https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 10 மார்ச், 2023

அடையாளமாதல் * நினைவுகளுடன் *

 




ஶ்ரீ:



பதிவு : 667  / 857 / தேதி 10 மார்ச்  2023



* நினைவுகளுடன் * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 65.




இங்கு தேர்தலில் விழும் ஓட்டு கட்சிக்காக மட்டும் விழுவதில்லை தலைமை கொண்டுள்ள கட்சி மேலாண்மை பல ஊடுபாவுகளைக் கொண்டது பலமுணைகளை இணைக்கிறது அதன் வழியாக உருவாகும் நம்பிக்கையின் அடிப்படையில் ஓட்டு விழுகிறது . அதை ஏன் என்றோ இன்னதென யாரிடமும் விளக்கவோ, பிறதொருவரிடம் விட்டுச் செல்லவோ முடியாது. அவை எப்போதும் பழைய பிழைகளை தவறுகளை சரி செய்வதில் இருந்து கிடைப்பது. அதை நான் தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதற்கு எனக்கான இடைவெளியை விட்டு வலகி நிற்கும் மேலிடத் தலைமையும் வேண்டும்.மிகச் சிலருக்கே அது கடந்தகாலத்தில் கிடைத்தது. அவர்கள் பெரும் வெற்றியாளர்களாக மேலிடம் அறிந்திருக்கிறது. புதுவை ஒரு சிறிய மாநிலம். இங்கிருந்து தில்லிக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கொடுக்கக் கூடியது என்பதால் புதுவை அரசியல் அவர்களை கவருவதில்லை . இங்கு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் மட்டுமே அவர்கள் நம்மீது சற்று கனிவு கொள்கிறார்கள். அதை கட்சியின் வெற்றியாக மாற்ற எப்போதும் இங்கு சிலர் முயன்று கொண்டே இருக்கிறார்கள். அந்த வெளியில் சென்று “இல்லை அதற்கு நானும் எனது நிர்வாகமும் காரணம்” என ஒரு போதும் சொல்ல முடியாது. அந்த புரிதல் இல்லாமல் பிற எவர் வந்து இங்கு வந்து அமர்ந்தாலும் அதுவரை உருவாகி வந்திருக்கும் அமைப்பின் வெற்றியை அதன் பலனை சில காலம் அனுபவித்து பின்னர்  ஒட்டு மொத்தமாக தீர்த்துவிட்டு சென்றுவிடுவார்கள். அதன் பின் உருவாகும் வெற்றிடம் மிக ஆபத்தானது. அது புதுவை அரசியலின் மைய விசையை பாதிக்கும் ஒன்றாக கூட உருமாறலாம். 


அரசியல் கட்சிகளுக்கிடையே இதுவரை இருந்த மொத்த புரிதலும் இடைவெளிகளும் உருவாக்கிய அழகியல் அழிந்து போகலாம். ……….அரசியலில் ஏது அழகியல்? என கேட்டுக் கொண்டேன். ஆம் தமிழக திராவிட அரசியலில் காண முடியாத சில இங்கு எழுதப்படாத விதிகளுக்கு இடையே நட்பும் நாகரீகமுமாக பேணப்பட்டிருகிறது. வெறி கொண்ட ஒற்றைப்படை அரசியலை முக்கிய கட்சியாக நாம் அதை தவிற்து வந்திருக்கிறோம். தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் நம்முடன் சமரசம் வேண்டி அதை ஒட்டியே பிற கட்சிகளும் தங்களை வரையறை செய்து கொண்டன. இனி மாநிலத்திற்கு புதிய தலைமையாக யார் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் இங்கு வந்து சேர வழிகள் இல்லை. இனி வெறியூட்டும் அரசியலே இங்கு சாத்தியம் அதில் நிதானத்தை எதிர்பார்க்க முடியாது என்றார். அவை வயோதிகம் கொடுக்கும் கசிப்பில் உருவானவை அல்ல என ஊகித்திருந்தேன். அனைத்து வகையிலும் அது வருங்கால எதார்த்தம். அப்படி என்றால் இனி எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற கற்பனைக்கு அன்று தீனி கிடைக்கவில்லை. இன்று அவதானிக்கையில் இன்றைய அரசியலின் கருவிகள் அன்று உருவாகியிருக்கவில்லை என புரிந்தது.


