https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 17 ஜூன், 2022

அடையாளமாதல் * கணக்கும் யதார்த்தமும் *

 ஶ்ரீ:



பதிவு : 626  / 816 / தேதி 17 ஜூன்  2022



* கணக்கும் யதார்த்தமும் * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 22.




 

கூட்டம் நடக்கவிருக்கும் அரங்கை அடைந்தபோது மனம் சோர்ந்து போயிருந்தது . அத்தனை நாள் திட்டமிட்டதற்கு இந்த அர்த்தமின்மை தான் பதில் போலிருந்தது . இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை . இது முதற் கோணல் , இனி அது வரிந்து கொண்டே இருக்கப் போகிறது . உள்ளே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என அரசியலாகிறது . இந்த கூட்டம் இன்று எனக்கு எதிர் கருத்துக்களை உருவாக்குபவர்களை  மிக எளிதாக கடந்து சென்றுவிடப் பயன்படலாம் . ஆனால் கடந்த சென்ற பிறகு பெரும் தடையாக இருக்கப் போவது இந்த பாண்டியன் . அவன் கூட என் சிக்கல் அல்ல இதோ என் பக்கத்தில் நின்றிருக்கிறான் . அவனுக்கு எதாவது ஒன்று நடந்தாக வேண்டும். நாராயணசாமியை அனைவருக்கும் முன்னளித்து அனைத்தையும் கைக் கொள்ள பார்பான் . அல்லது பின்னர் சொல்லி மிரட்டவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். எனக்கு இணையான தலைமையாக இன்று வெளிப்பட்டு விட வேண்டும் என்கிற தவிப்பு அவன் என்னிடம் அந்த இடத்திற்கு மிக பொருத்தமாக நடந்து கொண்டதில் தெரிகிறது. அதை அப்படித்தான் என பிறருக்கு காட்டி கடக்க வேண்டியது என் அரசியல் . இப்போது என் சோற்றில் கல்லலென வந்திருப்பது நாராயணசாமிதான் இனி என்றும் என் சிக்கல். 


இன்று கூட்டத்தில் கலந்து கொள்ள வரவிருக்கும் நாராயணசாமி அவனிடம் காலையில் தனது வருகை பற்றி சொல்லியிருக்க வேண்டும். எனக்கு சற்று முன்னர்தான் சண்முகம் சொன்னார். அவனது உற்சாகம் நான் கற்பனை செய்து கொள்வதா ? தெரியவில்லை . சண்முகம் நாராயணசாமியின் முரண் சரி செய்ய முடியாத பிளவை அடைந்திருந்தது . மேல் நிலை தலைவர்கள் அதை ஊகித்திருக்க முடியும் . மாநில தலைமை பிளவுறும் சந்தர்பங்களில் மேல் நிலை தலைவர்களின் நிலைபாட்டை கணிக்க முடியாது . அவர்கள் தங்கள் இடத்திற்கான பதட்டம் முழு அரசியலை முடிவு செய்யக் கூடியது . எனக்கு அது  சீக்கிரத்தில் வெளிப்படும் என்கிற நம்பிக்கை மட்டுமே என்னால் தெளிவாக மேல் நகர முடியும் . ஆனால் அது நிகழப்போவதில்லை. 


ஹோட்டலின் கார் நிறுத்துமிடத்தில் விளக்குகள் மங்களாக இருந்தாலும் அரங்கின் உள்ளே இருந்து பளீரிடும் மஞ்சள் ஒளி உற்சாகத்தை தருவதாக இருந்தது . அந்த அரை இருட்டில் இன்று சற்று நின்று என்னைத் திரட்டிக் கொண்டு அரங்கை நோக்கி நடந்தேன் . வழியில் நின்று கொண்டிருந்த பாண்டியன் என்னைக் கண்டவுடன் ஓடிவந்து இணைந்து கொண்டான். அவனை இப்போது பொருட்படுத்தக் கூடாது . அவனை பக்கத்தில் இருத்திக் கொண்டு அடுத்த நகர்வை திட்டமிட வேண்டும் . அவனிடம் கூட்டத்தை ஒருங்கச் சொன்னேன். காரில் இருந்து கொண்டுவந்த நிகழ்ச்சி நிரல் கூட்டத்திட்டம் பற்றிய கோப்புகள் மற்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கும் பேசு பொருள் குறித்த வரைவுகளும் 

அதில் இருந்தன.


