https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 10 அக்டோபர், 2026

மணிவிழா - 96. * நம்பிக்க கசிவு *




ஶ்ரீ:



மணிவிழா - 96


10-10-2026


* நம்பிக்கை கசிவு *




வேளுக்குடியிடம் இருந்து எனக்கான ஆன்மீக புரிதல் கிடைக்கலாம் என்கிற ஊகம் எனது அடிப்படை தேவையில் இருந்து எழுந்தது . நான் எந்த கருத்திலையும் உணர்ச்சி கொண்டு அணுகுவதில்லை. அது உருவாக்கும் உடனடி தாக்குதல்களை சில காலம் தள்ளி வைத்து பின் அதன் யதார்தங்கள் வழியாக மெல்ல உள்வாங்க முயல்வேன். எனக்கு கருத்து சொல்லுபவர் அதிகாரத்தால் அந்த இடத்தை அடைவதில்லை. அவற்றை அவர்களுடனான உரையாடல்கள் வழியாக உருவாகும் புரிதல்கள் இருந்து எனக்கான கருத்தியலை உருவாக்கிக் கொள்கிறேன். வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற ஒருவருடன் தனிப்பட்ட உரையாடல்கள் வழியாக எனது சமகால நிகழ்வினால் நான் அடைந்திருக்கும் நிலையழிதல்களில் இருந்தும் என்னை அழுத்தும் தீவிர கேள்விகளில் இருந்தும் எனக்கு மாற்று சித்தனையை அளிக்கலாம் என நினைத்தேன். அந்த கனிப்பு அன்று  மிக முக்கியமானதாக பட்டது. தந்தை மண்மறைந்த பிறகு அவர் கையளித்து சென்ற அறம் குறித்த கோட்பாடுகள் வழக்கொழிந்தவையா? என ஓங்கி நின்ற கேள்விகள் முற்றும் நவீன கால யதார்த்தத்தை, நடைமுறைகளை சார்ந்தவை. குல மூத்தோரை அவர்களுது நம்பிக்கை வழியாக உருவாக்கிக் கொண்ட ஆன்மீக அல்லது அறம் குறித் அவர்களின் பிடிப்பை நிராகரிக்கும் ஒரு தருணம் எல்லோருக்கும் ஏற்படுவது. அவர்கள் மிக எளிதாக நம்மிடையே புழங்கியதால் அப்படி ஒன்று உருவாகி இருக்கலாம். அவர்கள் சொல்லிச் சென்ற மரபான வழிமுறைக்குள் சென்று அதற்கான விடைகளை தேடுவது மிக சிறந்த முடிவாக தெரிந்தாலும் அன்றிருந்த மனநிலையில் என்னால் அதனுள் செல்ல இயலாது என தெளிவாக புரிந்திருந்தேன். தேவை அதை கடந்து வந்த ஒருவர் அருகிருப்பது.


அந்த சூழலில் வேளுக்குடி கிருஷ்ணன் எனது தேர்வாக இருந்தார். ஆயிரமாவது ஆண்டு விழா குழு போன்ற ஒன்றை துவங்கி குறைந்தது அவருடன் நான் ஐந்தாண்டு ஆண்டுகள் இணைந்து பயணப்பட இருக்கும் நிலையில் அந்த பயணத்தின் இடையில் அவரிடம் என் கேள்விகளை உரையாடல்களாக முன்வைக்கும் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். அவர் ஏன் என்னுடனான அந்த உரையாடல்களை நிகழத்த வேண்டும். எது என்னை பிறரிடம் இருந்து தனித்து காட்டுகிறது. அவர் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் அவரிடம் கேட்பது போன்ற ஒரு கேள்வியைத்தான் நானும் முன்வைக்கப் போகிறேன். ஆனால் நான் ஒரு கேள்வியாளன் மட்டுமல்ல செயல்பாட்டில் உள்ளவன் அதை தடைபடுத்தும் மனநிலை குறித்த கேள்விகளால் சிக்குண்ட ஒருவனாக என்னை 

அவரால் வேறு தளத்தில் இருந்து புரிந்து கொள்ளவும் பதில் அளிக்கவும் முடியும். 