“1998 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை. ஆனால் தமிழகத்தில் கிடைக்காத கௌரவமான வாக்கு இங்கு கிடைக்கும். இப்போதைய தேவை ஒட்டு வித்தியாசத்தை குறைப்பது மட்டுமே. நிகழ்ந்தால் அது எனது தலைமைக்கானது என சொல்லெடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு அதை நான் தவறவிடுவதாக இல்லை” என்றார். சண்முகத்தின் இந்த எதார்த்த பார்வை அன்று எனக்கு புதுவை காங்கிரஸ் வரலாறு பற்றி பல புதிய புரிதல்களை கொடுத்திருந்தது. 


மத்தியில் புதிய தலைமை எப்போதும் பதவிக்கு வந்தாலும் அது நவீனமடைதல் என்கிற புள்ளியை தோக்கியே நகரும். அதுநாள் வரை கடந்த காலத்தை ஒட்டி எழுந்த அத்தனை அனுபவங்களையும் அது நிராகரிக்கும். அந்த மாற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே புதிதாக சிலர் உள்நுழையும் வழியை  ஏற்படுத்தும் என்பதால் அது விசை கொண்டு அமைப்பை முட்டியபடியே இருக்கும். அதை தொடர்ந்து தாங்கும் சக்தி யாருக்கும் இல்லை . நரசிம்மராவிற்கு நடந்தது அதுவே. அமைப்பை பலப்படுத்துதல் பல சமயங்களில் அதனால் எதிர்மறை பலன்களே விளைகின்றன. ஒரு முறை அது தனது பாதையை உருவாக்கி பழையதை தூர்த்த பிறகு இரண்டும் இல்லாத ஒரு இடத்திற்கு வந்து சேரும் அப்போது அந்த பயணம் அபத்தமானதாகி விடுகிறது” என்றார் அன்று அத்தனை கணக்குகளும் மிக கச்சிதமானதாக பொருந்துவதாக தோன்றியது ஆனால் 1988 பாராளுமன்றத் தேர்தலில் சண்முகம் தோல்வியடைந்து ஒரே வருடத்தில் அது தலைகீழ் கணக்கை தொடங்கி வைத்தது. சோனியாகாந்தி தலைமை பொறுப்பிற்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்த சூழலில் அவர் சந்திக்கும் முதல் தேர்தல் . அந்த 1999 தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கேட்டபோது மறுக்கப்பட்டது காரணம் அதுவரை தோற்காதவர்களுக்கு மட்டுமே சீட் என்றனர். என்னத்த சொல்ல. அது அடுத்த அனுபவமற்றத் தலைமுறை உள்ளே ஊடுருவி இருப்பதை வெளிப்படுத்தியது.அதன் பிறகு 1998 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல் அந்த தேர்தலில் சண்முகத்திற்கு சீட்டு என்கிற ஒற்றைபடை இலக்கு கொவண்டதானது.