கூட்டத்திற்கு வந்திருந்த இளைஞர்கள் யாரும் உள்ளே செல்லாமல் வெளியே சிதறி சிறு சிறு குழுக்களாக அரங்க வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் . ஏறக்குறைய அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் அனைவரும் வந்திருந்தார்கள் . என்னை பார்த்ததும் மரியாதை வணக்கம் சொல்ல ஒவ்வொருவரையும் கைப்பற்றி குலுக்கி வரவேற்றது அவர்களுடன் சிறு சிறு பேச்சுகள் நலம் விசாரிப்புகள் என நெருக்கம் கொள்ள வைப்பதுடன் அவர்களுக்குள் நிகழும் மனமாற்றத்தை உடல் மொழியில் பார்க்க விரும்பினேன் . எல்லோருக்கும் அரசியலில் தங்கள் இடம் பற்றிய பிரக்ஞை ஆழத்தில் உறைவது . அதன் அருகினில் அவர்களை தயக்கமல்லாமல் அழைத்து செல்வேன் என்கிற நம்பிக்கையை உருவாக்கினால் மட்டுமே அவர்களுடன் தொடர்புறுத்த சிறந்த அது இடமாக இருக்க முடியும். அங்கு கூடியிருந்தவர்களில் இருந்து எனக்கான ஒட்டு மொத்த இடத்தையும் நான் திரட்டிக் கொள்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டியிருக்கறேன் .அங்குள்ள அனைவரும் அதிலிருந்து ஒரு துளியை பெற்றுக் கொள்ள விழைபவர்கள்.


நிர்வாகிகளில் பலர் வந்திருப்பதையும் அவர்கள் அரங்கின் உள்ளே சென்று அமர்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது . அனைவருக்கும் வன்மம் உள்முகமாக இருந்தாலும் வெளியே நட்பாக காட்டிக் கொண்டிருக்கலாம். உள்ளே இருப்பவர்கள் வெளியே நின்று கொண்டிருப்பவர்களுக்கு இடையே இப்போதுள்ள இடைவெளி அந்த நிர்வாகிகள் உருவாக்கி இருக்கிறார்கள் . அவர்கள் அனைவரும் வரும் காலத்தில் ஒரு இயக்கத்தற்கு மனமொன்றி செயல்பட இருப்பவர்கள் . ஆனால் துரதிஷ்டவஞமாக அவர்களை எனது ஆதரவாளர்களாக பகுத்துக் கொண்டார்கள் என்றால் அதைவிட பிழை புரிதல் வேறில்லை. அவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததை விட இங்கு இவர்கள் மத்தியில் அவர்கள் நின்றிருக்க வேண்டும். அவர்கள் அதுவரை செய்த அனைத்து எதிர்மறை அரசியலும் செயலற்றுப்போனதால் அந்த அமைதி திரும்பியிருக்க வேண்டும். சண்முகம் வரப் போவதாக நினைத்திருந்தனர். அங்கு எனக்கு கிடைக்க இருக்கும் இடம் பற்றிய எரிச்சலில் இருந்திருக்கலாம்.