அவரைப் போன்ற ஒருவரை நான் தேர்ந்தெடுக்க காரணம் அவர் மிகுந்த மரியாதையும் வருமானமும் தரக்கூடிய தொழிலில் இருந்து வெளியேறியிருந்தார் அதற்கான உள மாறுதல் வழியாக உருவான நிலைப்பாட்டுகள் அவரிடம் மிக தீவிரமாக இருந்திருக்க வேண்டும். ஒரு வகையில் பல்லாயிரம் மடங்கு கனவும் செயலும் படைப்பூக்கமும் கொண்டவராக இருந்தார் என்பது என் அவதானிப்பு. உலகியலின் அழுத்தங்களை தனது கள எதார்தங்களின் வழியாக அவர் கொண்ட தீவிரத்தால் அவற்றை மெல்ல களைந்து கொண்டு வந்த பாதையில் மத்தியில் அவரை நான் சந்தித்திருக்க வேண்டும். என்னை அவர் எப்படி மதிப்பிட்டிருந்தார் என்பதை நான் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வாயத்தது. என் கனவை அவரை கொண்டு நிறைவேற்றிக் கொள்ள நான் முனைந்த அதே சமயம் தனது கனவிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி மிக சிறிய அளவிலாவது அவர் சிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவருடன் வேறு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத எனக்கு அவரது புகழ்மிக்க யாத்திரைகளில் ஒன்றான “ராமாயண யாத்திரையின்” நிறைவு நிகழ்ச்சி மேலான்மைக்கு என்னை திருபுல்லாணிக்கு அழைக்க வேண்டிய எண்ணமும் தேவையியும் எழுந்திருக்காது. 


அது மிக பிரமாண்டமான ராஜ நிகழ்விற்கு ஒப்பானது. மிக கவனமாக திட்டமிடப்பட்ட யாத்திரை. 32 சொகுசு பஸ்ஸில் யாத்திரிகர்கள் தன்னார்வளர்கள் வைதிகர் குழுமம் என மிக பெரிய ஒரு அமைப்பை வரவேற்று தங்க வைத்து உணவு ஏற்பாடு மற்றும் தணுஷ்கோடி யாத்திரை என துவங்கி பின் அனைவரையும் அவரவர் ஊருக்கு வழியணுப்பி வைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தார் . அவர் முதலில் என்னை மையப்படுத்தி திட்டமிட்டது மத்திய மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களுக்கு இடையே இருக்கும் “சித்திரகூட” திவ்விய தேச நிர்வாகம் குறித்து இருந்தது. ராமாயணத்தில் வரும் முக்கிய திருப்பு முணைகள் நிகழ்ந்த இடம் அது. வரலாறும் அதே சமயம் புராண முக்கியத்துவம் வாய்ந்தது. பாதுகா பட்டாபிஷேகம் காக்காசுரனை தண்டித்தது என மிக விரிவான பின்புலம் கொண்டது. திருக்கோவிலூர் ஜீயர் ஏற்பாட்டில் நிகழ்ந்த யாத்திரையில் அதை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.அந்த யாத்திரை அனுபவங்களை முன்பே தொகுத்து பதிவிட்டிருக்கிறேன். 


பல்வேறு நெருக்கடிகளால் அனைத்து தொழிலில் இருந்து வெளியேறியிருந்தேன். அதன் பின்னர் உருவாகி இருந்து குடும்ப உறவுகளிடையான கசப்புகள் மற்றும் தனிப்பட்ட பொருளியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெரும் நிலையழிதலில் இருந்தேன். அன்றைய சூழலில் என்னால் அதை செய்ய இயலாது என்று சொன்னபோது மிகவும் வேளுக்குடி வருத்தமும் ஆவேசமும் அடைந்து சட்டென என்னைவிட்டு விலகி சென்றார். நானும் விலகி நின்றேன்.அவருடனான உறவு அவ்வளவு தான் என நினைத்திருந்த போது அவர் என்னை விடுவதாக இல்லை என்பது “திருபுல்லாணிக்கு” என்னை செல்ல சொன்ன போது அறிந்து கொண்டேன். கொதிப்பதும் பின் தனிவதும் அவரது இயல்பாக எப்போதும் இருந்திருக்கிறது. பிறர் உரையாடவே அச்சப்படும் நிலை கொண்டவராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட போதும் என்னை பலமுறை அவருடன் முரண்பாடான கருத்துக்களை முன்வைக்க தூண்டுவார் பின்னர் அதில் எழும் எனது கேள்விகளால் வெட்டுப்பட்டு அவை சட்டென முடிவுறும். பின்னர் அவர் உளம் தனிந்து என் தரப்பை புரிந்து கொள்ள முயல்வது என பிரமாதமான குணம் கொண்டவராக இருந்தார்.