1999 இறுதிகளில் அரசியல் மாற்றம் நிகழ்ந்து திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரியது. முதல்வர் யார் என அதுவரை முடிவாகவில்லை. வைத்தியலிங்கம் அனைவராலும் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்பட்டார்.மத்தியில் பஜகா ஆட்சியில் இருந்தது புதுவை துணைநில ஆளுனர் ரஜினிராய் அடுத்து என்ன என்பது குறித்து தில்லி சமிக்ஞைக்கு காத்திருந்திருந்து அங்கிருந்து எந்த பதிலும் வராத சூழலில் சென்னைக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது.  இல்லை அவர் மகாபலிபுரத்தில் அரசினர் விடுதியில் ஓய்வெடுக்கிறார் என அலர் நிலவியது . ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுனர் மாளிகைக்கு சென்ற காங்கிரஸ் குழுவில் என்னை சென்று சேர்ந்தே கொள்ளம்படி சண்முகம் தொலைபேசியில் சொன்னார். நான் துணைநிலை ஆளுனர் மாளிகையை அடைந்த போது அந்த இடம் ரகளையாக இருந்தது. என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள சில நிமிடங்களானது. ஆளுனர் ஊரில் இல்லை என்பதால் காங்கிரஸ் தலைவர்களுக்கு மாளிகையின் கதவு திறக்கப்படவில்லை. அதை திறக்கச் சொல்லி போராடிக் கொண்மிருந்தனர். அந்த காட்சி முதலில் திகைப்பை கொடுத்திருந்தது. அவமானப்பட்டவராக வைத்திலிங்கம் முகம் சிவந்து காணப்பட்டார். சிறிய கூட்டம் தேவையற்று அந்த வாசலில் தர்ணா செய்து கொண்டிருப்பது ரசிக்கும் படி இல்லை. அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வு இரண்டு தரப்பிற்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை. இரண்டு தரப்பும் தங்கள் இடத்திற்கு உகந்ததை செய்யவில்லை என தோன்றியது. முதல் குற்றம் திமுக ஆட்சி கவழ்கப்பட்டுவிட்டது அதை இனி யாராலும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆட்சியமைக்க உரிமை கோருவதாக இருந்தால். ஒரு முன்னாள் முதல்வர் என்கிற அனுபவத்தில் ஆளுனர் மாளிகையின் பொறுப்பாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் அழைப்பின் பேரில் மட்டுமே அங்கு சென்றிருக்க வேண்டும். எதற்கு முற்றுகை போல ஒன்றை நிகழ்த்தி அசிங்கப்பட வேண்டும். 


இறுதிவரை கதவு திறக்கப்படவில்லை. அங்கு வேலை செய்யும் அனைவரும் புதுவை அரசின் ஊழியர்கள் தங்கள் நாளை எஜமானர்களைப் பற்றிய அச்சமின்மை அந்த திகைப்பை கொடுத்திருந்தது. அவர்களுக்கு மிகத் தெளிவான உத்திரவு இருந்திருக்க வேண்டும்.உயர் அதிகாரியை சந்திக்க அந்த போராட்டம் நிகழ்த்த வேண்டியதில்லை என நினைத்தேன். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்ததால் அது தனது ஆட்சியை தக்க வைக்க இறுதிவரை முயன்று கொண்டிருக்க வேண்டும் அதற்கு சாதகமாக தேவைபடும் நேரத்தை ஆளுனர் வழங்க முடுவு செய்து சென்னை சென்றிருக்க வேண்டும். ஆட்சி மாறியதை அறிவிக்க இந்த முயற்சி என எடுத்துக் கொண்டாலும் அதில் அரசியல் தரமின்மைத்தான் பார்க்க முடிந்தது. அனைத்திற்குமான முதல் கோணலாக அதைப் பார்த்தேன்.

வியாழன், 9 மார்ச், 2023

நிலையான மாற்றம்

 09.02.2023


நிலையான மாற்றம்





“தர்க்கத்தில் இரண்டு வகை மாதிரிகள் உண்டு. ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. இதை நிறுவன தர்க்கம் எனலாம். மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல். தியாகுவின் தர்க்கம் இரண்டாவது வகைமையை சார்ந்ததாக உள்ளது. அவர் தொடர்ச்சியாக தான் சார்ந்துள்ள நிறுவன தர்க்கத்துக்கு அப்பால் புதியவற்றை அறிய முயன்றபடியே இருக்கிறார். அதற்கு தர்க்கத்தை கருவியாக்கி கொள்கிறார். இந்நிலையில் தியாகுவின் நூலினை தான் மூன்றாக பிரித்து கொள்வதாக கூறினார் லிபி ஆரண்யா”