அந்த நிகழ்வின் முன்னேற்பாடுகள் எனக்கு பிறிதொரு வாசலை திறந்து வைக்கும் என கணிக்கத் தெரிந்தவர்கள். சிலகாலம் அமைதியாய் இருப்பது என முடிவு செய்திருக்கலாம் . அவர்கான காலம் ஒன்று வரும் எனத்தெரிந்தவர்கள். அனைவரையும் அரங்கிற்கு அழைத்துச் சென்றேன்.நெடுநாளைய எதிர்பார்ப்பு , ஒரு கனவின் முதற்கணம். என்னை அவர்களுக்கு தெளிவாக அறிவித்தது. இனி இளைஞர் காங்கிரஸை வழிநடத்துபவர் யார்? அவர்கள் யாரை பின் தொடர வேண்டும் என்கிற சந்தேகத்திற்கு இடமில்லாமாமல். அது ஒரு தருக்கி நிமிரும் கணம். காலம் எப்போதும் அதற்கு மறு எடையாக பிறிதொன்றை கரந்து அதில் வைக்கிறது . அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்று தொகுதி எண்ணனின் அடிப்படையில் அமரச்செய்தேன் சராசரியாக தொகுதிக்கு மூவர்  என வந்திருந்தனர் நிர்வாகிகளை சேர்த்துக் கொண்டால் 120 பேர் எதிர்பாரத்ததைவிட 30 பேர் அதிகம் . அதற்கு தேவையான நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தேன்.

பாண்டியனிடம் அவனிடமுள்ள கோப்புகளை சரிபார்த்து தொகுதி  எண் வாரியாக அவர்களுக்கான இடத்தை ஒருங்கச் சொன்னேன். பேச்சுகள் மிக மெல்லிய ஒலியாக , அவரவர் அவர்களுக்கான பெயர் எழுதப்பட்ட நாற்காலியில் அமரவைக்கப்பட்ட போது அவர்கள் முகத்தில் எழும் ஒளியை பார்த்தபடி சிறிய மேடைக்கு அருகே நின்றி கொண்டிருந்தேன்.கட்சி கூட்டங்களிலில் அரங்கு மேடை மற்றும் பார்வையாளர்கள் என எப்போதும் இரண்டாக பகுக்கப்பட்மிருக்கும். பார்வையாளர்கள் அங்கு எப்போதும் முகங்களற்ற திரள் மட்டுமே . அதை இங்கு உடைத்திருந்தேன் . அவரவர் தங்களின. இடத்தை கண்டடையும் நேரத்தை கொடுத்துக் கொண்டருந்தேன். பாண்டியன் அனைவருக்கும் முன்பிருந்த மேஜையில் நான் கொடுத்த அத்தனை கோப்புகளையும் அவர்களுக்கு எதிரே வைத்துக் கொண்டிருந்தான். 


நான் ஒருங்குனர் மைக்கை எடுத்து கூட்டம் இன்னும் 30 நிமிடத்தில் துவங்க இருப்பதையும் நாராயணசாமி கலந்து கொள்ள போவதை சொன்னபோது கண்களால் பார்க்கக் கூடிய  அலை நிர்வாகிகளின் மத்தியில் மெல்லிய காற்று போல பரவியது  . அவர்கள் எதிர்பார்ககவில்லை . நாராயணசாமியின் அணுக்கன் பாண்டியன் என்னுடன் இருந்தான் . அவனும்மே அது புது தகவல் என அவன் திகைப்புறுவது தெரிந்தது . ஏன் எனக்கே கூடதான் . நான் நாராயணசாமியுடன் இணைக்கமாக செல்ல முடிவெடுத்து விட்டதாக அனைவரும் நினைத்தனர் . அது முன்னிலும் அந்த கூட்டத்தை இறுக்கமடைய வைத்தது . நான் என் அகத்தை வெளிக்காட்டாமல் அவர்கள் எனக்கு இப்போது கொடுக்கும் புது அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ளத் துவங்கினேன் . அதுவும் அரசியல்தான்.


ஞாயிறு, 12 ஜூன், 2022

அடையாளமாதல் * நம்பிவிடுகை *

 ஶ்ரீ:



பதிவு : 625  / 815 / தேதி 12 ஜூன்  2022



* நம்பிவிடுகை * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 21.





