவு பதிவு கனவு கடிதம்

 




24.11.2023

புதுவை.1


அன்பிற்கினிய ஜெ,


வணக்கம்.  ஒருவகையில் இது 23.11.2023 அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சி. வழக்கமாக அதிகாலையிலேயே உங்கள் தளத்தை வாசித்து முடித்து விடுவேன். என்ன காரத்தினாலோ நேற்று வாசிக்கவில்லை. உங்களுக்கு எழுதிய கடிதத்தை அனுப்பலாம வேண்டாமா என குழுப்பி பின் அனுப்பி வைத்தேன்..அதன் பிறகே உங்கள் தளத்தை வாசித்தேன்

உங்கள் “அடியடைவு” வாசித்து முடித்த பிறகு அதிர்ச்சி. உங்கள் முன்னோருக்கு நீங்கள் அளித்த நீர்கடன் திகைப்பை தந்தது. உங்களை சந்தித்த இந்த 13 வருடத்தில் நீங்கள் அடைந்து வரும் மாற்றத்தை அறிந்திருக்கிறேன் . நீர்கடன் கொடுத்து முடித்த பிறகு நீங்கள் அடைந்த அந்த மனநிலையை மிக அணுக்கமாக உணர்கிறேன். அவை வார்த்தைகளால் விவரிக்க இயலதவை. அதை ஒட்டி இந்த கடிதத்தை எழுத நினைத்தேன். 

எனது தினசரி பூஜை துவக்கம் நீர்கடனுடன் துவங்கும் . நான்கு நிரைகளில் நான் எனக்கு குருவாக நினைக்கும் அனைவருக்கும் அதில் நீர்கடன் கொடுப்பது வழக்கம். 

முதல் என் தாய் தந்தை வழி 

இரண்டு என்அரசியல் குரு பரம்பரை சண்முகம் காமாராஜர் காந்தி என ஒரு நிரை 

பின்னர் மூன்றாவது நிரை வியாச சுகப்பிரமம் என தொடங்கும் நிரையின் இறுதியில் வெண்முரசு மூலம் உங்களிடமிருந்து பெற்றவைக்கு நன்றி சொல்லும் விதமாக பாகுலேய பிள்ளை விசாலாட்சி அம்மாள் என நிறைவுறும். 

நான்காவது நிரை பிரம்மா தொடங்கி துருவன், சிவன் ,மகாபலி ,பகிரதன், கங்கை , பீஷ்மர் என நிறைவுறும்.பின்னர் குல வழக்கமான விஷ்ணு வழிபாடு.

நான் உங்களை பற்றிய எழுதிய கனவிற்கும் உங்கள் பதிவிற்கும் உள்ள தொடர்பு போல ஒன்று  இருப்தாக மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. 

நான் காசியில் தாய் தந்தைக்கு நீர்கடன் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை விரிவாக இல்லை. 


நன்றி 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.


புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...