  • சக்திவேல் - சிறை இலக்கிய கட்டுரை.ஜெ தளம்.09.03.2023



தர்க்கத்தில் இரண்டு வகை . ஒன்று தன் தரப்பை நிலை நிறுத்தவும் எதிர் தரப்பை மறுத்து ஒழிக்கவும் தர்க்கத்தை பயன்படுத்துவது. மற்றொன்று தர்க்கத்தை கருவியாக கொண்டு புதிய விஷயங்களை அறிவதற்கான தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபடுதல்.ஆனால் இவ்விரண்டு நிலைபாடுகளுக்கு இடையே என்னை நிறுத்திக் கொண்டாலும் இரண்டாவது கோட்பாடு நோக்கிய மனச்சாய்வு எனக்கு இருப்பதாக என நினைக்கிறேன். முதல் வகை  நீண்ட மன ஒருமைபாட்டு பயிற்சியின் வழியாக நிகழ்த்துவது.முழுமையான புரிதலில் இருந்து துவங்குவது அதை அவர் சொல்லும் அதே  நிறுவன தர்க்கம் கோட்பாடு . இதில் என்னைப் பற்றி நான் கொண்டுள்ள ஐயம் நாளை மாற்6த்திற்கு உள்ளாகும் போது அந்த நிலைப்பாடு காலாவதியாகும் போது எதிர் கொள்ளும் அக மோதல் கடுமையான உளச் சோர்வை கொடுப்பதுடன் அடுத்த நிலைப்பாட்டை கண்டடைந்தாலும்  தன்னம்பிக்கையில் சிறு கூறு குறைவுபட்டே இருக்கும் . இரண்டாவது நிலை கற்றலை பொடுப்பது . அதிலிருந்து மெல்ல தனது நிலையை உறுதிபடுத்திக் கொண்டே செல்வது .  கற்றலின் புரிதலில் நின்று உறுதிபடுத்தியபின் மெல்ல அடுத்த அடியை எடுத்து வைப்பது . நான் சிறு வேறுபாடை இங்கு நிகழ்த்திக் கொண்டேன் என நினைக்கிறேன்.  மரபு என்பது எனது தந்தை எனக்கு கையளித்தது அதை மறுத்து அதிலிருந்து என்னை பிறதொரு இடத்திற்கு நகரத்திக் கொள்வது மரத்தை இடம் மாற்றி நடுவது . சிக்கலானது .இது ஏறக்குறைய static and dynamic  போல . ஆனால் வானில் பறக்கும் பட்டம் கிடைக்கும் உயரத்தில் பறந்தாலும் அதன் பிறதொரு முணை அதன் அசைவை முடிவு செய்வதில்லை. ஆனால் அதன் உயரத்தை கட்டுப்படுத்துவதுடன் காற்றால்  அடித்து செல்லப்படுவதை தடுத்து விடுகிறது. 


ஞாயிறு, 5 மார்ச், 2023

எரிமருள். 3

 

05.03.2023



அடையாளமாதல் * அனுபவத்தை கடத்தல் *

  



ஶ்ரீ:



பதிவு : 667  / 857 / தேதி 05 மார்ச்  2023



* அனுபவத்தை கடத்தல் * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 64.