நாராயணசாமியின் தீவிர ஆதரவாளன் பாண்டியன் . தினம் என்னை சந்திக்கவருபவர்களில் தவறாமல் இடம் பெறுபவன் . மாதத்தில் மூன்று நான்கு நாள் புதுவைக்கு வரும் நாராயணசாமி புதுவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . அவர் புதுவைக்கு வரும் சமயத்தில் அவருக்கு உதவியாளனாக இருக்கும் நேரம் போக மற்ற நாட்களில் என்னைப் பார்க்க வந்துவிடுவான். சண்முகத்தை சந்திப்பதில்லை . நாராயணசாமி மீதிருக்கும் கசப்பை அவர் தன்மீது காட்டுவதாக என்னிடம் சொல்லியிருக்கிறான். அவ்வளவு எளிய உணர்சிகளை பிறர் அறிய வெளிக்காட்டுபவர் அல்ல அவர் . அது உண்மையா என எனக்குத் தெரியாது . அவனது நெஞ்சுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.நான் நாராயணசாமியை பிறர் போல வந்து சந்திக்க வேண்டும் என்பது அவன் என்ன பேசினாலும் அதன் மையக் கருவாக இருக்கும். என்ன காரணத்தினாலோ அவரை சந்தித்த போது எனக்கு எதிர்மறையான உணர்வுகளை அடைந்ததால் அவரை சென்று சந்திப்பது எனக்கு உகப்பதாக இல்லை . இது ஒருவேளை சண்முகம் குறித்து பாண்டியன் சொன்னது போல இதுவும் இருக்கலாம்.நான் தர்க்கப்பூர்வமாக அதை நிறுவிக் கொள்ள முயன்றிருக்கிறேன்.


நாராயணசாமி புதுவை வந்திருப்பதை கட்சியை சேர்ந்தவர்களும் அவரை சந்திக்க விரும்பும் அனைவரும் அன்றைய தினசரிகளில் வந்திருக்கும் அவரது பேட்டி அல்லது அறிக்கை மூலமாக தெரிந்து கொள்கிறார்கள் . அதே போல ஒரு சில நாள் கழித்து அது போன்ற செய்தியை காண நேர்ந்தால் அவர் தில்லி கிளம்பிவிட்டார் என புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. அந்த செய்திகள் அதுக்காகவே என சிலர் பகடியாக சொல்லுவதுண்டு. பாண்டியனின் வற்புறுத்தலால் அவரை சிலமுறை அவரது வீட்டில் சந்தித்திருக்கிறேன் . அங்கு அதுபோல கட்சியை சேர்ந்த பலருடன் தனிப்பட்ட முறையில் சந்திக்க வந்த கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அவரை சந்திக்க காத்திருப்பதை பார்த்திருக்கிறேன் . நாராயணசாமி வழக்குரைஞராக தொழில் செய்பவர். அது அவரது சட்ட அலுவலகம் . அவரது ஜூனியர்கள் நிறைய பேர் அங்கு அமர்ந்து அவரது வழக்குகளை கவனித்துக் கொள்கிறார்கள். 


நாரயணசாமியின் அலுவலகம் எல்லையம்மன் வீதியில் உள்ள அவரது வீட்டு கீழ் தளத்தில் அமைந்திருந்தது . அது மிக பழையபாணி கட்டிடம்.  ரோட்டில் இருந்து இரண்டடி உயரத்தில் உயரத்தில் இருந்தது . பழைய கொலாப்ஸபல் கேட் என்கிற குறுக்குவாட்டில் இழுக்கும் இடம் அடைக்காத கேட். அதைத் தாண்டி சிறிய நடை அதன் இடப்புறம் செங்குத்தாக முதல் மாடிக்கு செல்லும் படிகட்டு . அந்த வீடு மீளுவாக்கம் செய்யப்பட்டதை சொன்னது . சிறிய நடையைத் தாண்டி ஒரு பெரிய வரவேற்பறை எதிரே இடது மூலையில் அவரது சந்திக்கும் அறை . வந்திருந்த கட்சிப் பிரமுகர்கள் தனித்த அறையில் அவரை ஒருவர் பின் ஒருவராக சென்று சந்தித்துக் கொண்டிருந்தனர் . எனக்கு அது ஒவ்வாமை கொடுத்தது . எனக்கு அவரிடம் சென்று பேசி ஆகவேண்டியது ஒன்றுமில்லை . பாண்டியனின் நச்சரிப்பு தாங்கமால் வந்திருக்கிறேன் . இந்த முறையை கட்சி அரசியல் சார்ந்த தலைவர்கள் யாரும் புதுவையில் கடைபிடிப்பதில்லை . அனைவரும் பொது வரவேற்பறையில் அமர்ந்திருப்பார்கள். சந்திக்க வருபவர்கள் தனியாக பேசிவேண்டும் என்றால் மட்டும் பக்கத்திலிருக்கும் தனியறைக்கு செல்வார்கள் மற்றபடி சந்திக்க வருபவர்கள் அனைவருக்கும் மத்தியில் பொதுவாக அது நடக்கும் . ஆனால் இங்கு நாராயணசாமியை பொதுவில் சந்திக்க இயலாது . 