அயோத்தி யாத்திரை வந்து நிறைவுறும் இடம் எனக்கு அளிக்கப்பட்ட இலக்கான “திருப்புல்லாணி” திவ்விய தேசம். அது ஒரு கடற்கரை பிரதேசம் ராமர் கட்டிய சேது இங்கிருந்து துவங்குகிறது என்பது இந்த இடத்தின் தனிச் சிறப்பு . சிவஸ்தளமான ராமேஸ்வரம் அருகில் இருந்தாலும் வைணவர்கள் தங்களது வட இந்திய யாத்திரையை இங்கு வந்து முடிப்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு. இரவு தங்கி அதிகாலை தங்களின் பித்ருகளுக்கு நீர்கடன் செலுத்தி கடலில் குளித்து பின் திருப்பில்லாணி தர்ப சயண பெருமாளை வணங்கி பின்னர் தணுஷ்கோடி சென்று பின் அங்கிருந்து அனைவரும் தங்கள் சொந்த ஊர் திரும்புவார்கள். ராமர் கடலை கடக்க வருணனை நோக்கி தர்ப சயனத்தில் 7 நாட்கள் இருந்ததும் நீரின் அதிபதி வருணன் வராது போக கோபம் கொண்டு வில்லெடுக்க கடலின் அரசன் வருணன் வந்து சேது கட்ட சொல்ல அப்படி உருவானது சேது பாலம் அதன் துவக்கப் திருப்புல்லாணியில் நிகழ்ந்தது என்பது ராமாயண தொன்மம். 


வேளுக்குடியின் திட்டமிடல் பிரமாண்டமானதும் மிக நுட்பமானதும் கூட. சிறு சிறு விஷயங்களையும் கருத்தில் கொள்வார். அனைத்தும் அவரது நேரடி மேற்பார்வையில் இயங்கும். எங்கும் எதிலும் சமரம் என்கிற பேச்சிற்கு இடமில்லை. சமரசத்துக்கு உட்படாதவர் மட்டுமல்ல அந்த சூழலில் எழும்போது மிக கடுமையாக நடந்து கொள்வார். ஒரு மல்டி நேஷனல் CEO போல அனைத்திலும் அந்த ஒழுங்கை எதிர்பார்பார். அது அவரது இயல்பு அல்லது அவர் இதற்கு முன்பிருந்த துறை அவருக்கு இந்த கட்டுப்பாட்டை கண்டிப்பை கொடுத்திருக்க வேண்டும். வெற்றாக தன்னை சுற்றி சுற்றி வருபவர்களை மிக நுணுக்கமாக புரிந்திருந்தார். அவர்களை மிக கவனமாக தள்ளி வைக்கவும் அறிந்திருந்தார்.  நிகழ்ச்சி ஏற்பாடு மேலான்மை என எதற்கும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்வது இல்லை. அதற்கு வெளியில் இருந்து அதற்கானவர்களை கண்டடைய வேண்டும் என்கிற திட்டமிருந்திருக்க வேண்டும். அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள். அது இந்த சமூகம் அவர் மீது செலுத்திய அழுத்தம். அதற்கு பணிந்தே தனது பாதையை வடிவமைத்துக் கொண்டார். என்ன காரணத்தினாலோ அவர் என்னை போல பிறிதொருவரை தேர்வு செய்யவில்லை. அவரது நிலைப்பாடு மிகுந்த அழுத்தத்தினால் உருவானது அதற்கென உருவகும் பிற நிர்பந்தங்களை நான் உணர்ந்திருந்ததால் நான் அவரது முழு நிர்வாகத்திற்கு கீழே நேரடியாக வருவதை விரும்பவில்லை . மாறாக அவருடனான உறவை மிக இயல்பாக பேணிக் கொண்டேன். என் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது நேரடி நிர்வாக்கதில் இருந்தும் அதன் பிற நிர்வாகிகளிடம் இருந்தும் விலகி நிற்கவே விரும்பினேன். அது ஒருவகை முன் ஜாக்கிரதை நடவடிக்கை.


புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழு துவக்கம் மற்றும் அதன் செயல்பாடுகளும் திட்டமிடல்களும் முன்னெடுப்புகளை பற்றி விரிவாக அவருடன் பேசியது 

களச் செயல்பாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள அவருக்கு அவை மிக அணுக்கமானதாக இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தனது அமைப்பிற்குள் கொண்டு வர என்னை போன்ற சிலரை அவர் விரும்பி இருக்கக் கூடும் அதன் பொருட்டே இப்போது இந்த யாத்திரை மேலாண்மை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. எனக்கு அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் அவரது அனைத்தும் நேரடியானவை அன்பும் அரவணைப்பும் கிடைத்தற்கு அரிதானது . பெரிய ஆளுமைகளுடன் என்னால் மிக இயல்பாக செயல்பட இயலும் என்றாலும் அதில் உள்ள படிநிலைகள் நிச்சயம் ஒரு நாள் சிக்கலை கொண்டு வரலாம் என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க இயலவில்லை . இங்கு ஆழமான மதம் மற்றும் ஆச்சாரம் சம்பந்தப்பட்டது என்பது அதன் அபாயகரமான பின்புலம். அன்றைய சூழலில் நான் பார்த்துக் கொண்டிருந்தது. கோவில் கைங்கர்யம் செய்கிறேன் என சொல்லுக் கொண்டு வந்த பிராமன கூட்டம். அவர்கள் அதற்கு முதல் நாள்வரை அரசாங்கத்திற்கு ஊழியம் செய்தவர்கள். ஓய்வு பெற்ற பிறகு நேரடியாக கோவில் பணிகளில் ஈடுபட துவங்கினர்.கோவிலுக்கென தனிப்பட்ட வழிகாட்டு நெறிகள் இல்லாததாலும் அங்கு நிலவிய கடும் ஆள் பற்றாக்குறையினாலும் அவர்களுக்கான கதவுகள் விரிந்து திறந்து கொண்டன. 


துரதிஷ்டவசமாக அவர்களில் பலர் தங்கள் குல ஆச்சரத்தை பெரிதாக பேணாதவர்கள். சிகையோ சந்தியாவந்தனமோ எதும் இல்லாதவர்கள். அரசின் வேலையில் அதன் அன்றாட முடைநாற்ற அரசியலில் சிக்குண்டு இருந்தவர்கள். அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்களோ அதையே இங்கும் செய்ய முயற்சித்தால் உருவாகும் குழுப்பமும் அனர்த்தமும் மிக ஆபத்தானது. தங்களின் அடையாளத்திற்காக இடத்தை தேடும் அவர்களுக்கு வேளுக்குடி கிருஷணன் மிக சிறந்த இலக்கு. இவர்களின் அரசியல் நேரடியாக அவரிடம் எடுபாடாது என்றாலும். அவர் அறியாது தங்களின் அரசியலை முன்வைக் தெரிந்தவர்கள். குல அடையாளம் தரும் வசதியின் காரணமாக அவரின் வீட்டின் சகல எல்லைகளுக்கும் சென்று வரும் உரிமை பெற்றவர்களாகி விடுவார்கள். அந்த சூழலில் யார் யாரைப் பற்றி வேண்டுமானாலும் தங்கள் எதிர்மறை எண்ணத்தை பதிவு செய்ய இயலும். வேளுக்குடி போன்றவர்களுக்கு கூட இதை தொடர்ந்து தவிர்ப்பது இயலாது. எனது சொல் இறுதியில்லை அதை ஒருவர் திரிக்க இடமுண்டு என்றால் அந்த இடம் ஒருநாள் எனக்கு மிகுந்த நிலையழிவை உருவாக்கி விடலாம். நான் அந்த எல்லைக்கு சற்று முன்பே நின்றுவிட கற்றிருந்தேன்.அதன் பொருட்டு நான் ஒரு நிரந்தர இடைவெளியை பேணிக் கொண்டேன். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மணிவிழா -98. *வழி வழியாக *

  ஶ்ரீ : மணிவிழா - 98   02-11-2026 * வழி வழியாக * வேளுக்குடியிடம் நான் யாத்திரிகர்கள் தணுஷ்கோடி செல்ல வேண்டிய வழிமுறைகள...