அதை நெருங்கி யாரும் எதையும் முயற்சிக்க முடியாது காரணம்  களத்தில் சாத்தியப்பட அதற்கு பல நூறு அலகுகள் தேவையாகின்றன. அவற்றை ஒருபோதும் ஒருவர் தனித்து உருவாக்கி விட முடியாது. அதற்கான ஒரு புள்ளி உருவாகி வர பல கோணத்தில் நிகழ்வுகள் ஒத்திசைவு அடைய வேண்டும் . நீண்ட அனுபவம் அந்த தருணம் எழுந்து வருவதை பார்க்க முடியும் ஒரு போதும் இருந்தும் அதற்கு முயற்சிக்க முடியாது என்பது இறுதி கருத்து . இயற்கையின் அர்த்தமின்மை என்னை எப்போதும் தொந்திரவும் அவற்றின் பிரம்மாண்டம் அளிக்கும் பெருளின்மையும் திகைக்கச் செய்பவை. வெகு சில தருணங்களில் அவை கதவை திறந்து அந்த இனிய முகத்தை காட்டுகின்றன. அப்போது அவை கனவில் அருகில் அழைத்துச் சென்று விடுகின்றன. ஒரு வித பித்தை உருவாக்கி நிலையழியச் செய்கிறது. அது போன்ற சந்தர்பங்களை நான் தவறவிட்டதில்லை. அங்கிருந்து பெற்றுக் கொள்ள ஓன்றில்லை என தெரிந்து இருந்தாலும் கூட அதை செய்யாமலிருக்க முடியாது . செயலூக்கம் கொண்டவர்கள் யாரும் அந்த தருணத்தை தவறவிட மாட்டார்கள். உள் நுழையும் விழைவு எழுந்ததும் பின் அது அவனை இழுத்துக் கொள்கிறது. 


அதை முயற்சிப்பவனே அதற்கு இறுதி பலி என தெரிந்தாலும் அது கொடுக்கும் ஈர்ப்பை அது உருவாகும் பரவசத்தை ஒரு போதும் இழக்க விரும்பமாட்டான். அதற்கீடாக உலகியலில் உள்ள அத்தனை சுகங்களையும் ஈடு வைக்க முடியும். பொதுவாக சுகம் என்பவை வெளியில் இருந்து வரும் சேர்கையால் நிகழ்கிறது. துக்கத்தை அமைதியாக அமர்ந்திருக்கும் சில் நவடிகளில் உருவாகிவிடும்.தனியே அது ஆள்ள ஒன்றுமில்லை. அதன் உச்சமான உன்மத்தம் ஒருபோதும் வெளியில் இருந்து வருவதில்லை. அது உள்ளிருந்து உருவாகி தனி வாழ்கையாக வாழ்வது. ஒரு போதும் பிறதொருவருக்கு புரியவைக்க இயலாதது. அதன் அத்தனை கூறுகளால் அவன் முட்டாளாக வெகு எளதில் கடந்து செல்லக் கூடிய ஒருவனாக பிறருக்கு தோன்றிவிடும் விபரீதம் அப்படிப்பட்டதாக நிகழ்கிறது. 


இதுரை அந்த புள்ளியை நோக்கி பல முறை பயணப்பட்டிருபக்கிறேன் ஒருமை கூடாத்தால் அந்த முயற்சிகளை கைவிட்டு மீண்டும் மொழியின் சாத்தியங்களை பலவாறு எழிது பழக இந்த வலைப்பூதளத்தை உபயோகப் படுத்திக் கொள்கிறேன் இது யாருக்கும் எதுவும் சொல்லவந்ததல்ல என்பதால் பல நிகழ்வுகள் மீள மீள சிறு சிறு மாற்றங்களுடன் இடம் பெருவது தவிற்க இயலாத்து . யாரிடமும் எந்த குறையையும் காண குற்றம் சொல்ல இவற்றை எழுத வரவில்லை . அவர்களின் வாழ்நாளில் அதைச் செய்ய வந்தவர்கள். அது உலகின் பெருநியதியின் இயங்கு விசை. மனிதர்களை வைத்து அது விளையாடுகிறது என்பதை தவிற இதில் மனிதர்களின் தனிப்பட்ட ஒன்று செய்ய அது விடுவதில்லை. பெரும் நிகழ்வினை ஒருங்கியவர்கள் அனைவரும் இதை ஏற்பார்கள் என நினைக்கிறேன்.