பாண்டியன் அவரது உதவியாளன் போல அங்கிருந்து கொண்டு அவரை சந்திக்க வருபவர்களை ஒருங்கு செய்து கொண்டிருப்பான் . அங்கு அது அவனக்கான இடம் . நான் அங்கு வந்த சில நொடிகளில் என்னை அவரை சந்திக்க நேரம் ஒருங்கிவிடுவான் . முதல்முறை அவரை தனியாக சந்தித்தபோது . தனிப்பட்டு அவரிடம் பேச வேண்டிய தகவல்கள் என என்னிடம் ஒன்றும்மில்லை.என்ன பேசப் போகிறேன் என திகைத்திருந்தேன் . பாண்டியன் என்னைப் பற்றி அவரிடம் என்ன சொல்லியிருப்பான் என எனக்குத் தெரியாது . முதல் முறை சென்று சந்தித்த போது நட்புடன் கைகுலுக்கி பின் பாண்டியனை பார்க்க அவன் அந்த அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான் . அவரே தொடங்கினார். பிற தலைவர்கள பற்றிய தகவல்களை ஆர்வமாக சேகரித்துக் கொண்டார். அது அவரது பாணியாக இருக்க வேண்டும். அவரை சந்திக்க சொல்பவர் ஆர்வமிகுதியால் பல உள் தகவல்களை அவருக்கு சொல்லாவார்கள் . நாராயணசாமி தான் ஊரில் இல்லாத போது அரசியல் ரீதியில் புதுவையில் நடந்த அவருக்கு சொல்லாமல் விடபட்ட தகவல்களை அவர்கள் வழியாக வாங்கி நிரப்பிக் கொள்கிறார் . அதே ஆர்வத்தில் அவர்கள் மீளவும் அவரை வந்து சந்திக்கும் போது பேசும் ஆரவமற்றவராக தன்னை வைத்துக் கொள்கிறார் . இரண்டுமுறை சந்தித்த பிறகு அவரது உளநிலை உருவாக்கிய ஒவ்வாமை காரணமாக அங்கு செல்வதை தவிற்த்துவிட்டேன். 


உடனடி பலன் இல்லாத எதையும் செய்யத் தயாராக இல்லாதவராக அவரை அறிகிறேன். அவர் வேறேதோ ஒரு உலகில் வசிப்பவர். அவருக்கு இந்த உலகம் வெறும் தகவல்களால் ஆனது . அதைத் தவிற அவர் இங்கிருந்து பெற்றுக் கொள்ள ஒன்றுமில்லை போதுமென்ற அளவு கேட்டுவிட்டதாக உணர்ந்து விட்ட பின்னர் அவர்களை  இரண்டாம் முறை அவர் சந்திக்க விரும்புவதில்லை. அவரை தனது தலைமையாக கொண்ட பாண்டியனை எண்ணி வருந்தினேன் . அவனும் ஒருநாள் இதை உணர்ந்திருக்க வேண்டும். சில காலத்திற்கு பிறகு அவரை விட்டு விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்டான். ஒரு நடாளுமன்றத் தேர்தல் வீதிப் பிரச்சாரத்தில் அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்ததேன். அவன் சார்ந்த தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கும் நாராயணசாமி பற்றி மெட்டை வசவுகள் . பின்னர் ஓரிரு வருடங்களுக்கு பிறகு நாராயணசாமிடம் திரும்பச் செனழறு சேர்ந்திருப்பதாக கேள்விப்பட்டேன். பின்னர்  நிராதராவாக கைவிடப்பட்டவனாகி அவன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் ஒரு நாள் வந்தது .


வியாழன், 2 ஜூன், 2022

அடையாளமாதல் * எதிர் காலமெனும் நம்பிக்கை *

 


ஶ்ரீ:



பதிவு : 624  / 814 / தேதி 02 ஜூன்  2022



* எதிர் காலமெனும் நம்பிக்கை * 


“ ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 20.






ஹோட்டல் சற்குருவில் நிகழ்த்த திட்டமிட்டிருந்த பயிற்சி முகாம் ஆலோசனைக் கூட்டம் நடபெற இருந்த ஒருமணி நேரத்திற்கு முன்பாக சண்முகம் அந்த கூட்டத்தில் தான் கலந்து கொள்வதைவிட நாராயணசாமி கலந்து கொள்வது எனது எதிர்காலத்திற்கு நல்லது என்று கூறிவிட்டார். அதன் பின்னணி அரசியலை நான் உணர்ந்திருந்தாலும் இதன் வழியாக அவர் எனக்கு என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவில்லை. மேல்மட்ட விளையாட்டில் எப்போதும் எளிதில் பிடி கிடைப்பதில்லை . ஆரம்பத்தில் நான் அதற்கு சம்மதிக்காமல் மறுத்து ஒரு கட்டத்தில் அதனால் பயனில்லை என புரிந்தது . சண்முகம் தன் முடிவில் உறுதியாக இருந்தார் . இறுதியில் அவர் சொன்னதை ஏற்று நாராயணசாமியை அழைப்பதாக சொல்லிவிட்டு வெறுப்புடன் ஹோட்டலுக்கு புறப்பட்டேன். 


போகும் வழியில் என்னுடன் இருந்த கோபாலிடம் என்னை ஹோட்டலில் இறக்கிவிட்டு, நாராயணசாமி வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வரச் சொன்னேன் . முதலில் அதிர்ந்து மறுத்தான் . நான் அவரை நேரில் சென்று அவரை அழைக்க வேண்டும் அது தான் முறை , இது தேவையற்ற சிக்கலை உருவாக்கும் என சொன்னான் . இனிமேல் புதிதாக உருவாக ஒனழறுமில்லை . நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கும் அவருக்குமான உறவு இனி எந்த வகையிலும் சுமூகமாக இருக்கப் போவதில்லை . இந்நிலையில் நான் முயற்சிக்கும் எந்த சமாதனமும் அதற்கு உதவாது . அவன் சென்றேயாக வேண்டும் என சொல்லி ஹோட்டலில் இறங்கிக் கொண்டேன். எவ்வளவு யோசித்தும் தலைவர் சொன்னதை என்னால் உருவகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிக வருத்தமாக உணர்ந்தேன். அந்தக் கூட்டம் நடத்த இருந்த உற்சாகம் முழுமையாக வடிந்துவிட்டிருந்தது . 


இன்று பார்க்கையில் அது முதல் கோணல். அங்கிருந்து எல்லாமே தவறான முணைக்கு சென்று அமர்ந்தன. அதுவரை அடைந்த வெற்றிகள் தற்காலிகமானது என்கிற சொல்லுக்கு அன்று அர்த்மிருந்தது . ஒரு தவறு அதை அடுத்து முறை சரி செய்து விடலாம் . எதிர்காலம் என ஒன்று நீண்டு கிடந்தது . அதில் எத்தகைய தவறுகளையும் திருத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது . வெற்றியும் அர்த்தமின்மையும் இன்று புரிந்து கொண்ட அளவு அன்று யாராவது என்னிடம் சொல்லியிருந்தால் அவரைப் புண்ணகையுடன் கடந்து சென்றிருப்பேன். சண்முகம் கட்சியின் அடையாளம் . எனக்கு கட்சியின் அடைப்படையிலான கையகப்படுத்த வேண்டியது சந்திதேகத்திற்கிடமில்லாத தலைமை யார் என சொல்லியாக வேண்டிய நிர்பந்தம் இருந்தது . என்னிடம் காலமல்லை.