இந்திய காங்கிரஸ் கட்சி அரசியல் மிகுந்த குழப்பமான சூழலில் இருந்தது . இரண்டு தொடர் பாராளுமன்ற தேர்தல்களில் ஆட்சியமைக்க முடியாமலானது . நரசிம்ம ராவ் வெளியேற்றம். இடைக்கால தலைவர் போல வந்தமைந்த சீதாராம் கேசரி தேவா கௌடா அரசை கவிழ்த்து மற்றுமோர் தேர்தலை நோக்கி தள்ளினார்.  அவரது முடிவு சோனியா காந்தி கட்சிக்கினுள் வரும் சாத்தியங்களை சில காலம் தள்ளி வைத்தது. சோனியாகாந்தி தனது அரசியில் பிரவேசத்திற்கு சந்தர்பத்திற்கு காத்திருந்த போது 1998 பாராளுமன்றத் தேர்தல் முடிவனது. 

அந்த நேரத்தில் சோனியாகாந்தி ஜெயலலிதா நேரடி உரசல் காரணமாக ஒரு கப் டீ அருந்தல் கூடுகையுடன் அதிமுகவுடனான கூட்டணி முடிவிற்கு வந்தது . 1998 கூட்டணி இல்லாத அந்த பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் போட்டியிடுவோர் ஆர்வம் காட்டவில்லை. நாராயணசாமி வழக்கம் போல தீவிரமாக முயன்று கொண்டிருந்தார் . சண்முகம் தனக்கு சீட் கேட்டு தில்லி புறப்பட்டுக் கொண்டிருந்தார். அன்று இரவு நான் அவர் தில்லி கிளம்பிம் முன்னர் ஆற்றாமையுடன் “எந்த அரசியல் காரணத்திற்க்காகவும் சீட்டை விட்டுத் தராதீர்கள்” என்றேன் . சற்று நேரம் அமைதியாக இருந்தவர் . “இம்முறை நான் எந்த சமாதானத்தின் பெயரிலும் அதை செய்ய முடியாது” என்றார் . “தமிழகம் மற்றும் புதுவைக்கும் அரசியல் நீதியாக ஒரு பெரிய வேறுபாடு உண்டு என நாற்பது வருஷமாக சொல்லி நிரூபித்து வருகிறேன் . முப்பது வருடத்திற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி இழந்த காங்கிரஸ் இன்னும் ஒரு நூறு ஆண்டு ஆட்சி அமைப்பதை பற்றிக் கனவு கூட காண முடியாது ஆனால் புதுவையில் அதன் பிறகு பலமுறை ஆட்சி அமைத்திருக்கிறோம் . அது உள்ளூர் தலைவரின் ஆளுமை மற்றும் மேலாண்மை வழியாக நிகழ்ந்தது என்பது அதுவரை இருந்த கட்சி மேலிடத்திற்கு நன்றாகவே தெரியும், அதனால் புதுவை கட்சி மற்றும் தேர்தல் விஷயமாக யார் தில்லிக்கு சென்று என்ன சொன்னாலும் இறுதி சொல்லெடுக்க எனக்கு அது எப்போதும் வாய்ப்பளித்தமையால் இங்கு தொடர்ந்து நம்மால் கட்சிக்கு உள்ளே மற்றும் வெளியே சமநிலையை கொண்டு வர முடிந்தது. சோனியா தலைமை பொறுப்பில் வருவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது . எப்போது என்பதுதான் கேள்வி. நிச்சயம் இந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவிற்கு பிறகு அது நடந்துவிடும் . இந்த பாராளுமன்றத் தேர்தல் வெற்றி தோல்வி அவர் அரசியல் உள்நுழையும் நேரத்தை சற்று முன்பின் என மாற்றி அமைக்கலாம். வருவது உறுதி.இந்த சூழலில் அவர் தலைவராக வந்தால் அவரைச் சுற்றி  நிற்கப்போகும் குறுங் குழுவை கடந்து புதுவை அரசியல் பற்றிய உண்மை தகவலை அவருக்கு கொண்டு போக முடியாது.

புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...