நான் அடுத்தடுத்து செய்ய திட்டமிட்டிருப்பதை செயல்படுத்த சண்முகம் இங்கு என் அருகில் அமர்ந்திருப்பது என்னளவில் மிக முக்கியம் . 


புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர் காங்கிரஸிற்கு முதல் முறையாக தங்கள் தொகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் சரியானவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். நான் சாத்தியப்படுத்திய கனவு அது. அதன் முந்தைய  தலைவர்கள் முயன்று அதன் வெறுமைக்குள் சென்றமர்ந்தனர். இதோ அதை நான் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இந்தக் கூட்டம் வழியாக நான் அவர்களுக்கு சொல்ல நினைத்தது எந்தளவு வெற்றி பெறும் எனத் தெரியவில்லை . ஆனால் இவர்களை சண்முகம் நேரடியாக பார்ப்பது எனக்கு மிக முக்கியமானது . அவர் அப்படிப்பட்ட கனவுடன் புதுவைக்கு வந்தவர். அதன் பெருட்டு அவர் வாழ்நாளெல்லாம் சீண்டப்பட்டார் . அவருக்கு தெரியும் இந்த கனியின் விலைமதிப்பற்றதைப் பற்றி. இந்த கூட்த்தில் இருப்பவர்களில் பலர் அவருக்கு முன்பே அறிமுகமானவர்கள் . என்னைப் பற்றிய அவரது தயக்கங்கள் என ஏதாவது மிச்சம் இருந்தால் இந்தக் கூடுகை அதை கலந்துவிடும். இன்று இது முழு அமைப்பாக உருவாகி விட்டது என அங்கீகரிக்க வேண்டியவர் அவரே. அவரைத் தவிற பிற எவருக்கும் இது சிறு மனிதத் திரள். அவருக்கு அது அளிக்கும் அரசியல் ரீதியாக கணக்கும் அர்த்தமும் பிற எவருக்கும் உருவாகப் போவதில்லை. நாராயணசாமிக்கு போன்றவர்களுக்கு இது மிக சிறிய கூட்டம் இது நான் சண்முகத்தை ஏமாற்ற நினைக்கும் சிறுபிள்ளை விளையாட்டு . அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பில் இருக்கும் தான் வட இந்தியாவில் சந்தித்த ஆயிரமாயிரம் தொடர்களுக்கு முன் இது ஒன்றுமில்லை என தருக்கி வந்தமர்ந்தால் அந்த நினைப்பே எனக்கும் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த அமைப்பிற்கும் எதிராகவே முடிவும் .


தில்லி தலையகத்தில் அமர்ந்து கொண்டு கருத்தியல் ரீதியில் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு இங்கு ரத்தமும் சதையுமாக அமர்ந்திருப்பவர்களின் வாழ்வில் அரசியில் எந்த வகையில் ஊடுருவி இருக்கிறது. இதில் உருவகப்படுத்துவது என ஒன்றில்லை என்கிற மேட்டிமையால் ஆவது ஒன்றுமில்லை . தலைவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் இழைக்கும் சிறு அரசியலின் பிழை முடிவுகள் இவர்களின் நாளை காலையை இருட்டடியச் செய்துவிடும் . தலைவர்களின் தலைவர் என தருக்குபவர்களுக்கு தொண்டர்களின் தலைவர்களின் மத்தியில் இங்கு பேசப்படும் மொழியும் அரசியலும் புரியாது , ஒருவேளை இளிவரலாகக் கூட தோன்றலாம். இந்த மண்ணில் இருந்து வேரரறுந்து போன ஒருவருக்கு இங்குள்ளவர்களின் அரசியல் புரியப் போவதில்லை.அனைத்தையும் விட அரசியலில் முதல் நிலை ஒழுங்கமைவதற்கு முன்பான இங்கு பல கட்டத் தலைமை இருப்பதாக பிழையாக புரிந்து கொள்வதும். அனைவரயும் அனுசரிக்கவேண்டும் என்கிற பிழைப்புரிதல் இந்த அமைப்பை எடுத்துச் செல்வதில் சவால்களை உருவாக்கிவிடும் .


என் பக்கத்தில் அமர நினைத்து இதோ என்னை விடாது சுற்றி சுற்றி வரும் பாண்டியன் தன்னை தீவிர நாராயணசாமியின் ஆதரவாளனாக முன்வைப்பவன். அவனது உண்மை நிலை என்ன என அவனுக்கும் தெரியும். இருப்பினும் அதை பிறர் காண தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பவன் . அது அவனது அரசியல் என நிகழ்ந்தாலும் அதை மீள மீள முன்வைத்தபடி இருப்பவன் . ஒரு நாள் தன்னை நாராயணசாமி முழுமையாக அங்கீகரிப்பார் என நம்புகிறான்.வல்சராஜ் தலைமையில் புதிய நிர்வாகக் குழு நியமிப்பது குறித்து பரிசீலனையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் விடாமல் என்னை சந்தித்து தன் பெயரை அந்தப் பட்டியலுக்கு சிபாரிசு செய்யச் சொன்னான். அது  நான் முன்பே ஊகித்திருந்தேன. நாரயணசாமியின் அரசியல் அப்படிப்பட்டது . அவனிருந்த உண்மை நிலையை புரிந்து கொண்டேன். அரசியலில் மிக இயல்பானது அது . “நாராயணசாமியின் அணுக்கான உணக்கு வல்சராஜ் சிகப்பு கம்பளம் விரிக்கத் தயாராக இருக்கும் போது என் சிபாரிசுக்கு என்ன பொருள்” என்றதற்கு . நாராயணசாமி தன்னை சிபாரிசு செய்யாமாட்டார் என்றான் . நான் அவனிடம் அவன் தன்னை பிறர் முன்பாக உருவகிக்க நினைக்கும் இடம் ஒரு நாள் நாராயணசாமியால் தகர்க்கப்படும் என எச்சரித்திருந்தேன் . 


அவன் என்னை நாராயணசாமி அணுக்கர்களின் நிரையில் கொண்டு வைக்க என்னுடன் எப்போதும் முயன்று  கொண்டிருப்பான் . நான் நாராயணசாமிக்கு அணுக்கமாவது தன்னுடைய நலனுக்காக என பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். அவன் செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டவன் . நாராயணசாமியின் அணியில் செயல்பாடுகள் என எதுவும் இல்லை . அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலம் தொடங்கி அவரது செயல்பாடு என்பது தில்லியில் நிலை கொண்டிருந்தது . அது எந்த மாதிரியானவை என யாருக்கும் தெரியாது . நான் அறிந்த வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தின் அணியில் ஒரு நிலையில் இருந்தார் அவருக்கான அரசியல் அல்லது பணிநிமித்தமான உத்தரவுகள் அவரிடமிருந்து பெற்று அதை செயல்படுத்துபவராக அவர் இந்தியவின் அனைத்து மாநிலங்களினூடாக பயணம் செய்தபடி இருந்தார். அந்தப் பயணத்தில் அவருக்கு அரசு அதிகாரிகள் பெரும் தொழிலதிபர்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்கள் என இந்திய பல வேறு துறையைச் சேர்ந்த ஆளுமகைள் அறிமுகமாயினர்.அவர் அவர்களை அனைவரின் கணக்குகளின் நன்மைக்கு செயல்பட்டுக் கொண்மிருந்தார். இதற்கு பின்னால் குலாம்நபி ஆசாத் இருந்தார் . 


புதிய பதிவுகள்

மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *

  ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...